PDA

View Full Version : ஜிமெயிலால் தொல்லைகள்!karikaalan
28-09-2006, 11:29 AM
மன்றத்தில் பலரும் ஜிமெயில்க்குத் தாவுவது பற்றிப் பதிந்திருக்கிறீர்கள். இதனால் ஏற்படும் பாதுகாப்புக் கேடுகள் பற்றியும் சிறிது விவாதிக்கலாமே.

அமெரிக்காவில் இருக்கும் எனது மகன் என்னை ஜிமெயிலில் சேருமாறு அழைப்பு விடுத்தான். அதற்கு இணங்கினேன்.

அவனுக்கு படிப்புக்காக வேண்டி பணம் செலுத்துவதற்காக வங்கி விவரங்களைக் கேட்டிருந்தேன்.

முழு விவரங்களும் வந்த அஞ்சலைப் படிக்கும்போதுதான் உணர்ந்தேன் --- வலது புறத்தில் சிலபல விளம்பரங்கள் -- பணம் தங்கள் மூலமாக அனுப்புமாறு --. இது எப்படி இருக்கிறது?!

சில நாட்கள் கழித்து மீண்டும் ஜிமெயிலில் உலா வரும்போது, வலப்புறமாக விளம்பரங்கள் -- Lladro விற்பனை செய்யும் சிலைகளைப் பற்றி. ஓரிரு தினங்கள் முன்னர்தான் Lladro தளத்துக்கு உலா சென்றிருந்தேன்!

இப்படியாக நமது நடை உடை பாவனைகளை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் கூகிளில். இதனை கூகிள் என்பதா -- Evil என்பதா?

===கரிகாலன்

பாரதி
28-09-2006, 11:49 AM
அன்பு அண்ணலே,

நீங்கள் கூறுவது ஓரளவுக்கு உண்மை. ஆனால் இது கூகிளுக்கு மட்டும் பொருந்துகிறது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். யாஹு, ஹாட்மெயில் உட்பட எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். அது மட்டுமல்ல.. நீங்கள் செல்லும் பெரும்பாலான வலைத்தளங்களும் கூட உங்களது செயல்களை - அதாவது எந்த எந்த வலைத்தளங்களுக்கு செல்கிறீர்கள்...? எந்த விதமான செய்தியை அடிக்கடி படிக்கிறீர்கள்...? எந்த விசயம் குறித்து அடிக்கடி தேடுகிறீர்கள் - போன்றவற்றை ஆராயத்தான் செய்கின்றன. ஆனால் ஆறுதல் தரும் ஒரு விசயம் என்னவென்றால், இது போன்ற விசயங்கள் கணினி மூலமாகத்தான் கண்காணிக்கப்பட்டு விளம்பரங்கள் தரப்படுகின்றன. நிச்சயமாக மனிதர்களால் கண்காணிக்கப்படவில்லை என்று சொல்லலாம். நானும் ஜிமெயிலை உபயோகித்துதான் வருகிறேன். எப்போதும் அருகில் வரும் விளம்பரங்களை பொருட்படுத்தியதே இல்லை.

சரி... சில முக்கியமான விசயங்கள் என்று நீங்கள் நினைத்தால் - குறைந்த பட்சம் இப்போதைக்கு - தமிழில் உங்களது மடல்களை பரிமாறிக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் மடலை உங்கள் கணினியில் தட்டச்சு செய்து, விண்ஜிப் போன்ற மென்பொருட்கள் மூலம் 'ஜிப்' செய்து, கடவுச்சொல் ஏற்படுத்தி, மின்னஞ்சலின் இணைப்பாக அனுப்புங்கள். கடவுச்சொல்லை தொலைபேசியிலோ அல்லது வேறு மின்னஞ்சலிலோ அனுப்புங்கள்.

எப்போதும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது என்னவோ உண்மைதான்.

அறிஞர்
28-09-2006, 01:37 PM
சில நேரங்களில் நமக்கு வரும் செய்திகளுக்கு ஏற்ற விளம்பரங்கள் உபயோகமாக இருக்கிறது.

முகவரி பற்றி கொடுத்தால் அந்த முகவர்க்கு செல்லும் வழி வேண்டுமா என கேட்டு.. கூகுள் மேப்ஸ் மூல உதவுகிறது.

எல்லா விசயங்களிலும் நல்லவை, கெட்டவை இருக்கின்றன.

பாரதி சொல்வது போல் பாதுகாப்பான முறைகளை கையாளலாம்

karikaalan
29-09-2006, 04:17 PM
பாரதிஜி & அறிஞர்ஜி

வணக்கங்கள்.

வலையில் நம்மைக் கண்காணிக்கிறார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால் இவ்வளவு அப்பட்டமாகக் கண்காணிப்பவர்கள் கூகிள்தான் என்பது எனது எண்ணம். அதுவும் அஞ்சலில் எழுதப்படும் விவரங்களுக்கு உடனுக்குடன் விளம்பரங்கள் என்றால்!!

===கரிகாலன்

ஓவியா
07-11-2006, 07:49 PM
அடடா முக்கியமான் தகவல்

இதுவரை எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது...

தெரிந்துகொண்டேன்

மிக்க நன்றி கரிகலன் அண்ணா,
நன்றி பாரதி, நன்றி அறிஞர்

leomohan
07-11-2006, 08:08 PM
இதைப்பற்றிய பயம் வேண்டாம். ஏனென்றால் எந்த ஒரு மனிதருடைய இடர்பாடும் இல்லாமல் கடிதங்களில் வரும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவர்களுடைய தேடும் செயலி அதற்கேற்ற விளம்பரங்களை தருகிறது. மேலும் அஞ்சலில் உள்ளடக்கங்கள் யாருடைய பார்வைக்கு இல்லை. ஏனென்றால் அமெரிக்க நிறுவனங்களின் ப்ரைவேசி சட்டங்கள் மிகவும் கடுமையானவை.

எப்படி பிள்ளைகள் அதிகம் இருக்கும் தெருவில் சோன்பாப்படிகாரன் வருகிறானோ அதுபோலத்தான் இதுவும்.

இன்றைய காலத்தில் 2 ஜிபி மெயில் இலவச வலைதளம் மற்றும் இன்னும் பல சேவைகளை தரும் நிறவனம் விளம்பர வருமானத்தில் தானே வாழ முடியும்.

எப்படி நாம் பொதுவான விஷயங்களை தபால் கார்டில் எழுதுகிறோமோ அதுபோல பொதுவான விஷயங்களை மின் அஞ்சலில் பகிர்ந்துக் கொள்வது நல்லது.

கூடிய மட்டும் வங்கி கணக்குகள், மற்றும் பாஸ்போர்டுகள் இது போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தி அனுப்புவதை தவிர்ப்பது நல்லது.

franklinraja
08-11-2006, 06:22 AM
நல்லதொரு விவாதம்...

நண்பர்கள் சொல்வதுபோல ஜி-மெயில் (கூகிள்) மட்டுமே இதைச் செய்வதில்லை..!

இணையத்தில் இலவசம் அனைத்தும் விளம்பரங்களாலே இயங்குகின்றன..!

சில நேரங்களில் அவை பயனுள்ளவையாகவும் இருக்கின்றன.

முக்கிய தகவல்களை மாற்று வழியில் பரிமாறிக்கொள்வதே நலம்..!

ஜி-மெயில் பரவாயில்லை..! Text-விளம்பரம் மட்டுமே தருகின்றது..!

பல தளங்கள் படங்களைப் போட்டு வெறுப்பேற்றுகின்றன..!!

ராஜா
08-11-2006, 01:06 PM
லியோமோகன் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு எற்றுக் கொள்ளப்பட வேண்டிய கூற்று.

ஓவியா
08-11-2006, 05:15 PM
கூடிய மட்டும் வங்கி கணக்குகள், மற்றும் பாஸ்போர்டுகள் இது போன்ற இலவச மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தி அனுப்புவதை தவிர்ப்பது நல்லது.


அப்படியே ஆகட்டும்

நன்றி நண்பா

aren
13-11-2006, 11:17 AM
SPAM மின்னஞ்ல்களை எப்படி தடைசெய்வது. ஒரு மணி நேரத்தில் குறைந்தது பத்து மின்னஞ்ல்களாவது இப்படி வருகிறது. இதை நிறுத்த ஏதாவது வழியிருக்கிறதா?

இனியவன்
22-11-2006, 05:30 AM
மோகன் சொன்ன கருத்துக்கள் முத்தானவை. நன்றி. தோழர்களே நல்ல தகவல்களுக்கு.

akilan
06-12-2006, 12:40 AM
SPAM மின்னஞ்ல்களை எப்படி தடைசெய்வது. ஒரு மணி நேரத்தில் குறைந்தது பத்து மின்னஞ்ல்களாவது இப்படி வருகிறது. இதை நிறுத்த ஏதாவது வழியிருக்கிறதா?

அரென்! நானும் இதே சிக்கலில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நண்பர் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்தும் பல வைரஸ்கள் கொண்ட குப்பைக் கடிதங்களைப் பெற்று வருகிறேன். அவற்றை தடுக்கவும் முடியாமல், படிக்கவும் முடியாமல் இருக்கும் சங்கடத்தை பகிர்ந்து கொள்ள உங்கள் துணைக் கிடைத்ததில் மகிழ்கிறேன்.

அறிஞர்
06-12-2006, 12:41 PM
ரிப்போர்ட் ஸ்பாம் அல்லது ஐடி பிளாக் மூலம் இதை சரிசெய்ய இயலாதா

akilan
06-12-2006, 01:58 PM
ரிப்போர்ட் ஸ்பாம் அல்லது ஐடி பிளாக் மூலம் இதை சரிசெய்ய இயலாதா

ஸ்பேம் சென்று பதிவு செய்தாலும், அவை பல்க் மெயில் பெட்டியில் வந்து சேரும். நண்பரின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து வருவதால் தடை செய்யவும் முடியாது.

saguni
23-12-2006, 08:36 AM
SPAM மின்னஞ்ல்களை எப்படி தடைசெய்வது. ஒரு மணி நேரத்தில் குறைந்தது பத்து மின்னஞ்ல்களாவது இப்படி வருகிறது. இதை நிறுத்த ஏதாவது வழியிருக்கிறதா?

நண்பரே! முக்கியமாய் real player மற்றும் வேலைக்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை சில தளங்களில் பதிவு செய்தபின்னர்தான் எனக்கும் இதே பிரச்சனை....yahoo tool bar and spy blocker program களை பயன்படுத்தியபின்னர் சற்று குறைந்ததாக உணர்கிறேன். நீங்களும் முயற்சித்துப்பாருங்கள்

பரஞ்சோதி
28-12-2006, 04:26 AM
ஜீ மெயிலில் ஆங்கிலத்தில் என்ன தட்டச்சு செய்தாலும், அதற்கு பொருத்தமான தளங்களை விளம்பரமாக கொடுக்கிறது. அதுவே yahoo yahoo என்று அடித்து, உங்க ஐடிக்கே மடல் அனுப்பி பாருங்க, விளம்பரமே வராது. திருட்டு பயலுங்க. :)

மயூ
28-12-2006, 04:37 AM
கூகள் அட்சென்ஸ் பற்றி பலதடவை கார்த்திகேயன் போல பலரும் குளம்பியதுண்டு... உங்கள் மின்னஞ்சல்கள் சில செயலிகளால் வாசிக்கப்பட்டு தொடர்பான விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.. இதில் எந்தத் தப்பும் இல்லையே!! மனிதர்கள் வாசித்தால்தான் இந்தப்பிரைச்சனை... இலவச சேவை என்றால் இப்படியான விடயங்கள் இருக்கவே செய்யும் ஆகவே.. அவ்வளவாக அலட்டிக்ககொள்ள வேண்டாம் அன்பரே!!
யாஹ வா இல்லை ஜிமெயிலா என்றால் என்வாக்கு ஜிமெயில்தான்... யாகூ பீட்டா யாராவது பாவிக்கிறீங்களா!!! ஜிமெயிலுக்கு சவால் விடும் என்று நினைக்கின்றேன்..

ப்ரியன்
28-12-2006, 06:21 AM
/*யாகூ பீட்டா யாராவது பாவிக்கிறீங்களா!!! ஜிமெயிலுக்கு சவால் விடும் என்று நினைக்கின்றேன்..*/

யாகூ பீட்டா உபயோகிக்கிறேன் என்றாலும் ஜிமெயிலில் இருக்கும் பல நல்ல அம்சங்கள் யாகூவில் இல்லை.

மிக முக்கியமாக ஒரே தலைப்புக் கொண்ட மடல்கள் ஒரே இழையாக வருதல்.அவுட்லுக் செயலியில் படிக்கும் வசதி போன்றவை.

praveen
21-02-2007, 06:51 AM
கூகுளில் இல்லாத ஒரு வசதி executable பைல்களை (ஜிப் / ரார் பார்மெட்டில் கம்ப்ரஸ் செய்தும்) அட்டாச்மென்ட்டாக அனுப்ப முடியாது. நாம் பெற மட்டுமே முடியும்.

பொதுவாக மற்ற இலவச மெயில் தளங்கள் இப்படி இல்லை. அட்டாச்மெண்ட்டாக அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தான் முடியாது.

இதனால் நாம் exe, com extention உள்ள பைல்களை அட்டாச்மென்ட்டாக அனுப்ப தனியாக வேறொரு இமெயில் சேவையைத்தான் நாட வேண்டும்.