PDA

View Full Version : இன்னும் இருக்கிறது ஆகாயம் - கவிதை 4



ப்ரியன்
20-09-2006, 09:16 AM
ஆகாயம் அவிழ கண்டு
அலறி ஓடிய
எந்தன் மேல்
விழுந்து அதுவே
துகள் துகளாய் நொறுங்கிப் போனது!

தொட்டது மரணம்
விட்டது உயிர்
எண்ணம் மூளைப் பரவிய கணம்
சுற்றிச் சூழ்ந்து என்னை
புணர்ந்துக் கொண்டது நிசப்தம்
உயிரில்லா ஓர் உயர்நிலை தொடர்ந்தது
சற்றைக்கெல்லாம்!

மெல்லிய ஒளியொன்று கண்ணை தழுவ
காக்கைகளின் கரையல் சப்தம்
மூளையின் கரைகளை தொட
சட்டென விழிப்புக் கொண்டு
விழிகள் உருட்டி உருட்டி பார்க்க
அதன் அதன் இடத்தில் அப்படியே இருந்தன
பாதி படித்த புத்தகமும்
அதன் மேல் கவிந்த நிலையில் கண்கண்ணாடியும்
அறையின் மூலையில் என்றைகோ
வீசி விட்டெறிந்த அழுக்கு கைலியும்!

இன்னும் நான் மரணிக்கலியா? என்ற
கலவரத்தோடு
எட்டி பார்க்கையில்
இன்னும் உடையாமல் இருக்கிறது ஆகாயம்!

- ப்ரியன்.

பென்ஸ்
20-09-2006, 10:09 AM
"மாட்ரிக்ஸ்" திரை படத்தில் மார்பியஸாக வருபவர் நியோவிடம் கேட்பார்
"நீ கனவு கண்டிருக்கிறாயா நியோ,
நீ நிஜம் என்று நினைக்கு அளவுக்கு.
அந்த கனவில் இருந்து உன்னால் எழ முடியவில்லையேன்றால்
எது நிஜம்... எது கனவு... என்று உனக்கு எப்படி தெரியும்???"

கனவுகள் குறித்து என்னால் இப்போது சொல்லகூடிய அளவுக்கு அறிவு இல்லை...
படித்து கொண்டிருக்கிறென்....
இந்த தருனத்தில் இதை கண்டதால் ஒரு மகிழ்ச்சி....

இளசு
20-09-2006, 09:38 PM
ப்ரியன்..

வானளவு இன்பம் என்று காதலையும்
வானளவு நம்பிக்கை என்று துளிரையும்
வானின் சிறுவிள்ளல் பிம்பம் என்று துளியையும்
வான் கண்டு வாழ்விருப்பை உணரும் விழிப்பையும்...


நான்கு கவிதைகளையும்
ஒரு 'ஈற்றடியில்' கோர்த்த விதம் அருமை!


----------------------------------

இனிய பென்ஸின் விமர்சனம் பார்த்தாலே
அதற்காகவே பதிவுகளை மீண்டும் படிக்கிறேன்...

முன்பு இனிய கண்ஸ்,,,
இன்று இனிய பென்ஸ்..

என்னைக் கவர்ந்த விமர்சனத் திலகங்கள்...

பென்ஸ்
21-09-2006, 06:22 AM
இளசு...

பாராட்டியே எழுத வைப்பதில் உங்களை விட திறமை இருக்கிறது...

10000 வது பதிவு தயாரா????