PDA

View Full Version : வறுமைmeera
28-09-2006, 09:55 AM
இன்று
பள்ளிக்கூடம் போய்த்தான்
ஆகவேண்டும்
பொங்கிவந்தது வைராக்கியம்.

இதோ!
புறப்பட்டாகிவிட்டது
புத்தகமும்,நோட்டும்
எடுத்தாகிவிட்டது..

ஈனஸ்வரத்தில்
எங்கிருந்தோ
வருவது போல
நோயாளி தாயாரின்
வாழ்த்து.
"என் ராசா
இந்த உடுப்புல
நிசமாவே ராசாமாதிரிருக்க.."
வந்த வைரக்கியம்
எங்கே போனது..
வறுமை
நிழலாய் துரத்த...
நிஜம் கசப்பாய்
கண்முன் நிற்க..
கனவு கண்ட
கண்ணில் கண்ணிருடன்
கடமையை செய்ய
கையில் சாக்குகோணியுடன்...

பென்ஸ்
28-09-2006, 12:37 PM
மீரா.. அருமையான கவிதை...

மனதின் கீழே எங்கோ ஒழிந்து கிடந்த சில நினைவுகளை வேளியே
கொண்டுவந்து ஒரு நிமிடம் உண்மையை யோசிக்க வைத்தது...

எனது ஊரில் உள்ள துவக்க பள்ளியில் நான் படிக்கும் போது,
என்னோடு படிக்கும் மாணவ மாணவிகள் மதியம் சத்துணவு (!!!!)
சாப்பிட்டுவிட்டு பள்ளியில் இருக்காமல் வீட்டிற்க்கு சென்று விடுவர்...
வகுப்பில் இப்படி டிமிக்கி கொடுத்து போகிறவர்களை கண்டுபிடித்து
சொல்லும் பணி என்னுடையது. ஒரு நாள் ராஜி என்ற பெண்
(இப்போது அவர் பெண்தான், முன்னால சிறுமி) இப்படி போக நான்
அவரை பிடித்து இழுத்து வர முயல... அவருடைய மேல் சட்டை
கிழிந்தது.

நான் என்னௌடைய வேலை செய்வதாக நினைத்து செய்த காரியம்,
இப்படி ஆகி போக... அது என் வகுப்பு ஆசிரியருக்கு போக
அவர் என்னைடம் என்ன எதுவேன விசாரிக்காமல் "சட்டம்பி, நீ
எப்பவும் எதே மாதிரி செய்யுறெ, உன் சட்டையை அவளுக்கு கொடு
என்று கூற, எனக்கு கோபம் என்றாலும் ,அழுகை தான் வந்தது"

இந்த சம்பவத்திற்க்கு பிறகு, நான் என்னவோ அந்த ராஜியிடம்
பேசியது இல்லை. அவளும் ஐந்தாவது வரை படித்துவிட்டு படிப்பை
நிறுத்தி விட்டாள். பக்கத்து ஊர் ஆனதால் ஒருவரை ஒருவர் சில
நேரஙக்ளில் பார்க்க வேண்டி வரும்.

5 வருடங்களுக்கு முன் ஊருக்கு சென்றபோது சிகரெட்
வாங்குவதற்க்காக ஒரு பெட்டிகடையில் போக அங்கு அவள்.
அவள் சினேக புன்னகை கொடுத்து
"நல்லா இருக்கியா பெஞ்சா..?" என்று கேட்டாள்...
"ம்ம். நல்லா இருக்கிறென்" என்று மறந்து போன அவள் பெயரை நியாபக படுத்தி கொண்டிருந்தேன்..
"நீ இப்போ என்ன பண்ணுறே??" என்று சிகரட்டை கொடுத்தவாறே கேட்டாள்..
"நான் பெங்களூரில் வேலை பாக்குறேன்?" என்று சிகரட்டை வாங்கியபடி...

எதோ யோசித்தவள் "முன்னால நீ என்னை இழுத்து போயி
ஸ்கூலில் விட்டிருந்தபோது நானு படிச்சிருந்தா இன்னைக்கு நல்லா
இருந்திருக்கும் இல்லையா????

"ம்ம்ம்ம் என்ன பன்னுறது அப்போ ஒரு வேளை சத்துணவுக்கு வேண்டி ஸ்கூலுக்கு வருவேன்... அம்மாவுக்கு முடியாததுனால , தவிடு அரித்து விக்கிறதுக்கு நான் தான் போவனும்.."
என்று ஒரு சிறு புன்னகையோடு அந்த வேதனையை சொன்னது மனதில் பதிந்திருப்பது இந்த பதிவை பாத்த பிறகுதான் புரிகிறது....

meera
28-09-2006, 01:04 PM
பெஞ்ஜமின் நானும் ஒரு கிராமத்து பொண்ணு தான்.என்னோட ஊர்ல எல்லா பொண்ணுங்களும் அந்த ஊர் பள்ளிகூடம் தான்டமாட்டாங்க.அதுக்கு காரணம் அவங்களுக்கு படிப்பு வராமல் இல்ல.அவங்கள பெத்தவங்க சரி இல்ல.அப்பொ எல்லாம் தோனும் நம்மல மட்டும் பள்ளிகுடம் போனு அப்பா அரட்டராருனு.ஆனா இப்பொ அப்பாவ நினைச்சா பெருமைய இருக்கு.அதே சமயத்துல என்னொட படிச்ச பொண்ணுங்க எல்லம் கல்யாணாம் பண்ணி அவங்க அப்பா,அம்மா செய்தா தப்ப தானும் தன்னோட பிள்ளைகளுக்கு செய்ய கூடாதுனு கஷ்ட பட்டு படிக்க அனுப்பும் போது அவங்களோட ஆசையை நினைச்சு சந்தோசம இருக்கு.ஆனா அவங்க படர கஷ்டத்த நினைசா அவ்ளோ கஷ்டமா இருக்கு.

leomohan
29-09-2006, 04:22 AM
யதார்த்தத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஓவியா
03-10-2006, 08:46 PM
மீரா,

இது எத்தனை பிஞ்சு உள்ளங்களின்
ஏக்கதவிப்பினை அடங்கிய கவிதை.......

நிஜம் சுடும் அள்ளவா.......
அதான் உங்கள் கவிதையில் இதயம் அனலாகின்றது......

கசப்பான கவிதையை
எப்படி அருமையாய் இருக்கு என்று பாரட்டுவது....

வரைக....இன்னும் அதிகம் வரைக....
மனக்கசப்பினை தொடர்ந்து வரைக...
மனிதனேயம் வளர்க்க......உங்கள் கைகள் இன்னும் அதிகம் வரைக.....

மயூ
04-10-2006, 03:14 AM
நிஜம்..நிஜம்..நிஜம்....

meera
04-10-2006, 08:45 AM
ஓவியா உங்கள் விமர்சனம் எனக்கு உற்சாகம் தருகிறது.

நன்றி

meera
04-10-2006, 08:48 AM
மன்ற நண்பர்கள் அனைவரின் விமர்சனமும் என் மனதையும், கைகளையும் எழுது எழுது என தூண்டுகிறது.

அனைவருக்கும் நன்றி

அறிஞர்
04-10-2006, 01:35 PM
புத்தகம் பை தூக்க வேண்டிய கையில்
கோணி பை....

சிந்திக்க வைக்கிறது, மனதை கனமாக்குகிறது கவிதை.. வாழ்த்துக்கள் மீரா.

பெஞ்சாவின் பதிப்பும்..... மனதை பாதித்தது....
வறுமை என்று மாறுமோ......

ஓவியா
04-10-2006, 03:50 PM
பெஞ்சு,
தங்களின் பதிப்பு, மனம் கனக்கின்றது...

மயூ
05-10-2006, 10:29 AM
நச்சென்று ஒரு பிளாஷ் பக்!!!
மனதை நிசமாகவே தொட்டது பென்ஸ் அண்ணா!!