PDA

View Full Version : என்ன விலை

mgandhi
20-09-2006, 05:45 PM
உழைப்பவன் மேனி
கருத்து இருக்கும்
உண்மை அறிந்தவன்-வாய்
கட்டப்பட்டிருக்கும்
பதவியில் இருப்பவன்-சுற்றி
பாதுகாப்பு இருக்கும்
கடவுளை வேண்டுவனிடம்-தம்
சுய நலமே இருக்கும்
பஞ்சமாபாதகம் செய்பவன்-கஜானா
நிரம்பியே இருக்கும்
பொய் பேசுபவனை-சுற்றி
பெரும் கூட்டம் இருக்கும்
கிசு கிசு சொல்பவனை-சுற்றி
வாசகர் கூட்டம் இருக்கும்
சட்டம் தெரிந்தவனை -அதன்
ஓட்டைகள் காப்பாற்றும்
இன்நிலை என்றுமறுமே-அதற்கு
என்ன விலை தர வேண்டுமோ

Shanmuhi
20-09-2006, 06:30 PM
கவி வரிகள் அருமை... மேலும் தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

பென்ஸ்
21-09-2006, 09:14 AM
இந்த நிலை மாற...
அதுவும் நிலையாக மாற
ஒரு பேரம்...

அருமை....

ஆனால்...

தவறான பொருளுக்கு அதிக விலை கொடுப்பதும்
தேவையில்லாமல் தேவையை பூர்த்தி செய்வதும்
பெண்கள் வேலையல்லவா..!!!!!
(ஐயோ..... என்னை காப்பாத்துங்க:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D )

உழைப்பவன் மேனி
கருத்து இருக்கும்

உழைப்பு வேயிலில் மட்டும் அல்ல...

உண்மை அறிந்தவன்-வாய்
கட்டப்பட்டிருக்கும்

உன்மையறிந்தவன்
கோழையாய் இருக்கும் வரை

பதவியில் இருப்பவன்-சுற்றி
பாதுகாப்பு இருக்கும்

சிலர் பாதுகாப்புகாக
பலர் ஆடம்பரத்திற்க்காக

கடவுளை வேண்டுவனிடம்-தம்
சுய நலமே இருக்கும்

ஒத்து கொள்ள முடியாது...
இது பெரிய விவாதமாகும்

இப்படி ஒவ்வோன்னுக்கும் சொல்லிடே போகலாம்....
அட நான் நல்லா இருக்கனும், என்னால என்னை சுத்தி இருக்கவங்க நல்ல இருக்கனும்ன்னு நினச்சா போதுமோ???

ஓவியா
22-09-2006, 05:39 PM
உண்மைகள் குவிந்த
அருமையான கவிதை

முதலில் இதர்க்கு
விலையை நிர்ணயிக்க முடியுமா????????????

கண்மணி
22-09-2006, 05:47 PM
இந்த நிலை மாற...
அதுவும் நிலையாக மாற
ஒரு பேரம்...

அருமை....

ஆனால்...

தவறான பொருளுக்கு அதிக விலை கொடுப்பதும்
தேவையில்லாமல் தேவையை பூர்த்தி செய்வதும்
பெண்கள் வேலையல்லவா..!!!!!
(ஐயோ..... என்னை காப்பாத்துங்க:rolleyes: :rolleyes: :rolleyes: :D :D )

உழைப்பு வேயிலில் மட்டும் அல்ல...

உன்மையறிந்தவன்
கோழையாய் இருக்கும் வரை

சிலர் பாதுகாப்புகாக
பலர் ஆடம்பரத்திற்க்காக

ஒத்து கொள்ள முடியாது...
இது பெரிய விவாதமாகும்

இப்படி ஒவ்வோன்னுக்கும் சொல்லிடே போகலாம்....
அட நான் நல்லா இருக்கனும், என்னால என்னை சுத்தி இருக்கவங்க நல்ல இருக்கனும்ன்னு நினச்சா போதுமோ???

தவறான பொருளுக்கு
அதிக விலை கொடுப்பது
பெண்கள்தான்

வரதட்சணை!

தேவையில்லாமல்
தேவையை பூர்த்தி செய்வது
பெண்கள்தான்

வம்சவிருத்தி

உழைப்பு
வெய்யிலில் மட்டுமல்ல
இருட்டறையிலும்
அடுப்பங்கரை தனலிலும்..

மேனி கறுப்பது உழைப்பினாலென்றால்
இவள் மேனி வெளுத்தது உதிரக் குறைவினால்

உண்மை என்பது தெரிந்தது மட்டுமல்ல
தெரியாதும் கூடத்தான்..

வாய் கட்டப்பட்டவன்
கை என்ன செய்ததாம்?

விலைதர தயாராக இருகும்
லஞ்சத் தரகர்
தேவையில்லை
தலை தயாராக இருக்கும்
நெஞ்சம் தேவை..

crisho
23-09-2006, 06:16 AM
தவறான பொருளுக்கு
அதிக விலை கொடுப்பது
பெண்கள்தான்

வரதட்சணை!

அம்மா தாயே வரதட்சணை வேணா... ல்வ் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னா வேணான்னு சொல்லீட்டு... வீடு, வண்டி, ரொக்கம்ன்னு கொடுத்து அம்மா, அப்பா பண்ணி வச்சா ஏத்துக்கிறீங்க....

உழைப்பு
வெய்யிலில் மட்டுமல்ல
இருட்டறையிலும்
அடுப்பங்கரை தனலிலும்..

இப்ப எங்க தனல் உள்ள அடுப்பு!!
கேஸ் ஸ்டவ், பிரசர் குக்கர், இலக்ரிக் ஸ்டவ் ன்னு போய்கிட்டு இருக்கு...

வாய் கட்டப்பட்டவன்
கை என்ன செய்ததாம்?

கையையும் சேர்த்து கட்டீட்டானுக.... :D :D

ஓவியா
23-09-2006, 12:13 PM
கண்மனியின் வித்தியாசமான விமர்சனம் அருமை, அதிலும்
தவறான பொருளுக்கு அதிக விலை கொடுப்பது பெண்கள்தான் - வரதட்சணை!

கையையும் சேர்த்து கட்டீட்டானுக.... :D
ஜாலியாஃ பதில் போட்ட கிஷொருக்கும் நன்றி

கண்மணி
27-09-2006, 05:28 PM
அம்மா தாயே வரதட்சணை வேணா... ல்வ் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னா வேணான்னு சொல்லீட்டு... வீடு, வண்டி, ரொக்கம்ன்னு கொடுத்து அம்மா, அப்பா பண்ணி வச்சா ஏத்துக்கிறீங்க....

அதைத்தானே தவறான பொருட்கள் அப்படின்னு நாசூக்கா சொல்லி இருக்கேன்

இப்ப எங்க தனல் உள்ள அடுப்பு!!
கேஸ் ஸ்டவ், பிரசர் குக்கர், இலக்ரிக் ஸ்டவ் ன்னு போய்கிட்டு இருக்கு...

போய்கிட்டு இருக்கா
இல்லை வந்துகிட்டு இருக்கா?:D :D :D
(ஆண்கள் அடுப்பறைக்குள்
அறிஞரே சொல்லுங்களேன்..)

கையையும் சேர்த்து கட்டீட்டானுக.... :D :D
[/Quote]

உண்மை அறிந்தவனின்
உண்மை அறிந்தவன்
கதி என்னவோ???:D :D :D

meera
28-09-2006, 06:22 AM
கண்மணி ஆஹா நெத்தியடி நம்ம பெஞ்மின் இனிமேல் பெண்களை பத்தி பேசவே மாட்டாருனு நினைக்கிறேன்.மன்ற நண்பர்களே சரியா என் கணிப்பு.

பென்ஸ்
28-09-2006, 07:17 AM
தவறான பொருளுக்கு
அதிக விலை கொடுப்பது
பெண்கள்தான்
வரதட்சணை!

தவறு...

அப்பாமாருதான் தன் பிள்ளையை பணத்தை கொடுத்து இந்த வினையை எடுத்துட்டு போயிடுன்னு சொல்லுறங்க...
இதில் பொண்ணுங்க விலையை பற்றி கவலை படுவதே இல்லையே...
இங்கும் படுவதும் கெடுவதும் ஆண்கள் தான்....
நீங்க சாப்பிங் போனது இல்லையா???? வரதச்சினை அதுக்கு ஜுஜுப்பி...!!!!

தேவையில்லாமல்
தேவையை பூர்த்தி செய்வது
பெண்கள்தான்
வம்சவிருத்தி

நாங்க மட்டும் என்ன வேணுமுன்னா சொன்னோம்...
அட நீங்க தான் அம்மா என்னாச்ச்ன்னு கேக்குறாங்க, அடுத்த வீட்டு அக்க கேக்குறங்க என்று அவசர படுத்துறிங்க...
இதில் சில தாய்மாரு, ஒன்னை பெத்துக்கோ பெட்டி பாம்பா அடங்கிடுவான்....
என்னா அட்வைசு...!!!!!

கண்மணி ஆஹா நெத்தியடி நம்ம பெஞ்மின் இனிமேல் பெண்களை பத்தி பேசவே மாட்டாருனு நினைக்கிறேன்.மன்ற நண்பர்களே சரியா என் கணிப்பு.
அம்மிணி... நான் பொண்ணுங்களை தவறா பெசுறவன்னு உங்களுக்கு யாரு சொன்னா....
பொண்களோட பலவீனமே தங்களை பற்றி அடுத்தவஙக் தப்பா சொல்லிடாங்களோ, நமக்கு உரிமையில்லையோ என்று பயந்து ஓடுவதுதானே... முதலில் பெண்கள் உடலிலும், ஆன்மாவிலும் பலவீனமானவர்கள் என்பதை ஒத்து கொண்டாலே "டீச்சர் இவன் புடுங்குறான்" என்று குறை கூறுவதை நிறுத்து விடலாம்....

கண்மணி... சேம் சைட் கோல் அடிப்பது போல் இருக்குதே (புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்)....

கண்மணி
28-09-2006, 03:41 PM
தவறு...

அப்பாமாருதான் தன் பிள்ளையை பணத்தை கொடுத்து இந்த வினையை எடுத்துட்டு போயிடுன்னு சொல்லுறங்க...
இதில் பொண்ணுங்க விலையை பற்றி கவலை படுவதே இல்லையே...
இங்கும் படுவதும் கெடுவதும் ஆண்கள் தான்....
நீங்க சாப்பிங் போனது இல்லையா???? வரதச்சினை அதுக்கு ஜுஜுப்பி...!!!!

காசு கொடுப்பவரும் உண்டு
கள்ளிப் பால் கொடுத்து
கவிழ்த்துப் போடுவோரும் உண்டு...

வரதட்சணை..
அப்பன் பெண்ணுக்கு கொடுக்கும்
சொத்துப் பாகம்..
ஆரு அப்பன் வீட்டுப் பணம்னு நெனச்சிங்க...

நாங்க மட்டும் என்ன வேணுமுன்னா சொன்னோம்...
அட நீங்க தான் அம்மா என்னாச்ச்ன்னு கேக்குறாங்க, அடுத்த வீட்டு அக்க கேக்குறங்க என்று அவசர படுத்துறிங்க...
இதில் சில தாய்மாரு, ஒன்னை பெத்துக்கோ பெட்டி பாம்பா அடங்கிடுவான்....
என்னா அட்வைசு...!!!!!

இதையே சாக்காய் வைத்து
இன்னொன்று கட்டத் துடிக்கும்
இளைஞனாய் எண்ணுபவரைக்
கட்டத்தான்...

அம்மிணி... நான் பொண்ணுங்களை தவறா பெசுறவன்னு உங்களுக்கு யாரு சொன்னா....
பொண்களோட பலவீனமே தங்களை பற்றி அடுத்தவஙக் தப்பா சொல்லிடாங்களோ, நமக்கு உரிமையில்லையோ என்று பயந்து ஓடுவதுதானே... முதலில் பெண்கள் உடலிலும், ஆன்மாவிலும் பலவீனமானவர்கள் என்பதை ஒத்து கொண்டாலே "டீச்சர் இவன் புடுங்குறான்" என்று குறை கூறுவதை நிறுத்து விடலாம்....

கண்மணி... சேம் சைட் கோல் அடிப்பது போல் இருக்குதே (புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்)....
இதுதான் தவறு...நீங்கள் ஒத்துக் கொண்டாலே என்று எழுத நினைக்கவில்லை.. தவறு என்று உணர்ந்துகொண்டாலே என எழுதி இருக்க வேண்டும்..:D :D .

நீங்க அடிக்கிறது ஷேம் ஷேம் சைட் கோல்.:eek: :eek: :eek: