PDA

View Full Version : நினைவு



crisho
28-09-2006, 06:48 AM
என் தாடியை போலவே
உன் நினைவுகளும்
எனக்குள்ளே வளர்ந்தது!

தளர்ந்து விடவில்லை

அறுத்துக் கொண்டேன்
அது மறுபடியும் என்
தாடியைப் போலவே!!

crisho

leomohan
29-09-2006, 09:59 PM
கொன்னுட்டீங்க போங்க................

ஓவியா
03-10-2006, 08:08 PM
கிஷொர்,
உங்கள் கவிதை சிறுக சிறுக வளம் பெற்றுல்லது....அறிவீரோ...:D

தூள் மச்சி.....

மறக்க முடியாததுதான் காதலோ....;)

crisho
14-10-2006, 08:02 AM
ம்ம்... மறக்க முடியாதது மட்டும் அல்ல...
சுகம் தந்து.... சுகமாக கொல்வதும் கூடத்தான்...

பென்ஸ்
14-10-2006, 08:28 AM
காதல் நினைவுகள் கண்ணாடியை போல
துடைக்க துடைக்க புதியதாய்...

பரணில் போட்டு விடும்

கொஞ்ச நாளான பிறகு
எடுக்கவும் மனம் வராது
என்றோ குப்பையை கிண்டும் போது
பார்க்க நேர்ந்தாலும்
நம்மை அதிலே ரசிக்க இயலாது...

meera
14-10-2006, 08:47 AM
மறக்க நினைக்கிறாய்
நினைவுகளை
மறக்க மறுக்கிறது
மனம்
மாற்றிக்கொள் நண்பா
மறக்கும் எண்ணத்தை
தானாய் மறந்து போவாய்.

crisho
14-10-2006, 08:53 AM
தப்புபா...

கடந்தகால காதல் நினைவுகளை இன்று புரட்டி பர்த்தாலும்....
ஒரு சுகமான உணர்வு
என் மனதில் பரவ
அவள் முகம் என் கண்ணில்
எளில் ஆட
கொஞ்சி பேசிய சில நிமிடம்
எனில் உலாவ
அவள் சிரித்த சிரிப்பொளி
என் காதுகளுக்கு விருந்தாக
சிரிக்கிறேன் நான்
என்னை அறியாமல்....

மனதில் ஏதோ ஏதோ செய்கிறது....
அந்த சுகமான காதல் நினைவுகள்!

இது கற்பனை அல்ல
அனுபவிக்கிறேய்யா அனுபவிக்கிறேன்....

crisho
14-10-2006, 08:56 AM
மறக்க நினைக்கிறாய்
நினைவுகளை
மறக்க மறுக்கிறது
மனம்
மாற்றிக்கொள் நண்பா
மறக்கும் எண்ணத்தை
தானாய் மறந்து போவாய்.

மன்னிக்கனும்....

எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை....
வாயடைக்க வைத்து விட்டீர்கள்!

தாமரை
15-10-2006, 02:54 AM
தாடி வளரும்
தலை முடி கொட்டும்
காதல் நினைவுகள்
கட்டிய மனைவி..

தாமரை
15-10-2006, 02:58 AM
மறக்க நினைக்கிறாய்
நினைவுகளை
மறக்க மறுக்கிறது
மனம்
மாற்றிக்கொள் நண்பா
மறக்கும் எண்ணத்தை
தானாய் மறந்து போவாய்.
மறக்காமல் மறந்து விடு..
மறந்துவிட்டாய் என்று உறுதி செய்துகொள்..
மறந்தது மறக்கவேண்டியதைத் தானா
என மறந்திடாமல் சரிபார்..
இன்னும் மறக்கலியா?
காதலை மறக்க
கட்டிக்கொள்
அவள் பிறந்த நாள் முதல்
அனைத்தையும் மறந்து விடுவாய்...:eek: :eek: :eek:

crisho
15-10-2006, 04:57 AM
ஓப்ஜக்சன் யுவர் ஆனர்
நீங்கள் அனைவரும் எதிருக்கு எதிராய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்!!

உன் மனதை தொட்டு உண்மையை சொல் நண்பா...
நீ உண்மையாகவே வாழ்க்கையில் காதலித்திருந்தால்
கடந்தகால காதல் நினைவுகளை மறக்க முடியுமா?
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்...
காதலியின் பிறந்த நாள் மறந்து போகுமா?
பழைய காதல் நினைவுகள் தான் கசக்குமா?

நீங்கள் கூறுவது தான் சரி என்றால்....
நீங்கள் காதலிக்கவில்லை...
காதலை காதலாகவும் ஏற்கவில்லை!!

தாமரை
15-10-2006, 06:55 AM
ஓப்ஜக்சன் யுவர் ஆனர்
நீங்கள் அனைவரும் எதிருக்கு எதிராய் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்!!

உன் மனதை தொட்டு உண்மையை சொல் நண்பா...
நீ உண்மையாகவே வாழ்க்கையில் காதலித்திருந்தால்
கடந்தகால காதல் நினைவுகளை மறக்க முடியுமா?
எத்தனை ஆண்டுகள் உருண்டாலும்...
காதலியின் பிறந்த நாள் மறந்து போகுமா?
பழைய காதல் நினைவுகள் தான் கசக்குமா?

நீங்கள் கூறுவது தான் சரி என்றால்....
நீங்கள் காதலிக்கவில்லை...
காதலை காதலாகவும் ஏற்கவில்லை!!

காதலி மனைவியானால்
காதல் மறந்து விடுவது
சகஜம் தானே

உண்மை உதாரணங்கள்
எக்கச் சக்க சக்க சக்கம்..
அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்...

crisho
15-10-2006, 07:28 AM
ஐயா சாமி....
நான் காதலி மனைவி ஆகாததால் வந்த விளைவை குறிப்பிட்டேன்....

ஆமா... காதலி மனைவியாகிட்டா மட்டும் மறந்துடுவிங்களோ??

அன்னியை நீங்கள் பார்த்த முதல் நாள்...
முதல் வார்த்தை....
அவங்க பின்னாடி நீங்க சுத்தினது...
பேசி மகிழ்ந்த சில நேரம்.....
மறந்துட்டீங்களா?

சரி மனைவியாகிட்டாங்க பக்கத்துல இருக்காங்க....
ஆனா காதலித்த அந்த பொக்கிஷ நினைவுகளை மறத்தலாகுமா...

crisho
15-10-2006, 08:02 AM
உன்னை விட
உந்தன் நினைவுகளையே நான்
அதிகம் விரும்புகிறேன்
ஏன் தெரியுமா?
அவை எப்போதும்
என்னுடனே இருப்பதால்....

தாமரை
15-10-2006, 09:00 AM
ஐயா சாமி....
நான் காதலி மனைவி ஆகாததால் வந்த விளைவை குறிப்பிட்டேன்....

ஆமா... காதலி மனைவியாகிட்டா மட்டும் மறந்துடுவிங்களோ??

அன்னியை நீங்கள் பார்த்த முதல் நாள்...
முதல் வார்த்தை....
அவங்க பின்னாடி நீங்க சுத்தினது...
பேசி மகிழ்ந்த சில நேரம்.....
மறந்துட்டீங்களா?

சரி மனைவியாகிட்டாங்க பக்கத்துல இருக்காங்க....
ஆனா காதலித்த அந்த பொக்கிஷ நினைவுகளை மறத்தலாகுமா...

இதையெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணித்தானே பொக்கிஷம் பொஸிஷன் மாறிடுது...

crisho
15-10-2006, 09:09 AM
ஆஹா....
இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா....