PDA

View Full Version : நினைக்கவில்லை........



meera
02-09-2006, 10:23 AM
நிலவென்று
உன்னை நினைத்து
நான்
கவிஞன் ஆனேன்.....

தாமரையென்று
உன்னை நினைத்து
நான்
சூரியன் ஆனேன்....

மலரென்று
உன்னை நினைத்து
நான்
வண்டு ஆனேன்....

கலையென்று
உன்னை நினைத்து
நான்
ஓவியன் ஆனேன்....

காற்றென்று
உன்னை நினைத்து
நான்
சுவாசம் ஆனேன்....

புல்லென்று
உன்னை நினைத்து
நான்
பனித்துளி ஆனேன்.....

அழகென்று
உன்னை நினைத்து
நான்
ஆராதித்தேன்....

மழையென்று
உன்னை நினைத்து
நான்
பூமியானேன்....

மேகமென்று
உன்னை நினைத்து
நான்
வானம் ஆனேன்...

அம்பென்று
உன்னை நினைத்து
நான்
வில் ஆனேன்....

சிற்பம் என்று
உன்னை நினைத்து
நான்
சிற்பி ஆனேன்....

ஆனால்
பெண்ணே!
நீ
சிற்பம் அல்ல
சிலை செய்யும்
கல்லென்று
நான் கனவிலும்
நினைக்கவில்லை........

meera
02-09-2006, 10:27 AM
அனைவரின் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புதியவள் மீரா

ஓவியா
04-09-2006, 02:37 PM
ஆனால்
பெண்ணே!
நீ
சிற்பம் அல்ல
சிலை செய்யும்
கல்லென்று நான் கனவிலும்
நினைக்கவில்லை........

மீரா,
கல்லில்தானே சிற்ப்பம் வடிப்பார்கள்?

மன்னிக்கவும்,
இந்த வரிகள் எனக்கு விளங்கவில்லை...
தயவுசெய்து கொஞ்சம் விளக்கவும்......

நன்றி

arul5318
04-09-2006, 02:45 PM
அருமையான வரிகள் நன்றி நண்பரே

Mano.G.
04-09-2006, 03:17 PM
ஆமாம் கல்லில் தானெ சிலை வடிப்பார்கள்
சிற்பம் கல்லில் செய்யப்படுவது தானே

எனக்கும் விளங்கவில்லை
அந்த கடைசி வரிகள்


மனோ.ஜி

meera
05-09-2006, 12:45 PM
மீரா,
கல்லில்தானே சிற்ப்பம் வடிப்பார்கள்?

மன்னிக்கவும்,
இந்த வரிகள் எனக்கு விளங்கவில்லை...
தயவுசெய்து கொஞ்சம் விளக்கவும்......

நன்றி
ஓவியா நான் கல் என்று கூறியது பெண்ணின் மனம் இப்போது விளங்கியதா?

ஓவியா
07-09-2006, 04:57 PM
ஓவியா நான் கல் என்று கூறியது பெண்ணின் மனம் இப்போது விளங்கியதா?


ஓ அப்படியா..

பெண்கள் கல் என்றாலும் அதில் ஈரம் இருக்கும் அல்லவா

இனியவன்
09-09-2006, 04:48 AM
நல்ல பதிவு மீரா
தொடருங்கள்.

kavitha
04-04-2008, 11:06 AM
உனக்கான கல் நானே
சிற்பியே செதுக்கிவிடு
உளி உரசாமல்
சிற்பம் இல்லை
கண்கள் உரசாமல்
காதல் இல்லை
யாரும் பார்க்காத
சிற்பம் - கல்லாய்
இது உனக்காகத்தானே!