PDA

View Full Version : உன்னை கண்டேன்



mgandhi
23-09-2006, 05:58 PM
உன்னை கண்டேன்-நான்
உறக்கத்தையே மறந்தேன்-உன்
முகம் பார்த்தேன்-நான்
முழுமதியை மறந்தேன்-உன்
கருவிழியைப் பார்த்தேன்-நான்
கவலைகளை மறந்தேன்-உன்
பற்களைப் பார்த்தேன்-நான்
பால் சுவையையும் மறந்தேன்-உன்
இதழ் களைப் பார்த்தேன்-நான்
இனிப்பையும் மறந்தேன்-உன்
முடியைப் பார்த்தேன்-நான்
முகிலையும் மறந்தேன்-நான்
என்னையே பார்த்தேன்-எனக்கு
என்னையே பிடிக்கவில்லை- உனக்கு
மட்டும் எப்படி பிடிக்கும்?

paarthiban
23-09-2006, 07:07 PM
என்னங்க இது? எப்படி இப்படி எல்லாம்??

crisho
24-09-2006, 05:00 AM
ஹ, ஹ, ஹ... சூப்பர்

மதி
25-09-2006, 03:23 AM
இதுக்கு பேர் தான் சுயபச்சாதாபமோ...?
விடுங்க காந்தி...பல சமயங்கள்ல நமக்கே தெரியாம நம்ம பலருக்கு பிடிச்சு போயிடுது..!

umanath
25-09-2006, 11:45 AM
ஒரு பழைய ஜோக் நினைவிற்கு வருது..தவறாக எடுத்துக்கொள்ளாதபட்சத்தில்...

"உன் தங்கையை பார்த்தேன்..
உன்னையே மறந்தேன்"..

:-)

பென்ஸ்
25-09-2006, 03:56 PM
இந்த தன்னடக்கும் ஒன்னு போதாதா... :p
அந்த பிகரை மடக்க....:D

அழகா இருந்தாதான் பிகரு மடியும்னா நாங்க எல்லாம் எங்க போறதாம்...:rolleyes: :rolleyes: :D :D

ஆயிரம் பொய் சொல்லி கல்யாண பண்னலாம்னா,
காதலிக்க ஒன்னே ஒன்னு சொல்லலாம்...B) B)

உங்களுக்கு சில டிப்ஸ்:
தைரியமா அந்த பொண்ணு பக்கத்தில் போயி ,
மொபையில் போனை எடுத்து
"ஹலோ ..!!! ஸ்டிவ் வாக் ஸ்பிக்கிங்... (அவள்: மொதலில் மொபையில ஆன் பண்ணுட மூதேவி..!!!)
என்னது அரேபியாவுல 4 எண்னை கிணறு எரின்சு போச்சா... (அவள்: அடுத்தவன் கிணறு எரிஞ்சா உனக்கு என்னடா???)
20 கோடி நஸ்டமா... (அவள்: கோடியில எத்தனை சைபர்ன்னு உனக்கு தெரியுமாடா??)
சரி சரி கவலை படாதே இது எல்லாம் ஒரு நாம் டிப்பா கொடுக்குற பணம்தானே..???" (அவள்: எங்க நாயர் டீ கடையிலையா???)
என்று பீலா வுடுங்க.... அவளே வந்து பேசுவா .... (இப்பவே ஆஸ்பத்திரியில சேத்துட்டா குணமாயிடும்ன்னா???)

கண்மணி
27-09-2006, 05:17 PM
உன்னை கண்டேன்-நான்
உறக்கத்தையே மறந்தேன்-உன்
முகம் பார்த்தேன்-நான்
முழுமதியை மறந்தேன்-உன்
கருவிழியைப் பார்த்தேன்-நான்
கவலைகளை மறந்தேன்-உன்
பற்களைப் பார்த்தேன்-நான்
பால் சுவையையும் மறந்தேன்-உன்
இதழ் களைப் பார்த்தேன்-நான்
இனிப்பையும் மறந்தேன்-உன்
முடியைப் பார்த்தேன்-நான்
முகிலையும் மறந்தேன்-நான்
என்னையே பார்த்தேன்-எனக்கு
என்னையே பிடிக்கவில்லை- உனக்கு
மட்டும் எப்படி பிடிக்கும்?

மறதி தான் பிரச்சனை
எல்லாவற்றையும் மறந்த நீ
இன்னொருத்தியைக் கண்டால்
மறப்பது
என்னையல்லவா???:D :D :D