PDA

View Full Version : விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்



தீபன்
11-08-2006, 05:24 PM
பலாலி படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதல்

[வெள்ளிக்கிழமை, 11 ஓகஸ்ட் 2006, 22:05 ஈழம்]
யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


பலாலி படைத்தளம் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.

"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஏ-9 வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவம் தொடர்ச்சியான எறிகணை வீச்சுத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதனிடையே யாழில் இரவு 7 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யாழ். சிறிலங்கா காவல்துறை அதிகாரி எரிக் பெரேரா அறிவித்துள்ளார்.


www.puthinam.com

தீபன்
11-08-2006, 08:07 PM
பலாலி படைத் தளம் மீது தாக்குதல்: இரு சிறிலங்கா இராணுவ உலுங்குவானூர்திகள் சேதம்
[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:27 ஈழம்]
பலாலி படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட வானூர்தி தாக்குதலில் சிறிலங்கா வான்படை உலங்குவார்திகள் (ஹெலிகாப்டர்கள்) இரண்டு சேதம் அடைந்ததாக சிறிலங்கா வான்படை தகவல் வெளியிட்டுள்ளது.


சிறிலங்கா வான்படையின்

எம்.24 பீரங்கி உலங்குவானூர்தி,

வெல் 2 1 2 படைக்காவி உலங்குவானூர்தி

ஆகியன சேதமடைந்துள்ளதாக சிறிலங்கா வான் படை தகவல் வெளியிட்டுள்ளது.


www.puthinam.com

தீபன்
11-08-2006, 08:09 PM
தடை வேலிகளைத் தகர்த்து யாழில் முன்னேறுகின்றனர் விடுதலைப் புலிகள்
[சனிக்கிழமை, 12 ஓகஸ்ட் 2006, 00:38 ஈழம்]

யாழ். முகமாலையில் சிறிலங்கா இராணுவத்தினருடைய வலிந்த தாக்குதலை முறியடித்த தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுனைகளில் யாழ்.குடாநாட்டில் முன்னேறி வருகின்றனர்.


சிறிலங்கா படையினருடைய தடை வேலிகளைத் தகர்த்தவாறு விடுதலைப்புலிகள் முன்னேறிக் கொண்டுவருகின்றனர்.

படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தியபடி நகர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ். முகமாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதலை மேற்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இரவு 9. 30 மணியளவில் பலாலி விமான தளம் மீது வான்படைத் தாக்குதலை நடத்தி இரு உலங்கு வானூர்திகளை சேதமடையச் செய்தனர். விடுதலைப் புலிகளின் விமானங்கள் தங்களது நிலைக்கு பத்திரமாகத் திரும்பியுள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து புலிகள் யாழில் முன்னேறி வருகின்றனர்.


www.puthinam.com

மயூ
12-08-2006, 01:19 PM
உலகின் முதலாவது தமிழர் வான் படை களத்தில் இறங்கிவிட்டது!!!1
எல்லாப் பெருமையும் அவரையே சாரும்!

arul5318
12-08-2006, 02:10 PM
இது என்ன உத்தியபூர்வமான அறிவிப்பா பீபீசி போன்ற செய்திகளில் இந்த விமானத்தாக்குதலைப்பற்றி ஒன்றுமே சொல்லக்காணம்

தீபன்
15-08-2006, 07:16 AM
இது என்ன உத்தியபூர்வமான அறிவிப்பா பீபீசி போன்ற செய்திகளில் இந்த விமானத்தாக்குதலைப்பற்றி ஒன்றுமே சொல்லக்காணம்

பீபீசியில சொன்னாதான் உண்மயென்றில்லை... பீபீசியில் சொல்வதெல்லாம் உண்மையென்றுமில்லை... ஆனால் சம்பவம் உண்மையானதுதான்... பிற்பாடு பீபீசியிம் இதை உறுதிப்படுத்தியது.

ஓவியா
16-08-2006, 06:45 PM
நன்றி தீபன்...நலமா

படிக்கும் பொழுதே மனம் கலங்குகிறது......
உரக்கமில்லாமல் அவ்விடதில் வசிக்கும் மக்களின் நிலை தான் என்னவோ.....

ஒரு விடிவு பிறக்க
எத்தனை இறப்புக்களோ...