PDA

View Full Version : முகவை மைந்தன் "கோ.கார்த்திகேயன்"sayalkarthik
12-08-2006, 08:47 AM
தாய் மொழி ஓர் இனத்தின் அடையாளம்..............!
தாய் மொழி ஓர் சரித்திரத்தின் தொடர்ச்சி.............!
ஆகவே தமிழரிடம் தமிழில் பேசுவேன்..................!

என்னைப் பற்றி சில வரிகள்:
=====================

நான் கோ.கார்த்திகேயன், இராமனாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி எனும் சிறப்பு ஊராட்சியிலுள்ள ஒரு சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

எனது பெற்றோர் பெயர்: க.கோட்டைச்சாமி செட்டியார், கோ.தெய்வசுந்தரி
எனது இளைய சகோதரிகள்: கோ.கற்பகவள்ளி, கோ.முனிப்பிரியா.

பள்ளிக்கல்வியை சொந்த ஊரிலும், இளங்கலை பொறியியலை(மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்) இராமனாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை பொறியியலை(மின் அமைப்பியல்) சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்திலும் பயின்று (உயர் முதல் வகுப்பில் தேர்ச்சி) இப்பொழுது சென்னையிலுள்ள இந்தியத்தொழில் நுட்பக்கழகத்தில் மின் தரவியல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்............

mukilan
12-08-2006, 08:57 AM
வாருங்கள் கார்த்திக். விரிவான அறிமுகத்திற்கு நன்றி. எங்கள் ஊர்ப்பக்கம் வேறு. இரட்டிப்பு மகிழ்ச்சியே. மன்றத்தில் உங்கள் ஆக்கங்களை இடுங்கள்.

பாரதி
12-08-2006, 11:34 AM
சாயல் கார்த்திக் அவர்களை தமிழ்மன்றத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன். உங்கள் சாயல் தமிழ்மன்றத்தில் படியும் வகையில் உங்கள் படைப்புகள் அமைய வாழ்த்துகிறேன்.

பரஞ்சோதி
13-08-2006, 05:58 AM
அன்பர் சாயல்கார்த்திக் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என வரவேற்கிறேன்.

உங்கள் பதிவுகளை படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன்.

இனியவன்
13-08-2006, 11:50 AM
அடடா சாயலின் அறிமுகம் அசத்தல்.
வாருங்கள் கார்த்திக்
உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறோம்.

இளசு
13-08-2006, 08:27 PM
வருக நண்பர் கார்த்திகேயன் அவர்களே,

அருமையான அறிமுகம். அதிகம் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.
ஆர்வமாய் வலம் வாருங்கள். வாழ்த்துகள்.

மதி
14-08-2006, 03:34 AM
நண்பரே..
வரவேற்புகள்..!

vckannan
14-08-2006, 05:24 AM
வாங்க கார்த்திக் வாங்க
உங்களை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி

sarcharan
14-08-2006, 06:10 AM
வருக கார்த்திக் ,:)
அறிமுகம் அருமை. தமிழ்மன்றத்தில் உங்கள் படைப்புகள் அமைய ஆர்வமாய் வாழ்த்துகிறேன்.
வலம் வாருங்கள். வாழ்த்துகள்.

இணைய நண்பன்
14-08-2006, 04:20 PM
வித்தியாசமான அறிமுகம்.பாராட்டுக்கள் நண்பா! புதுமையான தவல்களுடன் மன்றத்தை அலங்கரிப்பீர் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள்

மயூ
16-08-2006, 03:19 AM
தமிழ்ப் பற்றாளர் என்றால் நீங்கள் எனக்கு உற்ற நண்பராகப் போவது மட்டும் உறுதி!
வருக வருக தமிழ் நேசனே!

ஓவியா
16-08-2006, 06:22 PM
வாருங்கள் கார்த்திக். விரிவான அறிமுகத்திற்கு நன்றி. எங்கள் ஊர்ப்பக்கம் வேறு. இரட்டிப்பு மகிழ்ச்சியே. மன்றத்தில் உங்கள் ஆக்கங்களை இடுங்கள்.

முகி,
இரட்டிப்பு மகிழ்ச்சினா.........
அதுக்கு இரண்டு போஷ்டிங்கா...:D :D :D

ஓவியா
16-08-2006, 06:37 PM
புதிய நண்பர் கார்த்திகேயன்னை
வருக வருக வென்று வரவேர்கின்றேன்...

சிக்கனமான, உண்மையான அறிமுகம்..
தங்க தேர்ச்சி கிடைத்தமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்....

தங்களின் படைப்பினை சிக்கனமில்லாமல் எங்களுக்கு அள்ளி வழங்கவும்......ஆவலாய் உள்ளோம்....

சுஜா
08-09-2008, 06:04 PM
தாய் மொழி ஓர் இனத்தின் அடையாளம்..............!
தாய் மொழி ஓர் சரித்திரத்தின் தொடர்ச்சி.............!
ஆகவே தமிழரிடம் தமிழில் பேசுவேன்..................!

என்னைப் பற்றி சில வரிகள்:
=====================

நான் கோ.கார்த்திகேயன், இராமனாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சாயல்குடி எனும் சிறப்பு ஊராட்சியிலுள்ள ஒரு சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

எனது பெற்றோர் பெயர்: க.கோட்டைச்சாமி செட்டியார், கோ.தெய்வசுந்தரி
எனது இளைய சகோதரிகள்: கோ.கற்பகவள்ளி, கோ.முனிப்பிரியா.

பள்ளிக்கல்வியை சொந்த ஊரிலும், இளங்கலை பொறியியலை(மின்னியல் மற்றும் மின்னணுப் பொறியியல்) இராமனாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியிலும், முதுகலை பொறியியலை(மின் அமைப்பியல்) சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்திலும் பயின்று (உயர் முதல் வகுப்பில் தேர்ச்சி) இப்பொழுது சென்னையிலுள்ள இந்தியத்தொழில் நுட்பக்கழகத்தில் மின் தரவியல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்............

அட நம்ம எரியா.
அண்ணா நானும் கடலாடிதான் .
சரி நம்ம மன்வாசனையூடு எழுதுங்க .

mukilan
08-09-2008, 07:09 PM
அப்படியே கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், இளஞ்செம்பூர், மாரியூர், ஈருவேலி, நரிப்பையூர், வாலிநோக்கம், மீமிசல்...... இருங்க மூச்சு வாங்குது. யாராச்சும் இருக்கீகளா மக்கா...:D:eek:?

Narathar
09-09-2008, 03:09 AM
அட நம்ம எரியா.
அண்ணா நானும் கடலாடிதான் .
சரி நம்ம மன்வாசனையூடு எழுதுங்க .

2006 இல் வந்து ஒரு அறிமுகம் போட்டுப்பொனவர் இந்தப்பக்கமே காணலை, உங்க ஊர்க்காரர் தானே கொஞம் என்னாச்சு ஏதாச்சுன்னு விசாரிச்சுப்பாருங்க........

நாராயணா!!!!

அப்படியே கீழச்செல்வனூர், மேலச்செல்வனூர், இளஞ்செம்பூர், மாரியூர், ஈருவேலி, நரிப்பையூர், வாலிநோக்கம், மீமிசல்...... இருங்க மூச்சு வாங்குது. யாராச்சும் இருக்கீகளா மக்கா...:D:eek:?

இதோ முகிலன் கனடாவிலிருந்து பஸ் விடப்போகிறார்.... எல்லோரும் ஓடிவாங்க மக்கா..... :icon_b:

lolluvathiyar
12-09-2008, 02:29 PM
வாங்க கார்த்திக் வரவேற்கிறேன் இவ்வளவு விரிவான அறிமுகமா குடும்பம் முதல் கொன்டு அறிமுகபடுத்துகிறார்.
சரி நானும் அப்படி அறிமுகபடுத்துகிறேன்.

என் பெயர் லொள்ளுவாத்தியார்
ஒரே மனைவி அவள் பெயர் திருமதி லொள்ளுவாத்தியார்
மகன் பெயர் லொ. லொள்ளுபுத்திரன்
மகன் பெயர் லொ. லொள்ளுமகள்
தந்தை பெயர் லொள்ளப்பான்
தாயார் பெயர் லொள்ளம்மாள்

எப்படி இருக்கு என்னுடைய அறிமுகமும்

அனுராகவன்
07-10-2008, 11:22 AM
வாருங்கள் புதிய வரவே!!
என் சிரம் தாழ்த்த வணக்கங்கள்..
வாருங்கள் மகிழுங்கள்..