PDA

View Full Version : மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு



mgandhi
12-09-2006, 06:58 PM
மும்பை: நாட்டையே உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், நிழல் உலக தாதா டைகர் மேமன் குடும்பத்தினர் மீதான தீர்ப்பு மட்டும் நேற்று வழங்கப்பட்டது.

இதில், மேமன் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புக்கான சதியில் ஈடுபட்டது, சதியில் ஈடுபடும்படி பலரை துїண்டி விட்டது ஆகிய குற்றங்களை இவர்கள் செய்துள்ளனர். அதே நேரத்தில் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற மூன்று பேர், விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பு, பகுதி பகுதியாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளதால், நடிகர் சஞ்சய் தத் தப்புவாரா என்பது தெரிய ஒரு மாதமாகும் என கூறப்படுகிறது. அயோத்தியில் 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவியது. இதன் தொடர்ச்சியாக, மும்பையில் 1993 மார்ச் 12ம் தேதி தொடர்ச்சியாக 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. நாட்டையே உலுக்கிய இந்த கோர சம்பவத்தில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 700 பேர் படுகாயம் அடைந்தனர். ரூ.27 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், முகமது தோசா ஆகியோரின் உதவியுடன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இந்த கொடுஞ்செயலை நிறைவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 1993 நவம்பர் 4ம் தேதி, ஒன்பதாயிரத்து 392 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை சி.பி.ஐ., தாக்கல் செய்தது. தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உட்பட 189 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நிழல் உலக தாதா அபு சலீம் உட்பட பல முக்கிய பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. மும்பை ஆர்தர் ரோடு சிறையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு தடா கோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடந்தது. கடந்த 1995 ஜூன் 30ம் தேதி விசாரணை துவங்கியது. கடும் பாதுகாப்புக்கு நடுவே, 2003ம் ஆண்டு வரை விசாரணை நடந்து முடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் டைகர் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேரும் அடங்குவர். டைகர் மேமன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவரது தந்தை அப்துல் ரசாக் மேமன் வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே இறந்து விட்டார்.

இந்த வழக்கில் 686 பேர் சாட்சியம் அளித்தனர். அவர்கள் கூறிய சாட்சியங்கள், 13 ஆயிரம் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டன. இந்திய வரலாற்றில், இந்த அளவுக்கு மிகப்பெரிய வழக்கு விசாரணை நடந்தது இதுவே முதல்முறை. இந்த வழக்கின் தீர்ப்பை, கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி நீதிபதி கோடே அளிப்பதாக இருந்தது. ஆனால், அன்றைய தினம் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு செப்டம்பர் 12ம் தேதி( நேற்று) அளிக்கப்படும் என்று நீதிபதி கோடே அறிவித்தார். இதையடுத்து, மும்பையில் நேற்று கடும் பாதுகாப்பு போடப்பட்டது. தடா கோர்ட் உள்ள ஆர்தர் ரோடு சிறை பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள், ஒருவர் பின் ஒருவராக கோர்ட்டுக்கு வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் குவிந்ததால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோர்ட்டுக்கு வந்த நீதிபதி கோடே, இந்த வழக்கில் பகுதி பகுதியாக தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, டைகர் மேமன் குடும்பத்தினர் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. டைகர் மேமனின் சகோதரர்கள் யாகூப், இசா, யூசுப், சுலைமானின் மனைவி ரூபினா ஆகிய நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். டைகர் மேமனின் தாய் ஹனிபா, மைத்துனி ராஹின், சகோதரர் சுலைமான் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால், மூன்று பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி கோடே அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கான சதியில் ஈடுபட்டது, இந்த சதியில் ஈடுபடும்படி மற்றவர்களை துїண்டி விட்டது ஆகிய குற்றங்களைச் செய்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட பின், கோர்ட்டில் இருந்து நடிகர் சஞ்சய் சத் வெளியேறினார். தொடர்ந்து குற்றவாளிகள் மீதான தண்டனையை இறுதி செய்ய, வக்கீல்களின் வாதம் நேற்று பிற்பகல் நடக்கும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த வாதம் இன்று நடக்கும் என்று நீதிபதி கோடே தெரிவித்தார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பு, பல பகுதிகளாக வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளதால், நடிகர் சஞ்சய் தத் தப்புவாரா என்பது தெரிய இன்னும் ஒரு மாதமாகலாம் என கூறப்படுகிறது. கோர்ட்டில் டைகர் தம்பி ஆவேசம்: மும்பை தடா கோர்ட்டில் டைகர் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த யாகூப், யூசுப், இசா, ரூபினா ஆகிய நான்கு பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கோடே அறிவித்த போது, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நான்கு பேரில் ரூபினா என்பவர் டைகர் மேமனின் தம்பியான சுலைமானின் மனைவி. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நான்கு பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார். இதற்கு யாகூப், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பெண் குற்றவாளியான ரூபினா சரண் அடைய, ஒரு வாரம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். குழந்தைகளை பராமரிப்பு தொடர்பாக சில பணிகளை, அவர் செய்ய வேண்டும் என்று யாகூப் கூறினார். இந்த கோரிக்கையை நீதிபதி உடனடியாக நிராகரித்தார். இதனால் கோபம் அடைந்த யாகூப், ""கடந்த 13 ஆண்டுகளாக நாங்களும் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். அப்பாவிகளான எங்களை, பயங்கரவாதிகள் என்றே முத்திரை குத்தி வருகிறீர்கள். இனிமேல் எங்களுக்கு வக்கீல் யாரும் தேவையில்லை. யாருடைய பாதுகாப்பையும் நாங்கள் கோர மாட்டோம்,'' என்று ஆவேசத்துடன் கூறினார். அவரை உடனடியாக கோர்ட்டில் இருந்து வெளியேற்றும்படி நீதிபதி கோடே உத்தரவு பிறப்பித்தார்.

மேமன் குடும்பத்தினர் சிக்கியது எப்படி?: மும்பையில் 1993 மார்ச் 12ம் தேதி அடுத்தடுத்து 13 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுகள் அம்பாசிடர் கார், மாருதி வேன்கள், மாருதி கார்கள், ஸ்கூட்டர்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டு, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. இந்த வாகனங்களில் குண்டுகள் பொருத்தும் பணி, மும்பையில் மாகிம் பகுதியில் உள்ள மேமன் வீட்டில் தான் நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் சி.பி.ஐ.,யிடம் சிக்கின. மேலும், இந்த வாகனங்களை முழு பணம் கொடுத்து டைகர் மேமன் தான் வாங்கியுள்ளார். இந்த பணியில் அவரது குடும்பத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். குண்டு வெடிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன், தனது குடும்பத்தினரை இரண்டு பிரிவாக துபாய்க்கு டைகர் மேமன் அனுப்பினார். மேலும், குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன், அவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். குண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தயார் செய்ததுடன், சில இடங்களில் நேரடியாக ஒரு குழு சென்று குண்டுகளை வீச வேண்டும் என்று மேமன் உத்தரவிட்டு இருந்தார். இதன்படி ஒரு குழுவினர், ஒரு வாகனம் நிறைய குண்டுகளுடன் மும்பை நகர பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, ஏற்கனவே குண்டு பொருத்தப்பட்டு இருந்த ஸ்கூட்டர் வெடித்துச் சிதறியது. இதில், அந்த குழுவினர் சென்ற வாகனமும் சேதம் அடைந்தது. பதட்டம் அடைந்த அவர்கள், வாகனத்தை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டனர். அந்த வாகனத்தை சி.பி.ஐ., பின்னர் கைப்பற்றி விசாரணை செய்தனர். அவற்றில் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்ததும், அந்த வாகனம் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. இதன் மூலமே, மேமன் குடும்பத்தினரை சி.பி.ஐ., அதிகாரிகள் அடையாளம் கண்டனர். வெளிநாட்டில் இருந்து டைகர் மேமன் தவிர மற்றவர்கள் இந்தியா திரும்பிய போது கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள 29 பேர்: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 94 பேர், ஜாமீனில் உள்ளனர். மேலு<ம் 29 பேர், சிறையில் உள்ளனர். அபு சலீம், ரியாஸ் சித்திக், முஸ்தாபா தோசா ஆகியார் மீது தனித்தனியே வழக்குகள் நடக்கின்றன. வழக்கு விசாரணை நடக்கும் போதே, டைகர் மேமனின் தந்தை உட்பட 11 பேர் இறந்து விட்டனர். ஜாமீனில் வந்த ரியாஸ் கஹாதிரி தலைமறைவாக உள்ளார். சமாஜ்வாடி எம்.பி., அபு அசீம் ஆஷ்மி மற்றும் அம்ஜத் மெகர் பாக்ஷா ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டு விட்டனர். இது தவிர 29 பேரை, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே விடுதலை செய்து விட்டது. தாவூத் இப்ராகிம், டைகர் மேமன் உட்பட 29 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக தடா கோர்ட் அறிவித்துள்ளது. சஞ்சய் தத் மீதான தீர்ப்பு எப்போது?: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான அபு சலீமிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வாங்கியது, குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு, அந்த துப்பாக்கியை அழிக்க முயன்றார் என சஞ்சய் தத் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மும்பை தடா கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட போது, சஞ்சய் தத்தும் ஆஜராகியிருந்தார். டைகர் மேமன் குடும்பத்தினர் மீதான தீர்ப்பு மட்டும் வழங்கப்பட்டதால், அதன் பிறகு கோர்ட்டில் இருந்து வெளியேறினார். மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், பகுதி பகுதியாகத் தான் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி கோடே அறிவித்துள்ளார். எனவே சஞ்சய் தத் மீதான தீர்ப்பு, ஒரு மாதத்திற்கு பிறகு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி தினமலர்

aam537
13-09-2006, 04:49 AM
மிகவும் மோசமன சம்பவம். குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் அதர்க்காக 16 வருடம் கழித்து தண்டனை கொடுப்பதால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் சரித்திரை கதையாகிவிட்டது இன்று இருக்கும் இளைய தலைமுறைக்கு.

நன்றி.......

பக்கர்

роЕро▒ро┐роЮро░рпН
14-09-2006, 02:52 PM
விரைவில் முழு தீர்ப்பும் வரட்டும்.... தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

pradeepkt
15-09-2006, 09:48 AM
சஞ்சய் தத்தின் தலைவிதி நிர்ணயம் செய்ய இன்னும் ஒரு மாதமாவது உள்ளது... குண்டு வெடிப்பு நிகழ்ந்து ஏழே நாட்களில் பிடிக்கப் பட்ட ஒரு குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தர பதிமூன்று ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. வெட்கக்கேடு. அவன் கவர்மெண்டு விருந்தாளியாக இருந்திருக்கிறான்.

mgandhi
15-09-2006, 05:10 PM
அரசன் அன்றே கெள்வான்
தெய்வம் நின்று கெள்ளும்
இது பழமெழி
இது உள்டாவாக மாறி விட்டது
காலம்கடந்து தீர்ப்பு வந்தாலும் குற்றவாளி தன்டிக்கப் படுவார் என்ற நம்பிக்கை தான் ஓரோ ஆறுதல்