PDA

View Full Version : அழியாத நினைவுகள்மதி
27-09-2006, 04:07 AM
கல்லூரியில் இறுதியாண்டு படிக்கையில் எங்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியை ஒருவர் இந்திய அறிவியல் கழகத்தில் Young Engineer Fellowship Programme மூலம் ப்ராஜக்ட் செய்யும் வாய்ப்பு பற்றி சொன்னார். அப்பொழுது யாரும் இதை பெரிதாய் எடுத்துக்கலை. ஏன்னா, இதுக்கு அப்ளை பண்ண நாம ஏதாவது புது ப்ராஜக்ட் பத்தி எழுதணும், மேலும் மார்க் ஷீட்ஸெல்லாம் அனுப்பனும். இம்சை புடிச்ச வேலைடா இதுன்னு யாரும் இத பத்தி கண்டுக்கல. அப்ளை பண்ண இன்னும் ரெண்டு நாளே இருந்துச்சு.

அப்போ தான் அந்த சம்பவம் நடந்துச்சு. எங்க கிளாஸில சில பசங்க ரொம்ப அறிவாளியா இருப்பாங்க. அப்பப்போ நானும் அவங்க கூட சேர்ந்து நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்குவேன். ஆனா நான் அறிவாளி இல்லீங்க. இதுல குறிப்பா பாலா, பார்த்தா (பார்த்தசாரதி) முக்கியமானவர்கள். எல்லோரும் ரொம்ப சோம்பலா இருந்தப்போ திடீர்னு ஒருத்தன் யாரும் தெரியாம இதுக்கு அப்ளை பண்ணிட்டான். பண்ணினது இல்லாம இந்த விஷயம் யாருக்கும் குறிப்பா எங்களுக்கு தெரியக்கூடாதுன்னு மறைச்சுட்டான். எப்படியோ இந்த விஷயம் எங்க காதுக்கு வந்துச்சு. எல்லோரையும் விட பார்த்தா ரொம்ப கொதிச்சு போயிட்டான்.

எப்படிடா அவன் நமக்கு தெரியக்கூடாதுன்னு மறைச்சான். நாம ஏதாவது அவன்கிட்ட மறைச்சோமா? இத விடக்கூடாது. நாமளும் அப்ளை பண்ணனும்டா..

நான் அமைதியாயிட்டேன். பின்ன ப்ராஜக்ட் பத்தி யோசிக்கயெல்லாம் நமக்கு அறிவில்லப்பா.

டேய் என்னடா நான் பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். யாருமே ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்க. நாம அப்ளை பண்றோம். அதுவும் இன்னிக்கே. அப்ப தான் கடைசி நாளுக்கு முன்னாடி அனுப்ப முடியும்

எனக்கு என்னவோ நடக்கற காரியம் மாதிரி தெரியல. ஆனாலும் சரி போனா போகட்டும்னு தலையாட்டி வச்சேன். அன்னிக்கு காலேஜ் விட்டதும் வேகவேகமா கிளம்பி எங்க வீட்டுக்கு நான், பார்த்தா, பாலா போனோம். வீட்டில உக்கார்ந்து ஒரு டிஸ்கஷன். என்ன பண்ணலாம்னு.

டேய் மதி (பார்த்தா ஒருத்தன் தான் அப்பப்போ என்ன மதின்னு கூப்பிடுவான்)..என்னடா பண்ணலாம் சொல்லுடா?

என்ன கேட்டா என்னடா சொல்லுவேன்? எனக்கு ஒன்னுமே தோணலை. பாலா, நீ சொல்லுடா

ஹ்ம். இன்னிக்குள்ளே நாம ப்ராஜக்ட் அப்ஸ்டிராட் அனுப்பனும். கொஞ்சம் யோசிப்போம்.

சரிடா..பார்த்தா, நீ யோசிச்சிக்கிட்டு இரு. பாலா, நீ வா. உங்க சித்தி வீட்டுக்கு போய் உன் மார்க் ஷீட்ஸெல்லாம் எடுத்துகிட்டு வந்துடலாம். பார்த்தா, உன் மார்க் ஷீட்ஸெல்லாம் இங்க தானே இருக்கு. சரி!

பார்த்தா, கொஞ்ச நாள் ஹாஸ்டல்லில் தங்கி படிச்சிக்கிட்டு இருந்தான். அப்புறம் திருச்சியில் அவங்க மாமா வீட்டில் தங்கி இருந்தான். அப்புறம் தஞ்சாவூரில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்தான். தினமும் எங்கயாவது தங்கிட்டிருப்பான். அதுனால அவன் மார்க் ஷீட்ஸெல்லாம் எங்க வீட்டில வச்சிருந்தான். பாலா அவன் சித்தி வீட்டில் தஞ்சாவூரில் தங்கியிருந்தான்.

நம்ம வாகனமான எம்.80 எடுத்துகிட்டு பறந்தோம். அவசர அவசரமா மார்க் ஷீட்ஸெல்லாம் ஜெராக்ஸ் எடுத்துகிட்டு வந்தோம்.

பார்த்தா, மார்க் ஷீட்ஸெல்லாம் ஜெராக்ஸ் எடுத்தாச்சு. இதுல அட்டெஸ்ட் பண்ணனும். அப்பா ஃபிரண்ட் வீட்டுக்கு போய் வாங்கிட்டு வந்திடறேன். அதுக்குள்ள நீயும் பாலாவும் ஏதாவது யோசிச்சு கம்ப்யூட்டர்ல அப்ஸ்டிராக்ட் எழுதி வைங்க

அம்மாவை அவங்க ரெண்டு பேருக்கும் ராத்திரி சமைக்க சொல்லிட்டு அப்பாவின் நண்பர் வீட்டுக்கு பறந்தேன். நம்மால யோசிக்க முடியாதுன்னு அவங்கள யோசிக்க விட்டுட்டேன்.

எல்லாத்துலேயும் அட்டெஸ்டேஷன் வாங்கிட்டு வீட்டுக்கு வரும் போது பார்த்தா சந்தோஷமாயிருந்தான்.

டேய். ஒரு வழியா மூணு ப்ராஜக்ட் பத்தி எழுதுயாச்சு. இது நானும் பாலாவும் ஏற்கனவே யோசிச்சிட்டு இருந்தது தான். இந்தா இது உனக்கு, இது எனக்கு, இது பாலாவுக்கு

பேப்பர்ல ஏதோ அப்ஸ்டிராக்ட் எழுதி வச்சிருந்தான். சரி எல்லாம் அவன் விருப்பம்னு எல்லாத்தையும் உக்கார்ந்து டைப் பண்ண ஆரம்பிச்சேன்.

எல்லாத்தையும் டைப் பண்ணி கம்ப்யூட்டர் கடைக்கு போய் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வீட்டுக்கு வர்றப்போ மணி பத்தாச்சு. பார்த்தாவுக்கு ஒரே சந்தோஷம்.

டேய். எப்படியும் நாம அப்ளை பண்ணிடுவோம்ல. அவன் மூஞ்சியில கரிய பூசணும்டா. நம்மள்ல யாராவது ஒருத்தர்காச்சும் கெடச்சுதுனா கூட போதும்

சரி சாப்பிடு. தூங்கலாம்

எல்லோரும் சாப்படுட்டு பாலாவை அவன் சித்தி வீட்டுல விட்டுட்டு வந்து தூங்க பதிணொன்னரைக்கு மேலாச்சு. அடுத்த நாள் காலையில பார்த்தா அஞ்சு மணிக்கே எந்திருச்சு திருச்சிக்கு போய் அங்க அவங்க மாமிகிட்ட கொரியர் அனுப்ப சொல்லிட்டு காலேஜ் வந்துட்டான். அப்போ BlueDart கொரியர் திருச்சியில மட்டும் தான் இருந்துச்சு. அன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள வேற கொரியர் போய் சேரனும். அதான் இந்த ஏற்பாடு.

இப்படியா சில பல அல்ப திருப்திகளோடு கல்லூரி வாழ்க்கை வேகமா போய்ட்டு இருந்துச்சு. எல்லோரும் கேம்பஸ்க்காக மும்முரமா தயாராட்டு இருந்தோம். ரெண்டு மூணு கம்பெனி வந்துச்சு. எல்லாத்துலேயும் நேர்முகத் தேர்வு வரைக்கும் போய் அப்புறம் வாய்ப்பு கை நழுவிப் போய்ட்டு இருந்துச்சு. இதுக்கு நடுவுல MBA படிக்கலாம்னு BIM தேர்வு எழுதி அதுல தேர்வாகி நேர்முகத் தேர்வுக்கு போய்ட்டு ரிஸல்ட் எதிர்பார்த்து காத்திட்டிருந்தேன்.

எதிர்பாராதவிதமா என் வாழ்க்கையில பல விஷயங்கள் ஒரே வாரத்தில நடந்துச்சு. ரெண்டு கம்பெனி கேம்பஸில் வாய்ப்பு போச்சு. புதன்கிழமை வந்த BIM தேர்வு பட்டியலில் என் பெயர் இல்லை. சுத்தமா நொறுங்கிப் போயிட்டேன். என்னடா, எல்லாமே முடிஞ்சு போன மாதிரி இருக்கே. இனிமே என்ன பண்ணப் போறோம்னு தெரியல. இதுல பாத்திருந்த ஏகப்பட்ட படங்கள்ல வேலை தேடி அலையறத பாத்து பாத்து பயமாயிருந்துச்சு. அந்த வாரமே வெள்ளிக்கிழமை வீட்டுக்கு போன போது அம்மா ஏதோ லெட்டர் வந்திருக்கறதா சொன்னாங்க. பிரிச்சுப் பாத்தா, IISc-க்கு அனுப்பியிருந்த என் பெயரில போயிருந்த ப்ராஜெக்ட் தேர்வாகி இருக்கறதா இருந்துச்சு.

ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் ரொம்பவே குழப்பம். என்னடா இது, இதே மாதிரி பாலாவும் பார்த்தாவும் செலக்ட் ஆயிருக்காங்களான்னே தெரியலியேன்னு குழப்பம். ரெண்டு பேரையும் தொடர்பு கொண்டதுல தங்களுக்கு எதுவும் லெட்டர் வரலேன்னு சொன்னாங்க.

திங்கட்கிழமை காலேஜில பாத்தா ரெண்டு பேருமே சந்தோஷமா வாழ்த்து சொன்னாங்க.

மாப்ளே..! கலக்கிட்ட போ

நான் எங்கடா கலக்கினே. எல்லாம் நீங்க எழுதின ப்ராஜெக்ட் தான். ஏதோ என் பெயர் போட்டு அனுப்புச்சதால எனக்கு வந்துருக்கு. உண்மையிலேயே இது உனக்கு தான் வந்திருக்கணும்டா

விடு. நானும் தான் என் பேரில ஒன்னு அனுப்பிச்சேன். உனக்கு செலக்ட் ஆயிருக்கறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாத. கண்டிப்பா போ. நல்ல சந்தர்ப்பம் . நிறைய கத்துக்கலாம்

சரிடா

கொஞ்சம் தெளிவான மாதிரி இருந்துச்சு. இதுக்கிடையில எங்களுக்கு தெரியக்கூடாதுன்னு அனுப்பினானே அவன் ப்ராஜெக்டும் தேர்வாகலை. இதுல பார்த்தாவுக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.

கல்லூரி தேர்வெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாள் கழிச்சு ஜூன் மாத இறுதியில் பெங்களூருக்கு வந்தேன். கல்லூரிக்கு போய் ப்ரொபஸரை பார்த்து ப்ராஜெக்ட் பண்ண ஆரம்பிச்சாச்சு. அங்கேயே தங்கி இருந்ததால் மிகவும் வசதியாயிருந்தது. ப்ரொபஸர் அங்கிருந்த ஆய்வக சாவியை என்கிட்ட கொடுத்துட்டார். கல்லூரியை முடிச்சாச்சு, இனிமேலாவது உருப்படியா கத்துப்போம்னு கொஞ்சம் வெறியோடு கத்துக்க ஆரம்பிச்சேன். தினமும் ஆறு மணி நேரம் தான் ஆய்வகத்தை விட்டு வெளியே இருக்கும் நேரம்.

இப்படி இருக்கும் போது தான் நான் தற்போது வேலை பார்க்கும் கம்பெனி எங்க கல்லூரிக்கு ஆஃப் கேம்பஸ் வரப்போறதா தகவல் வந்தது. சரி போய் தான் பாக்கலாம்னு கல்லூரிக்கு போனேன். அன்னிக்கு ஒரே கூட்டம். எங்க பாத்தாலும் மாணவர் கூட்டம் தான். இதெல்லாம் தாண்டி (நீங்க கோச்சிக்கலேனா அத வேறொரு சமயம் சொல்றேன்) எப்படியோ இந்த கம்பெனியில சேர்றதுக்கு நான் இந்திய அறிவியல் கழகத்தில் ப்ராஜக்ட் பண்ணியதே பெரும் உதவி செஞ்சது.

ஆக திக்கு தெரியாம இருந்த நான் இன்னிக்கு ஓரளவு நல்ல உத்யோகத்துல நல்ல சம்பாதியத்துல இருக்கறதுக்கு பெருங்காரணமே பார்த்தாவும் பாலாவும் தான். வாழ்நாள் முழுக்க இவங்கள மறக்க முடியாது. இவங்க ரெண்டு பேருக்கும் கல்லூரியேலே கேம்பஸ் மூலமா ஒரு மென்பொருள் நிறுவனத்தில வேலை கிடைச்சுது. பார்த்தா அதுக்கப்புறம் ரெண்டு கம்பெனி மாறிட்டான். ரெண்டு பேரும் ஊரெல்லாம் சுத்திட்டு இப்போ சென்னையில வேலை பாத்துட்டு இருக்காங்க.

பின்குறிப்பு: இதுல பேர உபயோகப்படுத்த பாலாகிட்ட பேசினேன். எதுக்குடான்னான். அப்புறம் ஒன்னும் சொல்லல. பார்த்தாகிட்ட எதுவும் கேக்கல. ஏன்னா கிட்ட வாங்க ஒரு ரகசியம் சொல்றேன். பார்த்தாக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது. பேச மட்டும் தான் தெரியும். யாரும் போட்டு குடுத்துடாதீங்க ..ப்ளீஸ்!

mukilan
27-09-2006, 04:10 AM
BIM நேர்முகத் தேர்வுக்கு போறதே பெரிய விசயமாச்சே. அதனால கஷ்டப்படாம எல்லாம் நீங்க முன்னேறல. நீங்க பட்ட கஷ்டம் வேற வழியில வந்து உதவியிருக்கு. நண்பர்கள் என்னைக்குமே ஆபத்பாந்தவர்கள் தான் மதி.உங்களுக்கு கிடைச்சதைப் பார்த்து தான் சந்தோஷப்படற மனது ஆழ்ந்த நட்பில் மட்டுந்தான் வரும். நீங்க கொடுத்து வச்சவர்தான்.

மதி
27-09-2006, 08:36 AM
முகில்,
இதுல தமாசு என்னன்னா...BIM-க்கு தயார் பண்ணினதே ஒரு நாள் தான். எப்படியோ எழுத்துத் தேர்வில் பாஸாயிட்டேன். அதனால ரொம்ப எல்லாம் கஷ்டப்படல..
உண்மை தான் நீங்க சொன்ன மாதிரி..எவ்விதத்துல நான் கொடுத்து வச்சவன்னு யோசிச்சதுல இவ்வளவும் இருக்கு...!

pradeepkt
27-09-2006, 10:59 AM
ஹ்ம்ம்...
இந்த மாதிரி எல்லாரு வாழ்க்கையிலும் ஒரு அங்கம் இருக்கு போல. நான் முதல் கம்பெனியில் (IMR Global) தேர்வானதும் ஒரு விபத்துதான். ஆனால் அன்னைக்கு அந்த நியமனக் கடிதம் கையில் வாங்கிய போது கிடைத்த மகிழ்ச்சி பின்னர் எத்தனையோ கம்பெனிகளில் வாங்கிய போதும் கிடைக்கவில்லை. கடைசியில் நான் அந்தக் கம்பெனியில் சேரவில்லை.

பிம் ஐஐஎம் எல்லாம் எழுதுன்னு எங்க வீட்டுல தலை தலையா அடிச்சிக்கிட்டாங்க. அந்தக் கல்லூரிகளுக்கு நம்மள மாதிரி அறிவாளிகளைச் சேத்துக்கிற அளவு பக்குவம் போதாதுன்னு எனக்கு அப்பயே தெரியும். அதுனால எழுதவே இல்லை. பரீட்சை எழுதறேன்னு நேரா படையப்பா சினிமாவுக்குப் போயிட்டேன் :D

மதி
27-09-2006, 11:04 AM
அடடே..
இது நான் அன்னிக்கு சொன்னேனே அந்த கதை மாதிரியில்ல இருக்கு..!

மன்மதன்
27-09-2006, 12:03 PM
இந்த பதிவை பாலா பார்த்தா சந்தோஷப்படுவார்..;) ;) பார்த்தா பார்த்தா படிக்க தெரியாது..:D பாலாவை பார்த்தா கேட்டதா சொல்லுங்க.. ;) ;) பார்த்தாவை கேட்டா பார்த்ததா சொல்லுங்க.. ஆமா பாலாவும் பார்த்தாவும் உங்களை கடைசியா எப்போ பார்த்தா??? ;)
குழம்பா மதன்....:rolleyes:

(ஒண்ணுமே தெரியாதுன்னு குவார்ட்டர்.. சாரி ஆஃப் கேம்பஸில் செல்க்ட் ஆகிட்டீங்களேய்யா.....B) B) )

மதி
27-09-2006, 12:46 PM
அடடே...இவ்ளோ தெளிவா இருக்கீங்களே...!
பாலாவையும் பார்த்தாவையும் பார்த்து மூன்று மாதமாகிறது.. கூடிய விரைவில் அநேகமாய் இந்த வார இறுதியில் மீண்டும் சந்திப்போம்..!

பென்ஸ்
27-09-2006, 01:18 PM
...........??? ;)
குழம்பா மதன்....:rolleyes: .....B) B) )

சரி.. குழம்பா மதன்.. அதில் கறியா யாரு மன்மதா????:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D

இளசு
28-11-2006, 10:24 PM
மதி,

கரவுன்னு சொல்வாங்களே..... மறைச்சு செய்யும் ' நண்பர்கள்' எந்தக் குழுவிலும் உண்டு. நண்பர்கள் படிக்கக்கூடாதுன்னு நூலகத்தில் இருக்கும் ஏடுகளை மறைத்து/கிழிக்கும் மகாத்மாக்கள்..


எட்டப்பனும் கட்டபொம்மனும் ஒரே மண்ணில் என்பதுபோல்
அதே நட்புக்குழுவில்தான் பாலாக்கள்.. பார்த்தாக்களும்!

உங்களுக்குக் கிடைத்ததை மனம் நிறைந்து அவர்கள் வாழ்த்தியதை படிக்கும்போது மனம் நிறைந்தது!

அவர்கள் எழுதியது அது என நீங்கள் எழுதியதில் உங்கள் ' உயரம்' தெரிகிறது..

அண்ணனையே அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டீர்கள்.... அருமை மதி!


---------------------------------

இனிய பென்ஸின் நச் மறுமொழிக்கு வித்திட்ட இந்த விசுவிஸ மதன் பதிவை ரசித்து சிரித்தேன்..


( மன்மதன் இதைப் பதித்திருக்காவிட்டால், என் பின்னூட்டம் ஏறக்குறைய இப்படித்தான் இருந்திருக்கும்...!)


இந்த பதிவை பாலா பார்த்தா சந்தோஷப்படுவார்..;) ;) பார்த்தா பார்த்தா படிக்க தெரியாது..:D பாலாவை பார்த்தா கேட்டதா சொல்லுங்க.. ;) ;) பார்த்தாவை கேட்டா பார்த்ததா சொல்லுங்க.. ஆமா பாலாவும் பார்த்தாவும் உங்களை கடைசியா எப்போ பார்த்தா??? ;)
குழம்பா மதன்....:rolleyes:

(ஒண்ணுமே தெரியாதுன்னு குவார்ட்டர்.. சாரி ஆஃப் கேம்பஸில் செல்க்ட் ஆகிட்டீங்களேய்யா.....B) B) )

மதி
29-11-2006, 02:47 AM
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி இளசு அவர்களே..!
தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...

leomohan
29-11-2006, 12:16 PM
சுவையான மலரும் நினைவுகள்

அதென்ன ஆனா நான் அறிவாளி இல்லீங்க

தன்னடக்கமா.

ஓவியா
29-11-2006, 07:55 PM
மன்னிக்கவும் மதி,
இது நான் சுகமில்லாமல் இருந்த பொழுது இட்ட பதிவா?

இன்றுதான் படித்தேன்,

வாழ்த்துக்கள் பல தம்பி
இதை போல் மேன்மேலும் பல அறிய வாய்ப்பு(பூ)க்கள், வாழ்வில் குவிந்து உங்களை சிறப்பிக்கட்டும்...

ராசா
மறக்காமல் அவனுக்கு நன்றி சொல்

எனக்கும்
இதுபோல் ஒரு அனுபவமுண்டு,
கடன் வாங்கி வங்கியில் ****** போட்டு கணக்கு காட்டியும் விசா தள்ளி போக...
கடைசியில் 10.00 இருக்கும் பொழுதுதான் விசா கிட்டியது......
இது எப்படி இருக்கு

நடப்பது பெரும் நன்மைக்கே,

தூசு தட்டிய இளசுக்கும் மோகனுக்கும் நன்றி.

மதி
30-11-2006, 02:56 AM
சுவையான மலரும் நினைவுகள்

அதென்ன ஆனா நான் அறிவாளி இல்லீங்க

தன்னடக்கமா.
:D :D :D

மதி
30-11-2006, 02:59 AM
மன்னிக்கவும் மதி,
இது நான் சுகமில்லாமல் இருந்த பொழுது இட்ட பதிவா?

இன்றுதான் படித்தேன்,

வாழ்த்துக்கள் பல தம்பி
இதை போல் மேன்மேலும் பல அறிய வாய்ப்பு(பூ)க்கள், வாழ்வில் குவிந்து உங்களை சிறப்பிக்கட்டும்...

ராசா
மறக்காமல் அவனுக்கு நன்றி சொல்

எனக்கும்
இதுபோல் ஒரு அனுபவமுண்டு,
கடன் வாங்கி வங்கியில் ****** போட்டு கணக்கு காட்டியும் விசா தள்ளி போக...
கடைசியில் 10.00 இருக்கும் பொழுதுதான் விசா கிட்டியது......
இது எப்படி இருக்கு

நடப்பது பெரும் நன்மைக்கே,

தூசு தட்டிய இளசுக்கும் மோகனுக்கும் நன்றி.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி பல...
வாழ்வில் எத்துணையோ அனுபவங்கள்...
அசைபோடுவதில் ஆயிரம் சுகங்கள்..

என்னவோ இதைப் பற்றி எழுதத் தோன்றியது..எழுதினேன்...
இன்றைக்கு ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கான ஆரம்பமே அந்த சம்பவம் தான்...:) :)

ஓவியன்
15-02-2007, 09:50 AM
ஹ்ம்ம்...
நம்மள மாதிரி அறிவாளிகளைச் சேத்துக்கிற அளவு பக்குவம் போதாதுன்னு எனக்கு அப்பயே தெரியும். :D


அப்ப நீங்களும் நம்ம கட்சிதானா?

ஏனென்றால் நானும் அவ்வப் போது இவ்வாறு நினைப்பதுண்டு!

ஹி,ஹி,ஹி..........