PDA

View Full Version : சகலமுமாய்....



rambal
25-04-2003, 05:18 PM
சகலமுமாய்....

சிறுவயதில்...
காக்காகடி கடித்துக்
கொடுத்த கடலை மிட்டாய்..

கொஞ்சம் வயதாகி..
என்னிடம் காட்ட வேண்டுமென்பதற்காக
நீ கட்டிய முதல் தாவணி..

இன்னும் கொஞ்சம் வளர்ந்த பின்..
யாருக்கும் தெரியாமல் ஊட்டி விட்ட
நீ செய்த சமையல்..

படிக்க பட்டணம்
போகிறேன் என்றவுடன்
நீ விட்ட கண்ணீர்...

எல்லாம் ஆகி..
நாம் செய்து கொண்ட கல்யாணமும்..
அந்த முதல் இரவும்...

உன் பிரசவத்திற்கு
உன்னை விட அவஸ்தைப்பட்ட
உன் முதல் டெலிவரி...

உண்டு முடித்து நான்
கை துடைக்கும்
உன் முந்தானை...

குழப்பம் நேரும் போதெல்லாம்
தலை வைத்துப் படுக்கும்
உன் மடி...

பிஸினஸ¤க்கென்று
தைரியமாய் நீ
கழட்டிக் கொடுத்த வளையல்...

இப்படி சகலமுமாய்...
என் பால்யம் முதல் இன்று வரை..
பின் எப்படியடி மனது வந்தது
எனை தனியே விட்டு முன்னே போக?

lingam
25-04-2003, 05:30 PM
அழகாக நினைவலைகளை உருவாக்கும் கவிதையின் கடைசி சோகம் கலங்க வைக்கிறதே.

poo
25-04-2003, 06:23 PM
இப்படியெல்லாம் அழவைக்காதே நண்பா...

நிலா
25-04-2003, 06:28 PM
அவள் என்னில் உறவாயிருந்தது யார் கண்ணை உறுத்தியது?
இறுதிவரை உடனிருப்பேன் என்றவளுக்கு
இன்று இறுதிச்சடங்கு!

வார்த்தைகளில் உமது வலி புரிகிறது!

Narathar
26-04-2003, 04:11 AM
மனிவிக்கோர் அஞ்சலி!!!!!!
நல்ல கவிதை....................... வாழ்த்துக்கள்

rambal
26-04-2003, 03:33 PM
வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி...