PDA

View Full Version : ஒரு கன்னிப் பெண்ணின் புலம்பல் - கவிதை

leomohan
28-09-2006, 07:37 PM
ஐந்து மணிக்கு வேலை முடிந்து ஆறு மணிக்கு வீடு வந்தால்
- நான் பத்தாம் பசலியாம்

மொபைல் போனில் இரவு முழுக்க ஆண்களுடன் பிதற்றாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்

ஆண்களின் ஆடையணிந்து அங்கங்கே கிழித்துக் கொள்ளவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்

ஆடை மாற்றுவது போல் ஆடவரை மாற்றாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்

உதட்டுக்கு மேல் சாயம் போட்டு தினம் நடிகையாவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்

ஆடவர் போல் மீசை வளர்த்து இவர்கள் போகும் பார்லர் போகவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்

கற்ப்பத்தை தினம் கலைத்து கருவறையை பிணவறையாக மாற்றவில்லையென்றால்
- நான் பத்தாம் பசலியாம்

கட்டினவன் ஒருவனிருக்க கண்டவனுடன் உறவு கொள்ளும் வேசியாகாவிட்டால்
- நான் பத்தாம் பசலியாம்

ஏனடி பெண்ணாக நீ இல்லை என்று கேட்டால் என்னையே நீ பெண்ணா எனும் இவர்களுக்கு
- என்றும் நான் பத்தாம் பசலிதான்!

அன்புடன்,

மோகன்
http://www.leomohan.net
http://tamilamudhu.blogspot.com

mukilan
28-09-2006, 10:39 PM
ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். பத்தாம் பசலின்னா என்ன?

leomohan
28-09-2006, 10:54 PM
பத்தாம் பசலி என்றால் 10ம் நூற்றாண்டை சேர்ந்தவர் அல்லது 10ம் நூற்றாண்டின் கருத்துக்கள் கொண்டவர். பழமைவாதி எனலாம். :)

pradeepkt
29-09-2006, 05:42 AM
அட... இதுதான் பத்தாம் பசலியா... புது விஷயம் கற்றுக் கொண்டேன்.
நன்றி.

crisho
29-09-2006, 06:34 AM
நான் கூட பத்தாம் பசலின்னா என்னனு அறிந்திருக்கவில்லை... இப்போது அறிந்து கொண்டேன் நன்றி.

ஓவியா
21-11-2006, 05:24 PM
பல அப்பட்டமான உண்மைகள்
அழகான கவிதை.......:)

படித்தேன்............. ரசிக்கவில்லை

உங்க கனவு பெண்கள் ரொம்பதான் அட்வான்சா இருகாங்க.....:D

பழமைவாதி....(டூப்பு)
:D ....ஓவியா..:D

guna
22-11-2006, 12:45 AM
மோகன், குணாக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..
இது மோகன் எழுதிய கவிதையா இல்லை மாலினி(மேற்கே செல்லும் விமானம்)எழுதிய கவிதையா?:D :D :D
சும்மா தான் கேட்டேன் மோகன்...

நம் இந்திய பெண்களுக்கும் இந்த கவிதை பொருந்துமா?
நம்ம பொண்ணுங்க எல்லாம் நெஜமா இவ்வளவு அட்வான்ஷா ஆகிடாங்களா?:confused:

leomohan
22-11-2006, 05:12 AM

ஹா ஹா. குணா, இது மாலினி அப்படிங்கற கதாபாத்திரம் மூலம் மோகன் எழுதியது. இந்த கவிதை இந்த கதைக்கு முன்பே எழுதி விட்டேன். இந்த கவிதைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் மாலினி.

இனியவன்
22-11-2006, 05:21 AM
நல்லாருக்குய்யா ஒங்க பத்தாம் பசலி......

guna
22-11-2006, 06:46 AM
ஹா ஹா. குணா, இது மாலினி அப்படிங்கற கதாபாத்திரம் மூலம் மோகன் எழுதியது. இந்த கவிதை இந்த கதைக்கு முன்பே எழுதி விட்டேன். இந்த கவிதைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் மாலினி.

கவிதையும் நன்றாக இருந்தது, கவிதைக்காக மோகன் உருவாக்கின கதாபாத்திரமும் நன்றாக இருந்தது..
வாழ்துக்கள் மோகன்..

leomohan
22-11-2006, 07:41 AM
கவிதையும் நன்றாக இருந்தது, கவிதைக்காக மோகன் உருவாக்கின கதாபாத்திரமும் நன்றாக இருந்தது..
வாழ்துக்கள் மோகன்..

மிக்க நன்றி குணா. முழு புத்தகத்தையும் நம் மன்றத்தின் இ-புக்ஸ் ஷேர் பகுதியில் ஏற்றியுள்ளேன். பெற்றுக் கொள்ளவும்.