PDA

View Full Version : நீ அல்ல நான்



meera
16-09-2006, 08:31 AM
உன்னால் முடியும்
முடித்து காட்டு
நானிருக்கிறேன்
உன்னுடன்
உன் உயிர் தோழி
உன்னை ஆதரிக்க
உன்னை அரவணைக்க..
தோல்வியே
வெற்றியின் படிக்கட்டுகள்.
உனது தோல்வி
எனது விழ்ச்சி நண்பா!
உனது வெற்றி
எனது மகிழ்சி நண்பா!
நீ
தோல்வியை கண்டு
துவண்டு போனால்
தோற்பது
நீ
அல்ல
நான்.......

mettilda
16-09-2006, 08:41 AM
தொடருங்கள் மீரா

meera
16-09-2006, 08:48 AM
keep it up meera
நன்றி தோழி,தமிழில் முயற்சி செயுங்கள்..

crisho
16-09-2006, 08:52 AM
சூப்பர் மீரா....
இது உண்மை நண்பி!

இவ் வரிகளைக் கண்டு
ஏங்குகிறேன்
ஒரு தோழிக்காய்
இன்று
பார்ப்போம் எப்போது தான்
கிடைப்பாள் என்று... :D :D :D

mettilda
16-09-2006, 09:23 AM
நன்றி தோழி,தமிழில் முயற்சி செயுங்கள்..
விரைவில் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொள்வேன்

இளசு
17-09-2006, 10:01 PM
நல்ல கவிதை.. நல்ல கருத்து மீரா. பாராட்டுகள்.


பெண்ணின் நட்பு ஆணுக்கு பலம்.
சோதனைகளை- வேதனைகளைத் தாங்கி
சாதனையாய் மாற்றவல்ல வரம்.

அமைந்தவர்கள் அதிர்ஷ்டமானவர்கள்...

பென்ஸ்
18-09-2006, 09:30 AM
நல்ல கவிதை கொடுத்த மீராவுக்கு பாராட்டுகள்....:)

தோழி மட்டுமல்ல, தாய், சகோதரி, காதலி, மனைவி எல்லோரும்
இப்படி இருந்துவிட்டால்... அட அதுதானே நமக்கு தேவை...:D :D

ஆனால் சில நேரம்... சிலர் இப்படி இருப்பதில்லை .. இதை
செய்யாதே.. அதை செய்யாதே என்பது எதனாலோ????

நாம் தோற்றுவிட கூடாது, காயப்பட கூடாது என்று கொஞ்சம்
"ஓவர் ப்ரோட்டட்டீவ்" இருப்பதனாலோ??? :rolleyes: :rolleyes: :rolleyes:

meera
19-09-2006, 09:34 AM
நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் ஓவர் ப்ரோட்டட்டீவ் என்ற பெயரால் உள்ளம் ஊனப்பட்டுவிட கூடாது இல்லயா.
நடக்க முயற்சிக்கும் குழந்தை விழுந்து விடும் என்று பயந்தால் நடப்பது எப்படி
தோல்விக்கு பயந்தால் சாதிப்பது எப்படி
தோல்வி சாதனையாகி
சாதனை சரித்திரம் ஆகும்வரை
முயன்று பார்ப்போம்.............

நாகரா
19-07-2008, 01:03 PM
உன்னால் முடியும்
முடித்து காட்டு
நானிருக்கிறேன்
உன்னுடன்
உன் உயிர் தோழி
உன்னை ஆதரிக்க
உன்னை அரவணைக்க..
தோல்வியே
வெற்றியின் படிக்கட்டுகள்.உனது தோல்வி
எனது விழ்ச்சி நண்பா!
உனது வெற்றி
எனது மகிழ்சி நண்பா!
நீ
தோல்வியை கண்டு
துவண்டு போனால்
தோற்பது
நீ
அல்ல
நான்.......

நானே நீ! நீயே நான்!

உன்னால் எழ முடியும்
எழுந்து காட்டு!
நானிருக்கிறேன்
எப்போதும்
உன்னுடன்
உன் உயிராக
உன்னை ஆதரிக்க
உன்னை அரவணைக்க..
இக வாழ்வின் பல்வேறு பரிமாணங்கள்
பர வாழ்வின் படிக்கட்டுகள்.
நீயாக
இகத்தில் விழுந்திருப்பது
நானே மனிதா!
நானாகப்
பரத்தில் எழுந்திருப்பது
நீயே மனிதா!
விழுவது நானென்றால்
எழுவது நீ!
உயிராம் என் விழுதலால்
மெய்யாய் விழித்தெழு நீ!
உயிர்மெய் ஒருமையாய்
நானே நீ!
நீயே நான்!

கடவுளின் அத்வைத உபதேசம் எழுதத் தூண்டிய உம் நட்புக் கவிக்கு நன்றி மீரா.