PDA

View Full Version : கிரிக்கெட்-முத்தரப்பு போட்டி



அறிஞர்
12-09-2006, 02:51 PM
சிறிது இடைவெளிக்கு பின் கிரிக்கெட் ஆட்டங்கள் தொடர்கிறது.

மலேசியாவில் DLF கோப்பைக்கான போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் மேற்கு இந்தியா அணிகள் பங்கு பெறுகின்றன.

செப்டம்பர் 12 ஆஸ்திரேலியா-மேற்கு இந்தியா

செப்டம்பர் 14 இந்தியா -மேற்கு இந்தியா

செப்டம்பர் 16 ஆஸ்திரேலியா-இந்தியா

செப்டம்பர் 18 ஆஸ்திரேலியா-மேற்கு இந்தியா

செப்டம்பர் 20 இந்தியா -மேற்கு இந்தியா

செப்டம்பர் 22 ஆஸ்திரேலியா-இந்தியா

செப்டம்பர் 24 இறுதி போட்டி.

இந்தியா, ஆஸ்திரேலியா இறுதி போட்டியில் சந்திக்கும் என எண்ணுகிறேன்.

அறிஞர்
12-09-2006, 02:57 PM
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

ஆஸ்திரேலியா - 276/9 (50 ஓவர்)
மேற்கு இந்தியா - 201 (34.3 ஓவர்)

இந்த போட்டியில் மேற்கு இந்தியா அணி எளிதில் வென்றிருக்கலாம். 30 ஓவரில் 195/4 என இருந்தது. 20 ஓவரில் 82 ரன் மட்டுமே தேவை.... ஆனால் அடுத்த 4.3 ஓவரில் மற்ற 6 விக்கெட்டுகளை இழந்து.. தோற்றுவிட்டது. நல்ல போட்டி.

aam537
13-09-2006, 04:53 AM
மேற்கு இந்தியா தீவுகளின் தோல்வி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள் ஆக்கியது

நன்றி..........

பக்கர்

"Lollu" senthil
14-09-2006, 12:39 PM
இன்னைக்கு நீங்க கவலை பட தேவையிருக்காது போல...

அறிஞர்
14-09-2006, 01:33 PM
இந்தியா 309/5 (50 ஓவர், டெண்டுல்கர் 141 அவுட் இல்லை, பதான் 64, ரெய்னா 34).

நல்ல ரன் ஓட்டம்.

பதிலுக்கு மேற்கு இந்தியா கலக்குகிறது 141/2. லாரா, சர்வான் ஆடுகிறார்கள்...

அறிஞர்
14-09-2006, 01:39 PM
மழை குறுக்கிட்டதால் 20 ஓவர் அடிப்படையில் மேற்கு இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்...

pradeepkt
15-09-2006, 09:47 AM
சச்சின் பத்தி ஒண்ணும் சொல்லலையே...
நேத்து முழுக்க எல்லா டிவியிலயும் ராஜா வந்தார் ராஜா வந்தார்னு ஒரே புகழ் மாலை

mettilda
16-09-2006, 08:38 AM
india will win

mettilda
16-09-2006, 08:43 AM
am new to this forum kindly help me to post

அறிஞர்
20-09-2006, 03:25 PM
am new to this forum kindly help me to post என்ன உதவி வேண்டும்.. அறிமுகப்பகுதியில் நண்பர்கள் கூறியபடி.. எழுத்துரு பகுதியை படித்து, தமிழில் எழுதுங்கள். ஆங்கில பதிப்புக்களை இங்கு அனுமதிப்பதில்லை.

அறிஞர்
20-09-2006, 03:29 PM
இந்தியா மேற்கு இந்திய அணியை வெற்றிக்கொண்டுள்ளது.

இது எதிர்பார்க்காத வெற்றி.

இந்தியா முதலில் பேட் செய்து குறைந்த ரன் எடுத்தது (162 சச்சின் 65, ஹர்பஜன் 37). முன்னனி வீரர்கள் (டிராவிட் 0, சேவாக் 1, யுவராஜ் 0) தடுமாறினாலும் ஹர்பஜன் பேட்டிங்கில் கலக்கினார்.

எளிதில் வெல்லலாம் என்ற நோக்கில் இறங்கிய மேற்கு இந்தியா 146 ரன்களில் ஆட்டம் இழந்தது.

ஹர்பஜன் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் அவரே...

நாளை மறுநாள் ஆஸ்திரேலியா போட்டியில் வென்றால் இந்தியா இறுதி போட்டியில் பங்கு பெறும் வாய்ப்பு உள்ளது.

ரன் ரேட், புள்ளியில் இந்தியா பின் தங்கியுள்ளது

அறிஞர்
22-09-2006, 01:19 PM
ஆஸ்திரேலியாவிடம் இந்தியா... தோல்வியை தழுவியது.

இறுதிபோட்டியில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய அணிகள் சந்திக்கின்றன

ஓவியா
22-09-2006, 04:06 PM
ஆஸ்திரேலியா வெற்றி கொள்ள வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

அறிஞர்
25-09-2006, 01:19 PM
வாய்ப்பு மட்டுமில்லை.. கோப்பையே அவர்களுடையதாகிவிட்டது...