PDA

View Full Version : ஓய்வதில்லை.....



meera
09-09-2006, 05:28 AM
அலைகள் ஓய்வதில்லை
கரையைத் தொடுவதில்..
நதிகள் ஓய்வதில்லை
கடலை அடைவதில்..
மழைத்துளிகள் ஓய்வதில்லை
மண்ணை அடைவதில்..
காலம் ஓய்வதில்லை
பயணம் முடியும்வரை..
இளைஞனே,
நீ
மட்டும்
ஏன்
ஓய்ந்து போனாய்
உன் லட்சியத்தில்.......

இனியவன்
09-09-2006, 09:01 AM
அப்படிக் கேளுங்க.
தன்னைக் கோழையா
நெனைச்சுக்கிட்டு
இருக்கிறவங்களுக்கு
சொரணை வரட்டும்.:)

ஓவியா
11-09-2006, 03:40 PM
பிப்டி பிப்டி கேக்குரேமிலே....;)
ஏன் இந்த கேள்விகள் இளைஞனுக்கு மட்டும்...:cool:
சிலமகளிர்களும் இப்படிதான் கோழையா இருக்காங்க......:D

meera
12-09-2006, 05:17 AM
உண்மைதான் ஓவி என் கவிதையில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டது. உங்களின் கருத்தை மனமார ஏற்று கொள்கிறேன்.

crisho
12-09-2006, 07:23 AM
பேஷ்.. பேஷ்.. அருமையான சிந்தனை!

பென்ஸ்
12-09-2006, 09:18 AM
மீரா...
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி
தோல்விகளே படிகளாய்
மனதை சதா ரணமாக்கும் போது
கனவுகள் சிதறி போவது சாதாரணம்

இதை மனோதத்துவத்தில் "Learned Helplessness" என்று சொல்லுவார்கள்..
இவர்களை சாடுவதை விட தோள் கொடுத்து தூக்கி விடுவது மனிதம்...

meera
12-09-2006, 09:47 AM
மீரா...
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி
தோல்விகளே படிகளாய்
மனதை சதா ரணமாக்கும் போது
கனவுகள் சிதறி போவது சாதாரணம்

இதை மனோதத்துவத்தில் "Learned Helplessness" என்று சொல்லுவார்கள்..
இவர்களை சாடுவதை விட தோள் கொடுத்து தூக்கி விடுவது மனிதம்...
தோல்வியை கண்டு துவண்டு போனவர்கள் கோழைகள்.யாருக்கில்லை தோல்வி இன்று உலகம் வியக்கும் மனிதர் முதல் யாருக்கும் தெரியாமல் வாழும் சாதாரண மனிதன் வரை எல்லோரும் தோல்வியை சந்திக்கிறார்கள்.முயன்றுபார் முடியாதது ஒன்று உண்டா உலகில்.முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை.தோள் கொடுக்க நாங்கள் தயார்,பற்றிக்கொள்வது அவர்களின் சாமர்த்தியம்..நான் சாடவில்லை நண்பரே இது என் ஆதங்கம் அவ்வளவே...

crisho
12-09-2006, 10:28 AM
தோல்விகளை நாளும் கண்டு
சோர்ந்து, துவண்டு போன யாறெனினும்...
மேற்கண்ட ஆதங்க வரிகள்
வாழ வகை செய்யும்
என்பது உண்மை!

வாழ்க உங்கள் தொண்டு.... வளர்க உங்கள் சேவை!

meera
12-09-2006, 11:43 AM
மிக்க நன்றி கிஷோர்

ஓவியா
12-09-2006, 04:30 PM
உண்மைதான் ஓவி என் கவிதையில் ஒரு சிறு தவறு நிகழ்ந்துவிட்டது. உங்களின் கருத்தை மனமார ஏற்று கொள்கிறேன்.


அடடா என்ன அருமையான கொள்கை...:D

மீரா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை...பாராட்டுக்கள்

அறிஞர்
12-09-2006, 10:51 PM
மற்றவர்களை ஊக்குவிக்க நல்ல கவிதை....

ஓடும் நதி குறுக்கே பாறைகள் இருந்தாலும் தனக்கென ஒரு பாதை
உருவாக்கி இலக்கை (கடலை) நோக்கி செல்கிறது.

இளைஞர் சமுதாயம் தோல்வி பாறைகள் கண்டு அஞ்சாமல் தனி வழியில் இலட்சியத்தை அடைந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே.