PDA

View Full Version : கனவு காண்

mgandhi
12-09-2006, 05:10 PM
கனவு காண்-அதற்காக
தூங்கிகொண்டே இருக்காதே!

உணவு உண்-ஆனால்
அதற்காகவே வாழாதே!

நல்லவர்கள் காலைப்பிடி-ஆனால்
காலை வாரிவாடாதே!

பணம் சம்பாதி-அதற்காக
பாவங்களை செய்யாதே!

கடவுளை வணங்கு-அதற்காக
கண்டதையும் நம்பாதே!

மதங்களை நேசி-அதற்காக
மனித நேயத்தை மறக்காதே!

அறிஞர்
14-09-2006, 02:18 PM
ஒவ்வொரு இரண்டு வரிகளும்
சிந்திக்க வைக்கின்றன....

கடவுளை விட்டு கண்டதையும் நம்புவோரும்
மனித நேயத்தை மறந்தவருக்கும்
ஒரு சாட்டையடி......

தொடருங்கள் காந்தி
(சிறிய எழுத்துப்பிழைகளை பார்த்து பதியுங்கள்)

பென்ஸ்
21-09-2006, 09:35 AM
எது வேண்டும் , அதில் எது கூடாது....

அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்....

குறுக்கு வழியில் செல்லாமல் நேர்மையாக உழைத்தால்
முதல் வரி எளிது,
இரண்டாம் வரி தேவையில்லை...

தொடருங்கள் உங்கள் சமூக சிந்தனைகளை...

ஓவியா
22-09-2006, 05:48 PM
இது கலியுக திருக்குறளோ இல்லை ஆத்திச்சூடியோ

அருமை, அருமை.

உணவு உண்-ஆனால் அதற்காகவே வாழாதே!

இதுதான் எனக்கு கொஞ்சம் இடிக்குதே...
(பிரதீப், உங்களுக்கு எப்படி)

mgandhi
22-09-2006, 06:40 PM
இது கலியுக திருக்குறளோ இல்லை ஆத்திச்சூடியோ

அருமை, அருமை.

உணவு உண்-ஆனால் அதற்காகவே வாழாதே!

இதுதான் எனக்கு கொஞ்சம் இடிக்குதே...
(பிரதீப், உங்களுக்கு எப்படி)
தங்கள் பராட்டுக்கு முதற்கண் என் நன்றி
உயிர் வாழ்வதிர்க்கா(கெச்சமாக) சாப்பிடவோண்டும்
சாப்பிடுதுவதையே முழுநேர தெழிளாக இருக்க கூடாது
விளக்கம் சரியா தவரா கூறுங்கள்

mgandhi
22-09-2006, 06:43 PM
எது வேண்டும் , அதில் எது கூடாது....

அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்....

குறுக்கு வழியில் செல்லாமல் நேர்மையாக உழைத்தால்
முதல் வரி எளிது,
இரண்டாம் வரி தேவையில்லை...

தொடருங்கள் உங்கள் சமூக சிந்தனைகளை...
பாறாட்டுக்கு நன்றி

mgandhi
22-09-2006, 06:49 PM
ஒவ்வொரு இரண்டு வரிகளும்
சிந்திக்க வைக்கின்றன....

கடவுளை விட்டு கண்டதையும் நம்புவோரும்
மனித நேயத்தை மறந்தவருக்கும்
ஒரு சாட்டையடி......

தொடருங்கள் காந்தி
(சிறிய எழுத்துப்பிழைகளை பார்த்து பதியுங்கள்)
பிழைகளை திருத்த முயர்ச்சிக்கிறோன் மின்டும் பிழை வந்தால் மன்னிக்க வோண்டுகிறோன்

ஓவியா
23-09-2006, 12:47 PM
தங்கள் பராட்டுக்கு முதற்கண் என் நன்றி
உயிர் வாழ்வதிர்க்கா(கெச்சமாக) சாப்பிடவோண்டும்
சாப்பிடுதுவதையே முழுநேர தெழிளாக இருக்க கூடாது
விளக்கம் சரியா தவரா கூறுங்கள்

இந்த நேரம் பார்த்து செல்வ சமயலானந்தா ஓவர் பீசி

பீரதீப், ராகவன், மதி, மயூ, பெஞ்சு, முகிலன்......இந்த அறிஞர்களைதான் கேட்கனும்,....:D
அனேகமா இதிலே ஒரு மூனுபேராவது டாக்டர் பட்டம் வாங்கி இருப்பாங்க....:D

யாரவது சரியா தவரானு பதில் போடுவாங்க.....

மதி
23-09-2006, 01:04 PM

அக்கா..
சாப்பிடற விஷயத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்..?:confused: :confused:
ஏதோ மன்ற உறவுகளை சந்திக்கற தருணங்கள் எல்லாம் சாப்பிடற மாதிரி ஆயிடுது..
அதனால சாப்பிடறது எனக்கு முழுநேர தொழில் இல்லை..! மீதி அஞ்சு பேருல அந்த மூணு பேரு யாருங்க..! ஒருத்தர எனக்குத் தெரியும்...!:D :cool: :eek:

ஓவியா
23-09-2006, 01:09 PM

மதி இருந்தாலும் உங்களுக்கு
இவ்வலவு தன்னடக்கம் கூடாது....

வர வர வருவது ரொம்ப குறைவா இருக்கே...ஏன் முழுநேரமா சைட்டிங்கா...:D :D :D

அக்னி
08-08-2008, 04:01 PM
இரண்டு வரிகளில் அடக்கப்பட்ட வாழ்வியல் நெறிகள்...

ஒவ்வொன்றும் சிந்திக்கப்படவேண்டியவையே...

ஆனால், இப்போதெல்லாம்
கனவை, உணவை, நல்லவர்களைப், பணத்தைக் காண்பதே அரிதாகிப் போய்,
கடவுளையும் மதத்தையும், மனிதர்கள் அரிதாரமாய் அல்லவா ஆக்கிவிட்டனர்.