PDA

View Full Version : தொடர்-4 : எம்.எஸ். பவர்பாயின்ட் (Powerpoint)..



மஸாகி
22-08-2006, 05:03 AM
(இந்த தொடரினை அச்சிட விரும்புபவர்கள் - கிடையான (Horizontal) நிலத் தோற்றத்தில் (Landscape) அச்சிட்டால் அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பெறலாம்.)

கடவுளின் நாமத்தால்..

என் அன்பு மாணவர்களை, மற்றுமொரு தொடரினூடாக சந்திப்பதையிட்டு மகிழ்ச்சி.. (என்ன மாணவர்களே, போன தொடரில - உங்களயெல்லாம், ரொம்ப இம்சை பண்ணிட்டேனோ.. என்ன செய்வது, அப்படியெல்லாம் ஏதாவது கதை விடாட்டி, நீங்க தூங்கிறீங்களோ இல்லையோ - நான் தூங்கிடுவேன்டா கண்ணுங்களா..)

தொடரை தொடங்கு முன்..

கடவுளின் அருளுடன், நான் - கணினித் துறையில் ஒரு விரிவுரையாளராக காலடி எடுத்து வைத்து, கடந்த ஆறு வருடங்களில் பல நூற்றுக் கணக்கான மாணவர்களை - என் நேரடிப் பயிற்றுவிப்பின் கீழ் உருவாக்கி இருந்தாலும், கணினி சார்ந்த சஞ்சிகைகளுக்கு பலதரப்பட்ட ஆக்கங்களை எழுதி மக்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் - தமிழ் மன்ற நண்பர்களுக்காக எழுதப்படும் இந்த எம்.எஸ்.பவர் பாயின்ட் Xp - ஓர் புதிய ஆரம்பம் என்ற தொடர், எனக்கு ஒரு புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கிறது.

இருப்பினும், கணினி சம்பந்தமாக நான் எழுதும் முதலாவது தொடர் - இது என்பதால், பல தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறதென்பதை நண்பர்கள் கவனத்தில் கொண்டு, அவ்வாறு ஏதேனும் தவறுகள் இடம்பெற்றால், உடனுக்குடன் அவைகளை சுட்டிக் காட்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

தவறுகள் என் கட்டுரையில் இருந்தாலும் சரி.. என் இம்சையில் இருந்தாலும் சரி.. உரிமையுடன் சுட்டிக் காட்டுங்கள்.. நன்றியுடன் திருத்திக் கொள்வேன்.. (பொது இடத்தில் சொல்ல விரும்பாதவர்கள் - தனிப்பட்ட முறையில் அறியத் தரலாம்.)

ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி..

இத்தொடரில் குறிப்பிடப்படும், ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான - தமிழ்ப்படுத்திய சொற்களைப் புரிந்து கொள்வதில் சிரமமுள்ளவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, இத் தொடரின் கடைசியில் - இங்கே எழுதப்படக்கூடிய அனைத்து தொடர்களையும் ஒன்றுதிரட்டி ஆங்கில வார்த்தைகளுடன் இணைந்த ஒரு விஷேட பதிப்பை, கடவுளின் அருள்கொண்டு வெளியிடவுள்ளேன் என்பதை நண்பர்களுக்கு அறியத் தருவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.

(என்ன அருள் - உங்க வேண்டுகோள் நிறைவேறிடுச்சுனு சந்தோஷமா இருக்கா..? கடைசிப் பதிப்பு வரும்வரை - இந்த தமிழ்ப்படுத்திய தொடரையும் சும்மா வாசிச்சு வைங்க.. இதன் மூலமா ரெண்டு தமிழ்ச் சொற்களை கத்துகிட்டாலும் நல்லதல்லவா..?)

இதுவரை..

பவர் பாயின்ட் யினைப் பயன்படுத்தி செய்து கொள்ளப்படும் - ஒரு நிகழ்த்து வரைகலையானது (Presentation Graphics) 5 பிரதான விடயங்களை உள்ளடக்கியுள்ளது என்றும், அவற்றில் ஒன்றான திட்டமிடல் என்றால் என்ன..? என்பது பற்றியும் பார்த்தோம்.

மேலும், பவர் பாயின்ட் டின் முகப்புத் தோற்றத்தில் காணப்படும் - முக்கிய விடயங்களில் சிலவற்றையும் பார்த்தோம்.

இனி..
ஆரம்பிக்கலாமா..?

பவர் பாயின்ட் டின் முகப்புத் தோற்றத்தில் காணப்படும் - முக்கிய விடயங்களில், கடந்த தொடரில் விளக்கப்பட்டிருந்த விடயங்கள் போக, மிகுதிகள் இங்கே விளக்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து, வடிவமைத்தல் என்றால் என்ன என்பதைப் பற்றியும் இத் தொடரில் நாம் அலச இருக்கிறோம்.

6. சொற்கலை (Word Art)

பொதுவாகவே, எம்.எஸ்.ஆபிஸ் மென்பொருட் தொகுப்பில் விஷேடமாக காணப்படும், இந்த சொற்கலை (Word Art) எனப்படும் அலங்கார எழுத்துருக்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். எமது முகப்புத் தோற்றப் படத்தில் இது - ஹாய் பாட்டி.. ஹாய் தாத்தா.. (எங்க பார்க்கிறீங்க - அட உங்களத்தான்..) என்று குறிக்கப்பட்டுள்ளது.

அதாவது - எமது படவில்லை ஒன்றில் (Slide), நாம் பயன்படுத்த விரும்புகின்ற ஏதாவதோர் சொல்லை, அல்லது சொற்றொடரை - கண்களை கவரும் விதத்தில் அமைத்துக்கொள்ள இது பயன்படுகின்றது. மேலும், இவ்வாறு பயன்படுத்தும் சொற்கலை (Word Art) ஒன்றின் பிண்ணனிக்கு - கலப்பு நிறங்களைக் கொண்டோ, இழைமத்தைக் (Texture) கொண்டோ, படத்தைக் கொண்டோ மென்மேலும் அழகு சேர்க்க முடியும். அவ்வாறு அலங்கரிக்கப்பட்ட சில மாதிரிகளை கீழேயுள்ள படத்தில் காணலாம்.

http://www.geocities.com/mazaagy/Word.jpg

இருந்தபோதிலும், இவ்வாறு சொற்கலையாக (Word Art) போட்டுக் கொண்ட சொல்லை அல்லது சொற்றொடரை தனித்தனி எழுத்துக்களாக தோன்றும்படி அசைவூட்டம் (Animation) செய்ய முடியாது. மொத்தமாகவே ஏதாவது அசைவூட்டம் (Animation) கொடுக்கலாம்.

7. ஆயத்தப் படம் (Clip Art)

இந்த, ஆயத்தப் படம் (Clip Art) எனப்படும் சிறிய படங்களும் கூட - சொற்கலையினைப் (Word Art) போன்றே உங்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றே ஆகும்.

எம்.எஸ்.பவர் பாயின்ட் - Xp யினைப் பொறுத்தவரை - இதனை நாம், எமது பட வில்லையில் - (Slide) போட்டுக் கொள்ள பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

� ஆயத்தப் படத்திற்கான (Clip Art) சிறிய படவுருவினை (Icon) வரைதல் கருவிப் பட்டையிலிருந்து (Drawing Tool Bar) சொடுக்க வேண்டும்.

� அவ்வாறு சொடுக்கும்போது, கொள்பணி சாளர அடுக்கின் (Task Pane) கீழ்ப் பாகத்தில் தோன்றும், படங்களை இடுவதற்கு வசதியாக - தயார்நிலைப்படுத்து (Organize clips) என்பதை மீண்டும் சொடுக்க வேண்டும்.

� அப்போது, புதிதாய்த் தோன்றும் சாளரத்திலிருந்து (Window) அலுவலகத் தொகுப்பு (Office Collection) படங்களை இரட்டைச் சொடுக்கு (Double Click) பண்ண வேண்டும்.

� மீண்டும், கல்வி சார்ந்த (Academic) கட்டங்கள் சார்ந்த (Buildings) என நாம் விரும்பும் - பல்வேறு தலைப்புக்களிலிருந்து ஆயத்தப் படங்களை (Clip Art) தெரிவு செய்து, அவற்றின் மீதான வலது சொடுக்கின் (Right Click) மூலம் பிரதிசெய்து (Copy) எமக்குத் தேவையான படவில்லையில் (Slide) ஒட்டிக் கொள்ள முடியும்.

மேலும், இவ்வாறு ஆயத்தப் படம் (Clip Art) மூலமாக - போட்டுக் கொள்ளப்படும் படங்களினை தெரிவு செய்துவிட்டு, திருத்துதல் பட்டியலில் (Edit Menu) காணப்படும் பட இலக்கு (Picture Object) என்பதன் மூலமாக பல துண்டுகளாக்கி � துண்டுகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அசைவூட்டம் (Animation) செய்யவோ, பல்வேறு நிறங்களைக் கொண்டு அப் படத்தை அலங்கரிக்கவோ, அல்லது அதன் கோலத்தை மாற்றவோ முடியும். அவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட்ட சில உதாரணங்களை கீழே காணலாம்.

http://www.geocities.com/mazaagy/ClipAt.jpg

மேலும், எமது பட வில்லையில் (Slide) - சப்தம் அல்லது சலனப் படம் (Sound / Movie Clip) ஒன்றைப் போட்டுக் கொள்ளும்போது - மேலே குறிப்பிட்ட இந்த பட இலக்கு (Picture Object) ஆனது சப்த இலக்கு (Sound Object) என்றோ அல்லது சலனப் பட இலக்கு (Movie Object) என்றோ மாறிவிடும்.

அப்போது நாம் - போட்டுக்கொண்ட, சப்தம் அல்லது சலனப் படத்திற்கான (Sound / Movie Clip) சப்த கன பரிமாண அளவைக் (Sound Volume) கூட்டிக் குறைத்தல், தடவாக்கம் (Looping) செய்தல் போன்ற மேலதிக ஒழுங்குகளைச் செய்து கொள்ள முடியும். அவ்வாறு மேலதிக ஒழுங்குகளைச் செய்து கொள்ளவதற்காகத் தேன்றும் மேல்வரல் பட்டி (Pop-up Menu) பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

http://www.geocities.com/mazaagy/Sound.jpg

8. வாசகம் (Text)

நாம் விரும்புகின்ற - விடயத்தை சாதாரண எழுத்துக்களில் தட்டச்சு செய்து கொள்ள, இந்த வாசகம் (Text) பயன்படுகின்றது. இந்த வாசகத்தைப் (Text) பயன்படுத்தி தட்டச்சு செய்து கொண்ட விடயங்களை, தனித்தனி எழுத்துக்களாக தோன்றும் படி அசைவூட்டம் (Animation) பண்ணிக் கொள்ள முடியும்.

மேலும், வாசகப் பெட்டி (Text Box) ஒன்றைப் பயன்படுத்தி - ஏதாவது விடயங்களை எழுதிக் கொள்ளும் போது, அந்த வாசகப் பெட்டியின் (Text Box) பிண்ணனிக்கு நாம் விரும்பும் நிறங்களை அல்லது படங்களை, இழைமங்களைப் (Texture) பயன்படுத்தி அழகு சேர்க்கவும் முடியும்.

9. தன்வடிவம் (Auto Shape)

வட்டம், சதுரம், கோடுகள், அம்புக்குறிகள், நட்சத்திரங்கள் போன்ற பல்வேறு வித்தியாசமான உருவங்களைப் பயன்படுத்தி எமது படவில்லையினை (Slide) அழகுபடுத்திக் கொள்ள இந்தத் தன்வடிவம் (Auto Shape) பயன்படுகின்றது. இவ்வாறு போட்டுக் கொள்ளப்படும் தன்வடிவத்திற்கு (Auto Shape) � வாசகப் பெட்டியைப் (Text Box) போன்றே - கலப்பு நிறங்களைக் கொண்டோ, இழைமத்தைக் (Texture) கொண்டோ, படத்தைக் கொண்டோ பிண்ணனியை அலங்கரிக்க முடியும்.

மேலும், அதற்குள் நாம் விரும்பும் விடயங்களை எழுதிக் கொள்ள வேண்டுமாயின், அக்குறிப்பிட்ட தன்வடிவம் (Auto Shape) மீது வலது சொடுக்குச் (Right Click) செய்து - வாசகத்தைச் சேர் (Add Text) என்பதனை மீண்டும் சொடுக்க வேண்டும். பின்னர், எமக்குத் தேவையான வாசகங்களை (Text) அதன் உள்ளே எழுதிவிட்டு, விரும்பினால் தனித்தனி எழுத்துக்களாக தோன்றும்படி அசைவூட்டம் (Animation) செய்து கொள்ளவும் முடியும்.

தன்வடிவத்தினை (Auto Shape) வரைதல் கருவிப் பட்டையிலிருந்து ( Drawing Tool Bar ) பெற்றுக் கொள்ள முடியும்.

10. கொள்பணி சாளர அடுக்கு (Task Pane)

கடைசியாக வெளிவந்த எம்.எஸ்.பவர் பாயின்ட் - Xp யில், புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு விஷேட வசதியே - இந்தக் கொள்பணி சாளர அடுக்கு (Task Pane) ஆகும். இது எம் காட்சித் திரையில் (Monitor) காணப்படவில்லையாயின், தோற்றம் பட்டியலுக்குச் (View Menu) சென்று, அதன் உப பட்டியலாக (Sub Menu) காணப்படும், கொள்பணி சாளர அடுக்கு (Task Pane) என்பதைச் சொடுக்குவதன் மூலமாகவோ, அல்லது Ctrl+F1 என்ற விசைகளை ஒருசேர அழுத்துவதன் மூலமாகவோ - இதனைப் பெற முடியும்.

மேலும், பவர் பாயின்ட் ஆனது - தொடங்கும்போதே இந்தக் கொள்பணி சாளர அடுக்கையும் (Task Pane) தொடக்கிவிட வேண்டுமாயின்,

� கருவிகள் பட்டியலுக்குச் (Tools Menu) சென்று -
� அங்கு காணப்படும் தெரிவுகள் (Options) என்பதைச் சொடுக்கி -
� அங்கேயுள்ள தோற்றம் (View) என்ற தத்தலில் (Tab) -
� காட்டு (Show) என்ற உப பிரிவின் கீழ் -
� தொடங்கும்போதே கொள்பணி சாளர அடுக்கைத் தொடக்கு (Startup Task Pane) என்பதைச் சொடுக்கி, அடையாளமிட வேண்டும். (தேவையில்லையாயின் மீண்டும் இவ் அடையாளத்தை நீக்கவும் முடியும்)

மேலும், பவர் பாயின்ட் - Xp யில், நாம் செய்து கொள்ளக் கூடிய பிரதான விடயமாகிய தனிப்பயன் அசைவூட்ட வேலைகளுக்கு (Custom Animation) மிகவும் உறுதுணையாக இருப்பது இந்தக் கொள்பணி சாளர அடுக்கு (Task Pane) ஆகும்.

(அப்பாடாஹ்.. ஒருவாறு முகப்புத் தோற்றத்திலுள்ள விடயங்களின் - விவரணங்களைப் பார்த்து முடித்துவிட்டோம். அப்புறமென்ன, அடுத்ததை ஆரம்பிச்சிட வேண்டியதுதான்.. எதை என்று கேட்கிறீங்களா..? கீழே வாசியுங்கள் புரியும்)

வடிவமைத்தல் (Designing)

வடிவமைத்தல் எனும்போது, ஏற்கனவே நான் குறிப்பிட்ட படி - ஒரு திட்டமிடலை செய்துவிட்டு, அத்திட்டமிடலின் பாய்ச்சற் படத்திற்கேற்ப (Flowchart) தேவையான பட வில்லைகளை (Slides) இட்டு - அப் படவில்லைகளில் -

� ஆயத்தப் படம் (Clip Art)
� சொற்கலை (Word Art)
� மூல வாக்கியம் (Text)
� தன் வடிவம் (Auto Shapes)
� பிண்ணனி (Background)

போன்றவற்றை இட்டு, எங்களுடைய பவர் பாயின்ட் நிகழ்த்து வரைகலையினை (Presentation Graphics) அழகுற ஒழுங்கமைத்துக் கொள்வதையே குறிக்கும்.

இந்த வடிவமைத்தல் பற்றிய - மேலதிக விபரங்கள் மற்றும் உதாரண நிகழ்த்து வரைகலைகளுடன் (Presentation Graphics) அடுத்த தொடரில் வருகின்றேன்..

அதுவரை,
நட்புக்கு - மஸாகி
22.08.2006


.

மதி
22-08-2006, 06:14 AM
அருமையான தொடர்..! உங்கள் கட்டுரை மிகவும் பயனளிக்கக்கூடியது.. மேலும் தொடருங்கள்..மஸாகி!

ஓவியா
23-08-2006, 08:13 PM
மஸாகி சார்.

அருமையான பயனளிக்கக்கூடிய தொடர்......தொடரவும்

இணைய நண்பன்
23-08-2006, 09:12 PM
மிகவும் பிரயோசனமான முயற்சி.வாழ்த்துக்கள் நண்பா.

இளசு
23-08-2006, 09:29 PM
இழைமம் - அழகான சொல். பொருத்தமும் கூட.

மஸாகி, உங்கள் மாணவ ரசிகனின் பாராட்டுகளும்.. நன்றியும்.

பணி ஒரு சுகம் என்றால்.
மனம் விரும்பி செய்யும்
மன்றப் பதிவுகள் தனிசுகம்
என்ற உங்கள் மனதுக்கு வந்தனம்..

மஸாகி
26-08-2006, 04:00 AM
இழைமம் - அழகான சொல். பொருத்தமும் கூட.

மஸாகி, உங்கள் மாணவ ரசிகனின் பாராட்டுகளும்.. நன்றியும்.

பணி ஒரு சுகம் என்றால்.
மனம் விரும்பி செய்யும்
மன்றப் பதிவுகள் தனிசுகம்
என்ற உங்கள் மனதுக்கு வந்தனம்..

அவ்வப்போது - என் தமிழ்ப்படுத்திய
சொற்களை
ஆஹா.. பிரமாதம் என்றும்,
அடடே.. இப்படி இருந்திருந்தால்
இன்னமும் நலம் என்றும்
பாராட்டியும், பரிந்துரைத்தும் கொண்டிருக்கும்
தங்களுக்கு என் விஷேட நன்றிகள்..

நட்புக்கு - மஸாகி
26.08.2006

மஸாகி
26-08-2006, 04:01 AM
என்னை
உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும்
அனைவருக்கும்
என் இனிய நன்றிகள்..

நட்புக்கு - மஸாகி
26.08.2006

arul5318
28-08-2006, 05:43 PM
நண்பன் மஸாகி தாமதத்திற்கு மன்னிக்கவும்.

உண்மையிலே உங்களின் இந்த ஆக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது ஆரம்பத்தில் தலைசுத்தியது இப்போது நன்றாக விளங்குகிறது நண்பரே உங்களின் இந்த பரந்த மனதிற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள் அது மட்டுமல்ல உலக தமிழ் மக்களின் ஆசானாக இருப்பது பெருமைக்குரிய விடயம் பாராட்டத்தக்கது தமிழ் இப்போது மருவிக் கொண்டு வரும் காலகட்டத்தில் உங்களைப் போன்ற நல்லவர்களின் தொண்டு உலகிற்கு வேண்டும் உங்கள் ஆக்கங்கள் தொடர வேண்டும். இந்த பவர்பொயின்ருடன் நின்று விடாமல் உங்களின் ஆக்கங்கள் அனைத்து விடயங்களிலும் தொடர வேண்டும் நன்றி நண்பரே

bullu
14-10-2006, 05:58 PM
தமிழில் இதற்கு கூட மொழிபெயர்க்க முடியுமா என்ற கேள்விகளுக்கு முடியும் என்ற தன்னம்பிக்கை கொடுத்து அனைத்து வார்த்தைகளும் தமிழில் கொடுத்தமைக்காக ஆயிரம் நன்றிகள் உமக்கு என் அருமை தமிழா.

rjau
04-03-2007, 11:49 AM
உங்களின் ஆக்கம் பயன்னுள்ளதக உள்ளது

மஸாகி
08-03-2008, 07:26 AM
வேலைப் பழுவில்
தொலைந்து போன நான்
வந்துவிட்டேன் மீண்டும்
இனி கலக்... கலக்.. (புரியுதுள்ள..)

அனுராகவன்
09-03-2008, 07:45 AM
நல்ல தொடர் மஸாகி அவர்களே!!
எல்லொருக்கும் பயன்படக்கூடிய தகவல்..
தொடர்ந்து தாங்க..

மஸாகி
09-03-2008, 03:16 PM
நல்ல தொடர் மஸாகி அவர்களே!!
எல்லொருக்கும் பயன்படக்கூடிய தகவல்..
தொடர்ந்து தாங்க..

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி - முயற்சிக்கிறேன்..

kavitha
08-04-2008, 11:32 AM
உங்கள் மீள்வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி :)

மஸாகி
10-04-2008, 07:21 AM
உங்கள் மீள்வருகை குறித்து மிக்க மகிழ்ச்சி :)
நன்றி கவிதா..

அன்புரசிகன்
11-04-2008, 06:51 PM
MS Office ல் பல விடையங்கள் இலைமறைகாயாகவே இருக்கிறது. தேவைப்படும் போது தான் அவற்றை அறிய முயல்கிறோம். உங்களது இந்த கட்டுரை மிகவும் பயனாக அமைந்தது. தொடரலாமே....

மஸாகி
12-04-2008, 06:32 AM
MS Office ல் பல விடையங்கள் இலைமறைகாயாகவே இருக்கிறது. தேவைப்படும் போது தான் அவற்றை அறிய முயல்கிறோம். உங்களது இந்த கட்டுரை மிகவும் பயனாக அமைந்தது. தொடரலாமே....
உங்கள்
ஆர்வம் - என்னை
சிந்திக்க வைக்கிறது..
வேலைப் பழுக்களுக்கு மத்தியில்
ஒரு இடைவெளி கிடைத்தால்
வருவேன்.. உங்களுடன் மீண்டும் கலப்பதற்காக
- என் புதிய படைப்புக்களுடன்..

நட்புக்கு - மஸாகி
12.04.2008

பூஜா
26-04-2008, 11:49 PM
வணக்கம் அண்ணா பவர் பொயின்ரில் எடிற் செய்த படங்களை ஏப்படி சாதாரணமாக பாவிப்பது?
அதன் பொர்மோட்டை எப்படி மாற்றுவது தயவு செய்து அதைப் பற்றியும்
எழுதவும். நன்றி


பூஜா

ஓவியன்
28-04-2008, 10:39 AM
வேலைப் பழுவில்
தொலைந்து போன நான்
வந்துவிட்டேன் மீண்டும்
இனி கலக்... கலக்.. (புரியுதுள்ள..)

உங்கள் மீள் வருகைக்கு என் வரவேற்புக்களும் வாழ்த்துக்களும் மஸாகி..!!
தொடர்ந்து வந்து அசத்துங்கோ...!! :icon_b:

SathyaThirunavukkarasu
28-04-2008, 11:04 AM
இன்றுதான் இந்த திரியினுல் நுழைந்தேன். என்போன்ற அரைகுறையாக தெரிந்தவைகளுக்கு மேலும் தெரிந்துகொள்ளமுடிகிறது. மிகமிக நல்ல தொடர், எங்களுக்காக உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சம் ஒதுக்கி எழுதுன்களேன் தயவுகூர்ந்துகேட்கிறோம்

வெற்றி
30-04-2008, 12:35 PM
மிக நல்ல பயனுள்ள கட்டுரை தொடருங்களேன்

அறிஞர்
30-04-2008, 01:52 PM
இன்று தான் காண்கிறேன்.. கலக்கலா இருக்கிறது...
பாடம் நடத்த வாத்தியாரை காணோமே....
மாஸாகி எங்கிருந்தாலும் வரவும்..

மஸாகி
14-06-2008, 11:33 AM
வருகின்றார் மீண்டும் வாத்தியாரு..

உங்களுக்கெல்லாம்
ஒரு நல்ல செய்தி - அதாங்க Good News
அது என்னன்னா..
இன்னும் இரண்டே வாரத்திற்குள்
(கடவுளின் உதவியோடு)
இதன் 5ஆவது தொடருடன்
உங்களை சந்திக்கின்றேன்...

இப்போ சந்தோஷம்தானே..

நட்புக்கு - மஸாகி
14.06.2008

SathyaThirunavukkarasu
14-06-2008, 11:53 AM
மிக்க மகிழ்ச்சி