PDA

View Full Version : ஜனாதிபதி அப்துல் கலாம் உரை



mgandhi
08-09-2006, 06:57 PM
ஜனாதிபதி அப்துல் கலாம் உரை
நாட்டின் 60வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அப்துல் கலாம், நேற்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். உரையில் அவர் கூறியதாவது: ""எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்'' சுதந்திர போராட்ட வீரர்களின் தன்னலமற்ற தியாக உணர்வை நமது இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். தேசத்தின் விரைவான வளர்ச்சிக்கு, மக்கள் தங்களுக்குள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாட்டின் அனைத்துப் பகுதியிலும் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ வேண்டியது அவசியம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எல்லைக்கு அப்பால் இருந்து, தீவிரவாதமும் வன்முறையும் சவால் விடுகின்றன. இயற்கை வளங்கள் குறைவதால், பற்றாக்குறை ஏற்படுகிறது. இவற்றை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகள் தேவை. இதற்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் உறுதி செய்யப்பட வேண்டும்.

நமது எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய, நமது தேசமும் ராணுவப் படைகளும் தயாராக உள்ளன. நமது அடிப்படை கட்டமைப்பாக, சட்டம், காவல், புலனாய்வு பிரிவுகள், நீதித்துறை ஆகியவை உள்ளபோதிலும், கால மாற்றத்திற்கேற்ப அவற்றை மேம்படுத்தி, செயல்படுத்துவதற்� �ான நெறிமுறைகளை புகுத்த வேண்டும். எந்தவொரு தனிநபரோ, மதமோ, அரசியல் மற்றும் நிர்வாக அமைப்போ, நமது சட்டத்தை எந்த இடையூறும் இன்றி அதன் போக்கில் செயல்பட விடவேண்டும். நமது குடிமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். நாட்டில் பல்வேறு பகுதிகளில் சில குழுக்கள் தீவிரவாதத்தை பரப்புவதற்கு, உரிய நேரத்தில், நிலச் சீர்திருத்தங்களை செயல்படுத்த தவறியதும், சில கொள்கை ரீதியான மாறுபாடுகளை களையாததும் முக்கிய காரணம். குறிப்பிட்ட நில மற்றும் வனப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நாட்டின் வடகிழக்கு பகுதியில், தீவிரவாத குழுக்களின் அச்சுறுத்தல் இருக்கிறது. இப்பகுதிகளில், அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து, படிப்படியாக செயல்படுத்துவது மற்றும் அங்கு சகஜ நிலை திரும்ப பேச்சு வார்த்தைகளை நடத்துவது அவசியம். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர்கள் படும் வேதனையை நானும் அனுபவித்தேன். அன்றைய தினமே, இந்திய வர்த்தக சபையில் பேசினேன். சபையில் இருந்தவர்களுக்கு எனது வலியை உணர்த்தினேன். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டவர்� �ளின் மறுவாழ்வுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்தனர். நமது நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதத்தன்மையற்ற தீவிரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை ஒழித்துக் கட்டி, குடிமக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க தேசிய அணுகுமுறை ஒன்றை அரசு பரிசீலித்து வருகிறது. ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு மற்றும் மக்கள் பங்கேற்பை நோக்கமாகக் கொண்ட, தீவிரவாத ஒழிப்பு தேசிய இயக்கத்தை உருவாக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்துவ� �ு பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. கணினிமயமாக்கப்பட� �ட வங்கி செயல்முறைகள் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் அறிமுகத்தால், தவறுகளை கண்டறிவது எளிதாகிவிட்டது. தீவிரவாத தொடர்புடைய வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு, புதிய முறையை நீதித்துறை பரிசீலிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையினரின� � ஒத்துழைப்புடன் தோரியம் அடிப்படையிலான உலைகளை கட்டும் திறனை நாம் சொந்தமாக பெற்றுள்ளோம். அணுசக்தி ஆற்றலில் தன்னிறைவு, தற்சார்பு மற்றும் பாதுகாப்பை நாம் பெறுவதற்கு இது வழிவகுக்கும். நமது தொலைநோக்கு இலக்கை அடைய, குடிமக்கள் பாதுகாப்பு மசோதா மற்றும் எரிசக்தி தற்சார்பு மசோதாவை உருவாக்க வேண்டும். இந்தியாவை பாதுகாப்பான, பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாற்றும் தீர்மானத்தை ஏற்க வேண்டும்.

தற்போது பின்வரும் ஏழு அம்ச உறுதிமொழி ஏற்குமாறு இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன். 1. இலக்கை நிர்ணயித்து, வெற்றி பெறுவேன் 2. துணிவுடன் உழைப்பேன் 3. என்னைச் சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்வேன். 4. உள்ளத்தில் நேர்மை இருந்தால், நாட்டில் ஒழுங்கை கொண்டு வரும். 5. நேர்மையுடன் அடுத்தவருக்கு எடுத்துக்காட்டாய� � விளங்குவேன் 6. அறிவு தீபத்தை ஏற்றி, அது என்றும் சுடர்விட உறுதி கொள்வேன் 7. வரும் 2020ம் ஆண்டுக்குள் வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற குறிக்கோளை அடைய நான் செம்மையாக பணியாற்றுவேன். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இவ்வாறு கலாம் பேசினார்.
__________________

இளசு
09-09-2006, 10:16 PM
எழுத்துரு பிரசினை கடந்ததற்கு வாழ்த்துகள் காந்தி அவர்களே.

அனைவரும் படிக்க வேண்டிய , நம் கலாம் அவர்களின் உரையை
இங்கே பதித்தற்கு நன்றி.

அந்த ஏழு உறுதிமொழிகளை நாம் அனைவரும் மனதில் பதியும் வரை
தினமும் படிக்க வேண்டும்.

மும்பை வேதனை இன்னும் ரணமாய் இருக்க, நேற்று அதே மாநிலத்தில் மீண்டும்.....


தீவிரவாதிகளின் தூண்டும் திட்டம் பலிக்காமல், இந்திய உணர்வுகள்
நம்மைக் காக்கட்டும்..

paarthiban
10-09-2006, 12:56 PM
அப்துல் கலாம் அவர்களின் அறிவுரை அருமை.

ஓவியா
11-09-2006, 03:28 PM
அருமையான உரை

இந்திய குடிமகன்கள் அனைவரும்
அந்த ஏழு உறுதிமொழிகளை பின்பற்ற எனது வாழ்த்துக்கள்

நன்றி
மோகன் காந்தி