PDA

View Full Version : ஏன் யாசிக்கிறாய்?



crisho
13-09-2006, 07:49 AM
என் மனதில் இடம் பிடித்தாய்
என் நட்பை காதல் என்றாய்
என் வாழ்வில் நீ புகுந்தாய்
எனக்கு நீ அத்தியவசியமானாய்
இப்போது ஏன் என்னிடம் வந்து
மறக்கச் சொல்லி யாசிக்கிறாய்?

meera
13-09-2006, 09:16 AM
அழகான கவிதை. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். மன்றத்தின் சார்பாக வரவேற்க்கிறேன்.

crisho
13-09-2006, 09:28 AM
நன்றி மீரா....

இன்னும் பயிற்சி தேவை என்பதை நான் அறிவேன்!

அன்பு உறவுகள் தயவு செய்து சகித்துக் கொள்ளவும்! :D :D :D

ஓவியா
13-09-2006, 03:01 PM
சிறு வயதில் பல முறை விழுந்த பின்புதான்,
நடையே வருது........இப்ப நடையா நடக்களையா....:D

அதுபோல்
இப்படியெல்லாம், நமக்கே சிரிப்பு வர்ர மாதிரி எழுதனாதான்...:D
எதிகாலத்தில் கவிஞனாக முடியும்.....:D

வாழ்த்துக்கள்....

தயங்காமல் தொடரவும்

இனியவன்
13-09-2006, 03:41 PM
கி(ஷோ)ர் கவிதை ஜோர்.

crisho
14-09-2006, 04:28 AM
உங்கள் அனைவரின் சகிப்புத்தன்மை உன்மையிலேயே மெச்சத்தக்கது!

அன்பு உறவுகளின் ஆதரவிற்கு நன்றிகள் பற்பல.... ;)

அறிஞர்
14-09-2006, 02:04 PM
உங்கள் அனைவரின் சகிப்புத்தன்மை உன்மையிலேயே மெச்சத்தக்கது!

அன்பு உறவுகளின் ஆதரவிற்கு நன்றிகள் பற்பல.... ;) குழந்தை நடக்க பழகும்போது.... சிரிப்பவன்.... மனிதனாக இருக்கமாட்டான்.

உங்களின் வளர்ந்த பெரிய மனிதனாக்கும் வரை எங்கள் ஆதரவு தொடரும்.

அறிஞர்
14-09-2006, 02:10 PM
என் மனதில் இடம் பிடித்தாய்
என் நட்பை காதல் என்றாய்
என் வாழ்வில் நீ புகுந்தாய்
எனக்கு நீ அத்தியவசியமானாய்
இப்போது ஏன் என்னிடம் வந்து
மறக்கச் சொல்லி யாசிக்கிறாய்?
புகும்போது இன்பம்
போகும்போது துன்பம்
இதுதான் காதலடா!!!!!

crisho
15-09-2006, 04:28 AM
அனுபவித்தேன் ஐயா இன்னும் வலிக்கிறது

crisho
15-09-2006, 08:46 AM
குழந்தை நடக்க பழகும்போது.... சிரிப்பவன்.... மனிதனாக இருக்கமாட்டான்.

உங்களின் வளர்ந்த பெரிய மனிதனாக்கும் வரை எங்கள் ஆதரவு தொடரும்.

தங்கள் உதவும் உள்ளத்துக்கும்
கைவிடப்பட மாட்டேன் எனும் உறுதி மொழிக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், நன்றிகளும் ஐயா!

"Lollu" senthil
15-09-2006, 09:08 AM
காறெனும் காதலில்...
திறந்த புத்தகமாய் நான்...
மூடிய புத்தகமாய் நீ...

பென்ஸ்
15-09-2006, 11:41 AM
செந்தில்...
சில கவிதைகளுக்கு விமர்சனம் தேவையில்லை... அந்த வரிசையில் இந்த கவிதையும்...
எழுதிய உங்களுக்கு பாராட்டுகளும்...