PDA

View Full Version : சில வலைத்தளங்கள் - 2



பாரதி
26-08-2006, 04:24 PM
Thinkfree
வலைத்தளம்: http://thinkfree.com
இந்த வலைத்தளத்தில் 1ஜிபி கொள்ளளவு உள்ள இடம் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கணினியில் அல்லது நீங்கள் இணைய தளத்தில் உலாவும் கணினியில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு நிறுவப்படவில்லை என்றாலும் கூட, இந்த தளத்தின் வழியாக நீங்கள் மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸெல், ஸ்பிரெட்ஷீட் போன்றவற்றில் கோப்புகளை உருவாக்கவோ, எடிட் செய்யவோ முடியும்.

LogMeIn
வலைத்தளம்: http://www.logmein.com
நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் அலுவலகத்தில் உள்ள உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை பார்வையிட விரும்புகிறீர்களா..? இணையத்தின் வழியாக இந்த வலைத்தளம் அவ்வாறு செய்ய அனுமதிக்கிறது. முக்கியமான கோப்புகளை பாதுகாக்க, ரகசியமான கடவுச்சொற்களும் இந்த தளத்தினால் வழங்கப்படுகிறது. வீட்டில் இருந்த படியே அலுவகத்தில் உள்ள கணினியில் அனைத்து பணிகளையும் செய்ய இயலும்.

Meebo
வலைத்தளம்: http://www.www35.meebo.com
உங்கள் கணினியில் யாஹு அல்லது ஹாட்மெயில் மெசஞ்சர்கள் நிறுவப்படவில்லையா...? உங்களுக்கு உதவுவதற்காக உள்ளதுதான் இந்த தளம். இந்த வலைத்தளத்திலிருந்தே நீங்கள் உங்கள் நண்பர்களுடன் யாஹு மற்றும் ஹாட்மெயில் மெசஞ்சரில் உரையாட முடியும்.

.

mukilan
27-08-2006, 04:03 AM
தகவலுக்கு நன்றி அண்ணா. ஆனால் Meebo தளத்தில் யாகூ, எம் எஸ். என் போன்ற தூதுவனின் கடவுச்சொற்களை சேமித்து வைக்க கூடிய ஆபத்து இருக்கிறது அல்லவா? அது பற்றி தங்களின் கருத்து?

இனியவன்
27-08-2006, 04:08 AM
நல்ல தகவல்.
நன்றி பாரதி.

பாரதி
27-08-2006, 04:42 PM
கருத்துக்களுக்கு மிக்க நன்றி முகில், இனியவன்.

அன்பு முகில்,
நீங்கள் கேட்கும் கேள்வி எனக்குப்புரிகிறது. இதே பிரச்சினை ஜிமெயிலிலோ, ஹாட்மெயிலிலோ அல்லது யாஹுவிலோ வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதுதானே...! மேலும் இது போல பல காரியங்களும் கணினியால் மட்டுமே கையாளப்படும். எனினும் வேலை மெனக்கெட்டு "மீபு செர்வர் அட்மினிஸ்ட்ரேட்டர்" தேடினால் நமது கடவுச்சொல் அவர்களுக்கு தெரிவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது. அடிக்கடி நமது கடவுச்சொல்லை மாற்றுவது அல்லது முடியும் என்றால் தமிழிலேயே கடவுச்சொல் வைத்துக்கொள்வது என்ற நிலையை மேற்கொள்ளலாம்.

மேலும் அவசியம் நாம் தூதுவனை உபயோகப்படுத்த வேண்டியிருக்கிறது, ஆனால் நாம் உபயோகிக்கும் கணினியில் தூதுவன் நிறுவப்படவில்லை என்கிற போதுதான் இதனுடைய பயன்பாடு நமக்கு தேவையாகிறது.

paarthiban
27-08-2006, 07:30 PM
எல்லாமே உபயோகமானவை. நன்றி பாரதி சார்.

ஓவியா
27-08-2006, 09:23 PM
அருமையான தகவல்,
எனக்கு உபயோகமானவையே

நன்றி பாரதி.

இளசு
27-08-2006, 09:39 PM
இணையச் சுரங்கம் தோண்டி
தங்க க(சு)ட்டிகள் வெட்டித் தரும்
அன்புத் தம்பிக்கு பாராட்டுகள்.

பாரதி
28-08-2006, 05:30 PM
நன்றி பார்த்திபன், ஓவியா.
அண்ணனுக்கு என் அன்பு.

பாரதி
28-08-2006, 05:34 PM
தவறுதலாக இருமுறை பதிவாகி விட்டது. தயவு செய்து நீக்கிவிடவும். நன்றி.

meera
29-09-2006, 09:34 AM
இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் தங்களுக்கு civil service தேர்வு சம்மந்தமான வலைத்தளம் தெரிந்தால் கூறுங்களேன்..

RRaja
10-01-2007, 03:39 AM
தகவலுக்கு நன்றி பாரதி சார்.


இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.மேலும் தங்களுக்கு civil service தேர்வு சம்மந்தமான வலைத்தளம் தெரிந்தால் கூறுங்களேன்
http://www.tnpsc.org/degree_std.htm

இங்கே சென்று பாருங்கள் மீரா