PDA

View Full Version : தோற்று போ!



crisho
26-09-2006, 05:09 AM
நண்பா நீ இப்போதே
காதலிக்காதே
ஆனாலும் கற்பனையிலும்
கனவிலும் காதலித்து
தோற்று போ...
அப்போது தான், பிற்காலத்தில்
உன் காதலியால்
நீ தோற்கடிக்கப்படும் போது
உன்னுள் உண்டாகும்
வேதனைக்கு ஓர்
மறுதாக்கத்தை கொடுக்க முடியும்!

Crisho

umanath
26-09-2006, 05:14 AM
என்னங்க சொல்ல வரீங்க?

1.தேற்றா? தோற்றா?
2. காதலிச்சாலே தோல்வி தானா? அப்படி தோற்கும் என்று நினைத்து காதலிக்க வேண்டாம்.

பென்ஸ்
26-09-2006, 07:53 AM
தோற்று தோற்று பழகி போகுதல்....
நல்லா இருக்கு.....
ஒன்னு தோத்தாதாங்க இன்னோன்னு வெற்றி பெறும்...

காதலில் தோத்தால் கல்யாணம்
காதலியிடம் தோத்தாலும் கல்யாணம்..
முதல்: அடுத்தவருடன், இரண்டாவது : தலைவிதி

மதி
26-09-2006, 08:17 AM
எங்கேயோ கேட்டது..:
நான் தீவிரமா காதலிப்பேன்
ஆனா அந்த காதல் தோத்துப் போகணும்னு அத விட தீவிரமா கடவுளிடம் வேண்டிப்பேன். ஏன்னா அப்ப தானே அடுத்த பொண்ண காதலிக்க முடியும்.

கிஷோர்..உங்க காதலும் அந்த வகை இல்லியே?

மதி
26-09-2006, 08:20 AM
எதையும் செய்ய ஆரம்பிக்கும் போதே தோல்வியை எதிர்நோக்கி செஞ்சா எப்படியும் தோல்வி தான். வெற்றி ஒன்றே லட்சியம் என எண்ணி முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. காதல் உட்பட. ஏனோ உங்க கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.

crisho
26-09-2006, 08:33 AM
கிஷோர்..உங்க காதலும் அந்த வகை இல்லியே?

சத்தியமா இல்ல சார் ;)

மதி
26-09-2006, 08:43 AM
சத்தியமா இல்ல சார் ;)
ரொம்பவே சந்தோஷம்..!:) :)

crisho
26-09-2006, 08:43 AM
எதையும் செய்ய ஆரம்பிக்கும் போதே தோல்வியை எதிர்நோக்கி செஞ்சா எப்படியும் தோல்வி தான். வெற்றி ஒன்றே லட்சியம் என எண்ணி முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. காதல் உட்பட. ஏனோ உங்க கருத்திலே எனக்கு உடன்பாடில்லை.

தோல்வி அடைந்ததன் அனுபவம்....
நான் மற்றவர்களை எச்சரித்தேன்!!

காதல் அத்தியாயத்தில் யார் எது சொன்னாலும் புரியாது.......
அவரவர் வாழ்க்கையில் அனுபவித்து அறியும் வரை!

எது எவ்வாறெனினும்.....
உங்கள் அனைவரின் காதல் ஜெயிக்க என் வாழ்த்துக்களுடன் பிரார்த்தினைகளும்! ;)

மதி
26-09-2006, 10:33 AM
எச்சரித்தல் நல்லது தான். தோல்வியை ஏற்றுக்கொள் என்பது வேறு தோற்க பழகிக்கொள் என்பது வேறு. அதைத் தான் சொன்னேன்.

umanath
26-09-2006, 10:54 AM
எச்சரித்தல் நல்லது தான். தோல்வியை ஏற்றுக்கொள் என்பது வேறு தோற்க பழகிக்கொள் என்பது வேறு. அதைத் தான் சொன்னேன்.

இதே என் கருத்தும்..

crisho
26-09-2006, 11:26 AM
வெற்றி ஒன்றே லட்சியம் என எண்ணி விடா முயற்ச்சியுடன் முயன்றும் தோல்வியுற்றோர் இல்லையா?

தோல்வியின் பலன் விரக்தியில் தற்கொலை செய்தோர் தான் இல்லையா?

மதி
26-09-2006, 12:44 PM
வெற்றி ஒன்றே லட்சியம் என எண்ணி விடா முயற்ச்சியுடன் முயன்றும் தோல்வியுற்றோர் இல்லையா?

தோல்வியின் பலன் விரக்தியில் தற்கொலை செய்தோர் தான் இல்லையா?
தோல்வி என்பதே மனம் பொறுத்த விஷயம். எனக்கு தோல்வியானது உமக்கு தோல்வியாகாது. அதைத் தான் நம் முன்னோர் "வெற்றியின் முதல்படி" என்றனர். கஜினி ஒரு சிலந்தியைப் பார்த்து தான் விடா முயற்சியுடன் வென்றான் என்றனர்.

மேலும் தோல்வியைக் கண்டு பயந்து கோழையாய் தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைகள் பற்றி சொல்ல ஒன்னுமில்லை. அதிலேயும் காதல் தோல்வின்னு சொல்லி தற்கொலை பண்ணிக்கறாங்களே...!

இதுலேயும் நகைச்சுவையா சொல்லணும்னா..தற்கொலை பண்ணுக்கறவங்க வாழ்க்கையில் எப்பவுமே தோல்வியுற்றவர் இல்லை. அட.. தற்கொலை முயற்சியிலாவது அவங்க வெற்றி பெறுகிறார்களே..!:) :)

crisho
26-09-2006, 12:49 PM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அன்பர்களே... வரவேற்கிறேன்.

மதி
26-09-2006, 12:54 PM
ஒரேடியா ஓய்ந்துவிடாதீர்!...ஏதோ உங்க புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு மன்றத்துல நிறைய பதிவுகள் போட்டிருக்கேன். உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும்..

அறிஞர்
26-09-2006, 10:27 PM
எங்கேயோ கேட்டது..:
நான் தீவிரமா காதலிப்பேன்
ஆனா அந்த காதல் தோத்துப் போகணும்னு அத விட தீவிரமா கடவுளிடம் வேண்டிப்பேன். ஏன்னா அப்ப தானே அடுத்த பொண்ண காதலிக்க முடியும்.

கிஷோர்..உங்க காதலும் அந்த வகை இல்லியே? இது என்ன லொள்ளு வகையா...

அறிஞர்
26-09-2006, 10:27 PM
ஒரேடியா ஓய்ந்துவிடாதீர்!...ஏதோ உங்க புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு மன்றத்துல நிறைய பதிவுகள் போட்டிருக்கேன். உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும்.. உங்கள் பதிவுகள் எங்களுக்கு இன்பமே.. தினமுன் நிறைய பதியுங்கள்.. அன்பரே...

அறிஞர்
26-09-2006, 10:31 PM
நண்பா நீ இப்போதே
காதலிக்காதே
ஆனாலும் கற்பனையிலும்
கனவிலும் காதலித்து
தோற்று போ...
அப்போது தான், பிற்காலத்தில்
உன் காதலியால்
நீ தோற்கடிக்கப்படும் போது
உன்னுள் உண்டாகும்
வேதனைக்கு ஓர்
மறுதாக்கத்தை கொடுக்க முடியும்!

Crisho தோல்விகளையே பார்த்து பழகி போன பின்.. இன்பத்தை அனுபவிக்க தனி மனம் தான் வேண்டும்.

அறிஞர்
26-09-2006, 10:32 PM
காதலில் தோத்தால் கல்யாணம்
காதலியிடம் தோத்தாலும் கல்யாணம்..
முதல்: அடுத்தவருடன், இரண்டாவது : தலைவிதி உமக்கு தான் ரெண்டுக்கும் வழியில்லையே என பிரதீப் சொல்லுறார்....

கண்மணி
27-09-2006, 01:24 AM
நண்பா நீ இப்போதே
காதலிக்காதே
ஆனாலும் கற்பனையிலும்
கனவிலும் காதலித்து
தோற்று போ...
அப்போது தான், பிற்காலத்தில்
உன் காதலியால்
நீ தோற்கடிக்கப்படும் போது
உன்னுள் உண்டாகும்
வேதனைக்கு ஓர்
மறுதாக்கத்தை கொடுக்க முடியும்!

Crisho

காதல் உன்னிடம் தோற்றதா
காதலில் உன்னைத் தோற்றாயா
உன் காதல் தோற்றதா
காதலை நீ தோற்றாயா
தொன்று தொற்று
தோற்று தோற்று
போன மனதை
தேற்று தேற்று...

காதலியால் தோற்கடிக்கப்படுவதை விட
சுகம் வேறு இல்லை


காதலில்
காதலால்
காதலுக்காக
ஆதலில்
ஆதலால்
ஆ(கு)தலுக்காக

mukilan
27-09-2006, 02:35 AM
மதி! அதெப்படி காதல்னு வந்திட்டாலே ஒரே பதிவு மழையாப் பொழியிறீங்க. காதலுக்கும் உங்களுக்கும் அப்படி ஒரு ராசி.
அப்துல் ரகுமான் இது சிறகுகளின் நேரம் (அப்படின்னு நினைக்கிறேன்) கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார்.
" உலகத்து வெற்றிகளில் எல்லாம்
மிகப் பெரிய வெற்றி காதல் தோல்வி!
அதை உன்னால் அடைந்தேன்"
என்று, அது போல காதல் தோற்று வாழ்க்கையில் ஜெயிக்கணும்னு கிரீஷ் சொல்லியிருப்பார்.

மதி
27-09-2006, 02:54 AM
காதல்ன்னாலே ஒரு தனி மயக்கம் எல்லோருக்கும். அதான் அப்படி.

mukilan
27-09-2006, 02:55 AM
எல்லாருக்குமா இல்லை உங்களுக்கு மட்டுமா?

மதி
27-09-2006, 03:05 AM
எல்லாருக்குமா இல்லை உங்களுக்கு மட்டுமா?
ஒருவித மயக்கம் இருந்தது. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்.

அன்று மனம்
மனைவியாய் ஒரு காதலியை
எதிர்பார்த்தது
இன்று மனம்
காதலியாய் ஒரு மனைவியை
எதிர்பார்க்கிறது!

mukilan
27-09-2006, 03:07 AM
இது எல்லாருக்கும் பொதுவான ரகசியமாச்சே! அய்யய்யோ உளறிக் கொட்டிட்டேனா??

crisho
27-09-2006, 04:09 AM
காதலியால் தோற்கடிக்கப்படுவதை விட
சுகம் வேறு இல்லை

உண்மையாகவா?? :D

மதி
27-09-2006, 07:38 AM
இது எல்லாருக்கும் பொதுவான ரகசியமாச்சே! அய்யய்யோ உளறிக் கொட்டிட்டேனா??
அதுனால தான் அவ்வளவு ரகசியமா சொன்னேன்...!:eek: :eek:

தாமரை
27-09-2006, 03:46 PM
ஒருவித மயக்கம் இருந்தது. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்.

அன்று மனம்
மனைவியாய் ஒரு காதலியை
எதிர்பார்த்தது
இன்று மனம்
காதலியாய் ஒரு மனைவியை
எதிர்பார்க்கிறது!

நான் தோற்றால்
என்னைத் தொலைத்தால்
காதல் ஜெயிக்கும்..
காதலித்த போது
மனைவி தேவைபட்டாள்
மணந்த பின்போ
காதலி...
உன்னை தோற்றிருந்தால்
உனக்கு
மனைவியும் காதலியும்
ஒன்றுதான்
மதி.. நிம்மதி நிம்மதி நாடியே போகட்டும்

கண்மணி
27-09-2006, 04:51 PM
ஒருவித மயக்கம் இருந்தது. உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்.

அன்று மனம்
மனைவியாய் ஒரு காதலியை
எதிர்பார்த்தது
இன்று மனம்
காதலியாய் ஒரு மனைவியை
எதிர்பார்க்கிறது!

ஆசையே
துன்பத்திற்கு காரணம்
2500 வருடங்களுக்கு முன்
புத்தன் சொன்னது..
(அவரின் மனைவி பெயர் ஆசை அல்ல...:rolleyes: :rolleyes: :rolleyes: )

நீங்கள் அப்படி அல்லதான்...
அன்றும்
பைத்தியமாய்
அவள் பின்னால்
இன்றும் பைத்தியமாய்
அவள் உங்கள் பின்னால்
கையில்
எதையோ எடுத்துக் கொண்டு...:D :D :D

கண்மணி
27-09-2006, 05:50 PM
காதல்ன்னாலே ஒரு தனி மயக்கம் எல்லோருக்கும். அதான் அப்படி.
அவன்
காதலில் பூ கொடுத்தான்
அவள்
காதுல பூ கொடுத்தாள்

மதி
28-09-2006, 02:48 AM
நான் தோற்றால்
என்னைத் தொலைத்தால்
காதல் ஜெயிக்கும்..
காதலித்த போது
மனைவி தேவைபட்டாள்
மணந்த பின்போ
காதலி...
உன்னை தோற்றிருந்தால்
உனக்கு
மனைவியும் காதலியும்
ஒன்றுதான்
மதி.. நிம்மதி நிம்மதி நாடியே போகட்டும்

ஆகா..வந்துட்டாரைய்யா..வந்துட்டாரு..
அதுவும் சரி தான்..
என் மதி நிம்மதி நாடி போகட்டும்...!
இப்ப மட்டும் நிம்மதியா இல்லியா என்ன?

மதி
28-09-2006, 02:51 AM
ஆசையே
துன்பத்திற்கு காரணம்
2500 வருடங்களுக்கு முன்
புத்தன் சொன்னது..
(அவரின் மனைவி பெயர் ஆசை அல்ல...:rolleyes: :rolleyes: :rolleyes: )

நீங்கள் அப்படி அல்லதான்...
அன்றும்
பைத்தியமாய்
அவள் பின்னால்
இன்றும் பைத்தியமாய்
அவள் உங்கள் பின்னால்
கையில்
எதையோ எடுத்துக் கொண்டு...:D :D :D
இது என்னான்னு புரியலீங்க..:confused: :confused: . என்ன வேணும்னாலும் சொல்லுங்க. இன்னிக்கு வரைக்கும் யார் பின்னாடியும் பைத்தியமா சுத்தினதெல்லாம் கிடையாது..:eek: :eek: :eek:

crisho
28-09-2006, 04:54 AM
நீரு வாழ்க்கையில் ரொம்பவே மிஸ் பண்ணுறீரு!!

லவுஸ் அதுவா வரனும்.... அதுவா அமையனும்.... அதுல இருக்குதையா சுகம்.... சிம்பிலி வார்த்தைகளால் கோர்க்க முடியாது மாம்சு... ;)

மதி
28-09-2006, 05:04 AM
நான் எதையுமே மிஸ் பண்ணினதில்லை...லவ்ஸ் வந்திருக்கு..ஆனா பைத்தியமா அலைஞ்சதில்லை...! அம்புட்டுத்தேன்..!

crisho
28-09-2006, 05:44 AM
அன்றும்
பைத்தியமாய்
அவள் பின்னால்

அலைந்து உண்மை அதில் ஓர் சுகம் கிடைத்தது!!


இன்றும் பைத்தியமாய்
அவள் உங்கள் பின்னால்

என் மனைவியாக, என் பின்னால் வருவது உண்மை, அவள் என் மனைவி ஆனதால் நான் முழுமை அடைத்தேன், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டேன்.

இல்லை எனில் பெரியோர் உள்ள சபையில் நான் வாய் திறந்தால்... "ஏய் நீ சின்ன பைய கம்முன்னு கிட பெரியவங்க பேசிக்கிட்டிருக்கும் போது" என்பர்.

ஆனால் அவள் பைத்தியம் அல்ல....:D


கையில்
எதையோ எடுத்துக் கொண்டு

ஆமாம் கையில் எங்கள் வாரிசை தூக்கி வருகிறாள்....

நாங்கள் பெற்ற வாரிசால் அவள் முழுமை அடைந்தாள்!

ஒரு குழத்தைக்கு தாயோ... தந்தையோ ஆவதால் கிடைக்கும் மகிழ்ச்சி, உங்களில் ஏற்படும் மாற்றங்கள்.... அனுபவிக்கனும்யா... அனுபவிக்கனும்... அனுபவிச்சா தான் நான் என்ன சொல்றேன்னு புரியும்....

அதுனால நீங்க வாழ்க்கையில் அனுபவித்து அறியும் வரை நான் சைலன்ஸ்..... :D :D :D

meera
28-09-2006, 06:13 AM
தோல்வியை எதிர்நோக்கி காதலிப்பவன் உண்மை காதல் உள்ளவனாய் இருக்கமுடியாது.கடைசி வரை போராடு காதல் வெற்றி பெற்றால் சந்தோஷமாய் வாழ்.தோல்வி கண்டால் தூக்க மாத்திரை தேடாதே.துணிந்து நில் துக்கம் என்பது சில காலம். ஆணோ,பெண்ணோ உன் லட்சியதில் வெற்றி கண்டால் தேவதையும்,மன்மதனும் உன் பின்னால்.யார் பின்னாலோ நீ ஏன் போக வெண்டும்.

pradeepkt
29-09-2006, 04:20 AM
நான் எதையுமே மிஸ் பண்ணினதில்லை...லவ்ஸ் வந்திருக்கு..ஆனா பைத்தியமா அலைஞ்சதில்லை...! அம்புட்டுத்தேன்..!
அடப்பாவி, சந்தடி சாக்குல என்னத்தையோ சொல்லிட்டு இந்தப்பய தப்பிக்கப் பாக்குறானே...
எல்லாரும் ஓடியாங்க ஓடியாங்க.. இந்த நியாயத்தை என்னான்னு கேளுங்க... :rolleyes: