PDA

View Full Version : தமிழ் சினிமாவும் சில தமிழ்சினிமா மரபுகளு



அகத்தியன்
11-09-2006, 04:41 PM
எம் சினிமாவில் எப்போதும் புதுமை புதுமை என்று காட்டுக்கத்தல் கத்தினாலும் சில விடயங்கள் எல்லா படங்களிலும் இருக்கும்.



ஹீரோ ஹீரோயின் வில்லன் கொமடியன்

ஹீரோவின் துப்பாக்கி ரிவோல்வரில் மட்டும் புல்லட் முடியாது .சுட்டுக்கிட்டே இருப்பார்.

எப்படி எமகாதகன் என்றாலும் கடைசியில் வில்லன் ஹீரோவால் கொல்லப்படுவார்.

ஹீரோயினின் அப்பா வில்லனா இருப்பார் அல்லது இளிச்சவாயனா இருப்பார் அல்லது ஒண்டுக்கும் முடியாத பேர்வழியா இருப்பார், சாதாரண அப்பாவா இருக்கவே மாட்டார்.

கொமடியன் எப்பவும் ஹீரோவுக்கு உதவி செய்ரவரா நண்பரா இருப்பார்.

ஹீரோக்கு எப்படி சுட்டாலும் படாது.

ஹீரோ மிக ஏழையா இருப்பார். ஆனா கடைத் தெருவுல வில்லங்களுக்கு மட்டுமில்லாது கடைகளையும்
அடிச்சு நொறுக்குவார். அதுக்கெல்லாம் நஷ்ட ஈடு கேட்க மாட்டாங்களோ????

எப்படியும் கடைசி சீன்ல போலிஸ் வந்திடும்.

படம் தொடங்கினதுல இருந்து என்ன சொல்லியும் திருந்தாத வில்லன் கடைசி சீன்ல உடனடியா திருந்திடுவார்.


எனக்கு இப்படி கேட்க தோணுது,

என்னங்கடா டேய் எப்படா திருந்தப்போறீங்க?






இப்படி இன்னும் எவ்வளவு கண்றாவிக்கள் உள்ளன. நீங்களும் சுவாரஸ்யமா பட்டியல்படுத்துங்களன்.

ஓவியா
11-09-2006, 04:50 PM
சிரிப்பு தாங்கலையே......கண்ணம் வலிக்கின்றது

mgandhi
11-09-2006, 07:07 PM
கதாநாயகனின் காதலியின் அப்பா வில்லனாக இருப்பார்

கதாநாயகனின் தங்கைஐ வில்லனின் மகன் கெடுத்து விடுவான்

மீசை அல்லது தாடி ஒட்டி கென்டால் வில்லனுக்கு அடையாளம் தெரியாது

அகத்தியன்
12-09-2006, 05:57 AM
அப்படி போடுங்க
இன்னும் எவ்வளவோ இருக்கு இல்லையா?

gragavan
12-09-2006, 06:00 AM
படத்தில் வரும் ஆடு, மாடு, புலி, சிங்கம், நாய், பாம்பு, பல்லி, பூரான் எல்லாமே கதாநாயகன் அல்லது நாயகிக்கு உதவியா இருக்கும். கண்டிப்பா ஒரு கற்பழிப்புக் காட்சியில வந்து காப்பாத்து.

அப்புறம் பாயாசத்துல பேதி மாத்திரையைக் கலக்குறதும்....தொடர்ந்து பேதியாகுறதும் நடக்கும்.

dawn
12-09-2006, 11:53 AM
வில்லங்ககிட்ட மாட்டிக்கிட்ட ஹிரோயினை காப்பாத்த நம்ம ஹீரோ 5 மீட்டர் ஓடியே வருவாரு..! அதுவரைக்கும் நம்மாளு வில்லன் அந்த பொண்ணு தடவிட்டே இருப்பான்..!

நம்மாளுக்கு 2 நிமிஷம் கிடைச்சா போதாது..? சரி சண்டையெல்லாம் முடிஞ்சு என்ன பண்ணுவான் நம்ம ஹீரோ..? வில்லன் செய்ஞ்சதையே மெதுவா செய்வான்..! ஆனால் இப்ப டூயட் ஆகிடும்..!

போங்கப்பா.! ஒரே தொல்லையா இருக்கு..! :)

இனியவன்
12-09-2006, 12:42 PM
நல்ல பட்டியல் தான்.
நம்ம இயக்குநர்கள் விழித்துக் கொண்டால் சரி.

Mano.G.
12-09-2006, 01:35 PM
இப்பொழுதுதான் வேட்டையடு விளையாடு
திரைபடத்தை சினிமா தியேட்டரில் பார்த்துவிட்டு
வருகிரேன்,

அதில் மேலே குறிப்பிட்டுள்ள காட்சிகள்
சற்று குறைவாகவே உள்ளன,

இயக்குனருக்கு பாராட்டுகள்

காட்சிகளும் நம்பகூடியதாகவே இருக்கிறது.


மனோ.ஜி