PDA

View Full Version : உன் பெயர் சொல்லும்!



நிலா
24-04-2003, 11:08 PM
விதியது சரியில்லையென்றால்
நின் விரல் கூட விரோதம் செய்யும்!
தோல்வியது உன்னிலமைந்தால்
தோழனையும் தேடல் வேண்டும்!
முடிந்தவரை முயன்றுவா முடிவைப் பார்ப்போம்!

காலமது உனக்குவந்தால்
காலன் கூட காத்திருப்பான்!
இகழ்ச்சிமழை பொழிந்தாலும்
நின் இயக்கமது தொடரட்டும்!
அமைதியாக இருந்துபார்
வாழ்வின் அர்த்தமுனக்குப் புரிந்துவிடும்!

சாத்தியம் ஆகாதவற்றிற்கு
சாத்திரங்கள் பார்த்தென்ன பயன்?
சத்தியத்தை நம்பிவிடு
சரித்திரம் உன் பெயர் சொல்லும்!

குமரன்
25-04-2003, 12:15 AM
வாழ்க்கைக்கு
வழிகாட்டும் கவிதை....

அருமை...பாராட்டுகள்...நிலா.


-குமரன்.

Narathar
25-04-2003, 05:28 AM
நிலா பாராட்டுக்கள்!!!
(விமர்சனம் எழுதிவிட்டேன்)

இளசு
09-05-2003, 06:11 PM
கவிநிலவின் முழுவீச்சு....
அறிவொளி வெள்ளம்..
மகிழ்ந்ததென் உள்ளம்...

puppy
08-01-2004, 08:35 PM
அருமை நிலா

சேரன்கயல்
09-01-2004, 08:25 AM
நல்ல அறிவுரை சொல்லியிருக்கீங்க நிலா...
பாராட்டுக்கள்...

Nanban
09-01-2004, 01:37 PM
அருமை..... ஆரம்பகால நிலா...............

பின்னர் மறந்துவிட்டார்.............

நிலா
09-01-2004, 10:35 PM
வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றி!

முத்து
09-01-2004, 10:42 PM
நிலா ..
அருமை ... பாராட்டுக்கள் ...

நிலா
09-01-2004, 10:43 PM
நன்றி முத்து!

இளசு
09-01-2004, 11:13 PM
ஊக்கமருந்து..
எனக்கு மிகவும் பிடிக்கும்

பாராட்டுகள் நிலா

நிலா
09-01-2004, 11:15 PM
ஊக்கமருந்து..
எனக்கு மிகவும் பிடிக்கும்

:shock: மீண்டும் பாராட்டிய தலைக்கு மீண்டும் நன்றி!

இளசு
09-01-2004, 11:25 PM
ஊக்கமருந்து
எனவே பூஸ்டர் டோஸ் அருந்தினேன் நிலா

சலிப்பூட்டும் பதிவுகளுக்கு
இதுவே எனக்கு மாற்று மருந்து..

kavitha
10-01-2004, 04:16 AM
நன்று! நிலா

அமைதியாக இருந்துபார்
வாழ்வின் அர்த்தமுனக்குப் புரிந்துவிடும்!