PDA

View Full Version : என்னைத் தேடி!



மதி
25-09-2006, 03:48 AM
தனிமையில் சிந்தித்த
சில நொடிகளில்
சுனாமியாய் வந்து
முழுமையாய் என்னை ஆட்கொண்டது
தாறுமாறான எண்ண அலைகள்...
பாலகனாய் அம்மாவின் அரவணைப்பைத் தேடி
பள்ளியிலே பகிர்ந்து கொள்ள
நட்பினைத் தேடி
கல்லூரியிலே காதலைத் தேடி
பின் நல்லதொரு வேலையைத் தேடி
ஆயிரம் லட்சம் என பணம் தேடி
இல்லாளாய் ஒரு நல்லாளைத் தேடி..
இப்படி தேடித் தேடி
முடிவாய் என்ன தேடுகிறேன் என்பதை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்...!

crisho
25-09-2006, 04:16 AM
இப்படி தேடித் தேடி
முடிவாய் என்ன தேடுகிறேன் என்பதை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்...!

ஹ ஹ ஹ ஹ....... :D

சொல்வதை நன்றாகவும் திருத்தமாகவும் மிகச் சரியாகவும் சொன்னீர் ராஜேஸ்!

வாழ் நாள் முழுவதும் தேடுதலா?? ம்... அதுதான் உண்மை!!

பாராட்டுக்கள் ராஜேஸ்.

sivaranjani ramasamy
25-09-2006, 04:34 AM
hi
im very new to this site.how do i write my comments in tamil?pls help me...

crisho
25-09-2006, 04:54 AM
நண்பா,

தயவு செய்து கீழ் காணும் தளம் சென்று வாசித்து அறிய முயலவும்...

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2

வாசித்து அறிய கடினமெனில் எமக்கு அறிவிக்கவும்.... உதவி செய்ய காத்திருக்கிறோம்!

pradeepkt
25-09-2006, 05:08 AM
ஹ்ம்ம்ம் மதி, கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா?
வாழ்த்துகள்.
நிற்க, கவிதையின் மையக் கருத்து என் வாழ்க்கையிலும் இருக்கிறது. நான் முன்னொரு முறை எழுதினேன்.

எனக்கு என்ன வேண்டும்
என நானறிய
எனக்கு என்ன வேண்டும்?

இன்னும் நிறைய எழுது.

மதி
26-09-2006, 02:54 AM
இப்போது தெரிகிறது...! பிரதீப் தங்கள் பாராட்டுக்கு நன்றி!

மதி
26-09-2006, 02:54 AM
ஹ ஹ ஹ ஹ....... :D

சொல்வதை நன்றாகவும் திருத்தமாகவும் மிகச் சரியாகவும் சொன்னீர் ராஜேஸ்!

வாழ் நாள் முழுவதும் தேடுதலா?? ம்... அதுதான் உண்மை!!

பாராட்டுக்கள் ராஜேஸ்.
நன்றி கிஷோர்.

umanath
26-09-2006, 05:19 AM
நல்ல வரிகள்..

<தாறுமாறான எண்ண அலைகள்...>
அழகு..

வார்த்தைகளை சுறுக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்

மதி
26-09-2006, 06:36 AM
தங்கள் கருத்துக்கு நன்றி விழியன்..
தங்கள் சித்தப்படி முயற்சிக்கிறேன்.

பென்ஸ்
26-09-2006, 06:49 AM
வாடா வாடா....
கலக்குற.....

மதி... தெரின்சவங்களை பாராட்ட வரமாட்டேங்குது...
இருந்தாலும்... சூப்பர இருக்குடா...

மதி
26-09-2006, 07:01 AM
அண்ணே..எல்லாம் உங்க கூட கத்துக்கிட்டது தான்... தனக்கு தானே கேள்வி கேட்டுக்கிறது..!
உங்க பாராட்டுக்கு நன்றி..!

அறிஞர்
26-09-2006, 10:39 PM
என் வாழ்க்கையில.. அதிக தேடல்கள் இல்லாமல் சென்றுவிட்டதில் சந்தோசம் தான்....

பாலகனாய் அம்மாவின் அரவணைப்பைத் தேடி.! அம்மா என்னை விட்டு செல்லும் வரை... அதற்கு பிரச்சனை வந்ததில்லை...


பள்ளியிலே பகிர்ந்து கொள்ள
நட்பினைத் தேடி..! உண்மையான நட்புகள் அந்த அந்த காலத்தில் கிடைத்தார்கள்.. இன்பமே..... ஆனால் சில நட்புகள் கசப்பை ஏற்படுத்தியதை எண்ணினால்.... பிபி எகிறுகிறது


கல்லூரியிலே காதலைத் தேடி காதலித்தவர்களை விட்டு மற்றவர்களை தேடியதில் தோல்விதான்.


பின் நல்லதொரு வேலையைத் தேடி..! படித்து முடித்த அடுத்த மாதத்திலிருந்து வேலைகள் தொடர்கிறது....

அறிஞர்
26-09-2006, 10:41 PM
தனிமையில் சிந்தித்த
சில நொடிகளில்
சுனாமியாய் வந்து
முழுமையாய் என்னை ஆட்கொண்டது
தாறுமாறான எண்ண அலைகள்...
பாலகனாய் அம்மாவின் அரவணைப்பைத் தேடி
பள்ளியிலே பகிர்ந்து கொள்ள
நட்பினைத் தேடி
கல்லூரியிலே காதலைத் தேடி
பின் நல்லதொரு வேலையைத் தேடி
ஆயிரம் லட்சம் என பணம் தேடி
இல்லாளாய் ஒரு நல்லாளைத் தேடி..
இப்படி தேடித் தேடி
முடிவாய் என்ன தேடுகிறேன் என்பதை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்...! தேடிய பின் எல்லாமே கிடைத்துவிடுகிறதே.... அதில் திருப்திதானே....

சில தேடல்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கை வெறுமையாகிவிடுகிறது. ஆனால் வாழ்க்கையே தேடலாக இருந்தால் அதில் இன்பமிருக்காது.

இல்லாள்/நல்லாள் கிடைக்க வாழ்த்துக்கள்....

கண்மணி
27-09-2006, 01:32 AM
தனிமையில் சிந்தித்த
சில நொடிகளில்
சுனாமியாய் வந்து
முழுமையாய் என்னை ஆட்கொண்டது
தாறுமாறான எண்ண அலைகள்...
பாலகனாய் அம்மாவின் அரவணைப்பைத் தேடி
பள்ளியிலே பகிர்ந்து கொள்ள
நட்பினைத் தேடி
கல்லூரியிலே காதலைத் தேடி
பின் நல்லதொரு வேலையைத் தேடி
ஆயிரம் லட்சம் என பணம் தேடி
இல்லாளாய் ஒரு நல்லாளைத் தேடி..
இப்படி தேடித் தேடி
முடிவாய் என்ன தேடுகிறேன் என்பதை
இன்னமும்
தேடிக் கொண்டிருக்கிறேன்...!

தேடிக் கொண்டிருப்பதை விட
இருந்து பார்த்திருக்கலாம்..
ஒரு நல்ல பெற்றோராய்
அரவணைப்பளித்து
பள்ளியில் இன்னொருவனுக்கு
நல்ல நண்பனாய்
ஒரு நல்ல காதலனாய்
(நீ காதலிக்கும் பெண்ணின் மனமகிழ்ச்சிக்காக அவள்
உன் காதலியாய் அறியப்படுவதை தியாகம் செய்யலாமே..:rolleyes: :rolleyes: :rolleyes: )
ஒரு நல்ல முதலாளியாய்...
ஆயிரம் லட்சம் எனக் கொடுத்து
நல்ல ஆளாய் ஒரு இல்லாதவளை இல்லாளாக்கி
தேடுவதி நிறுத்தி
இருக்கப் பழகு...

மதி
28-09-2006, 02:58 AM
தேடிய பின் எல்லாமே கிடைத்துவிடுகிறதே.... அதில் திருப்திதானே....

சில தேடல்கள் இல்லாவிட்டாலும் வாழ்க்கை வெறுமையாகிவிடுகிறது. ஆனால் வாழ்க்கையே தேடலாக இருந்தால் அதில் இன்பமிருக்காது.

இல்லாள்/நல்லாள் கிடைக்க வாழ்த்துக்கள்....

அறிஞரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..! தேடுவது மட்டுமே வாழ்க்கையல்ல..தேடியதை அனுபவிப்பதும் தான்...இதில் தேடிவதை மட்டும் சொல்லியிருக்கிறேன்....! ஒரு இலக்கை அடைந்தவுடன் அடுத்த இலக்கு என்னவென்று மனம் பரபரக்கிறதே அதை சொன்னேன்..!

மதி
28-09-2006, 03:10 AM
தேடிக் கொண்டிருப்பதை விட
இருந்து பார்த்திருக்கலாம்..
ஒரு நல்ல பெற்றோராய்
அரவணைப்பளித்து
பள்ளியில் இன்னொருவனுக்கு
நல்ல நண்பனாய்
ஒரு நல்ல காதலனாய்
(நீ காதலிக்கும் பெண்ணின் மனமகிழ்ச்சிக்காக அவள்
உன் காதலியாய் அறியப்படுவதை தியாகம் செய்யலாமே..:rolleyes: :rolleyes: :rolleyes: )
ஒரு நல்ல முதலாளியாய்...
ஆயிரம் லட்சம் எனக் கொடுத்து
நல்ல ஆளாய் ஒரு இல்லாதவளை இல்லாளாக்கி
தேடுவதி நிறுத்தி
இருக்கப் பழகு...

கண்மணி..நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்..
இருத்தலிலும் சுகம் தான்..ஆயின் இருத்தல் மட்டுமே வாழ்க்கையைப் பூர்த்தி செய்யாது. முற்றும் துறந்த முனிவர்களும் உடலளவிலும் மனதளவிலும் ஒரே இடத்தில் இருக்கவில்லையே..! அங்கேயும் நிம்மதி தேடி, உலகுக்கு நன்மைத் தேடி, ரிஷிகளில் தனக்கோர் இடம் தேடி..!
எப்போது மனிதன் தேடுவதை நிறுத்துகிறானோ அப்போதே சுயம் இழந்து விடுகிறான். நீங்கள் சொன்ன மாதிரி நானும் இருந்திருக்கிறேன்..

குழந்தையாய் அம்மாவின் மடியில்
இருந்திருக்கிறேன்
அப்பாவிடம் பாடம் பயின்றிருக்கிறேன்
பள்ளியில் நன்மாணவனாய் இருந்திருக்கிறேன்
தோழர்களுக்கு நல்ல நண்பனாய் இருந்திருக்கிறேன்
விளையாட்டுப் பிள்ளையாய் இருந்திருக்கிறேன்
விளையாட வேடிக்கை பார்த்திருக்கிறேன்
கல்லூரியிலே காதலித்திருக்கிறேன்
பின் அது ஏற்கப்படாமல் தோற்றிருக்கிறேன்
நல்ல பணியிலே சேர்ந்திருக்கிறேன்
என்ன வேலையிது என நொந்திருக்கிறேன்
இருந்தும்
இனி அடுத்தென் செய்யலாம் என
இப்பொழுது யோசித்திருக்கிறேன்

(தப்பாயிருந்தா மன்னிச்சுக்கோங்க...! :) :) )

தாமரை
28-09-2006, 04:00 AM
சுயம் இழந்தவன்
மலர்கிறான்
சுயம்"பூ"..
தொலைத்தவனுக்குத் தான் தெரியும்
எதைத் தேடுகிறோம்
என்று தெரியும்

meera
28-09-2006, 05:56 AM
நண்பரே! அருமையான கவிதை.தேடல் இருக்கும் வரை உலகமும் சுற்றும்.
தேட துவங்கும் போது புதிய பொருள் நிச்சயம் கிடைக்கும்.
காந்தி,பாரதி போன்ற தலைவர்களின் தேடலால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.
தாமஸ் ஆல்வா எடிசன் தேடலால் உலகம் ஒளி பெற்றது.
இப்படி நாம் சுகமாய் அனுபவிக்கும் ஒவ்வொன்றும் யாரோ ஒருவரின் தேடல் அல்லவா.உங்களுக்குள் நீங்கள் தேடியதால் அல்லவா கவிதை உருவானது.ஆகவே நண்பா உங்களின் தேடலை திவிர படுத்துங்கள்.நிறுத்துவதால் நாம் நல்ல கவிஞரை இழந்தாலும் இழந்துவிடுவோம்.

மதி
28-09-2006, 06:57 AM
நன்றி தோழியே..!