PDA

View Full Version : 30 + பெண்களுக்குmgandhi
18-09-2006, 08:04 PM
உரக்கக் கத்திக் கூப்பிட்டாலோ, இருமினாலோ, ஏன் வாய் விட்டுச் சிரித்தால் கூட சிறுநீர் சிந்திவிடும். உள்ளாடைகள் ஈரமாவதால் ஒருவித அசூயை வேறு! இந்தப் பிரச்னை சமீப காலமாக மிகவும் அதிகரிக்கவே, கைனகாலஜிஸ்டை அணுகினார்.

இது வயசாறதனால வர்ற பிரச்னை. இதுக்கு ஒண்ணுமே செய்ய முடியாது. தண்ணி அதிகமா குடிக்காதீங்க. மூச்சை −ழுத்து உள் அடக்குங்க என்று ஆலோசனை கூறினார். ஆனால் இரண்டும் பலனளிக்கவில்லை.
பெண்களுக்கு ஏற்படும் இந்த விநோதப் பிரச்னையின் பெயர் Stress Urinary incontinence. −து பெரும்பாலும் 30 + பெண்களுக்குத்தான் வரும். −தற்கு, அதிகமான எடை தூக்குதல், உடல் பருமன், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, மெனோபாஸ் கோளாறு, புகை பிடித்தல் முதலிய காரணங்கள் −ருந்தாலும், மிகவும் முக்கியமானது என்ன தெரியுமா? சுகப்பிரசவம்தான்!

என்ன ஆச்சரியமாயிருக்கா? மேலே படியுங்க!

சுகப்பிரசவமான நூற்றில் நாற்பது பெண்களுக்கு இப் பிரச்னை வரக்கூடும். பிரசவத்தின் போது, குழந்தையின் தலை, சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் மற்றும் அதைத் தாங்கிப் பிடித்துள்ள தசைகளையும் நரம்புகளையும் அழுத்தும். அதனால் சிறுநீர்க்குழாய் பழுதடையும். அதன் விளைவாக, ஒருசில பெண்களுக்குப் பிரசவித்த உடனேயும், மேலும் சிலருக்கு நாள்படவும், சிறுநீர்க் குழாய் நரம்பு மற்றும் தசை தளர்ச்சி ஏற்பட்டு, −ந்தக் கோளாறு உண்டாகிறது.
உடம்புக்குள் அழுத்தம் அதிகமாகும் போது, அதாவது சிரிக்கும்போதோ, தும்மும்போதோ, −ருமும்போதோ அல்லது எடை தூக்கும்போதோ அந்த அழுத்தத்துக்கு சிறுநீர்க்குழாய் ஈடுகொடுக்க முடியாமல், சிறுநீர் சிந்தி விடுகிறது.

ஸ்ட்ரெஸ் யூரினரி கான்டினென்ஸ் உள்ள பெண்கள், உடனே தகுந்த யூரோகைனகாலஜிஸ்டை நாடி ஆலோசனை பெற வேண்டும். −த்தகைய பிரச்னையுடன் வரும் பெண்களுக்கு, முதலில் சிறுநீரில் கிருமி உள்ளதா, சிறுநீர்ப்பை, கர்ப்பப்பைகளில் பிரச்னை உள்ளதா என அடிப்படைச் சோதனைகள் செய்ய வேண்டும். அடுத்த கட்டமாக, சிஸ்டோஸ் கோபி மூலம் சிறுநீர்க் குழாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றை சோதிப்போம். அடுத்து வருவது மல்டி சேனல் யூரோடைனமிக் என்கிற சிறப்புப் பரிசோதனை.

இதில், சிறுநீர்க் குழாயில், சிறுநீர்ப் பையில் மெல்லியக் குழாய் ஒன்று பொருத்தப்பட்டு, கணினியுடன் −ணைக்கப்படும். உள்ளே தண்ணீர் செலுத்தப்படும். அப்போது சிறுநீர்ப் பையில் ஏற்படும் மாற்றம், சிறுநீர்க் குழாய், பையில் உண்டாகும் அழுத்தம் என எல்லாவற்றையும் கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்கலாம்.

மேற்கண்ட பரிசோதனைகளின் மூலம் சிறு நீர்ப்பை உறுதியாக உள்ளதா, சிறுநீர் தங்காமல் வெளியேறுகிறதா, சிறுநீர்ப்பை குழாயில் உள்ள அழுத்த நிலை, சிறுநீர் தசை ஓவர் ஆக்டிவ் ஆக உள்ளதா என பல விஷயங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து விடலாம்.

பிரச்னை −ருப்பது உறுதியானால் −ரண்டு வழிகளில் தீர்க்கலாம். ஆபரேஷன் −ல்லாமல், உடற்பயிற்சிகள் மூலமாகவே கோளாறுகளைச் சரிசெய்ய முயல்வது. ஆனால் பெல்விக் ப்ளோர் எக்சர்சைஸ்களை வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்க வேண்டும். விட்டால், மீண்டும் பிரச்னை தோன்றும்.

மற்றொன்று நிரந்தர குணம் தரும் ஸ்லிங் நவீன அறுவை சிகிச்சை! இந்த முறையில், அந்தரங்க உறுப்பு வழியாக, சிறுநீர்க்குழாயின் அடியில், ப்ரோலின் நாடா ஒன்றைப் பொருத்திவிடுவோம். அழுத்தம் அதிகமாகும் போது, அந்த நாடா செயல்பட்டு, அழுத்தத்தைக் குறைத்து விடும். இதனால் சிறுநீர் சிந்தாது. அதே சமயம், −யல்பான சிறுநீர் ஓட்டத்தையும் −து தடுக்காது. வலியின்றி, இரத்தக் கசிவின்றி, லேப்ரோஸ்கோபிக் முறையைப் போலவே, மிக நூதனமாகச் செய்யப்படுவதால், ஒரே நாளில் வீடு திரும்பி விடலாம்.

இந்த ஸ்ட்ரெஸ் யூரினரி −ன்கான்டினென்ஸ் பிரச்னை உயிர்க் கொல்லி நோயல்லதான்! ஆனால் பெண்களை மனரீதியாகப் பாதித்து, வாழ்க்கையின் தரத்தை வெகுவாக பாதித்துவிடும். இதைப் பற்றி மேலும் விவரம் அறிய விரும்புவோர், www.urogynecology.in என்ற வலைத்தளத்தை அணுகவும் என்கிறார் டாக்டர் கார்த்திக் குணசேகரன். −வர் அமெரிக்காவில் உள்ள க்ளீவ் லேண்ட் க்ளினிக் மருத்துவமனையில் யூரோகைனகாலஜியை, பெல்லோஷிப்பில் படித்துத் தேறிய முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி மங்கையர் மலர்

ஓவியா
22-09-2006, 06:44 PM
தகவலுக்கு நன்றி

இளசுவின் கருத்து பதிவை எதிர்பார்கின்றேன்

ஓவியன்
22-02-2007, 07:19 AM
ஒரு பெண்ணானவள் தாயாகவதற்கு என்னென்ன கஸ்ரமெல்லாம் அனுபவிக்க வேண்டி உள்ளது!.

இது ஒவ்வொரு பிள்ளையினதும் மனதிலே உறைத்தால் எவ்வளவு நல்லது!.

தங்க கம்பி
02-03-2007, 08:36 AM
பெண்களை மதிக்கவேண்டும்.உதாசினப்படுத்தக்கூடாது.

பிச்சி
02-03-2007, 11:55 AM
பயனுள்ள தகவல்

அறிஞர்
02-03-2007, 04:05 PM
காந்தி எடுத்து கொடுத்த தகவல் அருமை.....
இதை எழுதியவருக்கு ஒரு நன்றி...

பயனுள்ள தகவல் தொடரட்டும்...