PDA

View Full Version : ஒன்றுபடு தமிழா



mgandhi
15-09-2006, 05:34 PM
ஒன்றுபடு தமிழா-நீ
வென்று விடுவாய்-
வெற்றி உனக்கு புதிதல்ல
ஒன்றுபடு தமிழா

உண்டு கொழுத்த-நம்
அரசியல் வாதிகளால்
நண்டு இனம்போல்-நாம்
இனம் மாறிவிட்டது-நீ
ஒன்றுபடு தமிழா-நீ
வென்று விடுவாய்

சொந்த இனமும்-நம்
சொந்த பகையையும்-நீ
தள்ளி வைத்து-நம்
வெற்றி பாதையை நேக்கி-நீ
ஒன்றுபடு தமிழா-நீ
வென்று விடுவாய்

Mano.G.
15-09-2006, 11:52 PM
காலத்திற்கு ஏற்ற கவிதை காந்தி அருமை அருமை

தமிழனே நமது ஒற்றுமையை
உலகுக்கு காட்டு,
நாம் பிரிந்து இருப்பதால்
நாம் ஆளப்படுகிரோம்
நாமே ஆள நாம் ஒன்றுபடுவோம்
நமது திறமையை அடுத்தவன்
சொல்லித் தெரிய வேண்டியதில்லை
மென் பொருள் உலகத்தை
ஆட்டிப்படைக்கும் நாம்
அடுத்து வின்வெளியையும்
ஆட்கொள்வோம்
ஒன்றுபடு தமிழா
ஒன்றுபடு




மனோ.ஜி