PDA

View Full Version : அய்யனார்



ப்ரியன்
28-08-2006, 08:56 AM
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்

- ப்ரியன்.

http://photos1.blogger.com/blogger/1063/749/1600/Ayyanaar.jpg

pradeepkt
28-08-2006, 10:55 AM
நம்பிக்கைதானேங்க தெய்வம்!!!
காத்திருக்கட்டும்... அய்யனார்னு ஒருத்தர் இருக்கும்போது ஊர் எப்படிங்க காலியாவும்???

ஓவியா
29-08-2006, 06:58 PM
நம்பிக்கைதானேங்க தெய்வம்!!!
காத்திருக்கட்டும்... அய்யனார்னு ஒருத்தர் இருக்கும்போது ஊர் எப்படிங்க காலியாவும்???


உண்மைதான் பிரதீப்

நம்பிக்கைதான் தெய்வம்!!!

இளசு
29-08-2006, 10:20 PM
சுழற்சியில் மீண்டும்
சொந்த ஊருக்கே மீண்டால்
அப்போதும் இருப்பார்
அதே அய்யனார்.

மீண்டும் ப்ரியனின் சமுதாயப் பார்வை..

பாராட்டுகள்.. தொடருங்கள் ப்ரியன்..

கண்மணி
02-09-2006, 05:06 PM
நம்பிக்கைதானேங்க தெய்வம்!!!
காத்திருக்கட்டும்... அய்யனார்னு ஒருத்தர் இருக்கும்போது ஊர் எப்படிங்க காலியாவும்???
லோகத்திலே எத்தனையோ பேர் இதே மாதிரி தானுங்கோ!

அய்யனாரை ஊர் எல்லையில் காக்க வெச்சுட்டு எந்தக் காதலி கடுக்கா கொடுத்தாளோ!!

gragavan
03-09-2006, 10:27 AM
போனோர் போனோரே
என்று நம்புகிறவர் நாம்
போனோர் வருவோரே
என்று நம்புகிறவர் ஐயனார்
அன்று திரும்புகையில்
காவல் வேண்டுமல்லவா!
ஐயனார் காத்திருக்கிறார்!

பென்ஸ்
11-09-2006, 01:55 PM
ப்ரியன்....
அல்வாவாய் காதல் கவிதைகளை வாசித்து திகட்டும் போது
காரா சீவலாய் உரைக்கும் இந்த சமுதாய கவிதைகள்...

இளசுவின் வார்த்தைகளை அமோதித்து....
பாராட்டுகளுடன் கூடிய நன்றியும்....

(இப்போது நீங்கள் கவிதை எழுதுவது குறைத்து வருவதாக ஒரு உணர்வு... அது சரியா???)