PDA

View Full Version : தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்&



mgandhi
16-09-2006, 07:12 PM
இணையதளத்தில் தகவல்பரிமாற்றம் நடைபெறும் முறையின் எதிர்காலநிலையை பிரதிபலிக்கும் விதமாக, தமிழகத் தலைநகர் சென்னையில் செப்டம்பர் மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய புரட்சியாக கருதப்படும் இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறைகளில் பிளாக்கிங் என்கிற நடைமுறை தற்போது அதிவேகமாக பிரபலமடைந்துவருகிறது. இதை தமிழில் வலைப்பதிவுகள் என்றும் வலைப்பூக்கள் என்றும் வலைப்பின்னல்கள் என்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

பத்திரிகைத்துறையின் ஆரம்பகாலகட்டத்தில் கையெழுத்துப்பிரதிகள் நடத்தப்பட்டன. அதாவது தனிமனிதர் ஒருவர் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றிய தனது கருத்துக்களை கையால் எழுதி தனிச்சுற்றுக்கு விடுவது கையெழுத்துப்பிரதியாக விளங்கிவந்தது. ஏறக்குறைய அதேபோன்றதொரு விடயம் தான் இணையத்தில் வலைப்பதிவுகளாக உருவெடுத்திருக்கிறது.

இந்திய அளவில் வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் சென்னையில் தான் அதிகம் என்கிறது புள்ளி விபரங்கள்

அதாவது, இணையத்தில் உலவத்தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவும் தேவையில்லை. பேசுவதில், எழுதுவதில் மற்றவர்களோடு கருத்துப்பரிமாறுவதில் ஆர்வம் இருக்கும் யாரும் இந்த வலைப்பதிவுகளை உருவாக்கலாம்.

ஒருவகையில் இந்த வலைப்பதிவுகள், தனிமனிதர்களின் இணையதள தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றத்திற்கான எதிர்கால தனிமனித ஊடகங்களாக உருவெடுத்து வருகின்றன.

இந்திய அளவில் இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை உருவாக்குபவர்கள் அதிகம்பேர் சென்னையில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

ஓவியா
18-09-2006, 05:39 PM
ஓ அப்படியா விசயம்

தகவல்களுக்கு நன்றிகள்