PDA

View Full Version : சிறந்த நிதியமைச்சர்



மதி
28-09-2006, 04:15 AM
ஹார்வார்டில் மேலாண்மை படித்திருக்கவில்லை
பொருளாதார நிபுணர்களுடன் விவாதிக்கவுமில்லை
பல்கலைக்கழகங்களில் டாக்டரேட் பட்டமும்
பெற்றிருக்கவில்லை
ஆயினும்
மாதந்தோறும் துண்டு விழா
பட்ஜெட் போடும்
உலகின் சிறந்த நிதியமைச்சர்
என் அம்மா..!

தாமரை
28-09-2006, 04:55 AM
ஹார்வார்டில் மேலாண்மை படித்திருக்கவில்லை
பொருளாதார நிபுணர்களுடன் விவாதிக்கவுமில்லை
பல்கலைக்கழகங்களில் டாக்டரேட் பட்டமும்
பெற்றிருக்கவில்லை
ஆயினும்
மாதந்தோறும் துண்டு விழா
பட்ஜெட் போடும்
உலகின் சிறந்த நிதியமைச்சர்
என் அம்மா..!

பொய் சொல்லாதீர்கள்
துண்டு விழுந்திருக்குமே
உங்கள் அப்பாவின் தோளில்..

pradeepkt
28-09-2006, 07:30 AM
துண்டுகள் இப்போதெல்லாம் தோளில் விழுவதில்லை, தலையில்தான் :D
மதி, உன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

மதி
28-09-2006, 07:58 AM
நன்றி பிரதீப்..கருத்தொத்தமைக்கு...!

மதி
28-09-2006, 07:59 AM
பொய் சொல்லாதீர்கள்
துண்டு விழுந்திருக்குமே
உங்கள் அப்பாவின் தோளில்..
மெய்யாலுமே இது பொய்யல்ல..!

கண்மணி
28-09-2006, 04:32 PM
துண்டுகள் இப்போதெல்லாம் தோளில் விழுவதில்லை, தலையில்தான் :D
மதி, உன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.

கழுத்திலும்
சிலசமயம்
கடங்காரன்..:eek: :eek: :eek:

ஓவியன்
15-07-2008, 03:34 PM
விரலுக்கேத்த வீக்கம் என்பார்கள், ஆனால் விரலை மிஞ்சிய வீக்கமாக நம் படிப்புச் செலவுகள் சென்ற போது, எப்படியோ தன் தேவைகளைச் சுருக்கி நம் எதிர்காலத்தை விரித்த என் அன்னையை நினைக்க வைத்தன வரிகள்.........

நன்றிகளும் பாராட்டுக்களும் மதி..!! :)

இளசு
15-07-2008, 07:59 PM
நல்ல கவிதை மதி..

கொஞ்சம் நாட்டை வைத்து யோசித்தால்
நம்ம லல்லு நினைவுக்கு வருகிறார்!

ராஜா
15-07-2008, 08:32 PM
பட்'டுன்னு கிளம்பி ஜெட் வேகத்தில் போகும் விலைவாசிக்கு ஏற்றாற்போல் பட்ஜெட் போடும் அம்மாவின் ஆற்றலை கவியாக்கித் தந்த மதிக்கு பாராட்டுகள்..!

அறிஞர்
15-07-2008, 08:45 PM
உலகின் சிறந்த நிர்வாக மந்திரிகள் நம் வீட்டு அம்மையார்கள் தான்....

அழகான கவி மதி....