PDA

View Full Version : பாரத ரத்னா ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாட் பி



பரஞ்சோதி
21-08-2006, 05:19 AM
வாரனாசி : பிரபல ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாட் பிஸ்மில்லா கான் இன்று அதிகாலை 2.20 க்கு வாரனாசியில்
காலமானார்.

மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 91. தனது இனிமையான இசையால் உலக மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றிருந்த பிஸ்மில்லா கான், வயது காரணமான நோயால் கடந்த 17ம் தேதி வாரனாசியில் உள்ள ஹெரிடேஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர் காக்கும் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். உடல் நிலை ஓரளவு தேறி வந்த நிலையில் அவரது நிலை நேற்று நல்ல நிலைக்கு வந்தது. அப்போது அவர் வீட்டில் செய்யப்பட்ட அல்வா சாப்பிட ஆசைப்பட்டாராம்.

இந்நிலையில் அவருக்கு இன்று அதிகாலை 1.45 க்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை காப்பாற்ற டாக்டர்களின் முயற்சி
பலனளிக்காமல் அதிகாலை 2.20 க்கு காலமானார்.

ஒரு இசைக்குடும்பத்தில் மார்ச் 21, 1916 ல் பிறந்த பிஸ்மில்லா கான், வாரனாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசைக்கலைஞராக இருந்த அவரது மாமா அலி பக்ஸ் இடம் இசை பயின்றவர். பின்னர் ஷெனாய் இசையில் புகழ்பெற்ற இவர், உலக இசை பிரியர்களிடையே பெரும் மதிப்பை பெற்றார். சங்கீத் நாடக் அகாடமி அவார்ட், தான்சென் அவார்ட், பத்ம பூஷன் அவார்டுகளை பெற்றிருந்த இவருக்கு, 2001ல் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா
வழங்கப்பட்டது. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞராக இருந்தாலும் கடைசியில் ஆஸ்பத்திரிக்கு வரும் வரையில் இவர் சைக்கிள் ரிக்ஷாவைத்தான் பயன்படுத்தினாராம். இவருக்கு 5 மகன்களும் 3 மகள்களும் இருக்கிறார்கள்.

பரஞ்சோதி
21-08-2006, 05:21 AM
நமக்கு எல்லாம் மாபெரும் இழப்பு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

ஓவியா
21-08-2006, 01:45 PM
இசை மேதை உயர்திரு உஸ்தாட் பிஸ்மில்லா கான்னின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

vckannan
22-08-2006, 06:19 AM
நமக்கு எல்லாம் மாபெரும் இழப்பு.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

'சுர்' ஐயும் 'இறைவனையும்' இருக்கண்களாக கொண்டவர், ஒரு பிறவி மேதை , இசையையை இசைக்காகவே வாசித்தவர்,
மத்த படி பாரத ரத்னா முதல் பெரிய அவார்டு அங்கீகாரம் பல கிடைத்தாலும்... இதுக்கு ஆசைபடற சாதாரண மனித புத்தி இல்லாதவர்.

பல நூற்றண்டுக்கு ஒரு முறை பிறக்கும் இந்த கலைஞர் இப்ப கால சுருதியில் கலந்துட்டாரு.

எனது வருத்தங்களும் அனுதாபங்களும்:angry: :angry:

vckannan
22-08-2006, 08:49 AM
03. தலைசிறந்த ஷெனாய் இசைக்கலைஞர் பிஸ்மில்லா கான் மரணம் :

196
அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்: தலைவர்கள் இரங்கல்

காசி: உலகளவில் தலைசிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படும் ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கான், அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். "அவரது மறைவை ஒட்டி, ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும். அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பீகாரில் உள்ள தும்ரான் என்ற இடத்தில் 1916 மார்ச் 21ல் பிறந்தவர். உஸ்தாத் பிஸ்மில்லா கான். இசை குடும்பத்தில் பிறந்த அவர் ஷெனாய் இசையை, தனது மாமா மறைந்த அலிபக்ஸ் என்பவரிடம் கற்று தேர்ந்தார். அந்த கால கட்டத்தில் அலிபக்ஸ், காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் ஷெனாய் இசைக் கலைஞராக இருந்தவர். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளின் போது தான் ஷெனாய் இசை இடம் பெறும் என்ற பழங்கால சம்பிரதாயத்தை உடைத்து ஷெனாய் இசையை மேடையேற்றி, உலகளவில் புகழ் பெறச் செய்தது உஸ்தாத் தான். முஸ்லிமாக இருந்த போதிலும் கல்வி கடவுள் சரஸ்வதியின் பக்தராகவே உஸ்தாத் விளங்கி வந்தார். கங்கை கரை பகுதியில் ஷெனாய் இசையைக் கற்ற உஸ்தாத்துக்கு, இந்து தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைத்தது என்று சொல்வதுண்டு. இருப்பினும், தனது குருவும் மாமாவுமான அலிபக்சின் வேண்டுகோளின்படி, அந்த விஷயங்களை உஸ்தாத் எப்போதும் வெளியே சொன்னது இல்லை.

இந்தியாவுக்கு 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்து தேசியக் கொடியை டில்லி செங்கோட்டையில் ஜவகர்லால் நேரு ஏற்றிய போது, உஸ்தாத் ஷெனாய் இசை வாசித்தார் என்பது அவரது புகழை வெளிப்படுத்தும் விஷயமாகவே இன்றளவுக்கும் கூறப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், ஐரோப்பா, ஈரான், ஈராக், கனடா, மேற்கு ஆப்ரிக்கா, அமெரிக்கா, சோவியத் யூனியன், ஜப்பான், ஹாங்காங் என உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தலைநகர்களிலும் உஸ்தாத்தின் ஷெனாய் இசைக் கச்சேரி நடந்துள்ளது. தங்கள் நாட்டில் வந்து நிரந்தரமாக குடியேறும்படி பல நாட்டு தலைவர்களும் உஸ்தாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அமெரிக்காவில் காசியை போன்றதொரு நகரத்தை உருவாக்கித் தருவதாக கூட அவரிடம் சொல்லப்பட்டது உண்டு. ஆனால், அமெரிக்காவில் எனது கங்கை நதியை ஏற்படுத்த முடியாது என்று, அந்த கோரிக்கையை அடியோடு நிராகரித்தவர் உஸ்தாத். உலகளவில் பெரும் புகழ் பெற்று இருந்தாலும், உஸ்தாத் மிகவும் எளிமையான ஒரு வாழ்க்கையைத் தான் கடைப்பிடித்தார். கடைசி வரை சைக்கிள் ரிக்ஷாவையே தனது வாகனமாக பயன்படுத்தி வந்துள்ளார். சங்கீத நாடக அகடமி, பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் பெற்றுள்ள உஸ்தாத்துக்கு, கடந்த 2001ம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி காணப்பட்ட உஸ்தாத் பிஸ்மில்லா கானை, அவரது உறவினர்கள் கடந்த 17ம் தேதி காசியில் உள்ள ஹெரிட்டேஜ் மருத்துவமனையில் சேர்த்தனர். சில நாட்களில் நன்கு தேறி வந்த உஸ்தாத், டாக்டர்களை மகிழ்விக்க ஷெனாய் இசை வாசித்துள்ளார். இருப்பினும், நள்ளிரவு 1.45 மணிக்கு அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்தது. உடன் டாக்டர்கள், அவருக்கு அவசர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அதிகாலை 2.20 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத்தின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவையொட்டி, நேற்று ஒரு நாள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்தார். மேலும் அவரது உடல் அடக்கம், அரசு மரியாதையுடன் நடக்கும் என்று தெரிவித்தார். உ.பி., மற்றும் பீகார் மாநில அரசுகளும் உஸ்தாத் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளன. உ.பி.,யில் பள்ளி, கல்லுரி, அரசு அலுவலகங்களுக்கு நேற்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து உஸ்தாத் பிஸ்மில்லா கானின் உடல், பினியா பெக் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் பாட்மன் என்ற பகுதியிலுள்ள கர்பாலாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. காசியிலேயே இறக்க வேண்டும், இந்தியா கேட் முன்பு இசைக் கச்சேரி நடத்த வேண்டும் ஆகியவை உஸ்தாத்தின் ஆசையாக இருந்தது. இதில், காசியிலேயே இறக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறி விட்டதாக, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

பிஸ்மில்லா ஓட்டலும் மூடப்பட்டு விட்டது : ஷெனாய் இசைக் கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லா கானுக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள். தற்போது, அவரது குடும்பத்தில் 66 பேர் உள்ளனர். அனைவரும் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து அவரது கடைசி மகளின் கணவர் அப்துல் ஹசன் கூறுகையில், ""எங்கள் குடும்பத்துக்கு வருவாய் ஈட்டி தந்தவர் கான் சாகேப் தான். அவரது வருவாயைக் கொண்டு தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, உதவி கேட்டு யார் வந்தாலும் அதை தயங்காமல் செய்பவர் கான் சாகேப். யார் வீட்டுக்கு வந்தாலும் உணவு அருந்தி விட்டுத் தான் செல்வர். எங்கள் வீட்டை பிஸ்மில்லா ஓட்டல் என்றே அழைத்து வந்தனர். இந்தியாவின் தலைசிறந்த இசைக் கலைஞர் மட்டும் மறைந்து விடவில்லை. எங்களது பிஸ்மில்லா ஓட்டலும் ( உஸ்தாத்) நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது,'' என்று சோகத்துடன் குறிப்பிட்டார்.

நன்றி: தினமலர்

..

இளசு
23-08-2006, 10:07 PM
மறைந்த இசை மேதைக்கு இதய அஞ்சலி.

அறிஞர்
24-08-2006, 02:35 PM
அமெரிக்காவுக்கு அழைத்தும்.... செல்லாமல்..
கங்கை கரையில் காலத்தை கழித்த.... இசைமேதை....

இனியவன்
24-08-2006, 02:41 PM
மாபெரும் கலைஞரின் மறைவு.
இந்தியக் கலை உலகுக்குப் பேரிழப்பு.
அன்னாருக்கு மறுவுலக பேருகள் கிட்டப் பிரார்த்தனை.