PDA

View Full Version : உன் காத்திருத்தலின் நீளம் என்ன?



அகத்தியன்
03-09-2006, 06:20 PM
உன் காத்திருத்தலின் நீளம் என்ன?
என்றாவது சொன்னாயா?

என் தொலைதல் பற்றிய
உன் கற்பிதங்கள்,
பொய்யாகியே போயின
எனது மீள் வருகையுடன்...

என் நம்பிக்கையின் மீது
நம் 'அல்லது'எனது காதல்
கழுவேறியே போனது

கழுவேற்றிய
நீ பற்றி,
நான் யாது செய்வேன் பெண்ணே?
என் காதலின் வரையறைகள்
செத்ததை எண்ணி அழுவதை தவிர....

ஆனாலும்,
முடியவில்லை.
ஆண்கள் அழக்கூடாதாமே!
அம்மா அடிக்கடி சொல்வாள்

mgandhi
03-09-2006, 07:20 PM
ஆனாலும்,
முடியவில்லை.
ஆண்கள் அழக்கூடாதாமே!
அம்மா அடிக்கடி சொல்வாள்[/quote]

தாய் செல் தட்டா தனையன்
நீர் வாழ்க!!!!

ஓவியா
04-09-2006, 01:18 PM
காத்திருத்தலின் நீளம்............தொலைதல்............வரையறைகள்
செத்ததை எண்ணி....................

அருமையான கவிதை...


ஆமாம்ம்....வா...:eek:

ஆண்கள் அழக்கூடாதா.........அழ வைப்பதுதானே அவர்கள் வேலை..:)
(இந்த நேரம் பார்த்து செல்வன் அண்ணவேற இல்லையே..:D :D :D )

அகத்தியன்
04-09-2006, 04:05 PM
ஆண்கள் அழக்கூடாதா.........அழ வைப்பதுதானே அவர்கள் வேலை..:)
(இந்த நேரம் பார்த்து செல்வன் அண்ணவேற இல்லையே..:D :D :D )
என்ன அம்மணி அனுபவம் போல இருக்கு;) ;)
எமது சமூக கட்டுமானத்தைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.

அகத்தியன்
04-09-2006, 04:08 PM
ஆனாலும்,
முடியவில்லை.
ஆண்கள் அழக்கூடாதாமே!
அம்மா அடிக்கடி சொல்வாள்

தாய் செல் தட்டா தனையன்
நீர் வாழ்க!!!![/QUOTE]


எதுவும் புரியவில்லை ஐயா:) :)

அகத்தியன்
07-07-2008, 10:08 AM
ஆனாலும்,
முடியவில்லை.
ஆண்கள் அழக்கூடாதாமே!
அம்மா அடிக்கடி சொல்வாள்

தாய் செல் தட்டா தனையன்
நீர் வாழ்க!!!![/QUOTE]



பலரை போல் எனக்கும் அம்மதானே முதல் வகுப்பறை.

அதுதான். நண்பரே

இளசு
07-07-2008, 04:40 PM
காத்திருக்கச் சொல்லி சென்றதொரு காலம்...

காலம் ஓடியது..

காலம் மாறியது.... சூழலும்..

காதலி - ஒரு முகம்..
மகள், தங்கை, தமக்கை - இப்படி பல முகம்..

கழுவேற்றியது ஒருத்தியா?
ஒருத்தியாய் தோன்றும் பன்முக மனுஷியா?

தனது அல்லது தமது
காதல் செத்தால் என்ன?

காதலி வாழ வாழ்த்துங்கள்!

அழுவதானால் அழலாமே..
ஆணுக்கும் கண்ணீர்ச் சுரப்பிகள் உண்டே!

அடுத்தும் வாழ்க்கை இருக்கு..
அதை மட்டும் மறக்க வேண்டாம்!

============================

கவிதைக்கு பாராட்டுகள் அகத்தியன்!

ஷீ-நிசி
08-07-2008, 01:42 AM
ஆண்கள் அழவேண்டாம்...
பெண்களும் அழவைத்திட வேண்டாம்!!

காத்திருத்தலின் சோகத்தினை ஒவ்வொருவரும் கடந்து வந்திருப்பார்கள்.
அவைகளை மீட்டெடுத்திருக்கிறது கொஞ்சமேனும் உங்கள் கவி வரிகள்!

வாழ்த்துக்கள் அகத்தியன்!

ஓவியன்
08-07-2008, 02:05 AM
காத்திருத்தலும் ஒரு சுகம்தான்,
காத்திருப்பது கனியுமென்றால்...

காத்திருப்பதே சுமைதான்
காத்திருப்பது கனியாதென்றால்...

காலம் பொன்னானது எதையும்
இதயத்தால் சிந்திப்பதிலும்
மூளையால் சிந்திப்பதே நலம்...

காத்திருப்பதிலும் கூட.......!!!

பாராட்டுக்கள் அகத்தியன், இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க..!! :)