PDA

View Full Version : தம்ழருவி மணியன்-சுதந்திர சிந்தனை



mgandhi
28-09-2006, 06:27 PM
ССநள்ளிரவு மணி பன்னிரண்டு ஒலித்து ஓயும்போது, உலகம் உறங்கச் செல்லும். ஆனால், இந்தியா அப்போதுதான் புதிய வாழ்வை, புதிய விடுதலையைப் பெறுவதற்காக விழித்திருக்கும்.

இதுபோன்ற ஒரு தருணம், வரலாற்றில் அரிதாகவே வரும். ஆம், நாம் பழைமையிலிருந்து புதுமைக்கு நடைபோடப் போகிறோம். சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் தாய்த்திருநாடு ஒரு மகப்பேற்றுக்குரிய எல்லா இன்னல்களையும் அனுபவித்துவிட்டது. துன்பஇருள் அடர்ந்த அந்தக் கடந்த காலம், இன்றோடு முடிந்து போனது. இன்று ஒளிமயமான எதிர்காலம் நம்முன் நின்று அறைகூவி அழைக்கிறதுТТ என்று, சுதந்திரம் கண்விழித்த நாளில் டெல்லி செங்கோட்டையில், அசோகச் சக்கரம் பொறித்த மூவண்ணக் கொடியை நடுநிசியில் ஏற்றிவைத்து, நம்பிக்கைத் ததும்ப உரையாற்றினார் நேரு.

எத்தனையோ தியாகிகளின் இரத்த நதியில் குளித்து, நாடு தன்னுடைய அடிமை அழுக்கை அகற்றியது. அடிமைத் தளை அறுபட்டு, அறுபதாண்டுகள் ஆகப் போகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததும், பாலாறும் தேனாறும் தானாகப் பாய்ந்தோடும் என்று பாமரனும் நம்பினான்; படித்தவனும் நம்பினான். ஆனால் ஆனந்த பைரவியை ஆலாபனை செய்யும் ஆசையோடிருந்த இந்திய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், இன்னும் முகாரியில்தான் மூழ்கிக் கிடக்கின்றனர். நாடு வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றது உண்மை. வறுமை, அறியாமை, வேலையின்மை, நோய், ஊழல் என்று எந்தப் பிரச்னையிலிருந்தும் நாம் முற்றாக விடுதலை பெற முடியவில்லை.

ஒரு ஹிரோஷிமா _ நாகசாகி அழிவிற்குப் பின்பும் ஜப்பான், அமெரிக்காவிற்கு இணையாக ஆற்றலோடு எழுந்து நிற்க முடிகிறது. இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளிடம் மரண அடி வாங்கிய ஜெர்மனி, மகத்தான முன்னேற்றத்தைச் சந்திக்க முடிகிறது. சின்னஞ் சிறிய கொரியா கூடப் பொருளாதார வளர்ச்சியில் புதிய வரலாறு படைக்க முடிகிறது. ஆனால், விரிந்து பரந்த நம் பாரத தேசம் மட்டும் வறுமையோடு ஏன் இன்னமும் வாழ்க்கை நடத்துகிறது?

இந்த மண்ணின் முன்னேற்றம், வேண்டிய அளவிற்கு வேகம் கொள்ளாமல் போனதற்கு யார்தான் காரணம்? அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களா? சொந்த ஆதாயத்திற்காகவே கட்சி நடத்தும் அரசியல்வாதிகளா? சமூகப் பொறுப்பற்று மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஊடகங்களா? பொழுதுபோக்குப் போர்வையில் மனித மனங்களை மலினப் படுத்தும் கலை, இலக்கியக்கர்த்தாக்களா? இலட்சிய நோக்கமின்றி இன்ப நாட்டத்திலும், பணத்தேட்டத்திலும் இதயத்தை எளிதாய்ப் பறிகொடுத்து நிற்கும் இளைய தலைமுறையா? ஆழ்ந்து யோசிக்கும் வேளையில் உண்மை புலப்படும்.

நம் நாடு விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்றுவரை வளர்ச்சியே பெறவில்லை என்று பழிப்பது, சூரியனே இல்லையென்று சாதிக்கும் வெளவால் ஞானமாகும். Сகுண்டூசி செய்யத் தெரியுமா?Т என்று கேட்ட வெள்ளையர் விழிகள் வியப்பால் விரிய, விண்கலம் செலுத்துபவர்கள் நாம். அமெரிக்காவே அஞ்சுமளவிற்குத் தகவல் தொழில்நுட்பத்துறையில் அசுர வளர்ச்சி யடைந்தவர்கள் நாம். பஞ்சம் பழிவாங்கிய மண்ணில், பசுமைப் புரட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் நாம். ஆனால், நம் வளர்ச்சி அனைத்தும் ஒரு பக்க வீக்கமாகிவிட்டதுதான் வருத்தத்திற்குரியது.

மேம்போக்கான திட்டங்களையும் மலினமான வாக்குறுதிகளையும் வைத்துக் கொண்டே வாக்காளர்களை ஏமாற்றும் கலையில் இந்தியா முழுவதும் ஆட்சியாளர்கள் வல்லவர்களாக வளர்ந்திருக்கின்றனர். சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகளுக்குப் பின் இன்று நம் நிலை என்ன? உலகில் கல்வியறிவற்ற மொத்த மக்களில் மூன்றில் ஒரு பகுதி நம் இந்தியர்களே. இரவு உணவின்றி ஈரத் துணியுடன் 30 கோடி இந்தியர்கள் பசி நெருப்பை அணைக்க முடியாமல் படுக்கைக்குச் செல்லும் பரிதாப நிலையில்தான் இன்றும் இருக்கின்றனர். ஆனால், 50 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, அவற்றைப் பராமரிக்க 11 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டு தோறும் அரசுக் கருவூலத்திலிருந்து செலவழிக்கப்படுகிறது. இதுதான் சுதந்திர இந்தியாவின் முரண்பட்ட முகம்.

பாருக்குள்ளே நல்ல பாரதத்தில் 232 நகரங்களில் மட்டும்தான் கழிவு நீர்க் கால்வாய்கள் காணப்படுகின்றன. அரசியல் தலைநகர் டெல்லியில், 35% மக்கள் திறந்தவெளிகளில் காலைக்கடன் கழிக்கும் அவலம். வர்த்தகத் தலைநகர் மும்பையில் 40% சுகாதாரமற்ற சேரி வாழ்க்கை. மனித மலத்தைத் தலையில் சுமக்கும் இந்திய மன்னர்கள் இன்று 5 லட்சம் பேர். சுகாதார மேம்பாட்டில் 175 நாடுகளில் நமக்கு 171_வது இடம். சூடானும், மியான்மரும்தான் நமக்குக் கீழே என்கிறது ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை.

வசதிமிக்க மனிதர்கள் 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்புச் செய்திருப்பதாக ராஜா செல்லையா கமிட்டி, அதிர்ச்சி தரும் தகவலை அறிவித்த பின்பும் அரசின் ஆழ்ந்த கண்ணுறக்கம் கலையவில்லை.

கிராம சுயராஜ்யம் என்பது காந்தியக் கனவு. கலப்புப் பொருளாதாரம் நேருவின் இலட்சியம். இன்று இரண்டும் ஆரோக்கியமாக இல்லை. உலகமயமாக்கலில் இந்தியாவின் உருவம் மாறிவிட்டது. பணக்காரர்கள் எண்ணிக்கையில் உலகில் நமக்கு 8_வது இடம். ஆனால், மனித வள மேம்பாட்டில் 127_வது இடம். ஒரு பக்கம் பணம் பெருகிவிட்டது. மறுபக்கம் வறுமையின் பிடி இறுகிவிட்டது. தமிழகத்தில் மட்டும் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், 3 லட்சத்து 54 ஆயிரம். இவற்றுள் சுமார் 2 லட்சம் நிறுவனங்கள், புதிய பொருளாதார சுனாமியில் மூழ்கிவிட்டன. கிராமங்கள், நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கலாசாரத்தின் வேர்களில் வெந்நீர். வாழ வழியற்ற ஏழை விவசாயக் கூலிகளின் கண்களில் கண்ணீர். இதுதான் இன்றைய சுதந்திர பாரதம்.

இவ்வளவு இன்னல்களுக்குப் பின்னும் இந்தியா பெருமை கொள்வதற்குச் சில செய்திகள் இருக்கத்தான் செய்கின்றன. நமக்கு ஒருநாள் முன்பு சுதந்திரக் காற்றைச் சுவாசித்த பாகிஸ்தானில், ஐந்து ஆண்டுகளுக்குள் பிரதமர் லியாகத் அலிகான் படுகொலையோடு மதச் சார்பின்மை மரணமடைந்தது. பத்து ஆண்டுகளுக்குள் ஆயூப்கான் அரங்கேற்றிய இராணுவ ஆட்சியில், ஜனநாயகம் தூக்கில் தொங்கியது. 25 ஆண்டுகள் முடிவதற்குள் பாகிஸ்தான் இரண்டாக உடைந்தது. ஆனால் நம் அன்னை பூமியில் இன்றுவரை மதச் சார்பின்மையும், ஜனநாயகமும், ஒருமைப்பாடும் சேதமின்றிக் காக்கப்படுவதில் நாம் அனைவரும் கர்வப்படலாம்.

СWith all thy faults, still I love theeТ என்று லண்டனைப் பாடினான் பைரன். நாமும் அப்படி இந்தியாவைப் பாடுவோம். சமூகத்தின் முரண்பட்ட மேடு பள்ளங்கள் மண்ணின் குற்றமன்று, நம்மை ஆளும் மனிதர்களின் குற்றம். மக்கள் அச்சமின்றி மனம் திறந்து பேசினால், அதுதான் சுதந்திரம். ஆளும் அரசு, அதை மரியாதையுடன் செவிகொடுத்துக் கேட்டால் அதுவே ஜனநாயகம்.
நன்றி குமுதம்

роЗройро┐ропро╡ройрпН
04-10-2006, 05:22 PM
சுதந்திரமான அரசியல்வாதிகள்
ஒழியும் வரை
நாட்டுக்கு ஒளியேது?

роУро╡ро┐ропро╛
04-10-2006, 06:00 PM
அடடா
இந்த பதிவில் நமக்கு தெரியாத எவ்வலவோ விசயங்கள் அடங்கியுள்ளன....

அருமையான பதிவு.

நன்றி குமுதம்.

காப்பி எடுத்து (அடித்து) போட்ட காந்திக்கும் நன்றி