PDA

View Full Version : ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியது



mgandhi
24-09-2006, 06:55 PM
48ம் ஆண்டில் சிக்ரி அடிக்கல் நாட்டுவிழாவிற்கு முன்னாள் பிரதமர் நேரு வந்த போது எனது 17 வது வயது மாணவர் பருவத்தில் பள்ளி விடுமுறை நாளில் இங்கு வந்தேன். அதற்கு பின்னர் காரைக்குடி அழகப்பா பல்கலை.,க்கு வந்துள்ளேன். ஒரு நாடு நல்ல நாடாக வளர்ச்சி பெற வேண்டுமெனில் பல நுїற்றாண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் ""பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கு'' என்ற குறளில் தெரிவித்துள்ளது போன்று நாட்டில் பாதுகாப்பு, நோயின்மை, செல்வம், கல்வி அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி இருத்தால் நாடு நல்ல வளர்ச்சி பெறும். இதில் கல்வி ஆற்றலை பல ஆண்டுகளுக்கு முன்னரே அழகப்ப செட்டியார் அறிந்து பல கல்வி நிறுவனத்தை ஏற்படுத்தினார். இன்றைக்கு செயல்திறன் மிக்க தலைவர்கள் நாட்டிற்கு வேண்டும். நான் சந்தித்த தலைவர்களில் சண்முகப்பா, ஆஷா ராமையா. இவர்களில் சண்முகப்பா பெங்களூர் ரயில்வே ஸ்டேஷனில் கூலியாக பணியாற்றினார். அவரது கடுமையான உழைப்பு, ஈடுபாடு, அர்ப்பணிப்பு போன்றவற்றால் மிகச்சிறந்த தொழில் அதிபராக உயர்ந்தார். அகில இந்திய மோட்டார் வாகன கழக தலைவராகவும் வளர்ந்துள்ளார். ஆஷா ராமையா, தான் எச்.ஐ.வி.,நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தார்களால் புறக்கணிக்கப்பட்ட போதும். மனம் நோகாது வளர்ச்சியடைந்தார். இவரது அயராது முயற்சியால் தான் இன்று பல்வேறு நிறுவனங்கள் எச்.ஐ.வி., விழிப்புணர்வு கருத்தரங்கு, நோயாளிகளுக்கு கவுன்சிலிங் நடத்த அழைப்புவிடுத்து வருகிறது. இந்த கதையை நான் உங்களுக்கு கூறும் போது 2 கேள்விகளை முன்வைக்கிறேன். நீங்கள் இதுவரை கற்றது என்ன?, நீங்கள் கற்றதில் எதை ஞாபகம் வைத்துள்ளீர்கள்?. மாணவர் சமுதாயத்தினர் "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' குறளுக்கேற்ப ஆக்கப்பூர்வமான திறனை வளர்க்கவேண்டும். ஊரக வளர்ச்சி பெறவேண்டுமெனில் அறிவு, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய செய்யவேண்டும் என்றார்.

роЕро▒ро┐роЮро░рпН
25-09-2006, 01:24 PM
இந்த கதையை நான் உங்களுக்கு கூறும் போது 2 கேள்விகளை முன்வைக்கிறேன். நீங்கள் இதுவரை கற்றது என்ன?, நீங்கள் கற்றதில் எதை ஞாபகம் வைத்துள்ளீர்கள்?. . கலாமின் பேச்சுக்கள் அனைத்தும் புத்தகமாக வரும் என எண்ணுகிறேன்.

இரு நல்ல கேள்விகள்... ஒவ்வொருவரும்..... மீண்டும் நமக்குள்ளே கேட்க வேண்டியது.....