PDA

View Full Version : கருக்கப்பட்ட பிஞ்சு உள்ளங்கள்



மயூ
16-08-2006, 03:11 AM
நன்றி புதினம்.காம்
முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது சிறிலங்கா இராணுவம் இன்று நடத்திய கொடூர விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 129 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் உள்ள செஞ்சோலை சிறார் இல்ல வளாகம் மீது சிறிலங்கா விமானப் படையின் 4 கிபீர் விமானங்கள் 16 குண்டுகளை இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் வீசின.

இருநாள் பயிற்சிக்காக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பாடசாலையில் தங்கியிருந்தனர்.

http://www.eelampage.com/d/p/2006/2006AUG/20060814004.jpg



இதில் 61 பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டனர். அப்பகுதியில் நோயாளர் காவு வாகனங்கள் சென்று-வந்து கொண்டிருக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை 75 ஆக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

செஞ்சோலை சிறார் இல்லத்தில் மொத்தம் 400 பாடசாலை சிறுமிகள் இருந்தனர்.

http://www.eelampage.com/d/p/2006/2006AUG/20060814002.jpg

33 சிறுமிகளின் சடலங்கள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. இதர சிறுமிகளின் சடலங்கள் கடுமையாக சிதைவடைந்துள்ளன.

காயமடைந்த 52 சிறுமிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 13 சிறுமிகள் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கும் 64 பேர் கிளிநொச்சி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், ஊடகவியலாளர்களை அழைத்து காலையில் தகவல் தெரிவித்தது. இச்சம்பவம் ஒரு கொடூரமான மிலேச்சத்தனமான தாக்குதல் என்று விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்புக்கும் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருக்கும் சம்பவ இடத்தைப் பார்வையிடுமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.




செஞ்சோலை சிறார் இல்லம் அமைந்துள்ள வல்லிபுனம் கிராம சேவகர் சிவராஜா இது குறித்து கூறியதாவது:

8 ஆண்டுகளுக்கு முன்னர் செஞ்சோலை சிறார் இல்லம் அமைக்கப்பட்டது. சர்வதேச நிறுவனங்களினால் நன்கு அறியப்பட்ட நிறுவனம். யுனிசெஃப் உள்ளிட்ட பல்வேறு ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளின் சார்பாக கருத்தரங்குகள் அங்கே நடைபெற்றுள்ளன.

போரில் உறவுகளை இழந்த பெண்களுக்கான இல்லமாக அது செயற்பட்டு வந்தது. செஞ்சோலை இல்லத்தையொட்டி பல மனிதாபிமான பணிகளுக்கான இல்லங்கள் செயற்பட்டு வருகின்றன.

"இனிய வாழ்வு இல்லம்", "காந்தி இல்லம்", "வசந்தம்" ஆகிய இல்லங்கள் அனைத்தும் செஞ்சோலை சிறார் இல்லத்தைச் சுற்றி 1 கிலோ மீற்றர் தொலைவுக்குள் அமைந்துள்ளன. இனிய வாழ்வு இல்லத்தில் உள்ள உடல் வலு குறைந்த சிறார்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என்றார் சிவராஜா

http://www.eelampage.com/d/p/2006/2006AUG/20060815007.jpg
சிறிலங்கா விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமிகளின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
http://www.eelampage.com/d/p/2006/2006AUG/20060815008.jpg


முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகள் ஏழு பேரின் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு பாடசாலை முதல்வர் அருட்தந்தை றொபின்சன் அடிகளார் தலைமை தாங்கினார்.

இதேபோல் விசுவமடு, தர்மபுரம் மகாவித்தியாலயங்களிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

விசுவமடுப் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு பாடசாலை முதல்வர் ஐ.கே. தவரட்ணமும்,

தர்மபுரம் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் சி.பூலோகராசாவும் தலைமை தாங்கினர்.


ஒட்டுசுட்டான் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு முதல்வர் செல்வரட்ணம் தலைமை தாங்கினார்.

ஏனைய பாடசாலைகளிலும் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.

மயூ
16-08-2006, 03:12 AM
சிறிலங்காவின் வான்தாக்குதலில் முல்லைத்தீவு பாடசாலை சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட இலங்கை வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார்.


நியூயோர்க்கில் கொபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் துஜரிக் கூறியதாவது:

கொழும்பு குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டமை மற்றும் வடக்கு-கிழக்கில் விமானப் படையின் குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் பெருந்தொகையில் கொல்லப்பட்டமை உள்ளிட்ட இலங்கை வன்முறைகளில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் என்ணிக்கை குறித்து கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளர் கேதீஸ்வரன் லோகநாதன் கொல்லப்பட்டமை குறித்தும் கொபி அனான் கண்டனம் தெரிவித்துள்ளார். கேதீஸ்வரன் குடும்பத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை கொபி அனான் வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மனிதாபிமான அமைப்புகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் கொபி அனான் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்சனைக்குரிய இடங்களிலிருந்து பொதுமக்கள் வெளியேற இருதரப்பும் அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை மனிதாபிமான உதவி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

யுத்தம் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் கூறியுள்ளது போல் இருதரப்பும் போர் நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்று ஸ்டீபன் துஜரிக் தெரிவித்தார்.

இதனிடையே பாப்பரசர் பெனிடிக்ட், இலங்கை மற்றும் ஈராக் வன்முறைகள் கைவிடப்பட வேண்டும் என்றும் அமைதி வெற்றி பெற உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Mano.G.
16-08-2006, 05:32 AM
செய்தியை கேட்டு, படித்த பிறகு
மனம் வலிக்கிரது,
பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு

கூடிய சீக்கிரமே விடிவுகாலம் வரும்
தம்பி மயூரேசன்.


மனோ.ஜி

vckannan
16-08-2006, 05:40 AM
செய்தியை கேட்டு, படித்த பிறகு
மனம் வலிக்கிரது,
பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு

கூடிய சீக்கிரமே விடிவுகாலம் வரும்
தம்பி மயூரேசன்.


மனோ.ஜி

ஆம்.
கனக்கின்றது கலங்காத மனம்

பிஞ்சுகளை சிதைக்கும் போர் சிக்கிரமே ஒழியட்டும். நல்ல காலம் வரட்டம் சிக்கிரமே அமைதி தவழட்டும்
வருத்தங்களுடன்

gragavan
16-08-2006, 06:19 AM
இந்தக் கொடுஞ் செயலைத் தொலைக்காட்சிச் செய்தியில் கேட்டேன். வயிறெரிந்தது. என்ன கொடுமை இது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!

sarcharan
16-08-2006, 08:01 AM
இந்தக் கொடுஞ் செயலைத் தொலைக்காட்சிச் செய்தியில் கேட்டேன். வயிறெரிந்தது. என்ன கொடுமை இது. என்று தணியும் இந்த சுதந்திர தாகம்!


உயிர்களிடத்தில் (மனிதனையும் சேர்த்துதான் என்பதை சிங்களத்தார் என்று அறிவாரோ)அன்பு வேணும் . தெய்வம் உண்மையெனத்தான் அறிய வேண்டும்.

ஓவியா
16-08-2006, 05:32 PM
கனக்கின்றது மனம்
படுகொலை செய்யப்பட்ட சிறுமிகளுக்கு கண்ணீர் அஞ்சலி.....

பரஞ்சோதி
16-08-2006, 05:54 PM
நெஞ்சு துடிதுடிக்குதடா இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்..

இச்செய்தியை கேட்டவுடன் ஈரக்குலையே அறுந்தது போல் ஆகிவிட்டது.

இக்கொடிய செயலை உலகம் கண்டிக்கவில்லை, இந்நேரம் உலகம் முழுவதும் தமிழர்கள் போராடி இருக்க வேண்டாமா, தமிழனின் மானம், சூடு, சுரணை எல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கிறதா என்று எண்ணத் தோணுகிறது.

செய்தி ஊடகங்கள் கூட இச்செய்தியை சரியான முறையில் தெரிவிக்கவில்லை. கிரிக்கெட் வீரர்கள் காயமில்லை என்பதையே தலலப்பு செய்தியாக சொன்னாங்களே தவிர இத்தனை குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டதை சொல்லவில்லை.

நாம் தான் இதனை பெரிய அளவில் கொண்டு போக வேண்டும், போராட்டம் வெடிக்க வேண்டும், தமிழர்கள் அனைவரும் இக்கொடிய செயலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். நண்பர்களே! இனி ஒருமுறை இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இளசு
16-08-2006, 10:13 PM
தாங்க முடியாத கொடிய நிகழ்வு.

இனியும் ஒரு உயிர் இப்படி பலியாகாமல் இருக்க என்ன வழி?
அதை என்ன விலை கொடுத்தேனும் மனித இனம் அடைய வேண்டும்.

பரஞ்சோதி
17-08-2006, 05:46 AM
அமெரிக்காவில் ஒரு அமெரிக்கன் செத்தால் எத்தன் முறை சிஎன்என் பிபிஸி கூப்பாடு போடுகிறது, எத்தனை தலைவர்கள் பேசுகிறார்கள், எத்தனை முறை நடவடிக்கை எடுக்கிறார்கள்.

தமிழர்கள் தினம் தினம் சாகிறார்கள், கொடுமையாக கொல்லப்படுகிறார்கள். தமிழ்னத் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் என்ன செய்கிறார்கள், இலங்கை தமிழ் நண்பர்கள் என்ன செய்கிறார்கள். இது போன்ற கொடுமைகளை தொடர்ந்து இணையத்தின் வழியாக எழுதி உலகம் முழுவதும் தெரியபடுத்த வேண்டாமா?

இத்தனை பெரிய படுகொலை செய்து இலங்கை அரசாங்கம் எத்தனை மெத்தனமாக இருக்குது, அத்துடன் பலிவாங்குவார்கள் என்று பள்ளிக்கு விடுமுறையாம், முட்டாள்தனமாக இருக்கிறது. படுகொலை செய்தியை எப்படி எல்லாம் மூடி மறைக்க புதிய செய்திகள் உருவாக்குகிறார்கள். நம்ம செய்தி ஊடகங்களும் துணை போவது வேதனை.

இளசு அண்ணா சொன்னது போல் இனியும் இது போன்ற கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

மயூ
17-08-2006, 06:00 AM
அட நமக்காகக் கலங்க உறவுகள் வடக்கே இருக்கின்றன என மீண்டும் ஒரு தடவை காட்டிய உறவுகளுக்கு நன்றி.......
எனக்கு இது பற்றி கேட்டவுடன் என்ன செய்வது பேசுவதா? அழுவதா? எதுவுமே புரியவில்லை.....
எவ்வளவுகாலத்திற்குத்தான் காலம் பதில் சொல்லும் என்று விட்டு இருப்பது!!!!
எனது தங்கையோ அக்காவோ இப்படி பலியாகியிருந்தால் எப்படி இருக்கும்???. இவ்வகையில் சிந்தித்தால் அதன் வலி நமக்குப் புரியும்.

இணைய நண்பன்
17-08-2006, 06:12 AM
பூப்போன்ற சிறு பிள்ளைகளின் படுகொலை மனதை அதிர வைக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

மயூ
17-08-2006, 06:57 AM
பூப்போன்ற சிறு பிள்ளைகளின் படுகொலை மனதை அதிர வைக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!
http://www.themetonline.org/worship/images/worshipHands.jpg
இனி நாம் செய்யக் கூடியதெல்லாம் அந்த பச்சிளம் உள்ளங்கள் சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதே!

Mano.G.
17-08-2006, 07:08 AM
நேற்று சன் தொலைகாட்சி செய்தியில்,
இலங்கை அரசின் பேச்சாளரின் அறிக்கையில்
தங்கள் இராணுவம் புலிகளின் கூடாரத்தைதான்
குண்டுகள் போட்டு அழித்ததாகவும் எந்த ஒரு
பாடசாலையையும் தாங்கள் தாக்கவில்லை எனவும்
கூறினதை கண்டேன்.

இந்த அறிக்கை மேலும் நம்மை கோபமுர செய்கிறது.


மனோ.ஜி

தீபன்
17-08-2006, 11:40 PM
வணக்கம் நண்பர்களே,
வெற்றிகரமாக ஏழாவது நாளாக வெளி உலகோடு முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் யாழ் மண்ணிலிருந்து கிடைக்கும் அரை மணினேர மின்சாரத்தில் இப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்.

61 சிறுமியரின் மிலேச்சத்தனமான படுகொளைக்கு உங்களின் அனுதாபங்கள் சற்றே ஆறுதலை தருகிறது. ஆனாலும், மிகவிரைவிலேயே இலங்கை அரசு(?) இதற்கான விளைவை அறுவடை செய்யப்போகிறதென்பது உறுதி.

அகோரமான வெடிச்சத்தங்களின் மத்தியிலேயே இதை பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இன்னமும் சில நாட்களில் நானும் இடம்பெயரவேண்டி ஏற்படக்கூடும். எனவே, சந்தர்ப்பம் இருந்தால் சற்றே நாட்களின் பின் சந்திப்போம்.

நன்றி.

முற்றுகைக்குள்ளிருந்து தீபன்.

மயூ
18-08-2006, 08:45 AM
வணக்கம் நண்பர்களே,
வெற்றிகரமாக ஏழாவது நாளாக வெளி உலகோடு முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் யாழ் மண்ணிலிருந்து கிடைக்கும் அரை மணினேர மின்சாரத்தில் இப்போது உங்களை தொடர்பு கொள்கிறேன்.

61 சிறுமியரின் மிலேச்சத்தனமான படுகொளைக்கு உங்களின் அனுதாபங்கள் சற்றே ஆறுதலை தருகிறது. ஆனாலும், மிகவிரைவிலேயே இலங்கை அரசு(?) இதற்கான விளைவை அறுவடை செய்யப்போகிறதென்பது உறுதி.

அகோரமான வெடிச்சத்தங்களின் மத்தியிலேயே இதை பதிவுசெய்துகொண்டிருக்கிறேன். இன்னமும் சில நாட்களில் நானும் இடம்பெயரவேண்டி ஏற்படக்கூடும். எனவே, சந்தர்ப்பம் இருந்தால் சற்றே நாட்களின் பின் சந்திப்போம்.

நன்றி.

முற்றுகைக்குள்ளிருந்து தீபன்.

தீபன் உமக்காக இறைவனை வேண்டுகின்றேன்!
எனது உறவினர் (கிட்டத்தட்ட அனைவரும்) முற்றுகைக் குள்ளேயே உள்ளனர்!
உங்களுக்கு எதுவும் ஆகாமல் இருப்பதற்கான வழிவகையில்லாமல் தலைவர் இப்படி எதுவும் ஆரம்பித்துஇருக்கமாட்டார்!

பரஞ்சோதி
18-08-2006, 12:10 PM
தம்பி மயூரேசன் உற்றறர் உறவினர்கள் மற்றும் தீபன் மற்றும் அனைத்து நம் தமிழின உற்றார் உறவினர்களும் பத்திரமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.