PDA

View Full Version : லிஃப்டில் ஒரு பயணம் - நகைச்சுவை



leomohan
28-09-2006, 07:48 PM
மூலக்கருத்து - பஹ்ரைன் வெங்கி
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்.


லிஃப்டில் ஒரு பல்கலைகழகம் அமைத்தால் அதில் மனிதவியல் பாடம் நடத்தாமலேயே பட்டங்கள் பெறலாம். மனிதர்களின் ஏக்கங்கள் தாக்கங்கள் உணர்வுகள் உள்ள குமறல்கள் பதட்டங்கள் பரிமாற்றங்கள் இன்பங்கள் துன்பங்கள் அவர்களின் குணாதிசயங்கள் அனைத்தும் லிஃப்டி பயணத்தில் வெளிவரும்.

அடிக்கு மாடி கட்டிடங்கள் அதிகமாகி விட்ட படியாலும் ஐ டி யில் வேலை செய்வதாலுமோ என்னவோ நான் வேலை செய்த அனைத்து இடங்களுமே பல மாடி கட்டிடங்களிலே.

அன்றாடம் இந்த பயணத்தில் நான் கண்ட ரசித்த சில சுவாரஸ்யமான சம்பவங்களே இந்த படைப்புக்கு காரணம்.

லிஃப்டி வாழ்கையின் ஒரு ஆதாரம். ஒரு பாடம். வாழ்கையில் நீங்கள் மேலே சென்று பிறகு கீ ழே வரலாம். லிஃபடிலும் தான். உஙகளை மேலே எடுத்து செல்வதும் சென்ற வேகத்திலே சில நேரம் கீழே எடுத்து செல்வதும் இந்த லிஃப்ட் எனும் வாழ்க்கை.

சில நேரங்களில் வரிசையில் நிற்கும் மக்கள். யாரும் அறியாமலேயே
கூட்டத்துடன் உள்ளே நுழையும் சில பேர்.

நடு வயது முதியவர் நன்றாக மூக்கை நோன்டிக் கொண்டிருப்பார். அதை பார்த்து எம் என் ஸி மங்கை மூக்கை சுளிப்பாள். அவரோ தன்னை யாருமே பார்க்காத மாதிரி லிஃப்டின் பளப்பளா சுவரில் துடைப்பார். எம் என் ஸி நங்கைக்கோ இனிமேல் லிஃப்டில் பயணம் செய்தால் எய்ட்ஸே வந்துவிடும் என்று பயம்.

நங்கைக்கு பின்னே நிற்கும் நெட்டை கொக்கு நங்கையின் கழுத்தை நன்றாக மோப்பம் பிடிப்பார். என்னமோ அவள் என்ன சென்ட போட்டிருக்கிறாள் என்று கண்டுபிடிப்பது போல.

சிலரோ 5 எண்ணை 5 முறை அமுக்குவர். என்னமோ இரண்டு மூன்று நான்கு தளங்களைத் தாண்டி லிஃப்டி நேராக அவர் அவசரத்தை புரிந்துக் கொண்டு வழியிறக்கும் என்பதைப் போல.
சில பேர் லிஃப்டை விமானமாக கருதுவதும் உண்டு. இனனிக்கு ரொம்ப ஸ்லோவா போகுது இல்லை? என்பர்.

லிஃப்டில் மொபைல் வேலை செய்யாது என்று தெரிந்தும் உள்ளே நுழையும் போதே காதில் கடுக்கனுடன் நுழைவர் சிலர். பிறகு அலோ அலோ என்று கத்தித்திரிவார்.

சில சமயம் மூன்று நான்கு பேர் உள்ளே நுழைந்து முக்கியமான விஷயம் என்று தமுக்குள்ளே பேசிக் கொண்டிருப்பார்கள். பக்கத்தில் மத்த பிராணிகள் இருப்பதே இவர்கள் கண்ணுக்குத் தெரியாது.
இதில் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பவர் ஏதோ ஜோக் சொல்லிவிட்டு ஜோராக சிரிப்பார். லிஃப்டில் இருக்கும் அத்தனைப் பேரும் சிரிக்க வேண்டும் என்று அடம் பிடிப்பார். நாசுக்கு பேர்வழிகள் போனால் போகட்டும் என்று சிரித்துத் தொலைவார். ஜோக்கு புரிந்ததோ இல்லையோ.

லிஃப்டின் தளம் எண் அமுக்குவதிலும் ஒரு சுவாரஸ்யம் சில பேருக்கு. போவது என்னமோ 8வது தளம் என்றாலும் 1 2 3 4 5 6 7 8 என்று அமுக்கித்தள்ளுவார். குழந்தை பருவதில் லிஃப்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை அல்லவா? பிறகு என்ன? குழந்தையாக மாறிவிடவேண்டியது தான்.

லிஃப்டி பவர் கட் என்று நடுவில் நின்றுவிட்டால் போதும். உலக நாடுகளில் ஏன் இந்தியா இன்னும் முன்னேறவில்லை என்று பெரிசுகள் ஒரு லெக்சரே கொடுத்துவிடுவர்.

சிறிசுகளுக்கோ கொண்டாட்டம். பல காதல் கதைகள் தரை தளத்தில் துவங்கி முதல் தளத்தில் மலர்ந்து கடைசி தளத்தில் திருமணத்தில் சென்று முடிந்துவிடும். இந்த கணக்கை வைத்து பார்த்தால் லிஃப்டு தான் தற்காலத்தைய மாரேஜ் ப்ரோக்கர் என்று சொல்லி விடலாம்.
சில நேரங்களில் லிஃபடின் பயணம் செய்பவர்களின் தொல்லைகள் தாங்காமல் லிஃப்ட் ஆபரேட்டர் என்று ஒருவரை வைத்துவிடுவார்கள் கட்டிட முதலாளிகள். இவர்கள்தான் இந்த சிறிசுகளின் நம்பியார்கள். ஒன்றுமே செய்விடமாட்டான் இந்த ஆபரேட்டர் என்று சலித்துக் கொள்வர்.

லிஃப்டை வெறும் எந்திரமாக நினைக்க முடியாது. அது நம் வாழ்கையில் ஒரு அங்கம் அல்லவா? பூம்புகார் சென்று அங்கே இருந்த கட்டிடத்தில் நான் இந்த வருடம் இந்த தேதியில் இங்கு வந்தேன் என்று எழுதிசெல்வோம் அல்லவா? ஒரு ஞாபகார்த்தத்திற்கு தான். 10 ஆண்டுகள் பிறகு வந்தால் அந்த கல்வெட்டு சாதனையை நம் பிள்ளைக்கு காட்டலாம் அல்லவா? அது மாதிரி தான் லிஃப்டின் சுவர்களும். தன் பெயரையும் தன் காதலியின் பெயரையும் எழுதி மகிழ்வர் சிலர். ஒரு இதயம். அதில் ஒரு அம்புக்குறி. குரு லவ்ஸ் நிஷா. காதலுக்கு இதைவிட வேறு அரங்கேற்றம் தேவையா? இப்படி எழுதுபவர்களில் பலர் ஒரு தலை காதல் மன்னர்கள் அல்லது மன்னிகள்.

சிலரோ தன் எதிரியின் பெயரை எழுதி ஒரு பெருக்கு குறி போட்டுவிடுவர். அவனையே அடித்தது போல ஒரு சந்தோஷம்.

லிஃப்டில் கண்ணாடி இருந்துவிட்டால் நம் மக்கள் செய்யும் கூத்திற்கு அளவே இல்லை. ஒரே தமாஷ்தான். உள்ளே நுழைந்ததும் சட்டை சரி செய்துக் கொள்வதும் தலைவாரிக் கொள்வதும் முகத்தில் சாயம் பூசிக் கொள்வதும் உதட்டில் சாயம் பூசிக் கொள்வதும் என்று பலரும் லிஃப்டை மேக்கப் அறையாக மாற்றிவிட்டிருப்பர். அப்படி யாராவது செய்தால் உன் மூஞ்சிக்கு ஒன்னும் தேறாது என்று சொல்லத் தோன்றும். ஆனாலும் அவர் நம்பிக்கையை ஏன் கெடுக்கவேண்டும். போனால் போகட்டும்.

அளவில்லாமல் தின்றுவிட்டு லிஃப்ட் மின்சாரத்தில் இயங்கவில்லை. என் பளுவில் தான் கீழே செல்கிறது என்று நினைத்து உள்ளே நுழையும் சில மாமிச மலைகளை கண்டாலே ஒரு பயம் தான்.

அப்போது தான் இந்த லிஃப்டில் 10 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. அதிக பட்ச இடை 250 கிலோ என்ற எச்சரிக்கையை உறக்கப் படிக்கத் தோன்றும். ஆனாலும் மனதில் நினைத்ததை செய்யும் சுகந்திரம் நமக்கில்லையே என்று ஏங்கத்தவிப்போம்.



........................தொடரும்

mukilan
28-09-2006, 10:36 PM
வாருங்கள் லியோ. உங்கள் வலைப்பதிவையும் கண்டேன். உங்களைப் பற்றி ஒரு அறிமுகம் கொடுங்களேன்.

leomohan
28-09-2006, 10:55 PM
அறிமுகம் தந்துள்ளேன் ஐயா.

pradeepkt
29-09-2006, 05:47 AM
ஹ்ம்ம்... நல்ல கட்டுரை.
எங்கள் பிஸினெஸ் எதிக்ஸ் டிரெயினிங்கில் லிஃப்டில் என்ன செய்யலாம் செய்யக் கூடாது என்பது ஒரு முக்கியப் பாடம்.
இன்று இன்னும் சில சுவாரஸ்யங்களைக் கண்டு கொண்டேன்.

gragavan
29-09-2006, 06:19 AM
நல்ல லிப்டு தான் இல்லையா லியோ. ஆனாலும் முடிஞ்ச வரைக்கும் மூனு மாடி வரைக்கும்னா நான் படியிலயே ஏறீருவேன். அதுக்கு மேலைன்னா லிப்டுத்தான்.

தாமரை
29-09-2006, 06:27 AM
அடுக்கு மாடி லிப்ட் கேட்டது
அடுக்குமாடி..!!

aren
29-09-2006, 07:37 AM
மன்றத்திற்கு வந்தவுடனேயே இப்படி வெளுத்து கட்டுகிறீர்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

pradeepkt
29-09-2006, 09:00 AM
அடுக்கு மாடி லிப்ட் கேட்டது
அடுக்குமாடி..!!
!! பதிலா ?? இருந்திருக்கணுமோ??!!

தாமரை
29-09-2006, 09:06 AM
!! பதிலா ?? இருந்திருக்கணுமோ??!!
இப்போ துண்டு போட்டுப் பாருங்க.. இன்னொரு அர்த்தம் வரும்.. இந்த லிஃப்ட் வேற
அடுக்குமாடி
லிஃப்ட் கேட்டது
அடுக்குமாடி..

pradeepkt
29-09-2006, 09:10 AM
புரிஞ்சுருச்சு...
ஓவரா அடுக்குமாடியில் வெளையாடாதீங்க அடுக்குமாடின்னு யாராச்சும் அடுக்குமாடியில இருந்தே தள்ளி விட்டுறப் போறாங்க

leomohan
29-09-2006, 11:49 AM
இறங்க வேண்டியது என்னவோ தரை தளத்தில். ஆனாலும் அவர்
வழியடைத்து நின்றிக் கொணடிருப்பார். அவர் தெரிந்தா செய்கிறார்? அவர் உடல் வாகு அப்படி! ஒவ்வொரு முறையும் மற்றவர் இறங்க வழி செய்ய அவர் முயலும் போது திருவாரூர் கோவில் யானை அசைந்து அசைந்து ஆசீர்வாதம் செய்வது போல இருக்கும். எந்த கடையில நீ அரிசி வாங்கறே? என்று வார்தைகள் கழுத்துக்குள் வந்து போகும். இந்த சினிமாகாரர்கள் ரொம்ப மோசம். எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டு எழுதிவிட்டனர். கண்ட நேரத்தில் அந்த பாட்டும் வந்து தொலையும் நம் மனதில். சில நேரம் தெரியாமல் விசிலில் பாடிவிட்டு மற்றவருக்கு புரிந்து விட்டதோ என்று வழியவேண்டி வரும் கத்திக்கா கத்திரிக்கா குண்டு கத்திரிக்கா ஏன் ஏழுத வேண்டும் இந்த பாட்டை.

என் நண்பன் ஒருவன் பக்தப்பிரகலாதா என்ற படத்திலிருந்து ஒரு பாட்டை உல்டா செய்து வேறு பாடுவான் நாகராஜனே டமுக்கு டப்பனே என்று.

இந்த நேரத்தில் என் தமிழ் வாத்தியார் ஒரு குண்டு பையனைப் பார்த்து திட்டியது ஞாபகம் வரும். கம்னாட்டி கம்னாட்டி மாடு மாதிரி வளர்ந்திருக்கே. உன்னை அடிச்சுப் போட்டால் பத்து பேரு சாப்பிடலாம் என்று. ரொம்ப சோதனைதான்.

லிஃப்ட் ரோமியோக்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சில இளம் பைத்தியங்கள் ஃபிகர் போகவேண்டியது 14வது தளம் தான் போகவேண்டியது 10வது ப்ளோர் என்றாலும் அவளுடன் சென்று வரும் அந்த 30 நொடிகளில் என்னமோ சந்திர மண்டலமே சென்று வந்துவிட்டதாக ஒரு நினைப்பில் 14வது சென்றுவிட்டு பிறகு கீழே இறங்கி வரும் இந்த அசடுகள். கன்னிப்பெண்ணின் காற்று பட
ஏங்கும் இந்த இளம் ஆண் நுரையீரல்கள்.

லிஃப்டில் ஏறத்தான் போட்டியென்றால் இறங்கவும் போட்டிதான்.

என்னமோ பல்லவன் நிற்காமல் சென்று விடுவது போல முட்டி மோதி வெளியே செல்வர். இவர்களுக்கு லிஃப்டு திறப்பது என்பது பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பதைப் போல ஒரு ஃபீலிங்.

லிஃப்டில் சில நாசர் டைப் வில்லன்களையும் பார்கலாம். நீங்கள் லிஃப்டு பக்கம் போகும் போது இவர்களைப் பார்த்திருப்பீர்கள். காலேஜ் மாணவன் பேருந்தை ஓட விட்டு பிறகு ஓடி வந்து தாவிப் பிடித்து ஃபுட் போர்டில் ஸ்டைலாக தொங்கிக் கொண்டு குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று நிரூபிப்பதைப் போல ஸ்டைலாக நின்றுக் கொண்டு புகைவிட்டுக் கொண்டிருப்பார். உள்ளே நுழைந்தவர்கள் 1 4 7 என்று எண்களை அழுத்திவிட்டு
கதவைப் பார்த்து மூடிடு மூடிடு என்று அலிபாபா 40 திருடனில் வரும் எம் ஜி யாரைப்போல வேண்டிக் கொண்டிருக்கும் போது கதவு மூடும் நேரத்தில் தன் காலை வைத்து தடுத்து நிறுத்தி வில்லன் பாணியில் உள்ளே நுழைவார். சென்ஸர் இருந்த தானாகவே நின்று விடும் லிஃப்டிகள் உண்டு. அப்படியில்லாவிட்டால் மார்பை அகலப்படுத்த ஒரு கருவி இருக்கிறதே அதுபோல இரண்டு கைகளால் இரண்டு கதவையும் பிடித்து நிறுத்தி மல்யுத்தம் செய்வர்.

எனக்கு இதை பார்க்கும் போதெல்லாம் என் பக்கத்து வீட்டு குழந்தை செய்யும் அட்டகாசங்கள்தான் நினைவு வரும். தினமும் காலை கோழியின் முன் சென்று உட்கார்ந்துக் கொள்வான். கோழி முட்டையிடும் நேரத்தில் கைகளாலே அந்த முட்டையை பிடுங்கி எடுத்து ரகளை செய்வான்.

உள்ளே இப்படி சூப்பர் ஸ்டார் என்ட்ரி கொடுத்துவிட்டு ஸாரி என்று சொல்வர் சில பேர். பல பேர்களோ லிஃப்டை நிறுத்தி இப்படி ஏறியது தன் பிறப்புரிமை என்று கம்யூனிசம் பேசுவர்.

லிஃப்டில் அரசியல் கேட்பது ரொம்ப சுவாரஸ்யம். டீக்கடை பெஞ்சு தோற்றுப் போகும். கிடைக்கும் சில நொடிகளில் தன் கருத்து லிஃப்டி பயணிகளிடம் சென்றடைய மிகவும் பிரயத்தனப்படுவார்கள் சில பொது நல வியாதிகள். வியாதிகள் என்றா சொன்னேன்? மன்னிக்க வேண்டும். பொது நலவாதிகள். அரசியல் பேசவும் கேட்கவுமே உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் சில பேர் பல தடவை தான் அமுக்கிய தளத்தை மறந்து விட்டு உலகம் சுற்றும் வாலிபர்களாக திரிவார்கள்.

சில நேரம் லிஃப்டே செய்யும் கூத்துகளைப் பற்றி என்ன சொல்வது?
அமுக்கிய தளத்தில் நிற்காமல் சென்றுவிடும். 6க்கும் 7க்கும் நடுவில்
வந்து நின்று விடும் டோர் க்ளாஸ் எனும் பொத்தானை அமுக்கினால் கதவு திறந்துக் கொள்ளும். சில நேரம் எதையோ தெரியாமல் அழுத்திவிட்டால் ட்ரிங்ஙஙஙஙஙஙஙஙஙங் என்று அபாய சங்கை ஊதிவிடும். பிறகென்ன கண்டவனிடம் திட்டு வாஙக் வேண்டியது தான்.

சுனாமியிலிருந்து காப்பாற்றுவது போல சில நேரம் அனைவரையும்
தூக்கி நடுவில் கரை கண்ட கப்பல் எனும் லிஃப்டிலிருந்து கடைசியாக வெளியே வரும் சில இளைஞர்களின் சாதனை. அனைவரையும பார்த்து என்னமோ கத்ரினாவிலிருந்து உன்னை காப்பாற்றிவிட்டேன் பார்த்தியா எனும் லுக் வேறு. இந்த கூத்து எனக்கு பாண்டியராஜனும் குஷ்புவும் நடித்த ஒரு படம் தான் ஞாபகத்திற்கு கொண்டுவரும். லிஃப்டிலே சமைத்து பரிமாறி கூத்தடிப்பார் பாண்டியராஜன் அந்தப் படத்தில்.

டாபர் ச்யவனப்ராஷ் விளம்பரம் நினைவுக்கு வருகிறதா? தரை தளத்தில் அனைவரும் வந்து லிஃப்டுக்குள் நுழைவார்கள். இன்னும் மூன்று பேர் காத்திருக்க லிஃப்டுக்குள்ளோ ஒருவருக்கு மட்டும் தான் இடம் இருக்கிறது. காத்திருக்கும் மூவரில் ஒரு இளம் பெண் ஒரு முதியவர் ஒரு இளைஞர். இளைஞரும் முதியவரும் இளம்பெண்ணுக்கு இடம் கொடுத்துவிட்டு நான்கு மாடிக்கு படி ஏறிச்செல்வார்கள். நான்காவது மாடிக்கு வந்த இளைஞனுக்கோ
நுரைதள்ளிப் போயிருக்கும் முதியரோ ஜோராக வருவார். ஏனென்றால் அவர் டாபர் ச்யவனப்ராஷ் சாப்பிடுபவராம்.
..........................தொடரும்

மன்மதன்
07-10-2006, 08:45 AM
ரொம்ப சுவாரஷ்யமா இருந்தது மோஹன், இந்தியாவில்தான் லிப்ட் மேன் இருக்கிறார்கள். லிப்ட் உள்ளே நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும். வேற நாட்டில் இது மாதிரி வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்களா??

leomohan
07-10-2006, 03:23 PM
நன்றி மன்மதன். இன்னும் சில நாடுகளில் பார்த்ததாக ஞாபகம்.

கண்மணி
07-10-2006, 05:33 PM
பம்பாயில் உள்ள லிப்டுகளில் லிப்ட் பாய்கள் இருப்பார்கள்..

வாயில் புகையிலை பான் பராக் குதப்பி உமிழ்பவர்களை கண்காணிக்க..

karikaalan
07-10-2006, 06:11 PM
லியோமோஹன்ஜி

மெய்யாலுமே நல்லா இருந்தது படிப்பதற்கு.

லிஃப்டில் தூங்கிய அனுபவம் எனக்கு உண்டு!

லிஃப்ட்மேன் பற்றி ஒரு ஜோக்:

லிஃப்ட்மேன் வேலைக்கு ஆள் எடுக்க விளம்பரம் செய்திருந்தார்கள். பலரும் விண்ணப்பிருந்தார்கள். அவர்களில் பொறியியலாளர்களும் இருந்தார்கள்.

நேர்முகத் தேர்வின் போது ஒரு பொறியியலாளருக்கு மட்டும் வாய்ப்பு தரப்பட்டதாம்... ஏன்? அவர் லிஃப்ட் டெக்னாலஜியில் நிபுணராம்!!

---கரிகாலன்

leomohan
08-10-2006, 12:43 AM
நன்றி கரிகாலன். நகைச்சுவையை ரசித்தேன்.

நன்றி கண்மணி. ஆம் வடநாட்டவர்களும் பான்பராக்கும் பிரிக்க முடியாத சகோதரர்கள். தில்லியில் 8 வருடம் இருந்ததேன். ஒரு அரசு அலுவலகத்தின் சுவரும் பான் பராக் துப்பலிலிருந்து தப்பித்ததில்லை.

ஓவியா
23-11-2006, 04:23 PM
மோகன்,
ரொம்ப சுவாரஷ்யமான பதிவுதான்

ரசனையா தொகுத்து படைத்துல்லீர்கள்
ரசித்து படித்தேன்
நன்று


ஆமாம் தொடரும்னு போட்டு...
தொடராம இருந்தா என்னா அர்த்தம் சார்!!!!!!!!!!

leomohan
23-11-2006, 04:35 PM

leomohan
23-11-2006, 05:09 PM

leomohan
23-11-2006, 05:15 PM

ஓவியா
23-11-2006, 05:19 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

ராமர் விட்ட பானம் திரும்பி பார்த்தால் காணோம். மறக்க முடியுமா இந்த பழமொழியை. இப்பேர்பட்ட இயற்கை வாயு பானத்தைவிட்டுவிட்டு யார் இந்த குற்றத்தை செய்தது? என்று நம்மையே பார்ப்பார் அந்த சுண்டல் தின்று கொழுத்த குடிமகன்.

விவேக் ஒரு படத்தில் சொல்வது போல இந்த பஸ்சுல சுண்டல் விக்கறதை நிறத்துனம். நாத்தம் தாங்க முடியவில்லைப்பா என்பார்.
எங்கள் அடையார் வீட்டு லிஃப்டைப்பற்றி சொல்லாவிட்டால் இந்த கட்டுரையே

:eek: :eek: :eek:

எனக்கு பதிவாகுதே!!!!எனக்கு பதிவாகுதே!!!!எனக்கு பதிவாகுதே!!!!

முடிந்தால் அடுத்த பாகத்தை தனி மடலில் அனுப்புங்க சார்

leomohan
23-11-2006, 06:05 PM

leomohan
23-11-2006, 06:06 PM
கணினியை மாற்றிவிட்டேன். உலாவியை மாற்றிவிட்டேன். இன்னும் அதே பிரச்சனை தான். என்னுடைய பயனர் உரிமைகளில் ஏதாவது குழப்பம் உள்ளதா.

pradeepkt
24-11-2006, 03:22 AM
தெரியலீங்களே... இன்னைக்கு எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது. அப்புறம் சின்னச் சின்னதாக வெட்டிப் பதிவு செய்தேன். பதிவாகி விட்டது. நீங்கள் அப்படிச் செய்து பார்த்தீர்களா?

sarcharan
24-11-2006, 04:09 AM
[B]
நங்கைக்கு பின்னே நிற்கும் நெட்டை கொக்கு நங்கையின் கழுத்தை நன்றாக மோப்பம் பிடிப்பார். என்னமோ அவள் என்ன சென்ட போட்டிருக்கிறாள் என்று கண்டுபிடிப்பது போல.

மதி, பென்ஸூ --நெட்டை கொக்கு ????? :)



அளவில்லாமல் தின்றுவிட்டு லிஃப்ட் மின்சாரத்தில் இயங்கவில்லை. என் பளுவில் தான் கீழே செல்கிறது என்று நினைத்து உள்ளே நுழையும் சில மாமிச மலைகளை கண்டாலே ஒரு பயம் தான்.

ப்ரதீப் கவனிக்க...;)



அப்போது தான் இந்த லிஃப்டில் 10 பேருக்கு மேல் பயணம் செய்ய முடியாது. அதிக பட்ச இடை 250 கிலோ என்ற எச்சரிக்கையை உறக்கப் படிக்கத் தோன்றும். ஆனாலும் மனதில் நினைத்ததை செய்யும் சுகந்திரம் நமக்கில்லையே என்று ஏங்கத்தவிப்போம்.

ஹி ஹி அதுதான் எனக்கும் தோணிற்று.... ;)

sarcharan
24-11-2006, 04:18 AM
லிஃப்ட் ரோமியோக்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சில இளம் பைத்தியங்கள் ஃபிகர் போகவேண்டியது 14வது தளம் தான் போகவேண்டியது 10வது ப்ளோர் என்றாலும் அவளுடன் சென்று வரும் அந்த 30 நொடிகளில் என்னமோ சந்திர மண்டலமே சென்று வந்துவிட்டதாக ஒரு நினைப்பில் 14வது சென்றுவிட்டு பிறகு கீழே இறங்கி வரும் இந்த அசடுகள். கன்னிப்பெண்ணின் காற்று பட
ஏங்கும் இந்த இளம் ஆண் நுரையீரல்கள்.



ஹி ஹி இங்கும் தாமரை(களை கண்டதும்) மலரும் நினைவுகள்.....:p





உள்ளே இப்படி சூப்பர் ஸ்டார் என்ட்ரி கொடுத்துவிட்டு ஸாரி என்று சொல்வர் சில பேர்.



சரவணா கலக்குடா....





டாபர் ச்யவனப்ராஷ் விளம்பரம் நினைவுக்கு வருகிறதா? தரை தளத்தில் அனைவரும் வந்து லிஃப்டுக்குள் நுழைவார்கள். இன்னும் மூன்று பேர் காத்திருக்க லிஃப்டுக்குள்ளோ ஒருவருக்கு மட்டும் தான் இடம் இருக்கிறது. காத்திருக்கும் மூவரில் ஒரு இளம் பெண் ஒரு முதியவர் ஒரு இளைஞர். இளைஞரும் முதியவரும் இளம்பெண்ணுக்கு இடம் கொடுத்துவிட்டு நான்கு மாடிக்கு படி ஏறிச்செல்வார்கள். நான்காவது மாடிக்கு வந்த இளைஞனுக்கோ
நுரைதள்ளிப் போயிருக்கும் முதியரோ ஜோராக வருவார். ஏனென்றால் அவர் டாபர் ச்யவனப்ராஷ் சாப்பிடுபவராம்.



அது சரி பென்ஸூ லிஃப்டிலும், ராகவரு படியேறி போறதும் உங்களுக்கு எப்படி தெரிந்தது?

தாமரை
24-11-2006, 05:04 AM
தெரியலீங்களே... இன்னைக்கு எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது. அப்புறம் சின்னச் சின்னதாக வெட்டிப் பதிவு செய்தேன். பதிவாகி விட்டது. நீங்கள் அப்படிச் செய்து பார்த்தீர்களா?
இதைத்தான் அவையடக்கம்னு சொல்வாங்க

pradeepkt
24-11-2006, 05:27 AM
இதைத்தான் அவையடக்கம்னு சொல்வாங்க
:D :D

sarcharan
24-11-2006, 05:28 AM
இன்று எனது லீட் அலுவலகம் வரவில்லை அதுதான் :) :) :)

pradeepkt
24-11-2006, 05:38 AM
இன்று எனது லீட் அலுவலகம் வரவில்லை அதுதான் :) :) :)
இப்ப யாரு ராஜா இதைக் கேட்டது??? :rolleyes: :rolleyes:
லீட் வராரோ இல்லையோ வேலை செய்யக் கூடாதுன்னு முடிவெடுத்துச் செயல்படும் சிங்மல்லோ நீ???

leomohan
24-11-2006, 05:55 AM
என்ன சரவணன் ஒரே கல்லுல பல மாங்காய்கள் அடிக்கறீங்க :) :)

leomohan
24-11-2006, 05:55 AM
தெரியலீங்களே... இன்னைக்கு எனக்கும் இந்தப் பிரச்சினை இருந்தது. அப்புறம் சின்னச் சின்னதாக வெட்டிப் பதிவு செய்தேன். பதிவாகி விட்டது. நீங்கள் அப்படிச் செய்து பார்த்தீர்களா?

என்ன ப்ரதீப் வேலை அதிகமா. ஆளையே காணோம்.

pradeepkt
24-11-2006, 06:53 AM
ஆமா மோகன்... வேலை இருந்தாலும் அவ்வப்போது வந்து செல்கிறேன். நீங்கள் சுகம்தானே..

ஓவியா
24-11-2006, 05:04 PM
என்ன கொடுமை சரவணா இது (தூசு தட்டவா)

நீர் சிம்பு ரசிகனா
இப்படி போட்டு தாக்கறீக...

ஓவியா
12-12-2006, 05:57 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

லிஃப்டில் ஒரு பயணம் - 3
--------------------------------------------------------------------------------

ராமர் விட்ட பானம் திரும்பி பார்த்தால் காணோம். மறக்க முடியுமா இந்த பழமொழியை. இப்பேர்பட்ட இயற்கை வாயு பானத்தைவிட்டுவிட்டு யார் இந்த குற்றத்தை செய்தது? என்று நம்மையே பார்ப்பார் அந்த சுண்டல் தின்று கொழுத்த குடிமகன்.

விவேக் ஒரு படத்தில் சொல்வது போல இந்த பஸ்சுல சுண்டல் விக்கறதை நிறத்துனம். நாத்தம் தாங்க முடியவில்லைப்பா என்பார்.

எங்கள் அடையார் வீட்டு லிஃப்டைப்பற்றி சொல்லாவிட்டால் இந்த கட்டுரையே நிறைவுபெறாது. இரண்டு கம்பிக்கதவுகளைச் சாற்றினால் தான் லிஃப்டே இயங்கும். ஒன்று சரியாக போடாவிட்டாலும் ப்ளீஸ் க்ளோஸ் த டோர். தயவு செய்து கதவை மூடவும் என்று ஒரு பெண்மணி டார்ச்சர் கொடுப்பார்.

அவர் தொந்தரவு தாங்கமலேயே ஒழுங்காக பூட்ட வேண்டியதிருக்கும். இதிலும் சில மேன்மக்கள் கீழ் தளம் சென்றடைந்தப்பிறகு சாவட்டும் மக்கள் என்று பூட்டாமலேயே சென்றுவிடுவர். 3ம் தளத்திலிருந்து இறங்கி வரவேண்டியதிருக்கும்.

அதாவது பரவாயில்லை. 3ம் தளத்திருக்கு சென்றுவிட்டு இப்படி செய்துவிட்ட மேன்மக்களை சற்று நினைத்துப்பாருங்கள்? அன்று வீட்டில் அனைவருக்கும் மூவ் தான்.

திடீரென்று மொத்தமாக நாலு பேர் நுழைவார்கள். யாரோ ஒருவர் பல
நாள் குளிக்காமல் நுழைந்துவிட்டது போல ஒரு கப். இந்த மார்கெடிங் எக்ஸிக்யூடிவ் நாள் முழுக்க சுத்திவிட்டு வந்தால் ஒரு வேர்வை நாற்றம் அடிக்குமே அதுபோல. அவர்களைப் பார்த்து ஆரோக்ய வாழ்வினை காப்பது லைஃப் பாய் என்று பாடத் தோன்றும்.

நான் கம்யூட்டர் பாதுகாப்பு துறையில் வேலை செய்ததால் இன்னும் சில கூத்தை பார்க்க வாய்ப்புகள் கிடைத்தன. பாதுகாப்பு கருதி லிஃப்டின் விளக்கின் நடுவே காமிரா பொருத்தியிருப்போம். அதை பாதுகாப்பு அறையிலிருந்து அதிகாரிகள் டிவி மூலம் பார்க்க முடியும். அதை சரி செய்ய நாங்கள் செல்லும்போது தனியாக லிஃப்டில் பயணம் செய்பவர்கள் போடும் ஆட்டங்களை ரசிப்போம்.

சில பேர் சத்தமாக பாட்டு பாடுவார்கள். நாராசமாக இருக்கும். சில பேர் டான்சும் போடுவார்கள் மிகவும் தமாஷான விஷயம் முகத்தை பல வேறாக சுளிப்பதும் கையிலிருந்த பையை வைத்துக் கொண்டு
கிட்டார் வாசிப்பதுமாக இருப்பார்கள். லிஃப்டி நின்றுவிட்டதும் மகானாக மாறிவிடுவார்கள் பிறகு.

லிஃப்ட் டிப்ளாமெஸி. சரியான தளத்தில் நின்ற பிறகும் மரியாதை நிமித்தமாக நீங்க போங்க முதல்ல நீங்க போங்க முதல்ல என்று கூறிக்கொள்வார்கள். யோவ் ரெண்டு பேரும் போய் தொலைங்கய்யா என்று பின்னால் இருந்து குரல் வந்த பிறகு வழிந்துக் கொண்டே ஓடுவர்.

சில நேரங்களில் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக மாட்டிக் கொள்ள நேரிடும். ஆண் தன்னை கண்ணியமானவன் என்று காட்டிக் கொள்ள வேறெங்கேயோ பார்த்தபடி நிற்பான். அவளோ தன்னைத் தான் அவன் பார்க்கிறான் என்று அழகை காட்டிக் கொண்டு நிற்பாள். இருவரும் பேசாவிட்டாலும் அந்த சிறு உலகமே பேசிக் கொண்டிருக்கும்.

சில பேர் பல்லவனில் பயணம் செய்வதாக நினைத்துக் கொண்டு 7வது ப்ளோர் வந்தா சொல்லுங்க என்று குட்டி உறக்கம் நின்றபடியே. ஆமாம். லிஃப்ட் மெதுவாகச் சென்றால் அவர் என்ன செயவார் பாவம்.

லிஃப்ட வராத படம் ஹிட்டாகுமா? ட்ரூ லைஸ் ஆங்கிலப் படத்தில் ஆர்ன்லாட் லிஃபடிலேயே குதிரை ஓட்டுவார். கமலஹாசனோ ரதியுடன் சேர்ந்து ஒரு ஹிந்தி படத்தில் ட்யூட்டே பாடுவார்.

நகர வாழ்கை நரக வாழ்கையாக ஆனது பல அடுக்கு மாடி கட்டிடங்களால் தான். 25வது தளத்திலிருநது பல பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி ஊட்டிக் கொண்டே தாய்மார்கள் கீழே பிள்ளைகளை விட வருவார்கள். பம்பாயில் இந்த கூத்தை பார்க்கலாம்.

ஏணியையும் லிஃப்டையும் ஒப்பிட்டு பார்த்தால் என்ன என்று தோன்றும் சில சமயம். ஏணி நிற்கும். நாம் அதில் ஏற வேண்டும். இங்கு நாம் நிற்ப்போம் லிஃப்டு ஏறும்.

முதலில் பல பாட்டி தாத்தாக்கள் லிஃப்டுக்குள் வரவே பயப்படுவர். பேரன்கள் ஆஸ்திரேலியா அமெரிக்கா போகத்தொடங்கியதும் இதுவும் பழகிவிட்டது. வெளிநாட்டு லிஃப்ட்டுகளோ அதிவேக இயந்திரங்கள். மேலே போகும் போது வயிற்றில் கிச்கிச்சியாகும்.

ஓவியா
12-12-2006, 06:01 PM
எழுத்து - மோகன் கிருட்டிணமூர்த்தி

லிஃப்டில் ஒரு பயணம் - 3.1

லிஃப்டை வைத்து பல ஜோக்குகள்.

ஒருவர் தினமும் 11 தளம் வரைதான் லிஃப்டில் போவாராம். ஆனால் அவர் இருப்பதோ 13ம் தளத்தில். ஏன்? அவர் இருப்பதோ 4 அடி. 13ம் எண் பொத்தானோ அவருக்கு எட்டாது. வேறென்ன செய்வார்?

லிஃப்டின் தமிழாக்கம் என்ன? தூக்கி? ஒரு மாடி சென்றால் தூக்கி. இரு மாடி சென்றால்? தூக்குத்தூக்கி. இது என் நண்பனின் கடி ஜோக்.

இத்தனை மகுத்துவம் உள்ள லிஃப்டிற்கு மரியாதை செய்யும் வகையில் பஸ் டே காலேஜ் டே என்று கொண்டாடும் வகையில் லிஃப்ட் டே கொண்டாடினால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.

உடல் வலியா? மிகவும் களைப்பாக இருக்கிறதா? கூட்டமான லிஃப்டிற்குள் செல்லுங்கள். நல்ல பாடி மஸாஜ் கிடைக்கும். ஐ டி கம்பெனிகள் இருக்கும் கட்டிடத்திற்குள் சென்றால் கேட்கவே வேண்டாம். தமிழ் பட வில்லன்களைப்போல கன்னிகளின் மஸாஜ் தூள் தான் போங்கள்!

இப்படிப்பட்ட லிஃப்ட் இன்னும் நவீனமானால் என்னவெல்லாம்
செய்யலாம்?

உள்ளே நுழையும்போது வருபவரின் உடல் இடையை காண்பிக்கலாம். குண்டானவர்களுக்கு கொஞ்சம் சங்கடம் தான்.

மொபைல் போன் சார்ஜர் வைக்கலாம்.

இந்த வேக உலகத்திற்காக எலெக்ட்ரிக் ஷேவிங் வைக்கலாம்

பல இடத்தில் இப்போது இருக்கும் எஃப் எம் ரேடியோவை பிரபலப்படுத்தலாம்.

குழந்தைகள் லிஃப்டுடன் செய்யும் விளையாட்டுகள் தான் என்ன?
ஏதாவது ஒரு எண்ணை அழுத்திவிட்டு ஓடிச் சென்று ஒளிந்துக் கொள்ளும் பிள்ளைகள். மேலிருந்து பல முறை கீழ். பிறகு மறுபடியும் மேலே. உள்ளிருந்த போனை எடுத்து வாட்ச்மேனுடன் ஒரு சாட். அவன் கோபமாக கத்தியவுடன் கீழே போட்டு விட்டு ஓட்டம்.

கோபமாக வருபவர்கள் காலால் உதைப்பதும் லிஃப்டின் கதவுகளைத்தான். அன்பாக இருப்பவர்கள் ஆதரவாக தடவிக் கொடுப்பதும் லிஃப்டின் கதவுகளைத்தான். காதல் வெளிப்படுத்தவும் லிஃப்டு தான். காதல் தோல்வியை காவியமாக எழுதி வைப்பதும் லிஃப்டின் கதவுகளில் தான். தினமும் குறைந்தது இரு முறை பல் தேய்ப்பது போல நம் வாழ்கையின் ஒரு அங்கமாக லிஃப்ட் ஆகிவிட்டப் பிறகு அதைப் பற்றி ஒரு மகாபாரதம் எழுதினாலும் தகுமே!


முற்றும்


**********************************************************************************************


பாஸ்,

போனஸ் எப்போ அனுப்பரீங்க......??....;) ;)
ஓ இல்லையா .....................:eek: :eek:
இது சமூக செவையா......சரி சரி.....:D :D

leomohan
12-12-2006, 07:07 PM
ஆமாம் ஓவியா. காந்தி கணக்குல எழுதிடுங்க. நான் லண்டன் வந்தா நீங்க செலவு பண்ணத்தேவையில்லை. சம்பளத்துல கழிச்சிடலாம். :)

ஓவியா
12-12-2006, 07:15 PM
ஆமாம் ஓவியா.
காந்தி கணக்குல எழுதிடுங்க.
நான் லண்டன் வந்தா நீங்க செலவு பண்ணத்தேவையில்லை. சம்பளத்துல கழிச்சிடலாம். :)

அய்யோ பாஸ்
:eek: :eek: :eek: :eek:

:D :D :D :D
சரி, நான் பஹரீன் வாறேன்.....அப்ப செலவு பண்ணுங்க