PDA

View Full Version : முதிர் கன்னி



meera
09-09-2006, 05:17 AM
இலையுதிர் காலமாய்
இளமையை தொலைத்து
வசந்த காலமாய்
முதுமையை வாங்கும்
மலர்ந்தும் மலராத
மலர்கள்...

இனியவன்
09-09-2006, 08:59 AM
தெள்ளிய சிந்தனை.

meera
11-09-2006, 04:45 AM
இனியவன், முதலில் உங்களுக்கு நன்றி.உங்களின் விமர்சனங்கள் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.தொடர்ந்து உங்களது விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

ஓவியா
11-09-2006, 01:47 PM
பதினோரு வார்த்தையில் ...
பல கேள்விகள்....பன்மடங்கு அர்த்தங்கள்

முதுமையை
வசந்த காலமாய்
பாராட்டிய பெருமை உங்களுக்கே.........:D .........நன்றி

பாரட்டுக்கள்.
தொடரவும்.

meera
12-09-2006, 05:12 AM
ஓவியா, என் கவிதைகளைவிட உங்கள் விமர்சனம் அழகாய் இருக்கிறது....

பென்ஸ்
12-09-2006, 09:11 AM
*/வசந்த காலமாய்
முதுமையை வாங்கும்/*

அர்த்த படுத்திகொள்ள கடினமாக இருக்கிறதே... விளக்கலாமா????

meera
12-09-2006, 09:25 AM
*/வசந்த காலமாய்
முதுமையை வாங்கும்/*

அர்த்த படுத்திகொள்ள கடினமாக இருக்கிறதே... விளக்கலாமா????
நண்பரே!என்னை குழப்பாதீர்கள் அவர்களின் வாழ்வில் முதுமை மட்டுமே வசந்த காலமாய் வருகிறது வேறு ஒன்றும் வசந்தம் வரவில்லை

இதுவே அதன் பொருள் இப்பொது விளங்கியதா நண்பரே?

உங்களுக்கு தெரிந்து வேறு அர்த்தம் இருந்தால் கூறுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்.

பென்ஸ்
12-09-2006, 09:33 AM
அர்த்த படுத்துதல் வாசிப்பவர் விருப்பத்திற்க்கு இருக்கடும் ...
கவிதை அருமை... வாழ்த்துகள்...

meera
12-09-2006, 09:52 AM
அர்த்த படுத்துதல் வாசிப்பவர் விருப்பத்திற்க்கு இருக்கடும் ...
கவிதை அருமை... வாழ்த்துகள்...
நன்றி நண்பரே!! ஆனால் உங்களுக்கு வேறு அர்த்தம் தெரிந்தால் கண்டிப்பாக கூறவேண்டும் . இது என் அன்பான வேண்டுகோள்.

அறிஞர்
14-09-2006, 10:01 PM
இலையுதிர் காலமாய்
இளமையை தொலைத்து
வசந்த காலமாய்
முதுமையை வாங்கும்
மலர்ந்தும் மலராத
மலர்கள்...
மலர்ந்தும் மலராத
மலர்களின் வாழ்வில்
திருமண பந்தங்கள்
உருவாக வாழ்த்துக்கள்

crisho
15-09-2006, 04:20 AM
மலர்ந்தும் மலராத
மலர்களின் வாழ்வில்
திருமண பந்தங்கள்
உருவாக வாழ்த்துக்கள்

இதுக்குத்தான் அறிஞ்ஞனா பொறக்கனும் என்றது!!
ஒருபடி மேலயே யோசிச்சி அறிஞர்'னு நிரூபிச்சிட்டீங்க! ;)

கண்மணி
17-09-2006, 09:04 AM
*/வசந்த காலமாய்
முதுமையை வாங்கும்/*

அர்த்த படுத்திகொள்ள கடினமாக இருக்கிறதே... விளக்கலாமா????

இளைமையாய்
இருந்த காலங்களில்
இச்சிக்காத வாலிபங்கள்

முகம் திருப்பிக் கொண்ட
முடிகுறைபவர்கள்

வயதான பின்னே
அன்னை என
பின்னே வருவதால்

வயதாவது
அவளுக்கு
வசந்த காலம்தான்...!!!

இளசு
17-09-2006, 10:09 PM
பாராட்டுகள் மீரா.
சொல்லித் தீர்க்க வேண்டிய
சமூக செல்லரிப்புகளில் ஒன்று இது..


இங்கே நம் கவீ தந்த
கூன் விழுந்த குமரிகள் கவிதை
நினைவுக்கு வருகிறது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4314




கூன் விழுந்த குமரிகள்..


வரதட்சணை வம்சத்தில்
வந்து விழுந்த
சினைக்குஞ்சுகள் நாங்கள்

கள்ளிப்பால் புகட்டும் காட்டில்
கன்றுப்பால் தாய்ப்பாலானதால்
தப்பிப்பிழைத்தோம் நாங்கள்

சா(ஆ)ண்பிள்ளை வாரிசுக்காய்
வரிசையாய்ப் பிறந்ததால்
கூலிக்கூழ் குடித்தோம் நாங்கள்

அப்பிள்ளை அழகாய் போக
தப்பில்லை அழுக்கானாலும்
அடுப்புக்கரி ஆனோம் நாங்கள்

சுள்ளிக்குச்சி கொண்டாறேன் ஆத்தா
சுல்லென சுடும் வெய்யிலில்
அடுப்பெரிக்க சுட்டோம் நாங்கள்

அஞ்சு நாள் நிதம் போனா
அச்சுவெல்ல உருண்டை தருவாங்களாம்
பள்ளிக்கூடம் பார்த்தோம் நாங்கள்

ஒண்ணே ஒண்ணு! எங்க
கண்ணே கண்ணு!
கருவேப்பிலை கொத்தேனு
தம்பிய கொஞ்சினாங்க..
கெஞ்சவில்லை நாங்கள்

பத்தாப்பு படிச்சா போதும்
படிச்சவன் யாரு இருக்கா?
பொங்கிப்போட படிப்பெதுக்கு?
சீர் செய்ய செலவெதுக்கு?
பொங்கவில்லை நாங்கள்!

கண்ணுக்குள்ளே வச்சிருப்பேன்
கண்மணியே உன்னை நானும்!
கண்ணாளன் சொன்னாலும்

அரைவயறுக் கஞ்சி ஊத்தி
அஞ்சுபவுன் சங்கிலிபோடும்
அப்பன் பார்த்த மாப்பிள்ளை தான்
நிமிர்ந்து பாரோம் நாங்கள்!

சாதிக்கிளை ஒடிச்சி
புங்கம்பூ பூத்தாலும்
ஓடிவரும் ஒருதண்ணி
செம்மண், களிமண்
கலந்தாலும்
நட்புத்தூண்கள்
நாற்புறமும் காத்தாலும்
வீட்டின் கூரை தாங்கி
சுவர்களாய் இருப்போம் நாங்கள்

மூலையில் இருப்போரை
மூளைச்சலவை செய்தாலும்
கோபக்கோஷங்கள் கொண்டு
கொதித்தே எழுந்தாலும்
சுற்றும் உள்ள பூமி
சற்றே உயர்ந்தாலும்
மௌன ஓட்டுக்குள்ளே
மறைந்தே இருப்போம் - நாங்கள்

குனிந்து குனிந்தே
கூன் விழுந்த குமரிகள்.

பென்ஸ்
18-09-2006, 03:23 PM
கவி, மீரா...

இது மொளனமானா சாடலா... ???

திஸ்கியில் இருப்பதால் வாசிக்க முடியாமல் விட்டு போன கவிதைகளில் இதுவும் ஒன்றாய்....

எப்பவுமே குற்றமும் குறைகூறும் நானும் சில சமயங்களில் வாயடைத்து போவது உண்டு....

மனப்புண்ணின் சீளேடுக்க
கவிதையால் வெட்டியிருக்கிறிர்கள் ...
வலிக்கிறது...
பரவாயில்லை
நிரந்தர வலி தீருமல்லவா....!!!!

கவி..
இந்த முறையும் திரும்ப திரும்ப படித்தேன்...
புரியாமல் அல்ல...
பிடித்து போயிருந்ததால்....:) :)

பென்ஸ்
18-09-2006, 03:24 PM
பாராட்டுகள் மீரா.
சொல்லித் தீர்க்க வேண்டிய
சமூக செல்லரிப்புகளில் ஒன்று இது..


இங்கே நம் கவீ தந்த
கூன் விழுந்த குமரிகள் கவிதை
நினைவுக்கு வருகிறது..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4314

இளசு .. டாங்ஸ்...:D :D

ஓவியா
18-09-2006, 04:46 PM
இளைமையாய்
இருந்த காலங்களில்
இச்சிக்காத வாலிபங்கள்

முகம் திருப்பிக் கொண்ட
முடிகுறைபவர்கள்

வயதான பின்னே
அன்னை என
பின்னே வருவதால்

வயதாவது
அவளுக்கு
வசந்த காலம்தான்...!!!

அருமை...:D

meera
19-09-2006, 04:54 AM
இளைமையாய்
இருந்த காலங்களில்
இச்சிக்காத வாலிபங்கள்

முகம் திருப்பிக் கொண்ட
முடிகுறைபவர்கள்

வயதான பின்னே
அன்னை என
பின்னே வருவதால்

வயதாவது
அவளுக்கு
வசந்த காலம்தான்...!!!
கண்மணி, அழகான,அருமையான,ஆழமான விளக்கம் நன்றி நன்றி...........