PDA

View Full Version : கனவு



crisho
15-09-2006, 06:36 AM
தோல்விகளில்லாத
வெற்றி
சோகமேயில்லாத
மகிழ்ச்சி
முதுமையில்லாத
இளமை
கட்டுப்பாடில்லாத
சுதந்திரம்
சுமைகளேயில்லாத
சுகம்

.........................................
........................................

இக் கவிதை இங்கு நிறைவுறவில்லை....
இம் மன்றத்தின் அன்பு நெஞ்சங்களின்
மனதில் வரும்,
இக் கவியுடன் சேர்க்கத் தக்க
வைரவரிகளை தயவு செய்து
இத்திரியில் பதிக்கவும்.
நன்றி

அறிஞர்
15-09-2006, 01:23 PM
கனவுகளை பற்றிய சிந்தனை அருமை.. மற்றவர்களும் எழுதுவார்கள் என எண்ணுகிறேன்.

meera
16-09-2006, 05:13 AM
கிஷோர் இது எனது கருத்து..

தோல்வியில்லா வெற்றி மகிழ்ச்சியை தராது...
சோகமில்லாத மகிழ்ச்சி நிலைத்திராது........
முதுமை இல்லாத இளமை கனவிலும் நடவாது.............
கட்டுபாடு இல்லாத சுதந்திரம் இனிக்காது..
சுமைகளே இல்லாத சுகம் சுவைக்காது.........
தடை ஒன்று வரும் போது தய்ரியம் தானாய் வருகிறது
துணிச்சல் பிறக்கிறது..
புதிய முயற்சி உருவெடுக்கிறது.......
எதிர்நீச்சல் நிச்சயம் தேவை.......

crisho
16-09-2006, 05:38 AM
மீரா உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்...
ஆனால்


முதுமை இல்லாத இளமை கனவிலும் நடவாது.......
மனிதனை வாழவைத்துக்கொண்டிருப்பது கனவு ஒன்றேயாம்
பலரின் காதல் உண்மையில் நிறைவேறாயினும்
நிறைவேற்றி வைத்தது கனவு ஒன்றேயாம்

உண்மையில் நடவா ஏதொன்றையும் நிறைவேற்றுவது கனவேயாம்
அதுவே கனவின் மகிமையுமாம்!!

என்ன மக்கா நான் சொல்வது சரியா?

கண்மணி
17-09-2006, 09:14 AM
தோல்விகளில்லாத
வெற்றி
சோகமேயில்லாத
மகிழ்ச்சி
முதுமையில்லாத
இளமை
கட்டுப்பாடில்லாத
சுதந்திரம்
சுமைகளேயில்லாத
சுகம்

.........................................
........................................

இக் கவிதை இங்கு நிறைவுறவில்லை....
இம் மன்றத்தின் அன்பு நெஞ்சங்களின்
மனதில் வரும்,
இக் கவியுடன் சேர்க்கத் தக்க
வைரவரிகளை தயவு செய்து
இத்திரியில் பதிக்கவும்.
நன்றி

தோல்விகளில்லாத வெற்றி ??
யாராவது வெல்ல யாராவது தோற்க வேண்டும்..

காதலில் ஜெயிக்க இதயத்தை தோற்க வேண்டும்..
கனவு காண தூங்க வேண்டும். கனவினில் ஜெயிக்க தூக்கத்தை தொலைக்க வேண்டும்...

சோகமேயில்லாதது மகிழ்ச்சி அல்ல.. மகிழ்ச்சி தனியானால் அதுவே சோகத்தில் ஆழ்ந்து விடும்

முதுமையில்லாத இலமையா? முதலில் தலைமுடியில் மை-யில்லாத இளமை இருக்கட்டும்.

கட்டுப்பாடில்லது சுதந்திரம் அல்ல,. வெறும் தந்திரம்

mgandhi
19-09-2006, 06:50 PM
[QUOTE=crisho]தோல்விகளில்லாத
வெற்றி
சோகமேயில்லாத
மகிழ்ச்சி
முதுமையில்லாத
இளமை
கட்டுப்பாடில்லாத
சுதந்திரம்
சுமைகளேயில்லாத
சுகம்

..................................
தோல்வியே வெற்றி படிகள் ஆக்கி
சோகத்தையே மகிழ்ச்சியாக்கி
முதுமையிலும் இளங்கன் போல
கட்டுப்பாடில்லாத சுதந்திரத்துடன்
சுமைகளையே சுகம் என்றுயென்னி-நீ
வாழ்ந்தால் இந்த வையகமே உன்வசமே

mgandhi
19-09-2006, 07:04 PM
[QUOTE=crisho]தோல்விகளில்லாத
வெற்றி
சோகமேயில்லாத
மகிழ்ச்சி
முதுமையில்லாத
இளமை
கட்டுப்பாடில்லாத
சுதந்திரம்
சுமைகளேயில்லாத
சுகம்

தேர்வே இல்லாத
படிப்பு
கடனே இல்லாத
வாழ்க்கை
ஊப்பு நீர் இல்லாத
கடல்
சன்டையே இல்லாத
வாழ்க்கை
மற்றவர்களும் தெடரட்டும்.......

crisho
20-09-2006, 03:58 AM
இதுவும் நல்லா இருக்கே.... காந்தி பாரட்டுக்கள்!