PDA

View Full Version : வீட்டுக்கு கிளம்பியாச்சா.??..ஒரு நிமிடம்



umanath
18-09-2006, 08:21 AM
வீட்டுக்கு கிளம்பியாச்சா.??..ஒரு நிமிடம்....

நம்மில் பலரும் அலுவலகம் விட்டு வீடு கிளம்பும் சமயம் கடைசியாக கணினியில் செய்யும் வேலை (Ctrl + Alt + Del) பொத்தன்களை அழுத்திவிட்டு ஆனந்தமாகவோ களைப்பாகவோ வீடு செல்வது தான்.அப்படி என்றால் உங்கள் கணினி எப்போதும் இயங்கிகொண்டு தான் இருக்கின்றது.

ஒரு சாதாரண கணினி உறங்குநிலையில் (Sleeping mode)ல் பயன்படுத்தும் மின்சக்தி சுமார் 35watts. இதன் அடிப்படையில் ஒரு சிறிய கணக்கு போடுவோம்.

ஒரு வாரத்தின் மொத்தம் 24 * 7 = 168 மணி

இதில் 68 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம்.

அப்படியானால் 100 மணி நேரம் கணினி உறங்குநிலையில் இருக்கின்றது.

ஒரு மாதத்திற்கு 100 * 4 = 400 மணி நேரம்.

மத்திய தர கணினி நிறுவனத்தில் (250 கணினிகள் இருக்கும் பட்சத்தில்) 250 * 400 = 1 லட்சம் மணி நேரங்கள் உறங்குநிலையில் இருக்கின்றது.

ஆக, ஒரு மாதத்திற்கு ஒரு நிறுவனத்தில் வீணடிக்கப்படும் மின்சக்தி 100000 * 35 = 3500000 வாட் = 3500 Kwh ( 1 kwh = 1 unit). கட்டணம் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் என்று குறைவாக வைத்துக்கொண்டாலும் 21000 ரூபாய் வீண்.

இதில் பணம் வீணாவதைவிட மின்சக்தி வீணாவது தான் வேதனையான விடயம்.மின்பொறியாளனான எனக்கு மின்சக்தி உற்பத்தியில் இருக்கும் கடினங்கள் தெரியும். நெய்வேலி சுரங்கங்களில் எத்தனை இன்னலுற்று தயாரிக்க படுகின்றது என உலகம் அறியும். இன்னும் பல கிராமங்களை மின்சாரம் சென்றடையவில்லை. உற்பத்தியாகும் சக்தி நகரங்களுக்கே போதவில்லை.அடிக்கடி மின் தட்டுப்பாடு வேறு ஏற்படுகின்றது. இதே நிலை நீடித்தால் ஒரு யூனிட்டின் விலை வேகமாக ஏறும். ஒரு நாள், எவ்வளவு பணம் தந்தாலும் மின்சாரம் கிட்டாத நிலையும் ஏற்படலாம்.

தினமும் வீட்டிற்கு கிளம்பும் முன்னர் ஒரு நிமிடம் காத்திருந்து கணினியை நிறுத்துவிட்டு செல்லுங்கள். நம்மால் நாட்டிற்கும் நிறுவனத்திற்கும் முடிந்த உதவி.

பயனுள்ள சுட்டி
http://windows.uwaterloo.ca/Hardware/PC_Power_Consumption.asp


(இந்த கணக்கு உங்கள் திரையகத்தை (Monitor) நிறுத்துவிட்டு செல்லும்பட்சத்தில் எழுதியது. திரையகம் எடுக்கும் மின்சக்தியினை கணக்கிட்டால் மூன்று மடங்கு அதிகரிக்கும்.)
--
விழியன்
http://vizhiyan.wordpress.com

(சரி என்று மனதிற்குபட்டால் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்)

mettilda
18-09-2006, 08:38 AM
what u said was correct

பென்ஸ்
18-09-2006, 08:41 AM
விழியன்...
பல அலுவலங்களில் இரவு மற்றும் வார இறுதியில் , நமது கணினியில் இருக்கும் கோப்புகளை பத்திரபடுத்தும் (back-up) வழக்கம் இருக்கிறது... இப்படிபட்ட இடங்களில் இந்த மின்சாரசேமிப்பு தகவல் உதவுமா????
மேலும் Sleeping mode மற்றும் stand by இரண்டும் ஒன்றுதானா... இல்லை வேறு வேறா????

பென்ஸ்
18-09-2006, 08:43 AM
what u said was correct

மெட்டில்டா...
தயவுசெய்து தமிழில் பதிக்க முயற்ச்சி செய்யவும்...

pradeepkt
18-09-2006, 09:48 AM
நீங்க சொல்றது சரிதான்யா... கணித்திரையை நிறுத்தி விட்டுச் சென்றாலும் கணினி ஓடுகிறது. ஆனால் பல நேரங்களில் நாம் பல அலுவல்களை இரவில் ஓட விட்டுத்தானே செல்ல வேண்டி இருக்கிறது. அப்படி இல்லாத பட்சத்தில் கணினியை நிறுத்தி விட்டுச் செல்வது நலமே.

umanath
18-09-2006, 10:09 AM
அன்பின் பென்ஸ்,

//பல அலுவலங்களில் இரவு மற்றும் வார இறுதியில் , நமது கணினியில் இருக்கும் கோப்புகளை பத்திரபடுத்தும் (back-up) வழக்கம் இருக்கிறது... இப்படிபட்ட இடங்களில் இந்த மின்சாரசேமிப்பு தகவல் உதவுமா????
மேலும் Sleeping mode மற்றும் stand by இரண்டும் ஒன்றுதானா... இல்லை வேறு வேறா????//

Sleeping mode என்பது Hard Diskல் No Spin நிலையினை குறிப்பது. stand byயும் அதே நிலை தான். எந்த இடத்தில் எல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நிறுந்துங்கள்..

ஓவியா
18-09-2006, 06:21 PM
அருமையான தகவல்.

நன்றி விழியன்

இது போல் எத்தனை எத்தனையோ விசயத்தில்
நாம் நமக்கு தெரியாமலே மின்சாரத்தை வீன் செய்கின்றோம்....

கண்மணி
21-09-2006, 06:39 PM
ஸ்லீப் மோட்
1. கிளாக் கை நிறுத்துவது(S2)
2. பிராஸஸர் கோர் வோல்டேஜை நிறுத்துவது (மெமரி வோல்டேஜ் இருக்கும்.. 5V 3.3V 12V இருக்காது)இது ஸ்டேண்ட்பை எனப்படும்(S3)
3. மெமரியை ஹார்ட் டிஸ்க்கில் ஸ்டோர் செய்து விட்டு சிலீப் மோடுக்கு செல்லுதல்.. இது ஹைபர்னேஸன் எனப்படும். இதில் ஸ்டண்ட்பை வோல்டேஜ் மட்டும் இருக்கும்(S4)
4. பவர் சுவிட்ச் ஆஃப்(S5) இடதில் பேட்டரி வோல்டேஜ் மட்டும் இருக்கும்

S4 - நிலையில் LAN வேக்கப் எனேபுள் செய்து விடுங்கள்.. 15 நிமிடம் எந்த ஆக்டிவிடியும் இல்லாமல் இருந்தால் S4 State செல்லுமாறு செட் செய்து விட்டால் பேக்கப்புக்க் பேக்கப்புமாச்சு.. பவரும் மிச்சமாச்சு.. ACPI கம்ப்ளெயிண்ட் சிஸ்டத்தில் இது ஜுஜுபி.. சுண்டைக்காய்.
3. மெம்

paarthiban
21-09-2006, 08:16 PM
உருப்படியான யோசனை சார். நன்றி

அறிஞர்
21-09-2006, 09:01 PM
ஒரு இந்தியனா... இருந்து நல்ல யோசனைகளை தெரிவித்துள்ளீர்...

மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவின் மின்சார வீண் செலவுகள்.... பற்றி கணக்கு போட்டால்.. பல நூற்றாண்டுகளுக்கு ஏழை நாடுகளுக்கு மின்சாரம் அளிக்கலாம்.

எனக்கு தெரிந்து... பல்லாயிரம் விளக்குகள் அமெரிக்காவில் அணைக்கப்படுவதில்லை. எல்லா விளக்குக்களும் 9, 10 வருட கியாராண்டியுடன் வருகின்றன.

இந்தியனின் விழிப்புணர்வு அனைவருக்கும் வரட்டும்.

ஓவியா
22-09-2006, 04:34 PM
ஸ்லீப் மோட்
1. கிளாக் கை நிறுத்துவது(S2)
2. பிராஸஸர் கோர் வோல்டேஜை நிறுத்துவது (மெமரி வோல்டேஜ் இருக்கும்.. 5V 3.3V 12V இருக்காது)இது ஸ்டேண்ட்பை எனப்படும்(S3)
3. மெமரியை ஹார்ட் டிஸ்க்கில் ஸ்டோர் செய்து விட்டு சிலீப் மோடுக்கு செல்லுதல்.. இது ஹைபர்னேஸன் எனப்படும். இதில் ஸ்டண்ட்பை வோல்டேஜ் மட்டும் இருக்கும்(S4)
4. பவர் சுவிட்ச் ஆஃப்(S5) இடதில் பேட்டரி வோல்டேஜ் மட்டும் இருக்கும்

S4 - நிலையில் LAN வேக்கப் எனேபுள் செய்து விடுங்கள்.. 15 நிமிடம் எந்த ஆக்டிவிடியும் இல்லாமல் இருந்தால் S4 State செல்லுமாறு செட் செய்து விட்டால் பேக்கப்புக்க் பேக்கப்புமாச்சு.. பவரும் மிச்சமாச்சு.. ACPI கம்ப்ளெயிண்ட் சிஸ்டத்தில் இது ஜுஜுபி.. சுண்டைக்காய்.
3. மெம்

அருமை.

தெரிந்த விசயங்களை வஞ்சகமில்லாமல் ஜுஜுபியாகவும் சுண்டைக்காய்யாகவும் பகிர்ந்து கொள்கின்ரீர்....

நன்றி

இளந்தமிழ்ச்செல்வன்
09-10-2008, 07:24 PM
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

சூரியன்
10-10-2008, 05:03 AM
நல்ல தகவல் தெரிவித்தமைக்கு நன்றி அண்ணா.

rajatemp
10-10-2008, 07:43 AM
அனைவரும் செய்ய வேண்டிய நல்ல காரியம்

மன்மதன்
10-10-2008, 03:03 PM
மிக அவசியமான தகவல்..பகிர்தலுக்கு நன்றி,,

Keelai Naadaan
10-10-2008, 05:36 PM
தற்போதைய காலத்துக்கு அவசியமான தகவல். நன்றி.

sujan1234
17-12-2008, 03:43 PM
மிக பயனுள்ள தகவல் நன்றி

அக்னி
23-03-2009, 02:51 PM
யாரங்கே... இந்தப் பதிவைக் காப்டனுக்குப் பார்சல் பண்ணுங்கள்...

*****
பயனுள்ள தகவல்தான்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே...

*****
கண்மணியோட பதிவு எனக்குச் புரியவேயில்லை.
என்ன சொல்லியிருக்கிறாங்க என்று யாராச்சும் விளக்கம் தாருங்களேன்...

நேசம்
23-03-2009, 03:51 PM
கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய விசயம்.பகிர்தலுக்கு நன்றி
(அக்னிஜி கேப்டன் படுத்துற பாடு பத்தாது இது வேறாயா)

அறிஞர்
23-03-2009, 04:04 PM
முன்பே இதில் கருத்து சொல்லிவிட்டேன்.
--------
தேர்தல் நேரத்தில் செலவளிக்கப்படும், திருடப்படும் மின்சாரத்தை கணக்கில் எடுத்தால்... இதை விட பல மடங்கு மிச்சமாகுமே..

tkpraj
29-03-2009, 01:26 PM
தேர்தல் நேரத்தில் செலவளிக்கப்படும், திருடப்படும் மின்சாரத்தை கணக்கில் எடுத்தால்... இதை விட பல மடங்கு மிச்சமாகுமே..
அவர்களூக்கு யார் சொல்வது?

ஓவியன்
29-03-2009, 01:38 PM
அவர்களூக்கு யார் சொல்வது?

நாம் தான் - நம் ஒவ்வொரு வாக்கினையும் விலைக்கு போகாமல் பார்த்து, சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதனால்...

விகடன்
29-03-2009, 03:04 PM
நல்லதோர் விடயம்.
நான் கூட சில தினங்கள் கணினியை நிறுத்தாது செல்வதுண்டு. இனிமேல் மேற்படி விடயத்தை கருமேற்க் கொண்டு நாட்டிற்கும் எம்மை வளர்க்கும் கம்பனிக்கும் நன்மை சேர்க்க வேண்டும்.

jk12
29-03-2009, 04:38 PM
பயனுள்ள தகவல்...
பலருக்கும் தெரிந்த தகவலாக இருப்பினும், யாருக்கும் எவ்வளவு மின்சாரம் இதனால் வீனாகிறது என்பது தெரியாது.

இன்னும் பல பயனுள்ள மின்சாரத்தை சேமிக்க குறிப்புகள் இங்கு கொடுத்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

பா.ராஜேஷ்
30-03-2009, 05:06 AM
பயனுள்ள தகவல்தான். இதே போல் கூகிள் தேடு தளத்தின் பக்கத்தை வெள்ளை நிறத்திலிருந்து கருப்பாக மாற்றுவதன் மூலமும் குறிபிட்ட அளவு சேமிப்பு செய்ய முடியும் என்பதால் அந்நிறுவனமும் கருப்பை பின் நிறமாக கொண்டு ஒரு தேடு தளம் அமைத்துள்ளதாகவும் தகவல். மேலும் அறிய http://www.blackle.com/about/ பாருங்கள்!

Mathu
07-04-2009, 07:28 AM
பயனுள்ள தகவல் விழியன், கண்மணி


நாம் தான் - நம் ஒவ்வொரு வாக்கினையும் விலைக்கு போகாமல் பார்த்து, சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதனால்...

சரியானவர்கள தான் ரொம்ப காலமா தேடிக்கொண்டிருக்கிறோம் ஓவியன்
கண்ணுல மாட்டுறாய்ங்க இல்லையே..... :fragend005: :confused:

xavier_raja
31-05-2010, 06:42 AM
எங்கள் அலுவகத்தில் எல்லோரும் தங்கள் கணினியை shutdown செய்துவிட்டுதான் வீட்டிற்கு செல்கிறார்கள்..

mjmrazan
12-10-2010, 11:19 AM
:lachen001:சிரி! மனதா சிரி!

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 06:21 AM
கணினியில் இருக்கும் ஒவ்வொரு இந்தியனும் முடிந்தளவு மின்சாரத்தை சேமிக்க வேண்டும் இது வீட்டிற்க்கும் நாடுக்கும் நன்று இன்றைய சூழலில் இது மிகவும் அவசியம் இதனை நமது தமிழ் மன்றத்தினர் அவசியம் பின் தொடரவேண்டும் .தண்ணீர் அதிகம் இருக்கும் இடத்தில் இருப்பவனை விட தண்ணீருக்காக நாலு இடம் தேடி செல்பவனுக்கு தான் அதன் அருமை தெரியும் .உண்மைதானே நண்பர்களே?
என்றும் நட்புடன்
த.க.ஜெய்

எந்திரன்
27-01-2011, 02:17 PM
தமிழ்நாட்டில் இப்பொழுது நிலவும் மின்வெட்டு சமயத்தில் மிகவும் பயனுள்ள விஷயம்.