PDA

View Full Version : 5. லாலி லாலி லாலி லாலி



gragavan
14-08-2006, 07:18 AM
எஸ்.பி.பீ தொடர்ந்து சொன்னார். "சான்சுக்காக விஸ்வநாதன் சார் கிட்ட போனப்போ ஒடனே என்னைய ஏத்துக்கல. ரெண்டு வருஷம் கழிச்சுதான் வாய்ப்பு குடுத்தாரு. ஏன்? நான் ஆந்திரா கொல்ட்டி. என்னோட தமிழ் சரியாயிருக்காது. அதுனாலதான் ரெண்டு வருஷம் கழிச்சு வாய்ப்பு கொடுத்தார். இந்த விஷயத்துல அவரு சார் ரொம்ப ஸ்டிரிக்ட். இந்தக் கண்டிப்பு எல்லா இசையமைப்பாளர் கிட்டயும் இருக்கனும்"

இந்தக் கருத்தை அனைவருமே வலியுறுத்தினார்கள். மெல்லிசை மன்னராகட்டும். பி.சுசீலாவாகட்டும். எஸ்.ஜானகியாகட்டும். மலேசியா, எஸ்.பி.பீ, மாணிக்க விநாயகமாகட்டும், பி.பீ.ஸ்ரீநிவாஸ் ஆகட்டும். அனைவரும் வலியுறுத்தியது பாடல்களில் முறையான தமிழ் உச்சரிப்பு.

உபசரணைகளும் இடைவேளையும் முடிந்த பின் ஜானகி அவர்கள் பாடத் துவங்கினார்கள். டிக் டிக் டிக் என்ற படத்தில் வரும் "இது ஒரு நிலாக் காலம்" பாடலைப் பாடினார். திரையில் ஸ்வப்னா என்ற நடிகை நடித்த பாடல் அது. மேக்கப் இல்லாத மாதவியையும் ராதாவையும் இந்தப் பாட்டில் பார்க்கலாம் (அல்லது பயப்படலாம்). அதைத் தொடர்ந்து ஜெயப்ரதாவிற்காக ஏழைஜாதி படத்தில் பாடிய "அதோ அந்த நிதியோரம்" என்ற பாடலைப் பாடினார்.

ஒரு பாடலுக்கு மெல்லிசை மன்னர் திரும்பத் திரும்ப மெட்டுப் போட்டும் திருப்தி இல்லாமல் ஆறு மாதங்கள் கழித்து நிறைவான ஒரு மெட்டுப் போட்டாராம். அந்தப் பாடலைத்தான் அடுத்து சுசீலா பாடினார். ஆம். நமது நெஞ்சம் மறக்காத "நெஞ்சம் மறப்பதில்லை" பாடல்தான் அது.

என்னுடைய நண்பன் ஒருவன் வங்காளத்தைச் சேர்ந்தவன். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறான். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பெல்லாம் என்னுடைய அலுவலகக் கணிணியில் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பாட்டுக் கேட்காமல் வேலை செய்ததே இல்லை. அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பாடல் மட்டும் அவனை மிகவும் கவர்ந்தது. அந்தப் பாடலை வருகையில் மட்டும் அமைதியாக வேலைகளைப் போட்டு விட்டு பாட்டு கேட்பான். பாட்டு முடிந்த பிறகே வேலையைத் தொடர்வான். இசைஞானி இளையராஜாவின் இசையில் வந்த "வரம் தந்த சாமிக்கு" என்ற பாடல்தான் அது. சுசீலா அவர்களின் தாலாட்டும் குரலில் சாமியே தூங்கும் பொழுது...இவன் எம்மாத்திரம்! அந்தப் பாடலைத் தெலுங்கில் "வடபத்ர சாயிக்கி" என்று மேடையில் பாடினார் பி.சுசீலா. கூட்டம் அமைதியாக ரசித்தது. அந்தப் பாட்டு முடிந்ததும் நிகழ்ச்சிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் வந்திருப்பதாக அறிவித்தார்கள்.

மனதோடு மழைக்காலம் என்று திரைப்படம் வெளிவரயிருக்கிறது. அதில் கார்த்திக்ராஜாவின் இசையில் கௌசிக் என்று ஒரு பாடகர் அறிமுகமாகிறார். அவரும் ஜானகியும் சேர்ந்து அடுத்து பாடலாக "அடி ஆத்தாடீஈஈஈஈஈஈஈஈஈஈ இளமனசொன்னு றெக்க கட்டிப் பறக்குது" என்று பாடி நம்மைப் பறக்க வைத்தார்கள். புதுப்பாடகராக இருந்தாலும் கௌசிக்கின் குரல்வளம் சிறப்பாக இருந்தது. அவர் நன்றாக வரவேண்டும் என்று ஜானகி வாழ்த்தினார்.

அமைந்த பாடல் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட பாடகருக்கென்றே அமைந்த பாடலாக இருக்கும். வரம் தந்த சாமிக்கு பாடல் பி.சுசீலாவுக்கு அமைந்த பாடல் என்றே சொல்லலாம். அதே போல ஜானகிக்கு அமைந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. மெல்லிசை மன்னர் மெட்டமைத்து இசைஞானி இசைக்கருவி கோர்த்த அருமையான பாடல் அது. ஆம். "ஊரு சனம் தூங்கிருச்சே" என்ற பாடல்தான். ஜானகிக்கென்றே அமைந்த பாடல். மெல்லிசை மன்னரின் பிரத்யேக சங்கதிகள் அமைந்த அந்தப் பாடலை ஜானகி மிகவும் லகுவாகப் பாடினார். கூட்டம் மிகவும் ரசித்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

இத்தனை பாடல்கள் பாடப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடிகர் ஜெயராம் ஒரு மலையாளப் பாடலைக் கேட்டார். உடனே ஜானகி "கானக்குயிலே" என்ற மலையாளப் பாட்டின் சிறுபகுதியைப் பாடினார்.
"முத்துமணி மால...என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட....!" சின்னக்கவுண்டர் படத்தில் இடம்பெற்ற பாடலை பி.சுசீலாவும் சங்கரும் இணைந்து பாடினார்கள். A.M.ராஜா-ஜிக்கி கிருஷ்ணவேணி அவர்களின் புதல்வரான சந்திரசேகருடன் இணைந்து அடுத்த பாடலாக "வாடிக்கை மறந்ததும் ஏனோ" என்ற கல்யாணப் பரிசு பாடலைப் பாடினார் சுசீலா.

தொடர்ந்தது ஜானகியின் குரலில் "முதல்வனே முதல்வனே முதல்வனே".
அடுத்த பாட்டுக்கு அரங்கத்தில் அங்கெங்கு எழுந்து ஆடினார்கள். லலிலலிலலோ என்று தொடங்கிய ஜானகி மூச்சு விடச் சிரமப் பட்டார். உடனே மைக்கை விட்டு ஓடிச் சென்று மூச்சுமருந்து எடுத்துக் கொண்டு வந்து பாடலைத் தொடர்ந்தார். "மச்சானப் பாத்தீங்களா" பாடலைத்தான். இளையராஜாவிற்கு திரைவாழ்வு தந்த பாடல். ஜானகி அவர்களுக்கும் புகழைத் தந்த பாடல். எல்லோரும் இந்தப் பாடலை ரசித்தார்கள். பலர் விசிலடித்துக் கொண்டு ஆடினார்கள். மகிழ்ச்சியோடு பாடி முடிந்ததும் அதே பாடலைச் சோகமாகப் பாடினார் ஜானகி.

அடுத்து இன்னொரு இளையராஜா பாடல். ஆனால் இந்த முறை பி.சுசீலா. வைதேகி காத்திருந்தாள் படத்திலுள்ள "ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு" பாடலைப் பாடினார். முடிந்ததும் பாடகி மஹதி மேடையேறி இசைக்குயில்கள் இருவருக்கும் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டார். திரையிசைத் திலகம் இசையில் பாடிய "உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" பாடலை அடுத்து பாடினார் பி.சுசீலா. நேரம் மிகவும் ஆகியிருந்தது. பத்தரை மணி. அடுத்த நாள் திங்கள். அலுவலகம் போக வேண்டிய அவசரம். நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம். கடைசியாக எஸ்.ஜானகி அவர்கள் "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்" என்ற மெல்லிசை மன்னரின் பாடலைப் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தாராம். மொத்தத்தில் மிகவும் நிறைவான நிகழ்ச்சி.

அன்புடன்,
கோ.இராகவன்

இனியவன்
14-08-2006, 12:59 PM
ராகவனின் தொகுப்பு நிகழ்ச்சியை நேரில் பார்த்ததைப் போன்ற உணர்வைத் தந்தது.நன்றி.வாழ்த்துகள்.

இளசு
14-08-2006, 09:42 PM
அடடா முடிந்துவிட்டதே -- நிகழ்ச்சியும்... உங்கள் வர்ணனைக்கட்டுரையும்...

ஏங்கவைக்கிறது ராகவன்..

வரம் தந்த சாமிக்கு..
ஊரு சனம் தூங்கிடுச்சி...


அமைந்த பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துகள் அருமை.

சுசீலாம்மா பாடிய தமிழ்ப்பாடல்களிலேயே அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு என்ன?

gragavan
15-08-2006, 04:20 AM
அடடா முடிந்துவிட்டதே -- நிகழ்ச்சியும்... உங்கள் வர்ணனைக்கட்டுரையும்...

ஏங்கவைக்கிறது ராகவன்..

வரம் தந்த சாமிக்கு..
ஊரு சனம் தூங்கிடுச்சி...


அமைந்த பாடல்கள் பற்றிய உங்கள் கருத்துகள் அருமை.

சுசீலாம்மா பாடிய தமிழ்ப்பாடல்களிலேயே அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு என்ன?அது மிகக் கடினம் இளசு. எத்தனையோ பாடல்களைக் கேட்டுக் கிறங்கியிருக்கிறேன். அதில் ஒன்று மட்டுமென்றால் மிகக் கடினம். மிகமிகக் கடினம். முயற்சி செய்து பார்த்தேன். படபடவெனப் பல பாடல்கள் வருகின்றன. குறிப்பிட்ட ஒன்றை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

பரஞ்சோதி
15-08-2006, 07:03 AM
அண்ணா,
அருமையான பதிவு. எப்போ அடுத்த பதிவு வரும் என்று நினைக்க வைத்த பதிவு.

அப்போ விரைவில் பரமார்த்த குரு பதிவும் வருமுன்னு சொல்லுங்க :)

gragavan
16-08-2006, 04:34 AM
பரமார்த்த குருவும் வருவார் என்றே நம்புகிறேன். தொடக்ககட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

vckannan
16-08-2006, 04:45 AM
அது மிகக் கடினம் இளசு. எத்தனையோ பாடல்களைக் கேட்டுக் கிறங்கியிருக்கிறேன். அதில் ஒன்று மட்டுமென்றால் மிகக் கடினம். மிகமிகக் கடினம். முயற்சி செய்து பார்த்தேன். படபடவெனப் பல பாடல்கள் வருகின்றன. குறிப்பிட்ட ஒன்றை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.

உண்மைதான். நிரம்பி விட்ட தேன்கிண்ணத்தில் எந்த துளிக்கு சுவை அதிகம் என்றால் என்ன சொல்வது.சுசிலாஅவர்களின் பாடல்களும் அப்படித்தான்.

வயிற்றில் சிறிது எரிச்சலுடன் நிறைய புகைவரவைத்த அருமையான இந்த தொடர் நிறைந்ததில் வருத்தமும் நிம்மதியும் கிடைத்தது.(ஆனலும் அநியாயம் அந்த சஸ்பென்ஸுகள்):mad: ;)

மற்றுமொரு தொடர் எப்பங்க ? சீக்கிரம் தாங்க :rolleyes:

ஓவியா
16-08-2006, 06:12 PM
நன்றி ராகவன்....

அருமையான வர்ண்ணையுடன் நாங்களே நிகழ்ச்சியை நேரில் கண்டது போல் அல்லவா ஐந்து பாகங்களையும் தந்துள்ளீர்கள்.....நன்றி

நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம்......
எதோ...இப்பதான் தெரியுது
அவங்க பெயர் கமலாவா.....:D :D

rajeshkrv
16-08-2006, 08:32 PM
விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நேற்று ஒளிபரப்பியது
அதை பதிவு செய்து அனுப்ப்ய நண்பர் கலை அவர்களுக்கு நன்றி
இதோ பார்த்து மகிழுங்கள்
http://pssongs.tamilinfo.net/rajavin_paarvai.wmv
http://pssongs.tamilinfo.net/anubhavam_pudhumai.wmv
http://pssongs.tamilinfo.net/unnai_kaanatha_kannum.wmv
http://pssongs.tamilinfo.net/thedinen_vandhadhu.wmv
http://pssongs.tamilinfo.net/paartha_gnayabagam.wmv
http://pssongs.tamilinfo.net/kaalai_thendral.wmv

ஓவியா
16-08-2006, 09:03 PM
ராஜெஷ்
ரொம்ப நன்றி.

சுபர்ரா இருக்கு....
ஆமாம். .........ஜானகி பாடியது இல்லையா

gragavan
17-08-2006, 07:35 AM
நன்றி ராகவன்....

அருமையான வர்ண்ணையுடன் நாங்களே நிகழ்ச்சியை நேரில் கண்டது போல் அல்லவா ஐந்து பாகங்களையும் தந்துள்ளீர்கள்.....நன்றி

நானும் கூட வந்த கமலாவும் கிளம்பி விட்டோம்......
எதோ...இப்பதான் தெரியுது
அவங்க பெயர் கமலாவா.....:D :Dஅம்மா தாயே...அவங்களுக்கு என்னோட அம்மா வயசு. கமலா ஒரு நல்ல நண்பர். முதல் பதிவுல சொல்லியிருந்தேனே...படிக்கலையா?

ஓவியா
17-08-2006, 03:56 PM
அம்மா தாயே...அவங்களுக்கு என்னோட அம்மா வயசு. கமலா ஒரு நல்ல நண்பர். முதல் பதிவுல சொல்லியிருந்தேனே...படிக்கலையா?



அம்மா வயசுல ஒரு நல்ல நன்பர்......:p :p

மன்னிக்கவும் மக்கா ......:D :D :D

அதேன்னா அம்மா தாயே........:D :D

aren
18-08-2006, 05:22 AM
சுசீலாம்மா பாடிய தமிழ்ப்பாடல்களிலேயே அவர்களுக்கு மிகவும் பிடித்த பாட்டு என்ன?

எனக்கு மிகவும் பிடித்தது "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து". மிகவும் அருமையான பாடல். அவருக்கும் இந்தப்பாடல் நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

rajeshkrv
19-08-2006, 10:26 PM
இதோ ஜானகி பாடிய பாடல்களும்
http://pssongs.tamilinfo.net/macnaana_paatheengala.wmv
http://pssongs.tamilinfo.net/adho_antha_nadhiyoram.wmv
http://pssongs.tamilinfo.net/adi_aathaadi.wmv
http://pssongs.tamilinfo.net/chinna_chinna.wmv

ஓவியா
21-08-2006, 02:00 PM
நன்றி ராஜேஷ்...

அருமையான நிகழ்ச்சி.....

pradeepkt
22-08-2006, 06:22 AM
அருமை அருமை.
காணக் கிடைக்காதவர்கள் ராகவனின் பதிவைக் கண்டு வயிற்றெரிச்சல் மட்டுமே பட்டிருக்க வேண்டியது. ராஜேஷ் நல்ல வேளையாகச் சுட்டிகள் கொடுத்துப் பாலை வார்த்தார்...

gragavan
22-08-2006, 09:18 AM
அருமை அருமை.
காணக் கிடைக்காதவர்கள் ராகவனின் பதிவைக் கண்டு வயிற்றெரிச்சல் மட்டுமே பட்டிருக்க வேண்டியது. ராஜேஷ் நல்ல வேளையாகச் சுட்டிகள் கொடுத்துப் பாலை வார்த்தார்...அட என்ன பிரதீப்பு...அத்தோட விட்டுட்டீங்க. போன வாரத்துக்கு முந்துன வாரக் கடைசீல நீங்க சென்னைக்கு வந்தீங்க பாத்தீங்களா...அந்த வெள்ளிக்கெழமை ராத்திரி சென்னை காமராஜர் அரங்கத்துல மொத வரிசையில உக்காந்து பி.சுசீலா அவங்க கச்சேரியை ரசிச்சேன். :)

இளசு
23-08-2006, 10:48 PM
எனக்கு மிகவும் பிடித்தது "சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து". மிகவும் அருமையான பாடல். அவருக்கும் இந்தப்பாடல் நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

அன்பின் ஆரென்

இது சுசிலாம்மாவுக்கு தேசிய விருது வாங்கித்தந்த பாடல்களில் ஒன்றாச்சே..

நான் கேட்டது, சுசீலாம்மாவுக்கே மிக மிக பிடித்த அவர்கள் பாடிய பாட்டு...