Log in

View Full Version : சர்க்கரை நோய்!



நிலா
25-04-2003, 11:44 PM
சர்க்கரை நோயாளிகளை சப்பாத்தியை உணவில் சேர்க்கச்
சொல்லுகிறார்கள்.உண்மையில் அரிசியில் இருப்பதை விட கோதுமையில் மாவுச்சத்து கொஞ்சம் தான் குறைவு என்றும், வடக்கில் இருப்பவர்களை
அரிசி சேர்க்கச் சொல்லுவதாகவும் கேள்விப்பட்டேன்!
அதிகம் பழக்கமில்லாத உணவுகளை உதாரணமாக..தென்னிந்தியர்கள் சப்பாத்தியும்,வடயிந்தியர்கள் அரிசியும் சாப்பிடுகையில் உணவின் அளவு குறையும்
எனவே தான் அப்படி கூறுவதாகக் கேள்விப்பட்டேன்!
இது உண்மையா?
விளக்க வேண்டுகிறேன்!

Dr. Agaththiyan
25-04-2003, 11:55 PM
உண்மையே....
சர்க்கரைச்சத்து (sugar) மாவு (starch) வடிவில் இருந்து செரித்து ரத்தத்தில் கலப்பது அரிசி, கோதுமை, கம்பு, சோளம் இவற்றில் ஒரே தன்மைதான்.
மொத்த அளவு குறைப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. பூமிக்கு மேலே விளையும் காய்கறிகள்( அவரை, புடலை, சுரை, கீரை ) அதிகம் சேர்த்து வயிற்றை நிரப்பி, மாவு வகை உணவை தேவையான அளவில் கட்டுப்படுத்த வேண்டும், எத்தனை கலோரி அளவு மாவு வகை (Carbohydrate) என்பது
உங்கள் உடல் உழைப்பின் அளவு பொறுத்தது!
இனிப்பு, பழங்கள், சர்க்கரை - வெல்லம் இவை உடனே செரித்து சட்டென ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டி விடுபவை. நோயாளியின் இயல்பான
இன்சுலின் குறைவு இந்த திடீர் உயர்வை சமாளிக்க இயலாமல் தடுமாறும்.
இந்த வகை உணவை (High Glycemic Index) ஆகவே இவர்கள் இன்னும் கவனமாக
கையாள வேண்டும்.

karikaalan
26-04-2003, 11:49 AM
டாக்டர் அகத்தியன் சொல்வது சரியே. அரிசி சாப்பிட்டதால் குறையொன்றும் இல்லை. அளவு சாப்பாடு போல் உண்டால் நல்லதே.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கடைப்பிடிக்கவேண்டியது வருமாறு:

உணவுக் கட்டுப்பாடு;
உடற்பயிற்சி -- நிச்சயமாக தினசரி 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும்;
மருந்து -- அளவோடு, மருத்துவரின் மேற்பார்வையில்.

இம்மூன்றும் ஒருங்கே கடைப்பிடித்தால், சர்க்கரை நோயை நாம் கட்டுப்படுத்தலாம். இல்லையேல், அது நம்மைக் கட்டுப்படுத்தும்.

===கரிகாலன்

poo
27-04-2003, 05:16 PM
அப்பாக்களுக்கு (இளவயது நோயாளி இன்னும் கண்ணில் சிக்கவில்லை எனக்கு!!) உதவும் தகவல்... நன்றி!!!

இளசு
28-10-2008, 08:48 PM
நிலா நினைவுகள் இன்று அதிகமாய் -

இப்பதிவாலும்
சந்த்ராயன் கவியாலும்..

balakumar
16-01-2009, 12:20 AM
சக்கரை நோயாளிகள் ,
உணவை மருத்துவரி உதவியோடு 5 நேரமாக மாற்றி அமைக்கவும் . அசைவ உணவு வகை கலை நாற்பது வயதுக்கு மேல் அடியோடு நிறத்த வேண்டும்.ஒரு மணி நேரம் நடை பயிற்ச்சி அவசியம் . அஜீரணம் , கண்பார்வை, ரத்த அழுத்தம் ,இதயம் ,ஆகியவற்றை முறைப்படி மருததவரிடம் 3மாதத்திற்கு ஒருமுறை சோதித்து கொள்வது அவசியம். பாலகுமார் , பெங்களூரு

jk12
25-01-2009, 04:13 PM
இந்த இனிப்பானவர்கள் எந்த பழங்கள் (அளவோடு) சாப்பிடலாம்?

உணவில் அதிகமாக 'கசப்பு' சேர்த்துகோண்டால் சர்க்கரை அளவு குறையுமா?

துளசி
10-02-2009, 09:01 PM
சக்கரை நோயாளிகள் வாழைப்பழம் உண்ணக்கூடாது என்றும். சாத்துக்கொடி உண்டு உடனே அதிக அளவு சுடுநீர் குடிக்க வேண்டும் என்றும் சொல்லுவார் என் பாட்டி.

Tamilmagal
17-04-2009, 03:28 PM
இந்த இனிப்பானவர்கள் எந்த பழங்கள் (அளவோடு) சாப்பிடலாம்?

சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையும் அளவோடு சாப்பிடலாம், அளவோடு சாப்பிட்டால் எந்த தீங்கும் வராது!
இருந்தாலும் வாழைப்பழம், பலாப்பழம், திராட்சைப்பழம், உலர்ந்த பழ வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

askubisku
18-04-2009, 05:38 AM
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களால் படும் பாடு கொஞ்ச்ச நஞ்சமல்ல. அநேகர் சர்க்கரை வியாதி இல்லாமலேயே மருந்த்து சாப்பிட்டு சாகின்றனர். ஆ ஊ என்றால் மருந்த்துகளையும் உணவு கட்டுப்பாடுகளையும் குறி அவர்களை ஒரு நிறந்ததர நோயாளியாக்கிவிடுகின்றனர். சர்க்கரை நாய் குறித்த சரியான விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. பயம்தான் வந்துள்ளது. அதனால் பல தவறான கருத்துக்களும் உளது

Tamilmagal
18-04-2009, 11:19 AM
சர்க்கரை நோயாளிகள் மருத்துவர்களால் படும் பாடு கொஞ்ச்ச நஞ்சமல்ல. அநேகர் சர்க்கரை வியாதி இல்லாமலேயே மருந்த்து சாப்பிட்டு சாகின்றனர். ஆ ஊ என்றால் மருந்த்துகளையும் உணவு கட்டுப்பாடுகளையும் குறி அவர்களை ஒரு நிறந்ததர நோயாளியாக்கிவிடுகின்றனர்.

நன்பரே,
பெரும்பாலன நோயாளிகளுக்கு மருந்தும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம் தானே!
தவிர, எல்லாருக்கும் ஏதொ ஒரு கட்டுப்பாடு இருக்கதான் செய்கிறது.


நீரிழிவுநோய் நிறந்தரநோய்....?!

ஓவியா
24-05-2009, 12:25 AM
வணக்கம் தமிழ்மகள்

நீங்கள் மருத்துவ துரையில் இருக்கின்றீர்கள், நீங்களே சொல்லுங்கள்

//''நீரிழிவுநோய் நிறந்தரநோய்....?!//

இதன் விளக்கம் என்ன அக்கா? அதாவது அது நிறந்தரநோயா இல்லையா?

நன்றி.

Tamilmagal
25-05-2009, 04:48 PM
வணக்கம் ஓவியாஅக்கா

நீரிழிவு நோய் நிரந்தரமா இல்லையா என்பது நீரிழிவு நோயின் வகை மற்றும் காரணியைப்பொறுத்தது.
உதாரணமாக இரண்டாம் வகை சர்க்கரை நோய் ஆரம்பநிலையில் இருந்தால் அதனை உணவுக்கட்டுப்பாட்டின்மூலமும், வாழ்க்கைமுறைமாற்றத்தின்மூலமும் மருந்து எதுவும் உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். (ஆனால் நீரிழிவு நோய் ஆரம்பநிலையில் இருப்பது சிலருக்கு தெரிவதில்லை இன்னும் சிலருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரிவதில்லை.)

பெரும்பாலும் நீரிழிவு நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது (என்பதுதான் தற்போதைய நிலமை). ஆனால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியும். நீரிழிவுநோய் உள்ளவர்கள் நீரிழிவு நோயின் தாக்கத்தை தடுக்கவேண்டும், இதற்கு முறையான உணவு, தேவையான உடற்பயிற்சி, ஆரோகியமான வாழ்க்கைமுறை அவசியமாகும்.

ஓவியா
25-05-2009, 10:30 PM
நன்றி தமிழ்மகள், நல்ல கருத்துக்கள்.

ஆனாலும் எனக்கு தெரிந்தவரை இந்த நோய் வரும் முன் காக்க வேண்டும் என்பதே.


(எனக்கில்லை, ஆனால் எங்க தாத்தாக்கு இருந்தவாசி எனக்கும் வயசான வரலாம் என்று படித்தேன் ஆனால் இப்ப நான் சின்ன பொண்னு......பிற்க்காலத்தில் :redface: (கடவுளை வேண்டிக்கொள்கிறேன்... எனக்கு வயசே ஆகக்கூடாது ;) என்று)

Tamilmagal
25-05-2009, 11:33 PM
ஆனாலும் எனக்கு தெரிந்தவரை இந்த நோய் வரும் முன் காக்க வேண்டும் என்பதே.

ஒரு சிறு திருத்தம் இந்த நோய் மட்டுமல்ல, எல்லா நோயையுமே வருமுன் காப்பது சாலச்சிறந்தது.



(எனக்கில்லை, ஆனால் எங்க தாத்தாக்கு இருந்தவாசி எனக்கும் வயசான வரலாம் என்று படித்தேன் ஆனால் இப்ப நான் சின்ன பொண்னு......பிற்க்காலத்தில் :redface: (கடவுளை வேண்டிக்கொள்கிறேன்... எனக்கு வயசே ஆகக்கூடாது ;) என்று)
உங்கள் வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள்.

ஓவியா
25-05-2009, 11:39 PM
ஒரு சிறு திருத்தம் இந்த நோய் மட்டுமல்ல, எல்லா நோயையுமே வருமுன் காப்பது சாலச்சிறந்தது.


உங்கள் வேண்டுகோள் நிறைவேற வாழ்த்துக்கள்.

சரியா சொன்னீர்கள், ஆனாலும் சில நோய்களை வந்தப்பின் குணப்படுத்தலாம்.ஆனால் இந்த சக்கரை வியாதி என்றுமே குணப்படுத்தமுடியாத ஒன்று, ஒருமுறை கனையத்தில் சுரக்கும் இன்சுலின் குறைய தொடங்கினால் அது மீண்டும் நல்ல நிலக்கு வருவதில்லையாம், உடற்பயிற்ச்சி, மற்றும் சரியான உணவு மற்றும் லோ டோசேச் மருந்து எடுத்துதான் அதை கட்டுப்பாட்டில் வைக்கலாமாம்.