PDA

View Full Version : நிலவும் நானும்



crisho
24-09-2006, 05:13 AM
நிலவு தேய்கிறது
மாதமொரு முறையாவது
பெளர்ன்மியாகலாம் என்ற
நம்பிக்கையில்!

நானும் தேய்கிறேன்
என் கல்லறையிலாவது
அவள் என் காதலை
புரிந்து கொள்வாளென்ற
நம்பிக்கையில்!

Crisho

mgandhi
24-09-2006, 05:17 AM
உங்கள் நம்பிக்கை வீன்போகாது

meera
24-09-2006, 11:08 AM
நல்ல கவிதை பாராட்டுக்கள் கிஷோர்.நம்பிக்கை நல்ல பலன் தர வாழ்த்துக்கள்......

leomohan
29-09-2006, 10:01 PM
கவலை வேண்டாம் கிரேஷோ. கல்யாணம் மாதிரி கல்லறைக்கு போகறதுக்கு முன்னாடி அழைப்பிதழ் அச்சடிக்கனும். :) :)

ஓவியா
03-10-2006, 08:16 PM
கல்லறைக்கு போனபின் தான்
காதலை புரிந்துக்கொள்வாளேன்றால்.....
சாபமிடு........ காதல் சாகட்டும்............நீர் வாழுமைய்யா.....


இப்பவெல்லம்
அய்யா ஜோர குட்டி கவிதைகளை அள்ளி விடரீங்க...:D

கண்மணி
04-10-2006, 03:14 AM
பௌர்ணமி நிலவுதான் தேயும்..
அமாவாசையாகும்..
கல்லறைக் காதலோ
அல்ப ஆசையாகும்..

காதலிப்பவளின் ஆசையை
நிறைவேற்றுவதுதான்
காதலனின் கடமையாகும்..

காதலுக்காக
உயிரை விட்ட் விட்டால்

காதலிக்காக
என்ன செய்ய உத்தேசம்?

மயூ
04-10-2006, 03:16 AM
நிலவு தேய்கிறது
மாதமொரு முறையாவது
பெளர்ன்மியாகலாம் என்ற
நம்பிக்கையில்!

நானும் தேய்கிறேன்
என் கல்லறையிலாவது
அவள் என் காதலை
புரிந்து கொள்வாளென்ற
நம்பிக்கையில்!

Crisho

முதல் பந்தி சரி நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் அன்பனே!
ஆனால் இரண்டாம் பந்தி.. அவள் புரிந்துகொள்ளும வரை கல்லறையில் உறங்கப்போகின்றீறா??
நானாக இருந்தால் முடிவு வேறமாதிரி இருக்கும்....

கண்மணி
04-10-2006, 03:54 AM
முதல் பந்தி சரி நான் அதை ஏற்றுக்கொள்கின்றேன் அன்பனே!
ஆனால் இரண்டாம் பந்தி.. அவள் புரிந்துகொள்ளும வரை கல்லறையில் உறங்கப்போகின்றீறா??
நானாக இருந்தால் முடிவு வேறமாதிரி இருக்கும்....
முதல் பத்தியே தவறு..
தேயுற நிலவு பௌர்ணமி ஆகாது..

நான் இறப்பது
உனக்கு நிம்மதியென்றால்
இறக்கத் தயார்..

நீ இறக்கும் வரை நான்
இறப்பதில் அர்த்தம் இல்லை
நீ இறந்த பின்னும்
நானாய் இறப்பதில்
அர்த்தமில்லை..

leomohan
04-10-2006, 03:57 AM
நிலவு தேய்கிறது
மாதமொரு முறையாவது
பெளர்ன்மியாகலாம் என்ற
நம்பிக்கையில்!

நானும் தேய்கிறேன்
என் கல்லறையிலாவது
அவள் என் காதலை
புரிந்து கொள்வாளென்ற
நம்பிக்கையில்!

Crisho

வாங்க பங்காளி. என் கல்லறை கவிதையும் படிங்கள் கிரெஷொ.:)

மயூ
04-10-2006, 04:10 AM
முதல் பத்தியே தவறு..
தேயுற நிலவு பௌர்ணமி ஆகாது..

நான் இறப்பது
உனக்கு நிம்மதியென்றால்
இறக்கத் தயார்..

நீ இறக்கும் வரை நான்
இறப்பதில் அர்த்தம் இல்லை
நீ இறந்த பின்னும்
நானாய் இறப்பதில்
அர்த்தமில்லை..

அர்த்தம் இல்லை என்று முடிந்தாலும் அர்த்தமான வார்த்தைகள்.....
அவள் உன்னைப்புரியாத போது அவளிற்காக நீ கல்லறை செல்வது எவ்விதத்தில் ஞாயம்???
அப்படியோ புரிந்து கொண்டபின் அவள் இவ்வுலகை நீத்தாலும் அவள் நீ கல்லறை செல்வதையா விரும்பினாள்??:confused: :confused: