PDA

View Full Version : இதயத்தின் வலி



meera
02-09-2006, 07:53 AM
இதயத்தின் வலி
சிறு வயதில்
எனது சேட்டைக்காகவும்
நல்ல மார்க் இல்லாததற்க்கும்
நீங்கள் அடித்த போதும்
என்னை ஒன்றும்
செய்துவிடவில்லை......

பள்ளியில் படிக்கும் போது
ஆசிரியரின் அதட்டலும் மிரட்டலும்-ஏன்
அடியும் கூட
ஒன்றும் செய்துவிடவில்லை
என்னை.......

கல்லூரியில் காளையர்கள்
கண்டபடி கிண்டல்
செய்ததும் சிரித்ததும்
ஒன்றும் செய்துவிடவில்லை
என்னை...........

ஆனால்
தந்தையே
உங்களின் அந்த
ஒற்றை வார்த்தை
சந்தேக வார்த்தை..!
இதயம் வலிக்கிறது
இயலாமை
கண்களை குளமாக்குகிறது
உதடுகள்
துடிக்கிறது
உள்ளம் ஊமையாய்
அழுகிறது

ஆனால்
மனம் மட்டும் கேட்கிறது
சத்தமின்றி......
ஆண்களுடன் பேசினால் அது காதல் தானா?

தமிழன்
02-09-2006, 08:27 AM
மீரா நல்ல கவிதை வாழ்த்துக்கள்

meera
02-09-2006, 08:53 AM
மீரா நல்ல கவிதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தமிழன்

mgandhi
03-09-2006, 07:44 AM
உங்கள் கவிதை நன்றைக இருத்தது
__________________

meera
04-09-2006, 05:25 AM
காந்தி தாங்கள் சொல்ல வந்ததை எனக்கு புரியும் வார்த்தைகளில் கூறுங்களேன்.

ஓவியா
04-09-2006, 12:55 PM
அருமையான கவிதை...........நன்று

பாராட்டுக்கள் மீரா

ஆனால் இது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை விசயமே!!!!:D

இனியவன்
04-09-2006, 01:03 PM
உண்மையை உரக்கச் சொல்லும் வரிகள்.
தொடருங்கள் மீரா.பாராட்டுக்கள்.

Mano.G.
04-09-2006, 03:10 PM
அருமையான கவிதை...........நன்று

பாராட்டுக்கள் மீரா

ஆனால் இது பல குடும்பங்களில் நடக்கும் உண்மை விசயமே!!!!:D

பெற்றோர்கள் மடியில் நெருப்பை கட்டி கொண்டிருக்கிறார்கள்
அத்தனாலேயே கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கவனித்து
வளர்க்கிறார்கள் என்ன செய்வது , பெண் பிள்ளைகளே பெற்றோரை
பூரிந்து கொள்ளுங்கள்.



கவிதை அருமை மீரா
தொடருங்கள்


மனோ.ஜி

இளசு
04-09-2006, 10:04 PM
இந்தப் பிரசினையின் ஒருபக்க பார்வை.
சொன்ன விதம், உள்ளே உள்ள உண்மை, ஆதங்கம்
அழகாய் வெளியாகி இருக்கிறது.

பாராட்டுகள் மீரா..

--------------------------------------------------

இதன் இன்னொரு பக்கம்



வெளித்தாழ்ப்பாள்

எப்போது
தவறுகள் நடந்தாலும்
அதன் மீதுதான்
உன் முதல் குற்றப்பத்திரிக்கை
வாசிக்கப்படும்

அழுத்தமான கண்டிப்பாகட்டும்
மென்மையான அதட்டலாகட்டும்
அதன் மீது
நீ காட்டும் கோபம் அர்த்தமற்றது.....

உள் மன விகாரங்கள்
தலை முறை தலைமுறையாக
உனக்குள் வந்து கொண்டேயிருக்கிறது
பழி என்னவோ அதன் மீது.....

வெளித் தாழ்ப்பாள் மீது
ஏன் உனக்கு வெறுப்பு
அவை நல்லதே செய்தாலும் கூட....


உனக்கு தீங்குகள் நடந்தாலும் சரி....
நல்லது நடந்தாலும் சரி
எது நடந்தாலும்
வெளித்தாழ்ப்பாளின் மீதே
விசாரணை நடக்கிறது....

வெளித்தாழ்ப்பாளுக்கு நீ
வைத்திருக்கும் பெயர்
ஆணாதிக்கம்......!


http://www.tamilmantram.com/vb/newreply.php?do=newreply&p=5620