PDA

View Full Version : மறக்க முடியவில்லை!



crisho
20-09-2006, 06:28 AM
வாழ்வில் எங்கெங்கோ இடிபட்டேன்
அவை அனைத்தையும் மறந்துவிட்டேன்
ஆனால் உன் இதயத்தில் இடிபட்டதை
இன்னும் மறக்க முடியவில்லை பெண்ணே!

பென்ஸ்
20-09-2006, 06:48 AM
வலி புரிகிறது கிஷோர்...

மோதிய இதயத்திலும் வலியும் கீறலும் இருக்குமா???....

மோதியது கல் நெஞ்சமானதால்
அவள் முத்திரையை மட்டும் பதித்துவிட்டு
சேதமில்லாமல் திரும்பி சென்றாளோ???

paarthiban
21-09-2006, 08:55 PM
காதல் படுத்தும் பாடு

ஓவியா
22-09-2006, 04:29 PM
காய்ந்த பருத்தியுல் பஞ்சு மெத்தைகள் பல இருக்க
வர்ணம் பூசிய இரும்பு பெட்டகதில் மொதியது யார் குற்றம்.....

காதல் படுத்தும் பாடு.....
வலிக்குதா...... அய்யோ பாவம்

ஓவியா
22-09-2006, 04:47 PM
வலி புரிகிறது கிஷோர்...

மோதிய இதயத்திலும் வலியும் கீறலும் இருக்குமா???....

மோதியது கல் நெஞ்சமானதால்
அவள் முத்திரையை மட்டும் பதித்துவிட்டு
சேதமில்லாமல் திரும்பி சென்றாளோ???


பதிப்பதினால் தான் அதன் பெயர் முத்திரை....;)


காதல் படுத்தும் பாடு......... :eek: :eek:
தொல்வியானால் முத்திரை........:cool:
வெற்றிபெற்றால் முத்தத்திரை........:D

கண்மணி
22-09-2006, 05:27 PM
வலி புரிகிறது கிஷோர்...

மோதிய இதயத்திலும் வலியும் கீறலும் இருக்குமா???....

மோதியது கல் நெஞ்சமானதால்
அவள் முத்திரையை மட்டும் பதித்துவிட்டு
சேதமில்லாமல் திரும்பி சென்றாளோ???

உன்
கண் உளிபட்டு
செதுக்கிய சிற்பம்
என் இதயம்..

ரணங்கள் வலித்தாலும்
அழகாய்த்தான் இருக்கிறது..
என்று
அடுத்தவர் சொல்லும்பொழுது
தெறித்த சில்லுகளின் இழப்பு
இழப்பாய் இல்லை
வியப்பாய் இயக்கிறது..

ஒத்தி எடுப்பது
முத்திரை
உன் கண்களால்
கொத்தி எடுப்பதால்
கெடுவது என்
நித்திரை

crisho
23-09-2006, 04:45 AM
ஆஹா... இவை வைர வரிகள்... அருமை அருமை!!

crisho
23-09-2006, 05:54 AM
காதல் படுத்தும் பாடு......... :eek: :eek: [/COLOR]
தொல்வியானால் முத்திரை........:cool:
வெற்றிபெற்றால் முத்தத்திரை........:D

சூப்பர்....


காய்ந்த பருத்தியுல் பஞ்சு மெத்தைகள் பல இருக்க
வர்ணம் பூசிய இரும்பு பெட்டகதில் மொதியது யார் குற்றம்.....
அக்கோ....
காய்ந்த பருத்தியின் பஞ்சு மெத்தைகளுக்கும், வர்ணம் பூசிய இரும்பு பெட்டகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் போனதே பிரச்சினை!!

ஹ.... ம்.... நல்லது கெட்டது தெரிஞ்ச... நல்லவங்க பெரியவங்க உங்களப்போல யாரிடமாச்சும் கேட்டிருக்கனும்.... கேட்காதது என் தப்புதான்!! ;)