PDA

View Full Version : வல்லுனர் குறிப்புகள்



umanath
18-09-2006, 03:56 AM
நண்பர்களே,

இவைகளை கவிதைகள் என்பதைவிட குறிப்புகள் என்றே நான் பெயர் சூட்டுகிறேன். கவிதைக்கான அழகியல் இவற்றில் இருக்கின்றதா என தெரியாத காரணத்தினால்....

வல்லுனர் குறிப்புகள் - 1

புதிய கருவி புதிய மொழி
தேடித்தேடி படிக்கின்றான்
அறிவை விஸ்தரிக்க
தகுதிக்குறிப்பில் குறிப்பிட
அடுத்த மாற்றத்தில்
சில ஆயிரம் பேரம் பேச

--
விழியன்
http://vizhiyan.wordpress.com

மதி
18-09-2006, 04:01 AM
முற்றிலும் உண்மை....!

crisho
18-09-2006, 04:20 AM
ஆமாம் நானும் ஏற்றுக்கொள்கிறேன்!

பென்ஸ்
18-09-2006, 08:16 AM
ஆமாமாம்... நானும் ஒத்து கொள்கிறேன்....:D :D

ஆனா.... நாம் புதியதாய் படிக்க விரும்பும் அனைத்தும் இதில் இருக்கும் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்க்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....

சில நேரம் மனதில் எங்கோ ஒளிந்து இருக்கும் சில கனவுகளை நிறைவேற்றவும்,
சில நேரம் அடுத்தவரை "impress" பண்ணவும்...:rolleyes: :rolleyes:
சிலநேரம் நேரத்தை கடத்த கூட. ஆக்கபூர்வமாய் நாம் பலதும் செய்கிறோம் தானே????

வல்லுனர் குறிப்புகள் தொடரட்டும்...:)

வாழ்த்துகளும்.. பாராட்டும்...

umanath
18-09-2006, 08:26 AM
//ஆனா.... நாம் புதியதாய் படிக்க விரும்பும் அனைத்தும் இதில் இருக்கும் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்க்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை....//

நிச்சயம் உங்கள் கூற்று உண்மை.

நன்றி
விழியன்

pradeepkt
18-09-2006, 09:52 AM
சில ஆயிரம் பேரம் பேச
உண்மையச் சொல்லணும்னா, இதுக்குத்தான் படிச்சிருக்கேன். இதைத் தவிர நான் படித்ததில் 10% என் மனத் திருப்திக்காக இருக்கலாம்.

கண்மணி
18-09-2006, 04:25 PM
நண்பர்களே,

இவைகளை கவிதைகள் என்பதைவிட குறிப்புகள் என்றே நான் பெயர் சூட்டுகிறேன். கவிதைக்கான அழகியல் இவற்றில் இருக்கின்றதா என தெரியாத காரணத்தினால்....

வல்லுனர் குறிப்புகள் - 1

புதிய கருவி புதிய மொழி
தேடித்தேடி படிக்கின்றான்
அறிவை விஸ்தரிக்க
தகுதிக்குறிப்பில் குறிப்பிட
அடுத்த மாற்றத்தில்
சில ஆயிரம் பேரம் பேச

--
விழியன்
http://vizhiyan.wordpress.com

Asswmbly யாம்
C யாம்
பாஸ்கலாம்
கோபாலாம்
ஹெச்டிஎம் எல்
ஏஸ் எம் எல்
எத்தனை எத்தனையோ
இயந்திர மொழிகற்று
தாய்மொழி மறந்து

மாற்றங்கள்
உலக்
உலக இயற்கை
மறதி
மனிதனின் இயற்கை..!!!

umanath
19-09-2006, 07:42 AM
வல்லுனர் குறிப்புகள் - 2

"ஹலோ கேன் ஐ ஹெல்பு யூ"

பதிவேட்டில் செல்லமுத்து
அம்மா வாயால் செல்லா
அப்பாவிற்கு முத்து
சேக்காளிகளுக்கு ஓய்
அழைப்புகள் சுகமாய்
மனதோடு தைத்தது
ஏனோ அலுவலகத்தில் அழைக்கும்
"மார்க் சாமுவேல்"
மனதில் உதைத்தது

-விழியன்
http://vizhiyan.wordpress.com

பென்ஸ்
19-09-2006, 09:17 AM
அட விழியன் நீங்க வேற....
இந்த பதிவை படிச்சு பாருங்க புரியும்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5996

மதி
19-09-2006, 09:37 AM
ஏனோ எனக்குத் தெரிந்து இந்தியாவில் அப்படி யாரும் பேரை மாற்றிவைத்துக்கொள்ளவில்லை..ஒரு சில படங்களில் நகைச்சுவை நடிகரைத் தவிர. ஆனால் வெளிநாடுகளில் முதற் பெயர், இடைப் பெயர், இறுதிப்பெயர் குழப்பத்தில் சிலருடைய பேர் மாறியுள்ளது.. மேற்கொண்டு நம் பேர் படும் பாடு பென்ஸ் குடுத்துள்ள சுட்டியின் மூலமா தெளிவா புரியும்...

paarthiban
19-09-2006, 10:36 AM
நல்ல நல்ல குறிப்புகள் சார்.

umanath
19-09-2006, 11:01 AM
ராஜேஷ் இந்த குறிப்பிட்ட குறிப்பு மென்பொருள் வல்லுனர்களை குறிப்பது அல்ல, பல கால் செண்டர்களில் பெயரினை மாற்றி தான் உழைப்பதாக கேள்வியுற்றேன்.

பென்ஸ்
19-09-2006, 11:26 AM
நண்பன் ஒருவன் இப்படிதாம் சிட்டி வங்கியில் , லோன் பிரிவில்
வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் கொஞ்ச நாளா கடலை போட்டான்....
பிரியா.. பிரியா என்று உருகுவான்...
அவளுக்கு வாடிக்கையாளர் கிடைக்க ரோம்ம்ம்ம்ப உதவினான்.....
கொஞ்ச நாள் கழித்து அவன் அழைக்கும் அதே தொலை பேசியில்,
அதே பெயரில் ... வேறு பெண்....
ஆள் மட்டும் தான் மாறியிருந்தது... இவன் கடலை கூட மாறவில்லை...

(பிரதிப்பு, முடிவை பாத்துகிட்டு, அந்த நண்பன் பெயர் பென்ஸா என்று கேக்க பிடாது)

மதி
19-09-2006, 02:17 PM
நண்பன் ஒருவன் இப்படிதாம் சிட்டி வங்கியில் , லோன் பிரிவில்
வேலை செய்யும் ஒரு பெண்ணிடம் கொஞ்ச நாளா கடலை போட்டான்....
பிரியா.. பிரியா என்று உருகுவான்...
அவளுக்கு வாடிக்கையாளர் கிடைக்க ரோம்ம்ம்ம்ப உதவினான்.....
கொஞ்ச நாள் கழித்து அவன் அழைக்கும் அதே தொலை பேசியில்,
அதே பெயரில் ... வேறு பெண்....
ஆள் மட்டும் தான் மாறியிருந்தது... இவன் கடலை கூட மாறவில்லை...

(பிரதிப்பு, முடிவை பாத்துகிட்டு, அந்த நண்பன் பெயர் பென்ஸா என்று கேக்க பிடாது)
பிரதீப் கேக்காட்டி என்ன..???
இதுக்கு பேர் தான் சுய வாக்குமூலமோ..????

umanath
20-09-2006, 03:29 AM
வல்லுனர் குறிப்புகள் - 3

வண்ணங்கள் நடுவே பானைகள்
வழிந்தோடும் வெண் பொங்கல்
நா இனிக்கும் கரும் கரும்பு
வீதியெங்கும் நேர்த்திக் கோலங்கள்
சூரியனுக்கு படையல்
இலை முழுக்க பொரியல்..
அடுத்த முறையாவது
"ப்ராஜக்ட் டெலிவரி" குறுக்கிடாமல்
ஊருக்கு போகனும்..
திரையகத்தில் போலியாய் ரசித்ததை
நிஜத்தில் சொந்தங்களோடு ரசிக்கனும்.

pradeepkt
20-09-2006, 06:32 AM
ஹ்ம்ம்.. இந்த நினைப்பு எல்லாருக்கும்தானங்க இருக்கு? நீங்க சட்டுனு வெளிய சொல்லிட்டீங்க...

பென்ஸ்
20-09-2006, 06:34 AM
ஹி..ஹி... என்ன சொல்ல வாறிங்க விழியன்...எனக்கு புரியலை.. (சும்மா லுலுவாயிக்கு)

இது என்ன "விழியன் கனவா??".. நடக்குமா????

நல்ல திட்டம் பெரும் கனவையும் நனவாக்கும்யா..!!!!

ஒரு CPA, ரிஸ்க் அனாலிசிஸ், கிரான்ட் சார்ட் எல்லாம் போட்டு திட்டம் தயார் பண்ணுங்க... பொங்கல் என்ன தீபவளிக்காவது ஊருக்கு போவலாம் ;-)

naviraja
20-09-2006, 07:14 AM
http://jwoodard.best.vwh.net/images/look_north_panorama_web.jpg

பென்ஸ்
20-09-2006, 07:31 AM
யப்பு நவிராசா...
முதலில் தமிழில் எழுத பழகுங்கள்...
இரண்டாவது தங்களை பற்றி ஒரு அறிமுகத்தை அறிமுக பகுதியில் போடுங்கள்...

மதி
20-09-2006, 11:32 AM
இது வரைக்கும் இப்படி ஊருக்கு போக முடியாமல் எந்த ப்ராஜக்டும் குறுக்கிடல...ஆனா போற போக்க பாத்தா எல்லாம் நடக்குமோன்னு பயமாருக்கு..ஹ்ம்ம்...பாக்கலாம்...!

இனியவன்
20-09-2006, 01:46 PM
வல்லுநர் குறிப்புகள்
அத்தனையும் வல்லிய குறிப்புகள்.
உண்மையை உரத்துச் சொல்லும்
வரி(லி)கள்.

கண்மணி
21-09-2006, 06:11 PM
வல்லுனர் குறிப்புகள் - 3

வண்ணங்கள் நடுவே பானைகள்
வழிந்தோடும் வெண் பொங்கல்
நா இனிக்கும் கரும் கரும்பு
வீதியெங்கும் நேர்த்திக் கோலங்கள்
சூரியனுக்கு படையல்
இலை முழுக்க பொரியல்..
அடுத்த முறையாவது
"ப்ராஜக்ட் டெலிவரி" குறுக்கிடாமல்
ஊருக்கு போகனும்..
திரையகத்தில் போலியாய் ரசித்ததை
நிஜத்தில் சொந்தங்களோடு ரசிக்கனும்.

பொங்கல் கனவுகள்..
அடிமாட்டு வேலையை
தூக்கி எறிந்து விட்டு..
கிராமத்துக்கு வந்தால்..

1. ஊரே திரண்டு
அதே சினிமாவை
பார்க்கப் போயிருந்தது..

கண்மணி

2. இந்திய தொலைக் காட்சியில்
முதன்முறையாக
புத்தம் புதிய திரைப்படம்
அதே திரைப்படம்..
ஊரே பார்த்துக் கொண்டிருந்தது..

crisho
21-09-2006, 07:40 PM
எந்த தொலைக்காட்சி சானலுக்கு இந்த அடி :confused: :confused:

mgandhi
21-09-2006, 08:01 PM
வல்லுனர் குறிப்புகள் - 3

திரையகத்தில் போலியாய் ரசித்ததை
நிஜத்தில் சொந்தங்களோடு ரசிக்கனும்.

உள்ளத்தின் வேதனையை
வார்த்தையாய் வடித்து இருக்கிறிர்கள்

கண்மணி
22-09-2006, 05:20 PM
எந்த தொலைக்காட்சி சானலுக்கு இந்த அடி :confused: :confused:
அடி தொலைகாட்சி சேனலுக்கு அல்ல..

பொங்கல் ஒரு பெரிய திருவிழா என்று மேனேஜருக்கு கடுக்கா கொடுத்துட்டு ஊருக்குப் போனா.. ஊரே டி.வி.யில் ஊறிக் கிடக்கே.. ரொம்ப நாளா ஊருபக்கம் வராத அண்ணன்கள் வெட்டியாக் கவலைப் படவேணாம்னுதான் எழுதினேன்..

crisho
23-09-2006, 04:35 AM
அடடடா... நா தவறா புரிஞ்சுகிட்டேனே :confused: :confused: :D

ஓவியா
23-09-2006, 01:04 PM
நண்பர்களே,

இவைகளை கவிதைகள் என்பதைவிட குறிப்புகள் என்றே நான் பெயர் சூட்டுகிறேன். கவிதைக்கான அழகியல் இவற்றில் இருக்கின்றதா என தெரியாத காரணத்தினால்....

வல்லுனர் குறிப்புகள் - 1

புதிய கருவி புதிய மொழி
தேடித்தேடி படிக்கின்றான்
அறிவை விஸ்தரிக்க
தகுதிக்குறிப்பில் குறிப்பிட
அடுத்த மாற்றத்தில்
சில ஆயிரம் பேரம் பேச

--
விழியன்
http://vizhiyan.wordpress.com


கவிதை என்றாலே பொய்
பொய் என்றாலே கவிதை......அப்படி இருப்பின்

உண்மைகள் எப்படி கவிதையாகும் நண்பா.....
அதனால் இவை குறிப்புகளாகவே தொடரட்டும்.....வாழ்த்துக்கள்

வல்லுனர் குறிப்புகள் - 1
இழைமறை காய்போல்
உள் மனதில் ஒழிந்துள்ள அழகான உண்மை.....


பின் குறிப்பு
இல்லை இல்லை நான் அப்படி இல்லை
நான் அறிவுக்காக மட்டுமே படிகின்றேன்
என்று மார்தட்டும் சந்ததியினருக்கு ஒரு மூக்குடைப்பு

ஓவியா
23-09-2006, 02:16 PM
வல்லுனர் குறிப்புகள் - 2

"ஹலோ கேன் ஐ ஹெல்பு யூ"

பதிவேட்டில் செல்லமுத்து
அம்மா வாயால் செல்லா
அப்பாவிற்கு முத்து
சேக்காளிகளுக்கு ஓய்
அழைப்புகள் சுகமாய்
மனதோடு தைத்தது
ஏனோ அலுவலகத்தில் அழைக்கும்
"மார்க் சாமுவேல்"
மனதில் உதைத்தது

-விழியன்
http://vizhiyan.wordpress.com


அருமை
பாரட்டுக்கள், தொடரவும்.....

வல்லுனர் குறிப்புகள் - 2
செல்லமுத்துவுக்கு - பாக்கெட்டில் ரூபாய்
"மார்க் சாமுவேல்"க்கு - பாக்கெட்டில் டாலர்
எல்லாம் ஒரு சேஞ்சுக்கு தான்,

அங்கே மனதில் புன்னகை , இங்கே மடியில்

umanath
25-09-2006, 06:09 AM
வல்லுனர் குறிப்புகள் - 4

வேண்டாத வளர்ச்சி

ஆடாமல்
அசையாமல்
ஒட்ட வைத்தாற் போல
ஓரிடத்தில் பச்சென அமர்ந்து
காலால் நடப்பதை மறுத்து
படிக்கட்டுகளை மறந்து
குப்பை உணவால்
ஊரில் வளருது
வித வித அளவில்
சின்னதாகவும் பெரியதாகவும்
வட்ட வட்ட தொப்பைகள்
--

crisho
25-09-2006, 07:18 AM
எல்லாவரின் தற்கால பிரச்சினையை சரியாய் வடித்தீர்!

பென்ஸ்
25-09-2006, 07:33 AM
என்ன விழியன்...
இப்படி "நச்" ந்னு சொல்லி போட்டிங்க...

umanath
25-09-2006, 08:36 AM
உங்களை எதுவும் சொல்ல வரலைன்னு நினைச்சுக்கிற வரைக்கும் எதுவும் இல்லை பென்ஸ்... :-)

கண்மணி
25-09-2006, 04:47 PM
வட்ட வட்டமாய்
தொப்பைகள் மட்டுமா?
வழுக்கைகளும் கூடத்தான்..

umanath
26-09-2006, 04:25 AM
<<வட்ட வட்டமாய்
தொப்பைகள் மட்டுமா?
வழுக்கைகளும் கூடத்தான்..>>

அதுவும் சீக்கிரம் வருதுங்கோ... !!!

umanath
26-09-2006, 04:56 AM
வல்லுனர் குறிப்புகள் - 5

கன்னியை காணும் முன்னரெல்லாம்
தவறாமல் சில வினாடி
கண்ணாடி முன்னாடி

கண்ணன்களை காணும் முன்னரெல்லாம்
யம்மாடி
இத்தனை நேரமா
கண்ணாடி முன்னாடி

கணினி கண்ட பின்னர்
கண் ஆடி ஓடி
கண் முன்னாடி வந்தது
மூக்கு கண்ணாடி

கண்மணி
27-09-2006, 01:26 AM
வல்லுனர் குறிப்புகள் - 5

கன்னியை காணும் முன்னரெல்லாம்
தவறாமல் சில வினாடி
கண்ணாடி முன்னாடி

கண்ணன்களை காணும் முன்னரெல்லாம்
யம்மாடி
இத்தனை நேரமா
கண்ணாடி முன்னாடி

கணினி கண்ட பின்னர்
கண் ஆடி ஓடி
கண் முன்னாடி வந்தது
மூக்கு கண்ணாடி

அன்று
கண்ணாடி தேவை
என்னைப் பார்க்க

இன்று
உன்னைப் பார்க்கவும்..

அப்படித்தானே விழியரே!

umanath
27-09-2006, 04:22 AM
வல்லுனர் குறிப்புகள் - 6
-----------------------------------

நிழல் தேடி
கால் தேயும் சமயம்
"நாயர் சேட்டா..
சூடாக ஒரு டீ ..பன்"
அதுவே டிபன்...
தினம் தினம்
கடனட்டை தேயும் சமயம்
வயிற்றின் கூவலுக்காக..
"ஹலோ..பிட்சா கார்னர்
டூ ஹாட் பிட்சா"

umanath
28-09-2006, 04:26 AM
வல்லுனர் குறிப்புகள் - 7

பணி முடிந்து
பனிக்கு முன்னர் இல்லம் சேரப்பா..
பணிவாய் சொன்னதற்கு
"வீடு போய் என்னப்பா செய்ய?"
உலகத்தையே கணினிக்குள் கண்டாலும்
கணினியே உலகமில்லையே..!!!
விரிந்து கிடக்கிறது வானமும் வாழ்வும்..
--