PDA

View Full Version : மறக்கத்தான் நினைக்கிறேன்....

meera
28-09-2006, 10:10 AM
உன்னை கண்ட போது
புதைந்து போன
நினைவுகள் எல்லாம்
மலர்கிறது
புதிய மலராய்.........

மறக்கத்தான்
நினைக்கிறேன்
கடந்து போன
காலங்களை..
சிதைந்து போன
வாழ்வை..
கருகி போன
காதலை..
மனதில் உள்ள
காயங்களை..
கல்லறை கண்ட
நேசத்தை...
சிரித்து மகிழ்ந்த
சிறிது நேரத்தை..
மொத்தத்தில்
முடிந்ததாய்
நான் நினைக்கும்
முடித்துவைக்கப்பட்ட
வாழ்வை
மறக்கத்தான்
நினைக்கிறேன்
முடியவில்லை

ஏனெனில்
என்
மனதில் மறையாத
மருவாய்
உன் முகம்.........

பென்ஸ்
28-09-2006, 01:05 PM
மீரா...

தங்கள் கவிதைகளை படித்து வருகிறென்....
அருமையாக உள்ளது...

உங்கள் கவிதைகளை தவறமல் வாசிப்பதால் சில குறிப்புகள் விட்டு செல்லலாம் என்று நினைக்கிறென்....

தாங்களும் எல்லோரையும்போல உனர்வுகளை அருமையாக வேளிப்படித்துகிறீர்கள்,
வாழ்த்துகள்,
ஆனால் உணர்வுகள் வார்த்தையாக வடிவம் எடுப்பதில்
கடினப்படுகிறிர்களோ என்று யோசிக்க தோன்றுகிறது...

வார்த்தைகள் ஒன்றன் கீழ் ஒன்றக மட்டுமே அடுக்க படுவது போல் ஒரு உணர்வு சில நேரங்களில்...
வாத்தைகளை அவசியத்துக்கு மட்டும் உபயோகிப்பது அழகை கூட்டும் என்பது என் கருத்து.

இந்த கவிதையிலும் மூன்று பகுதியும் சரியாக
இனைக்கபடவில்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது...

முதல் பகுதி... மலரும் நினைவுகள்
இரண்டாம் பகுதி --- என்ன நினைவுகள் என்று
மூன்றம் பகுதி-- விட்டு சென்றது காயம் என சொல்லுகிறிர்
சரியாக இந்த மூன்று முடியபடவில்லை, முடியுஅடையவும் இல்லை என்பது என் கருத்து....

மீரா, அழகாக எழுதி வருகிறிர்கள்.. பாராட்டுகிறேன்...

யப்பா மன்ற கவிஞர்களே, இவருக்கு நல்ல ஐடியா கொடுங்களேன்...

(ஐ யாம் சாரி, எனக்கு குறை கூர மட்டுமே தெரியும் :D :D )

meera
29-09-2006, 04:29 AM

உங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே.அதிகமா யாரு குறை சொல்கிறார்களே அவர்கள் உண்மையான நலம் விரும்பி என்பது என் எண்ணம்.ஆகவே உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.உங்களின் விமர்சனம் மேலும் நல்ல படைப்புக்கள் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுக்கிறது.இனி வரும் கவிதைகளில் உங்களின் ஆலோசனை படி கொடுக்க முயற்சிக்கிறேன்.எனது கவிதைகளை தொடர்ந்து படித்து தங்களின் உண்மையான கருத்தை கூறுங்கள்..

ஓவியா
03-10-2006, 08:33 PM
மீரா

உண்மையை சொல்ல ஒரு தைரியம் வேண்டும் அதுவும் காதலில்....அது உங்கள் கவிதையில்...அதிகமாகவே உல்லது....

காதலில் கறைந்தவர் யாரையினும் இக்கவிதை பொருந்தும்.....

பீ.சுசிலாவின்
நேஞ்சம் மறக்கவில்லை அது
நினைவை இழக்கவில்லை....பாட்டுதான் ஞாபகம் வருது மீரா

பென்சு, நலமா
சூப்பர் விமர்சனம்...

மயூ
04-10-2006, 03:13 AM
மீரா உண்மையைச்சொன்னால் உங்கள் கவிதையை நான அனுபவிக்கின்றேன்...
இப்போது காணும் போதும் ஒரு மெல்லிய சிரிப்புடன் அகன்று செல்லும் முன்னாள் காதலர்கள்...அந்த சிரிப்பின் பின் ஆயிரம் அர்த்தங்கள்..... அருமை அருமை...

leomohan
04-10-2006, 03:59 AM
மறையாத மரு. வித்தியாசமான சிந்தனை. அருமை.