PDA

View Full Version : வணக்கம் அன்புறவுகளே!crisho
11-09-2006, 01:19 PM
வணக்கம் அன்பர்களே,

எனது பெயர் கிஷோர்.

பிறப்பிடம், வளர்ப்பிடம் மற்றும் படிப்பிடம் அனைத்தையும் இலங்கையாக கொண்ட நான், எனது வதிவிடத்தை தென்ஆப்பிரிக்கா வாக கொண்டுளேன். தற்சமயம் பணிபுரிவது மத்திய கிழக்கு நாடொன்றில்.

தமிழ் மொழியை தாய் மொழியாய் கொண்டவனாயிலும் தற்போது என்னை வளர்த்த தமிழ் தாயை நான் மறக்கும் துயரம் எனை வாட்ட தமிழ் மன்றத்தினுள் நான் புகுந்தேன்.

மகிழ்ச்சி..... மகிழ்ச்சி..... நான் தமிழ் மன்றத்தில் அங்கத்தவனானதில் மகிழ்ச்சி!

இவ் இணையத்தை வழங்கிய...... வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகளை பரிசாக்கிக் கொள்கிறேன்.

பென்ஸ்
11-09-2006, 01:21 PM
நல்வரவு..

ஓவியா
11-09-2006, 01:43 PM
ஆ ஆ சூப்பர்....அழகான தமிழ்....சிக்கனமான அறிமுகம்.

வாங்க வாங்க......வந்து தமிழை வாழ வைக்கவும்..

தங்களின் வரவு எங்களின் மகிழ்ச்சி...............:D :D

இரு கரம் கூப்பி
வருக வருக என்று வரவேர்ப்புக்களுடன் வாழ்த்துக்கள்

Shanmuhi
11-09-2006, 02:20 PM
வணக்கம் வாருங்கள் கிஷோர்...

pradeepkt
11-09-2006, 02:25 PM
வணக்கமுங்க...
அடிக்கடி மன்றத்துப் பக்கம் வந்து உங்க கருத்துகளையும் படைப்புகளையும் தயங்காமல் தாருங்கள்.

crisho
12-09-2006, 09:29 AM
சகோதரர் பெஞ்ஜமின், பிரதீப் மற்றும் சகோதரி ஓவியா, ஷன்முகி அனைவருக்கும் என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி!

இனியவன்
12-09-2006, 12:38 PM
வாருங்கள் கிஷோர்.
தாருங்கள் நல்ல பதிவுகளை.
:)

அறிஞர்
12-09-2006, 11:34 PM
தமிழ் தான் நம் உணர்வாக இருக்கட்டும்..

எங்கு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பது தமிழனுக்கு அழகு.

தமிழில் பலருடன் உறவாடுங்கள்.. நல்ல பதிப்புக்களை தாருங்கள்

Mano.G.
13-09-2006, 06:36 AM
பிறப்பால் தமிழர்கள் நாம்,
பிறந்ததோ இல்லை புலம் பெயர்ந்தோ
இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் வாழ்கிறோம் வசிக்கிறோம்
ஒருவருக்கொருவர் முகம் கண்டதில்லை
குரல் கேட்டதில்லை
ஆனால் ஒரு பாசம்
மன்றத்தில் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி

அதற்கு வழிவகுத்து நம்மை
உறவாட வைத்த
தங்கதமிழ் தேன்தமிழ் இன்பதமிழுக்கும்
இந்த தளத்தை தன்நலம் கருதா
இயங்கசெய்யும் இராஜகுமாரனுக்கும்

நன்றிகள் பல

இங்கே எங்களோடு உறவாட வருகை புரிந்த
கிரிஷொவுக்கும் வாழ்த்துக்கள்


மனோ.ஜி

crisho
13-09-2006, 09:27 AM
சகோதரர் இனியவன், அறிஞர் மற்றும் மனோ ஜி அனைவருக்கும் நன்றி.

உங்கள் அனைவரையும் இம் மன்றத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி!

மனோஜி கூறியது போல தன்நலம் கருதா இவ் இணையத்தை இயக்கும் இராஜகுமார் ஐயாவுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூற கடமை பட்டுள்ளேன்.
நன்றி ஐயா!

தங்கவேல்
13-09-2006, 12:12 PM
தமிழ்மன்றத்துக்கு வருகை தந்திருக்கும் அன்பு சகோதரர் கிஷோரை வரவேற்பதில் மகிழ்கிறேன். தங்களின் படைப்புகளை விரைவில் தாருங்கள்..

மிக்க அன்புடன்
தங்கவேல்.

arul5318
13-09-2006, 02:59 PM
வாருங்கள் நண்பரே உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மதி
14-09-2006, 04:36 AM
வரவேற்புகள் கிஷோர்..

akilarasu
14-09-2006, 06:38 AM
வாருங்கள் கிஷோர் வரவேற்கிறோம்

பரஞ்சோதி
14-09-2006, 01:13 PM
அன்பு நண்பர் கிஷோரை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

crisho
15-09-2006, 05:11 AM
சகோதரர் தங்கவேல், அருள், ராஜேஷ்குமார், அரசு மற்றும் பரம்ஸ் அனைவரது வரவேற்புகளுக்கும் நன்றி.

மேலும் உங்கள் அனைவரையும் இம் மன்றத்தில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்!

இளசு
15-09-2006, 10:45 PM
இனிய வரவேற்புகள் நண்பர் கிஷோர்.

இங்கே இதமான நட்பாட இதயங்கள் திறந்திருக்கின்றன..

இணைந்திருங்கள்.. வாழ்த்துகள்..

crisho
16-09-2006, 06:55 AM
நன்றி இளசு ஐயா.

உண்மையிலேயே,
இங்கு நட்பாட நல் உள்ளங்கள் பல உள்ளதை
நான் காண்கிறேன்.....
இங்கு இணைந்திருப்பதன் இனிமையையும் சுவைக்க தொடங்கியுள்ளேன்! ;)

mettilda
16-09-2006, 09:15 AM
vaanakam en peyaar mettilda

crisho
16-09-2006, 09:35 AM
வணக்கம் என் பெயர் மெடில்டா

வணக்கம் அன்பு சகோதரியே....

தமிழில் உங்கள் எண்ணத்தை வடிக்க முயற்சிப்பீர்கள் என நம்புகிறேன்.

உதவிக்கு கீழ் கண்ட சுட்டியை கில்க:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410

mettilda
16-09-2006, 11:32 AM
Thank you Kishore

அறிஞர்
16-09-2006, 07:58 PM
Thank you Kishore கிஷோர் கொடுத்த லிங்கை பார்த்து தமிழில் பதியுங்கள்.. அன்பரே.. தங்களை பற்றி அறிமுகப்பகுதியில் கொடுங்கள்

mgandhi
16-09-2006, 08:31 PM
மகிழ்ச்சி..... மகிழ்ச்சி..... நிங்கள் தமிழ் மன்றத்தில் அங்கத்தினர் ஆனதிர்க்கு மகிழ்ச்சி!

crisho
17-09-2006, 05:11 AM
இத எங்கேயோ கேட்ட மாதி இருக்கே :D :D

paarthiban
21-09-2006, 09:50 PM
வணக்கம் கிஷோர். வாங்க.

crisho
22-09-2006, 07:16 AM
நன்றி காந்தி, நன்றி பார்த்தீபன்... ஐயா நீங்கள் நடிகர் பார்த்தீபனா என்ன? :D ;)

Pennmai
23-09-2006, 05:27 AM
vanakkam naatpu uzhlangale

enathu kanipooriyil ennal tamilil adika iyalavillai adhan ippadi, elloraiyum santhipathil ennakku mazhichiye, oru kelvi unagluuku ellam eppadi ippadi tamilil adika mudigiradhu, yaarenum udhava iyaluma?

Nandri
pennmai

vckannan
01-10-2006, 02:06 PM
வாங்க கிஷோர் வாங்க

arul5318
10-10-2006, 07:16 AM
தென்னாபிரிக்காவிலும் தமிழ் பரவுவது மகிழ்ச்சிக்குரிய விடயம் நீங்கள் அங்குள்ள பாசைகளைப்படிப்பதுடன் தமிழையும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்

crisho
13-10-2006, 10:50 AM
நன்றி சகோதரி பெண்மை, சகோதரர் கண்ணன், அருள்.

காந்தி ஜியின் காலத்தில் தென்னாபிரிக்காவுக்கு குடி பெயர்த்து வாழும் இந்தியர் தொகை ஏராளம்....

அவர்களுக்கு இந்தியாவுடனான தொடர்பற்று போனதால் இந்தியாவிலிருக்கும் உறவினர்களையும் அவர்கள் அறியார்!!

சிலருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு தெரியும் பேச்சி வழக்கு புரியும்.... படம் பார்ப்பர்... ஆனால் எழுத வாசிக்க வராது.

தென்னாபிரிக்கா வரும் எல்லா இந்திய திரை படங்களிலும் ஆங்கிலத்தில் "சப் டைட்டில்" கொடுத்திருப்பர்.. இதனால் எளிதில் புரிந்து கொள்கின்றனர்.

தமிழில் உரையாட உறவாட யாரும் இல்லையப்பா....

என் வேலையை விட்டு நிரந்திரமாக அவ்விடம் சென்றால்.... மன்றம் தான் என் கெதி....

சொற்கள்... எழுத்துகள்... என உண்மையாகவே தமிழை ரொம்பவே மறந்துட்டேன் அதுனாலதா ஜாஸ்தி எழுத்து பிழைகள்!! :D