PDA

View Full Version : காதலுக்கு கண்ணில்லை!!!



akilarasu
15-09-2006, 04:52 AM
அன்பே!
காதலுக்கு கண்ணில்லையாம்
யார் சொன்னது
உனைக் காணும்பொழுதெல்லாம்
குருடாகிப் போவது
நான் மட்டுமே
என் காதலல்ல

crisho
15-09-2006, 05:19 AM
:D :D :D :D
அருமையாக வடித்துள்ளீர் ஐயா பாராட்டுக்கள்
மப்புல பாத்தா எதுதான் சரியா தெரியும் :D :D :D :D :D

akilarasu
15-09-2006, 05:35 AM
:D :D :D :D
அருமையாக வடித்துள்ளீர் ஐயா பாராட்டுக்கள்
மப்புல பாத்தா எதுதான் சரியா தெரியும் :D :D :D :D :D
நன்றி கிஷோர்.
ஆமாம் அது காதல் மப்பு

crisho
15-09-2006, 05:40 AM
நன்றி கிஷோர்.
ஆமாம் அது காதல் மப்பு
எல்லா மப்பும் மனுசன குருடனா தா ஆக்குதய்யா... குருடனா தா ஆக்குது ;)

meera
16-09-2006, 04:54 AM
ஓஹோ! காதலுக்கு கண்ணில்லை என்று எல்லோரும் சொல்வது பொய்தானா?

இதுவரை எனக்கு தெரியாமல் போய்விட்டதே!...

அழகான கவிதை......... தொடருங்கள் உங்கள் பணியை........

கண்மணி
17-09-2006, 09:18 AM
அன்பே!
காதலுக்கு கண்ணில்லையாம்
யார் சொன்னது
உனைக் காணும்பொழுதெல்லாம்
குருடாகிப் போவது
நான் மட்டுமே
என் காதலல்ல
உன்னுடைய காதல்!!!
உங்களுடைய காதலாகவில்லையா

அப்படியானால்
உங்கள் காதலிக்கு
கண்ணுண்டா?

உன்னுடைய காத
உங்களுடைய காதலாகட்டும்
அப்போது தெரியும்
காதல் குருடென்று..

leomohan
29-09-2006, 10:03 PM
ஆக காதலுக்கு கண் உண்டு காதலனுக்கு கண் இல்லைன்னு சொல்றீங்க. பலே.

ஓவியா
03-10-2006, 08:05 PM
அரசுவின் கர்ப்பனை நன்று
கிஷொரின் நக்கலும் நன்று....

ஆ ஆ
அரசுவும் கிஷொரும் காதலை படு பயங்கரமா ஆராய்ச்சி பன்னுரப்புலே...

பார்த்து மக்கா யாரவது உங்களுக்கு இலவசமா டாக்டர் பட்டம் கொடுக்க போராங்கோ....