PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே!!!!



thapoongundran
08-09-2006, 08:22 AM
எனது பெயர் பூங்குன்றன். பிறந்தது தஞ்சையில்,,பணிபுரிவது சென்னையில் மென்பொருள் பொறியாளராக.
தமிழ் மீது ஆர்வம். மண்டையில் சரக்கு ஒன்னும் இல்லை.
அதனால்தான் தமிழ் மன்றத்தை பார்த்தாவது கொஞ்சம் தெரிஞ்சுக்களாம்னு வந்துருக்கேன்

pradeepkt
08-09-2006, 09:09 AM
அப்படி எல்லாம் சொல்லப்படாது... சரக்கு இருக்குறவங்கதான் வரலாமின்னா நாங்க எல்லாமென்ன செய்யிறது?

முதல் பதிவே தமிழில் போட்ட உங்களுக்கு வாழ்த்துகளோடு வரவேற்புகள். தஞ்சாவூரா சொந்த ஊரு. கொள்ள நாளு பெரிய கோயிலும் கார்த்திக் ஹோட்டலும் எங்களுக்குச் சொர்க்கமா இருந்துருக்கு :D

மதி
08-09-2006, 01:28 PM
அப்படி எல்லாம் சொல்லப்படாது... சரக்கு இருக்குறவங்கதான் வரலாமின்னா நாங்க எல்லாமென்ன செய்யிறது?

முதல் பதிவே தமிழில் போட்ட உங்களுக்கு வாழ்த்துகளோடு வரவேற்புகள். தஞ்சாவூரா சொந்த ஊரு. கொள்ள நாளு பெரிய கோயிலும் கார்த்திக் ஹோட்டலும் எங்களுக்குச் சொர்க்கமா இருந்துருக்கு :D

வாங்க..பூங்குன்றன்..
நான் கூட தஞ்சாவூரில் தான் இருந்தேன்..படிப்பெல்லாம் அங்க தான்..

ஓவியா
08-09-2006, 03:53 PM
வணக்கம் பூங்குன்றன்....நலமா?

அழகான தமிழப்பெயர்...அப்பாவுக்கு நன்றி சொல்லுங்க

தமிழ் மன்றத்திர்க்கு வருக வருகவென்று வரவேர்கின்றேன்.....

அப்ப நான் தஞ்சாவூர்ருக்கு வந்த.....
உங்கவூட்டுக்குதான் வருவேன்....... சரியா........:D

இளசு
08-09-2006, 09:33 PM
வாருங்கள் பூங்குன்றன்.

தமிழ்மன்றத்தில் உங்கள் முத்திரைப்பதிவுகளை
விரைவில் காணலாம் என உங்கள் அறிமுகப்பதிவு
கட்டியம் கூறுகிறது..

வாழ்த்துகள்..

இனியவன்
09-09-2006, 04:32 AM
பூங்குன்றனுக்கு வரவேற்பு.

தஞ்சை மண்ணிலிருந்து நீங்கள் இன்னுமொரு ராஜராஜ சோழனாய் வாருங்கள்.

thapoongundran
11-09-2006, 08:54 AM
அன்புகெழு நண்பர்களே
தங்களின் மனமார்ந்த வரவேற்புக்கு மிக்க நன்றி!!
இராஜேஷ், நீங்க எங்க படீச்சீங்க?எந்தப் பகுதி தஞ்சாவூர்ல?
ஓவியா, நலம்,நலமா?நீங்க எப்ப வேணும்னாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.

அன்புடன்,
பூங்குன்றன்

Shanmuhi
11-09-2006, 01:23 PM
வணக்கம் பூங்குன்றன் இனிய நல் வரவேற்புக்கள்...

பென்ஸ்
11-09-2006, 02:48 PM
அப்படி எல்லாம் சொல்லப்படாது... சரக்கு இருக்குறவங்கதான் வரலாமின்னா நாங்க எல்லாமென்ன செய்யிறது?
:D

பிரதிப்பு... இதில் "நாங்க" என்று சொன்னதில் நானும் உண்டுதானே....
இல்லை என்று சொல்லிராதிங்கோ:rolleyes: :rolleyes: , அப்புறம் எப்படிடா மென்பொருளில் எல்லாம் வேலை வாங்கினே என்று மக்களுக்கு சந்தேகம் வந்திரும்....:D :D :D :D

யப்பு பூங்குன்றான்... வாங்க .. வந்தாச்சு இல்லையா... தொடங்குங்க...

mgandhi
11-09-2006, 07:04 PM
நஞ்சையும் புஞ்சையும் கெஞ்சி விளையாடும்(பூங்குன்றன்)தஞ்சையரே

உங்கள் வரவு நல்வரவுஆகட்டும்

akilarasu
12-09-2006, 05:08 AM
வாருங்கள் பூங்குன்றன் தங்கள் வரவு மன்றத்திற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்.

நான் தஞ்சை, கரந்தை தமிழ்ச் சங்கத்தில் தான் கண்ணியில் இளங்கலை அறிவியல் பயின்றேன்.

அந்த மூன்றாண்டு காலம் இன்னும் எனது நெஞ்சில் பசுமையாக உள்ளது.

அறிஞர்
12-09-2006, 10:36 PM
வாருங்கள் அன்பரே.. தஞ்சை மன்னின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள்..

படித்தது.... சரபோஜியா....

vckannan
01-10-2006, 12:56 PM
வாங்க வாங்க பூங்குன்றன்
சரக்கு இல்லயா அப்ப மூளை நல்லா வேலை செய்யுமே:D :D :D

sarcharan
02-10-2006, 11:52 AM
வாருங்கள் பூங்குன்றன் :)
தங்கள் வரவு மன்றத்திற்கு மேலும் பெருமை சேர்க்கட்டும்.:D :D

arul5318
10-10-2006, 06:18 AM
வருக வருக ஆதரவு தருக என வரவேற்கிறோம்