PDA

View Full Version : ஆவிகள் பற்றிக் கண்ணதாசன்மயூ
15-09-2006, 04:46 AM
(1).மொபைல் கோர்ட் நீதிபதிகள்.

உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே குட்டிச் சாத்தான் போன்றவை.

ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து.

ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன.

பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன.

சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம்.

திடீரெண்டுஅவர் விபூதி கொடுப்பாராம்;;;;;;;;, வெறும் கையிலேயே விபூதி வருமாம்

குட்டிச் சாத்தான்கள் மூலமாகவே அப்படி ஊடுருவ முடிகிறது என்று நான் நம்புகிறேன்.

என்னுடைய கனவிலும் அவர் இரண்டு முறை ஊடுருவினார்.

முதல் முறை வந்த கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்திருக்கிறார், நான் கைகளால் ஊர்ந்து அவர் அருகே செல்கிறேன்.

இரண்டாவது கனவில், சத்திய சாயிபாபா அமர்ந்கிருக்கும் கட்டத்துக்குள் ஒரு கரண்ட் என்னை இழுக்கிறது, நான் அதை எதிர்த்துப் போராடுகிறேன். கிருஷ்ணா !; கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது.

சத்திய சாயிபாபா செய்வதாகச் சொல்லப்படும் காரியங்கள் அனைத்துமே, சித்து வேலையாகவே எனக்குத் தோன்றுகின்றன.

இதே போல் பன்றிமலை சவாமிகளைப் பற்றியும் ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன.

அவசை ஒரு நாள் பார்க்கப் போனேன்.

அங்கிருந்த ஒரு மலர் மாலையிலிருந்து ஏழு எட்டு மலர்களை உருவிக் கைக்குள் தேய்த்தார். உடனே அனைத்தும் திருப்பதி அட்சதைகளாக மாறின.

அவர் பாம்பு என்று ஒரு காகிதத்தில் எழுதி வைக்கிறார். அதை நீங்கள் விரலால் தொட்டால் விஷம் ஏறுகின்றது.

நெருப்பு என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் சுடுகிறது.

சந்தனம் என்று எழுதி வைக்கின்றார், தொட்டால் மணக்கின்றது.

ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் அளவு அவர் வல்லுநர் அல்ல.

நீங்கள் ஏதாவது விஷயம் பற்றி ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தரும்படி அவரிடம் கேட்டால் அவர் முருகா என்பார். எங்பிருந்தோ டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் வந்துவிடுகின்றன.

திட்டவட்டமாகக் குட்டிச் சாத்தான் ஏவல் கொண்டவர் என்றே நான் கருதுகிறேன்.

கோவை ஜெயில் ரேடில் 1950 ம் ஆண்டில் நான் கங்கியிருந்தபோது, என்னிடம் ஒரு சாமியார் வந்தர். அவர் இரண்டு ரூபாய்கள்தாம் என்னிடம் கேட்டார், கொடுத்தேன். அவர் ஒரு தாயத்துக் கொடுத்தார். அவர் காகிதத்தில் கெட்டது நடக்கும் என்றும், ஒரு காகிதத்தில் நல்லது நடக்கும் என்றும் எழுதித் தூரத்தில் வைத்தார். நாலடி தூரத்தில் தாயத்தை வைத்தார். தாயத்து ஊர்ந்து சென்று நல்லது நடக்கும என்ற காகிதத்தில் ஏறிற்று.

ஏதோ ஒரு ஆவியை அடக்கி வைத்திருப்பவர் போலிருந்தது அவர் செய்கை.

வீதியிலே வித்தை காட்டுகிறவன். உரு துணிப் பொம்மையின் தலையில் அடித்தால், பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லோருடைய தலையிலும் அடி விழுகிறது. மேலும் அவன் செய்யும் குட்டிச் சாக்கான் வித்தைகளை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்.

மாஜிக் நிபுணர்களும் குட்டிச் சாத்தான்களை அடக்கியாள்பவர்களே.

இந்தச் சாத்தான்களை எதிரியின் மேல் ஏவ முடியும் என்கிறார்கள் சிலர்.

எனக்கு அதில் நம்பிக்கை இல்லை.

சோற்றிலே மலம் வந்து விழுந்தது, வீட்டிலே கல் வீழுந்தது., எல்லாம் குட்டிச் சாத்தான் வேலை என்று சொல்வோர் உண்டு. இவை எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது.

ஆனால், ஆவிகள் உலவுவதும், அவையே குட்டிச் சாத்தான்கள் என்று அழைக்கப்படுவதும், அசைக்க முடியாத உண்மை.

இந்த ஆவிகளை எப்படிச் சிலர் அடக்கியாளுகின்றனர் என்ற வித்தைதான் எனக்குத் தெரியவில்லை.

குட்டிச் சாத்தான்கள் நல்லவர்களுக்கு வழித் துணையாக விளங்குகின்றன.

கீயவர்களுக்குத் தீங்கு செய்கின்றன.

இந்தச் சாத்தான்கள் வயல்களைக் காவல் செய்கின்றன.

இறைவனிடமும் மனிதனிடமும் பேசுகின்றன.

இரு குறிப்பிட்ட காலத்தில், இவை மீண்டும் பிறக்கின்றன.

மனிதர்களாகவோ, மிருகங்கடாகவோ தோன்றுகின்றன.

ஏழைகளுக்கு உணவு வழங்குகிறவாகள் வீட்டையும், பிறர் கஷ்டத்தில் உதவுகின்றவர்கள் வீட்டையும், இவை காவல் காக்கின்றன.

உண்மையில், இவை மொபைல் கோட் நீதிபதிகளாகவே விளங்குகின்றன.மூலம் : கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்

இதில் என்னுடைய எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை. அனைத்தும் கண்ணதாசன் கூறியவை.

தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

நான் இப்படி என் நண்பனிடம் அலுத்துக்கொண்டபோது அவன் கூறினான். இந்துக்களை வேற்று மதக்காரர் மதமாற்றம் செய்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை. சுத்தி சுத்தி சுப்பற்ற கொட்டிலுக்குத்தான் வரவேணும் என்றது போல அவயள் எப்பிடியும் இந்துவாத்தானே இருக்கப்போகினம். என்னிடம் அப்போது அவனுக்கு கொடுக்க பதில் இருக்கவில்லை உங்களுக்கு இருக்கின்றதா? அப்போ என்ன தயக்கம் பகிர்ந்து கொள்ளுங்கள்...........

ஓவியா
18-09-2006, 05:34 PM
தகவளுக்கு நன்றி

மக்கா மயூ,

உண்மையிலே ஆவிகளும், குட்டிச் சாத்தான்களும் இருகின்றனவா...

மயூ
19-09-2006, 02:45 AM
தகவளுக்கு நன்றி

மக்கா மயூ,

உண்மையிலே ஆவிகளும், குட்டிச் சாத்தான்களும் இருகின்றனவா...
ம்... யாருக்குத் தெரியும்??? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்....

தங்கவேல்
22-09-2006, 10:40 AM
ஆவிகள் - உண்மையில் ஓவியம் போல் தான் இருப்பார்கள் என்று யாரோ சொல்ல கேள்வி. சத்தியமா ஓவியாவை சொல்ல வில்லை

ஓவியா
22-09-2006, 04:51 PM
ஆவிகள் - உண்மையில் ஓவியம் போல் தான் இருப்பார்கள் என்று யாரோ சொல்ல கேள்வி. சத்தியமா ஓவியாவை சொல்ல வில்லைஅப்படியா....செய்தி

இருங்க நம்ப மசாகி ஆவிகூட்டத்துலே உங்களை போட்டு கொடுக்கறேன்

gragavan
22-09-2006, 05:23 PM
ஆவிகள் இருக்கின்றனவா என்பதை விட அவை ஆண்டவனிற்கு உட்பட்டவையே எனத் தெளிய வேண்டும். அப்படி ஆண்டவனுக்கு உட்பட்டவை எனில் ஆண்டவனைத் தொழுதாலே போதும்.

ஆனாலும் ஆண்டவன் விளையாட்டில் நாம் அறிய முடியாதவை எக்கச்சக்கம்.

ஓவியா
22-09-2006, 05:56 PM
ஆவிகள் இருக்கின்றனவா என்பதை விட அவை ஆண்டவனிற்கு உட்பட்டவையே எனத் தெளிய வேண்டும். அப்படி ஆண்டவனுக்கு உட்பட்டவை எனில் ஆண்டவனைத் தொழுதாலே போதும்.

ஆனாலும் ஆண்டவன் விளையாட்டில் நாம் அறிய முடியாதவை எக்கச்சக்கம்.


யாரவது,
ஒரு மாலை போடுங்கப்பா ஞானானந்தா ராகவனுக்கு.

நச்சுனு ஒருவார்த்தை. எத்தனை உண்மைகள்.

தங்கவேல்
25-09-2006, 12:14 PM
ஒரு செயல் நடக்க உடம்பின் அத்தனை பாகங்களும் உதவி செய்ய வேண்டும். ஆவிக்கு எத்தனை மூளை இருக்கு. ரத்தம் எங்கே ?? எப்படி சிந்திக்கும் ? காற்றலைகளில் சிந்திக்கும் திறனை உருவாக்க முடியுமா ?? அதற்க்கு ஏதாவது ஒன்று உதவி செய்யவேண்டும்.. என்னையா.. சின்ன விசயத்தை கூட புரிந்து கொள்ளாமல் இப்படி இருக்கின்றீர்கள்...ஆவியாவது ஒன்னாவது ??? கண்ணதாசன் சொல்லிவிட்டார் என்பதர்க்காக நம் மூளையை அவரின் எழுத்துக்களிடம் அடகு வைக்க வேண்டுமா ??? கொஞ்சமாவது சிந்தியுங்கள் நண்பர்களே???

ஓவியா அக்கா நீங்க எங்கே வேண்டுமானாலும் சொல்லுங்க ?? என்னை பொருத்தவரை ஆவி என்பது........???? சதியாமா நீங்க நினைப்பதை நான் சொல்ல வரவில்லை...

சுட்டிபையன்
07-05-2007, 01:47 PM
தகவளுக்கு நன்றி

மக்கா மயூ,

உண்மையிலே ஆவிகளும், குட்டிச் சாத்தான்களும் இருகின்றனவா...

மயூவ பார்த்த பிறகும் இந்த கேள்வி கேக்க வேண்டுமா அக்கா..........?:icon_shades: :smartass:

மயூ
07-05-2007, 02:05 PM
மயூவ பார்த்த பிறகும் இந்த கேள்வி கேக்க வேண்டுமா அக்கா..........?:icon_shades: :smartass:
பெரிசா.. ஜோக்கு அடிச்சிட்டாப்போல!!!:spudnikbackflip:

சுட்டிபையன்
07-05-2007, 02:08 PM
பெரிசா.. ஜோக்கு அடிச்சிட்டாப்போல!!!:spudnikbackflip:

ஐயோ மயூ சூப்பர் ஜோக் அடிச்சுப்பிட்டாரு எல்லாரும் ஜோர கை தட்டி விடுங்க:icon_03: :aktion033: :music-smiley-012: :icon_dance: :music-smiley-010: :icon_clap: :icon_shades: :icon_dance: :icon_tongue:

lolluvathiyar
07-05-2007, 03:58 PM
ஆவி இருக்கு என்று பயந்து தெருவில்
போனால் ஆவி உன்னை துரத்தலாம்

ஆவி இல்லை என்று தைரியமாக தெருவில்
போனால் ஆவியை நீ துரத்தலாம்

இந்த புதுமொழியை சொன்ன மகான் யாரென்று தெரியுமா?
அவர் தான்
லொள்ளு வாத்தியார்

விசுவாமித்ரன்
07-05-2007, 04:08 PM
ஆவிகள் இருக்கின்றனவா என்பதை விட அவை ஆண்டவனிற்கு உட்பட்டவையே எனத் தெளிய வேண்டும். அப்படி ஆண்டவனுக்கு உட்பட்டவை எனில் ஆண்டவனைத் தொழுதாலே போதும்.

ஆனாலும் ஆண்டவன் விளையாட்டில் நாம் அறிய முடியாதவை எக்கச்சக்கம்.

[கிருஷ்ணா !; கிருஷ்ணா !; என்று சத்தமிடுகிறேன். அந்தக் கரண்ட் என்னை விட்டுவிடுகிறது]

கண்ணதாசனே இதயும் சொல்லி இருக்கிரார்

சக்தி
07-05-2007, 04:11 PM
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நீராவிதான் இருக்கு

shivasevagan
23-06-2007, 04:48 AM
ஆவிகள் உண்டு! மேலை நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்.

namsec
23-06-2007, 07:32 AM
ஆவிகள் உண்டு! மேலை நாட்டில் இது குறித்து ஆராய்ச்சி செய்து ஆதார பூர்வமாக நிருபித்து உள்ளனர்.

ஆவிகளும், குட்டிசாத்தான்களும் இருப்பது உண்மை என் தந்தையிடம் பேய் பிடித்துவிட்டது மந்தரித்து விடுங்கள் என்று பல நபர்கள் வந்து மந்தரித்து சென்றதுண்டு, என் தந்தை பேய் ஒட்டியதை நான் கண்டுள்ளேன். குட்டிச்சாத்தான் எப்படி வசியம் செய்வது என்ற புத்தகம் என்னிடம் உள்ளது ஆனால் ஒன்று அப்படி நாம் சென்றுவிட்டால் குடும்ப வாழ்க்கையை இழக்கவேண்டும். நல்லது செய்தால் சரி கெட்டது செய்தால் ஒரு நாள் கண்டிப்பாக அதுவே திரும்பி செய்தவரை அழித்துவிடும்.

சாமியார்களுக்கு குடும்பம் இருக்காது ஏன் என்றால் பாவங்கள் அவரின் வாரிசுகளை தொடரும்.

இதை நாம் சொன்னால் யாரும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் ஏன் என்றால் உள்ளூர் சரக்கு விலை போகது அதுபோல்தான்

அப்படி பட்டவர்களுக்காக : http://www.ghostresearch.org/ghostpics/fake/frauds.html

namsec
23-06-2007, 07:50 AM
வெளி நாட்டில் ஆவிகளின் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படம்http://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_moonville_ghost_800.jpghttp://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_Ghost.jpghttp://www.tamilmantram.com/photogal/images/1462/medium/1_funeral_ghost.jpg

namsec
23-06-2007, 08:00 AM
ஆவிகள் இருப்பது உண்மைதான்
நான் பேயை நேரில் பார்த்தேன்
நடிகை மும்தாஜ் சொல்கிறார்


சென்னை, ஜூன்.22

ஆவிகள் இருப்பது உண்மைதான். நான் லண்டன் போய் இருந்தபோது, ஒரு பேயை நேரில் பார்த்தேன் என்று நடிகை மும்தாஜ் கூறினார்.
பேய் படம்
மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் டைரக்டர் விஜய டி.ராஜேந்தரால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், மும்தாஜ். இவர், மும்பையை சேர்ந்தவர்.
குஷி, மலபார் போலீஸ், பட்ஜெட் பத்மனாபன் உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இப்போது அவர், திக்...திக்... என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இது, ஒரு திகில் படம் ஆகும். ஆவி கதை. இந்த படத்தில், மும்தாஜ் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார்.
பேட்டி
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது.
மும்தாஜுடன், பாக்யராஜின் மகள் சரண்யா, புதுமுகம் தருண்பாலா ஆகியோர் நடித்த காட்சிகள் படமாகி வருகின்றன.
படப்பிடிப்பு இடைவேளையில், நடிகை மும்தாஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பேய் படத்தில் நடிக்கும் நீங்கள் பேயை நேரில் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து,மும்தாஜ் கூறியதாவது:&
லண்டன் பேய்
நான் ஒரு கலை நிகழ்ச்சிக்காக லண்டன் போய் இருந்தபோது, அங்குள்ள நீத்ரோ என்ற ஓட்டலில் தங்கியிருந்தேன். இரவில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தேன். திடீர் என்று எனக்கு விழிப்பு வந்தது.
என் தலைக்கு பின்னால் யாரோ நிற்பது போல் உணர்ந்தேன். திரும்பி பார்த்தால், வெள்ளையாக ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது. குலை நடுங்கிப்போனேன். என் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. பயத்தில், வார்த்தைகள் வெளிவரவில்லை.
அது, பேய்தான் என்பது உறுதியாகி விட்டது. ஆனால் ஆண் பேயா, பெண் பேயா? என்று தெரியவில்லை. என்னை அது ஒன்றும் செய்யவில்லை. நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன். மீண்டும் மெதுவாக கண் திறந்து பார்த்தபோது, அந்த உருவத்தை காணவில்லை.
காய்ச்சல்
மறுநாள் எனக்கு பயங்கர காய்ச்சல் வந்து விட்டது. உடனடியாக அந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு, வேறு ஓட்டலுக்கு போய்விட்டேன். என் வாழ்க்கையில், பேயை நேரில் பார்த்த முதல் அனுபவம் அதுதான்.
இவ்வாறு நடிகை மும்தாஜ் கூறினார்.


நன்றி : தினத்தந்தி 22/6/2007

இதயம்
23-06-2007, 08:07 AM
ஆவிகள் இருப்பது உண்மைதான்
நான் பேயை நேரில் பார்த்தேன்
நடிகை மும்தாஜ் சொல்கிறார்

அப்படியா..? மும்தாஜ் சொன்னாரா..? மும்தாஜ் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும்..!! தமிழ்நாட்டிற்கு கட்டிப்புடி, கட்டிப்புடிடா என்று கலாச்சாரம் கட்டிப்பிடித்தவர்.. மன்னிக்கவும்... கற்றுக்கொடுத்தவர் அல்லவா..? அவர் சொன்னால் சரி தான்..!!

ஓவியா
23-06-2007, 01:39 PM
என தோழி 3 வருடம் குட்டிச்சாத்தானுடன் வாழ்ந்தாதாக என்னிடம் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்தாள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

நான் பேயை பார்த்ததில்லை, இருப்பினும் சீன பாசை, சக்காய் என்ற ஆதிவாசிகளி காட்டு பாசை மற்றும் ஆங்கில பாசை தெரியாத என் அத்தை என்னிடம் ஆங்கிலத்தில் பேய் பிடித்த பொழுது பேசினார்கள். மற்ற மொழிகளிலும் பொளந்து கட்டினார்......அது எப்படி என்று இன்றும் எனக்கு புரியாத புதிர்.

ஜோய்ஸ்
23-06-2007, 02:14 PM
ஆம்,ஆவிகள் உலகமென்ரொரு உலகமே இருக்கிறது.பேய் ஆவி,குட்டிச் சாத்தான்,பிசாசு என்பதெல்லாம் உண்மைதான்.

அதை பற்றி நிறய அறிய வேண்டுமெனில், நீங்கள் தமிழகத்தில் விழுப்புரம் அருகிலுள்ள விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்பவர் ஆசிரியராக உள்ள பேசும் ஆவிகள் என்ற மாத இதழை பாருங்கள்.இவை சம்பத்தப்பட்ட அணைத்திர்க்கும் நிச்சயம் விடை காண்பீர்கள்.

மயூ
23-06-2007, 02:48 PM
அப்போ.... ஆள வுடுங்கப்பா நான் ஓடிப் போயிடுறன்..!!!

namsec
23-06-2007, 02:56 PM
அப்போ.... ஆள வுடுங்கப்பா நான் ஓடிப் போயிடுறன்..!!!

தெரிந்தோ தெரியாமலோ திரியை தொடங்கிவிட்டீர் இனி உங்களை விடாது கருப்பு

இதயம்
24-06-2007, 05:45 AM
என தோழி 3 வருடம் குட்டிச்சாத்தானுடன் வாழ்ந்தாதாக என்னிடம் கோவிலில் சூடம் அடித்து சத்தியம் செய்தாள். என்னால் நம்ப முடியவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

இதற்கே இப்படி சொல்கிறீர்களே, என் நண்பர்கள் பலர் 10, 15 வருடங்களாக பிசாசுகளோடும், குட்டிச்சாத்தான்களோடும் தான் குடும்பம் நடத்திவருகிறார்களாம்..!! இதற்கு என்ன சொல்கிறீர்கள்..??

சூரியன்
24-06-2007, 05:59 AM
நான் இதுவரை ஆவிகளையோ,பேயையோ பர்த்ததில்லை.பார்த்தால் நிச்சயமாக சொல்கிறேன்..

ஓவியா
24-06-2007, 04:00 PM
இதற்கே இப்படி சொல்கிறீர்களே, என் நண்பர்கள் பலர் 10, 15 வருடங்களாக பிசாசுகளோடும், குட்டிச்சாத்தான்களோடும் தான் குடும்பம் நடத்திவருகிறார்களாம்..!! இதற்கு என்ன சொல்கிறீர்கள்..??

ஒரு தாத்தா இறக்கும் பொழுது 92 வயது, அவரும் இப்படிதான் சொல்லுவார் 65 வருமாக ஒரு நல்ல பே......யோட வாழ்ந்து வருகிறென் என்று...


ஒரு விசயம் எல்லாம் பன்மையிலே இருக்கே!!! :grin:

namsec
24-06-2007, 04:04 PM
ஒரு தாத்தா இறக்கும் பொழுது 92 வயது, அவரும் இப்படிதான் சொல்லுவார் 65 வருமாக ஒரு நல்ல பே......யோட வாழ்ந்து வருகிறென் என்று...


ஒரு விசயம் எல்லாம் பன்மையிலே இருக்கே!!! :grin:

சகோதரியே உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா ஏன் என்றால் இதைபார்த்துவிட்டு உங்கள் கணவரும் அப்படி சொல்லபோகிறார்

ஓவியா
24-06-2007, 04:16 PM
இன்னுமில்லையே :sport-smiley-002:

அதான் தைரியம் தலைவிரித்தாடுகிறது. :medium-smiley-080: :medium-smiley-080:

namsec
24-06-2007, 04:22 PM
இன்னுமில்லையே :sport-smiley-002:

அதான் தைரியம் தலைவிரித்தாடுகிறது. :medium-smiley-080: :medium-smiley-080:

யார் அந்த பாவப்பட்ட மனிதரோ (சும்மா விளையாட்டுக்கு)

தமிழ்
13-07-2007, 06:53 AM
தம்மை கடவுளாக மக்கள் முன் அடையாளப்படுத்துபவர்கள் பற்றி எனக்கும் அவ்வளவு நம்பிக்கை இல்லை ஆனால் பலர் இப்படியானவர்களை நம்பியே தீருவோம் என்று அலைகின்றனர். இலங்கையில் இருந்து கூட பெட்டி கட்டிக்கொண்டு வருவார்கள். இதில் பிரபல சிங்கள அரசியல் வாதிகள் கூட அடக்கம் என்பதுதான் நகைப்பான விடையம்.

தங்களுடைய இந்தக் கருத்தை நான் வறவேற்கிறேன். கடவுளைத்தொடர்பு கொள்ளவுமா இந்த புரோக்கர்கள் தேவைப்படுகிறார்கள்?
எப்போது திருந்தும் இந்த மானுடம்?

lolluvathiyar
13-07-2007, 07:01 AM
கடவுளைத்தொடர்பு கொள்ளவுமா இந்த புரோக்கர்கள் தேவைப்படுகிறார்கள்?
எப்போது திருந்தும் இந்த மானுடம்?

மானுடம் திருந்தினால் இந்த உலகில் எந்த தொழிலும் நடத்த முடியாது, நடக்காது, விவசாயம் தவிர மீதி தொழில்கள் தேவை இல்லாததாகி விடும்